என்விடிஏ 2024.4beta1 பயணர் வழிகாட்டி

அறிமுகம்

என்விடிஏவிற்கு வருக!

NonVisual Desktop Access (NVDA), விண்டோஸ் இயக்கமுறைமைக்கான இலவசத் திறந்தநிலை ஆதாரத் திரைநவிலி. பார்வையுள்ளவர்கள் கொடுக்கும் விலைக்கு மேல் எவ்விலையும் கொடுக்காமல், பார்வையற்றவர்களும், பார்வைக் குறைபாடுள்ளவர்களும் குரல்/பிரெயில் பின்னூட்டம் மூலம் விண்டோஸுடன்கூடிய கணினியை இயக்கலாம். சமூகத்தினரின் பங்களிப்புடன் என்விடிஏவை உருவாக்கியிருப்பது NV Access நிறுவனம்.

பொதுக்கூறுகள்

பார்வையற்றவர்களும், பார்வைக் குறைபாடுள்ளவர்களும் விண்டோஸ் இயக்கமுறைமை மற்றும் மூன்றாம் தரப்புப் பயன்பாடுகளை அணுகவும், அவைகளுடன் அளவளாவவும் என்விடிஏ பயன்படுகிறது.

"என்விடிஏ என்றால் என்ன?" என்கிற குறுங்காணொலி, என்வி அக்ஸஸ் புலன அலைத்தடத்தில் காணக்கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள்:

கட்டமைப்புத் தேவைகள்

பரிந்துரைக்கப்படும் கட்டமைப்புத் தேவைகள்

குறைந்தபட்சக் கட்டமைப்புத் தேவைகள்

அனைத்துலக மயமாக்கம்

மக்கள் உலகின் எப்பகுதியிலிருந்தாலும், எம்மொழியைப் பேசினாலும், எல்லோரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சமவாய்ப்பு இருக்க வேண்டும் என்பது தலையாயதாகும். ஆங்கிலம் தவிர, பிற 54 மொழிகளில் என்விடிஏ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆஃப்ரிகான்ஸ், அல்பேனியம், அம்ஹாரிக், அரபி, அரகனீயம், பல்கேரியம், பர்மிய, காட்டலான், சீனம் (எளிய மற்றும் மரபு), க்ரோயேஷியம், செக், டேனிஷ், டச், ஃபார்சியம், ஃபின்னிஷ், பிரெஞ்சு, களீஷியம், ஜார்ஜியம், ஜெர்மானியம் (ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து), கிரேக்கம், ஹீப்ரு, ஹிந்தி, ஹங்கேரியம், ஐஸ்லாந்தியம், ஐரிஷ், இத்தாலியம், ஜப்பானியம், கன்னடம், கொரியம், கிர்கிஸ், லித்துவேனியம், மாசிடோனியம், மங்கோலியம், நேபாளம், நார்வே, போலிஷ், போர்ச்சுகீஸியம் (பிரேசில் மற்றும் போர்ச்சுகல்), பஞ்சாபி, ரோமானியம், ருஷ்யம், செர்பியம், ஸ்லோவாக்கியம், ஸ்லோவேனியம், ஸ்பானியம் (கொலம்பியா மற்றும் ஸ்பெயின்), ஸ்வீடிஷ், தமிழ், தாய், துருக்கியம், உக்ரேனியம், வியட்னாமியம் ஆகியவைகளே அம்மொழிகளாகும்.

பேச்சொலிப்பான் ஆதரவு

தகவல் பின்னூட்டங்கள், இடைமுகப்பு ஆகியவை பல மொழிகளில் இருப்பதோடு, பேச்சொலிப்பானில் ஒரு மொழிக்கான ஆதரவு இருக்கும்பட்சத்தில், ஆவண உள்ளடக்கங்கள் எம்மொழியில் இருப்பினும் படிக்கலாம்.

என்விடிஏவினுள் ஈஸ்பீக் என்ஜி எனப்படும் பன்மொழி இலவசத் திறந்தநிலை ஆதாரப் பேச்சொலிப்பான் கட்டப்பட்டு வெளிவருகிறது.

என்விடிஏ ஆதரவளிக்கும் பிற பேச்சொலிப்பான்கள் பற்றி அறிய, இவ்வழிகாட்டியிலுள்ள ஆதரவளிக்கப்படும் பேச்சொலிப்பான்கள் என்கிற தலைப்பைப் பார்க்கவும்.

பிரெயில் ஆதரவு

புத்தாக்க பிரெயில் காட்சியமைவினை பயனர்கள் வைத்திருக்கும்பட்சத்தில், தகவல் வெளியீட்டினை என்விடிஏ பிரெயிலில் கொடுக்கும். உரையிலிருந்து பிரெயில் தொடர்களை உருவாக்க, லிப்லூயி திறந்தநிலை பிரெயில் மொழிபெயர்ப்பை என்விடிஏ பயன்படுத்துகிறது. பிரெயில் விசைப்பலகை மூலம் செய்யப்படும் குறுக்கப்பட்ட மற்றும் குறுக்கப்படாத பிரெயில் உள்ளீடுகளையும் ஆதரிக்கிறது. மேலும், பல பிரெயில் காட்சியமைவுகளை இயல்பில் என்விடிஏ தானாகக் கண்டறியும். பிரெயில் காட்சியமைவுகள் குறித்து அறிய, இவ்வழிகாட்டியிலுள்ள ஆதரவளிக்கப்படும் பிரெயில் காட்சியமைவுகள் என்கிற தலைப்பைப் காணவும்.

என்விடிஏ பல மொழிகளிலுள்ள குறுக்கப்பட்ட, குறுக்கப்படாத மற்றும் கணினி பிரெயில் குறிகளுக்கு ஆதரவளிக்கிறது.

உரிமம் மற்றும் பதிப்புரிமை

பதிப்புரிமை 2006-2024 என்விடிஏ பங்களிப்பாளர்கள்

இரு சிறப்பு விதிவிலக்குகளுடன், இரண்டாம் பொதுப் பதிப்பு உரிமத்தின் கீழ் என்விடிஏ கிடைக்கிறது. "செருகுநிரல்கள் மற்றும் இயக்கிகளில் இருக்கும் GPL அல்லாத கூறுகள்" மற்றும் "மைக்ரோசாஃப்ட் பகிர்ந்தளிப்புக் குறி" ஆகிய பிரிவுகளின்் கீழ் காணப்படும் ஆவணத்தில் இவ்விரு விதிவிலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பலதரப்பட்ட இலவச மற்றும் திறந்த நிலை ஆதாரங்களைக் கொண்ட உரிமங்களில் கிடைக்கப்பெறும் கூறுகளையும் என்விடிஏ தன்னகத்தே கொண்டு அவைகளைப் பயன்படுத்திக்கொள்கிறது. இம்மென்பொருளைத் தாங்கள் மாற்றவோ, பிறருடன் பகிர்ந்து கொள்ளவோ தடையில்லை. அப்படிச் செய்யும்பொழுது, இம்மென்பொருளின் உரிமத்தையும், எல்லா ஆதாரக் குறியீட்டினையும் கேட்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இவ்விதி, இம்மென்பொருளின் மூலத்திற்கும், மாற்றப்பட்ட வடிவத்திற்கும், இம்மென்பொருளிலிருந்து பெறப்பட்டப் பிற பணிகளுக்கும் பொருந்தும்.

கூடுதல் தகவல்களுக்கு, முழு உரிம விவரங்களைக் காணவும். விதிவிலக்குகள் குறித்து அறிய, என்விடிஏ பட்டியலில் காணப்படும் உதவி உட்பட்டியலுக்குச் சென்று, உரிம ஆவணத்தைக் காணவும்.

என்விடிஏ விரைவுத் தொடக்க வழிகாட்டி

தரவிறக்கம், துவக்க அமைப்பு மற்றும் என்விடிஏவை இயக்குதல் ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளை இவ்விரைவுத் தொடக்க வழிகாட்டி கொண்டுள்ளது. இவைகளைத் தொடர்ந்து, விருப்பங்களை தக்கவாறு அமைத்துக்கொள்ளல், நீட்சிநிரல்களைப் பயன்படுத்திக்கொள்ளல், சமூகத்தில் பங்குகொள்ளல் மற்றும் உதவிப்பெறல் ஆகியவை குறித்தான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. என்விடிஏ பயனர் வழிகாட்டியின் பிற பகுதிகளில் காணப்படும் தகவல்கள், இவ்விரைவு வழிகாட்டியில் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பு குறித்தான விளக்கமான தகவல்களுக்கு முழு பயனர் வழிகாட்டியைப் படிக்கவும்.

என்விடிஏவை தரவிறக்குதல்

என்விடிஏவை முற்றிலும் இலவசமாக யாரும் பயன்படுத்தலாம். உரிம விசை குறித்து கவலைகொள்ளவும் தேவையில்லை, அல்லது, விலையுயர்ந்த சந்தாவை கட்டவும் தேவையில்லை. சராசரியாக ஓராண்டுக்கு நான்கு முறை என்விடிஏ இற்றாக்கப்படுகிறது. என்வி அக்ஸஸ் வலைதளத்தின் தரவிறக்கப் பக்கத்தில், அண்மைய என்விடிஏவின் பதிப்பு எப்பொழுதும் கிடைப்பிலிருக்கும்.

மைக்ரோசாஃப்டின் அண்மைய எல்லா விண்டோஸ் பதிப்புகளுடனும் என்விடிஏ செயல்படுகிறது. முழு விவரங்களுக்கு கட்டமைப்புத் தேவைகள் பிரிவைப் பார்க்கவும்.

என்விடிஏவை தரவிறக்குவதற்கான படிகள்

இணையப் பக்கத்துடன் வழிசெல்வதில் பயனருக்கு சிறிதேனும் பழக்கம் இருக்குமென அனுமானித்து இப்படிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

என்விடிஏவை அமைத்தல்

தாங்கள் தற்பொழுது தரவிறக்கியிருக்கும் கோப்பினை இயக்கினால், என்விடிஏவின் தற்காலிகப் படி துவக்கப்படும். என்விடிஏவை நிறுவ வேண்டுமா, கொண்டுசெல்லத்தக்கப் படியை உருவாக்க வேண்டுமா, அல்லது தற்காலிகப் படியை தொடர்ந்து இயக்க வேண்டுமா என்று பிறகு தங்களிடம் கேட்கப்படும்.

செலுத்தி தரவிறக்கப்பட்டவுடன், அதை இயக்க, அல்லது நிறுவ இணையத் தொடர்பு தேவைப்படுவதில்லை. இணையத் தொடர்பு இருந்தால், இற்றாக்கங்கள் இருக்கின்றனவா என்று அவ்வப்பொழுது துழாவ என்விடிஏவினால் இயலும்.

தரவிறக்கப்பட்ட செலுத்தியை இயக்குவதற்கான படிகள்

"nvda_2022.1.exe", அல்லது அதுபோன்று அமைவுக் கோப்பு பெயரிடப்பட்டிருக்கும். தற்போதைய வெளியீட்டை பிரதிபலிக்கும் வகையில், ஆண்டின் எண்ணும், பதிப்பின் எண்ணும் இற்றாக்கங்களுக்கிடையே மாறுபடும்.

  1. தரவிறக்கப்பட்ட கோப்பினை இயக்கவும். என்விடிஏவின் தற்காலிகப் படி ஏற்றப்படும்பொழுது இசை ஒலிக்கும். ஏற்றப்பட்டவுடன், மீதமுள்ள படிமுறை முழுவதும் என்விடிஏ பேசும்.
  2. என்விடிஏவின் செலுத்திச் சாளரம் உரிம ஒப்பந்தத்தைக் கொண்டு தோற்றமளிக்கும். விருப்பமிருந்தால், கீழம்பு விசையை அழுத்தி உரிம ஒப்பந்தத்தைப் படிக்கவும்.
  3. தத்தல் விசையை அழுத்தி, "ஏற்றுக்கொள்கிறேன்" தேர்வுப் பெட்டிக்குச் சென்று, இடைவெளிப் பட்டையை அழுத்தி அதைத் தேர்வுச் செய்யவும்.
  4. தத்தல் விசையை அழுத்தி, விருப்பத் தேர்வுகளுக்கிடையே நகர்ந்து, தாங்கள் விரும்பும் தேர்வின் மீது உள்ளிடு விசையை அழுத்தவும்.

பின்வருபவை விருப்பத் தேர்வுகளாகும்:

இக்கணினியில் என்விடிஏவை எப்பொழுதும் பயன்படுத்த தாங்கள் திட்டமிட்டால், என்விடிஏவை நிறுவ தாங்கள் விரும்புவீர்கள். புகுபதிந்தவுடன் தானாகத் துவங்குதல், விண்டோஸ் புகுபதிவு மற்றும் பாதுகாப்பான திரைகளைப் படிக்கும் திறன் போன்ற கூடுதல் செயல்பாடுகளை என்விடிஏவின் நிறுவுதல் அளிக்கும். கொண்டுசெல்லத்தக்க மற்றும் தற்காலிகப் படிகளைக் கொண்டு இவைகளைச் செய்ய இயலாது. கொண்டுசெல்லத்தக்க மற்றும் தற்காலிகப் படிகளை இயக்குவதில் இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்த முழு தகவல்களை அறிய, கொண்டுசெல்லத்தக்க மற்றும் தற்காலிகப் படிகளில் இருக்கும் கட்டுப்பாடுகள் பிரிவைப் பார்க்கவும்.

துவக்குப் பட்டியல் மற்றும் மேசைத் தள குறுக்குவழிகளை ஏற்படுத்துவதோடு, கட்டுப்பாடு+நிலைமாற்றி+n விசையை அழுத்தி துவக்கும் வசதியை என்விடிஏவின் நிறுவுதல் அளிக்கிறது.

செலுத்தியில் இருந்து என்விடிஏவை நிறுவுதலுக்கானப் படிகள்

மிகவும் பொதுவான அமைப்பு விருப்பத் தேர்வுகளின் வழியே இப்படிகள் செல்கின்றன. கிடைப்பிலிருக்கும் விருப்பத் தேர்வுகள் குறித்த கூடுதல் தகவல்களையறிய, நிறுவுதலுக்கான விருப்பத் தேர்வுகள் பிரிவைப் பார்க்கவும்.

  1. செலுத்தியில் இருக்கும் உரிம ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கான தேர்வுப் பெட்டி தேர்வாகியிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. தத்தல் விசையை அழுத்தி, "என்விடிஏவை இக்கணினியில் நிறுவுக" பொத்தானுக்குச் சென்று அதை இயக்கவும்.
  3. புகுபதியும்பொழுது என்விடிஏவைப் பயன்படுத்துதல், மேசைத் தள குறுக்குவழியை ஏற்படுத்துதல் ஆகியவைகளுக்கான தேர்வுப் பெட்டிகள் அடுத்து காணப்படும். இயல்பில் இவைகள் தேர்வாகியிருக்கும். இயல்பில் இருக்கும் அமைப்புகளை அப்படியே வைத்துக்கொள்ளலாம், அல்லது தத்தல் விசையை அழுத்தி, மாற்ற விரும்பும் அமைப்பிற்கான தேர்வுப் பெட்டிக்குச் சென்று, அதன் தேர்வினை நீக்கிவிடலாம்.
  4. "தொடர்க" பொத்தானுக்குச் சென்று உள்ளிடு விசையை அழுத்தவும்.
  5. "இப்பயன்பாடு தங்களின் கணினியில் மாற்றத்தைக் கொண்டுவர அனுமதிக்கிறீர்களா?" என்று கேட்டு ஒரு பயனர் கணக்கு கட்டுப்பாடு உரையாடல் தோன்றும்.
  6. நிலைமாற்றி+y விசையை அழுத்தி "ஆம்" பொத்தானை இயக்கவும்.
  7. என்விடிஏ நிறுவப்படும்பொழுது, ஒரு முன்னேற்றப் பட்டை நிரப்பப்படும். இந்தச் செயல்முறையின்பொழுது, ஏறுமுகமான உயர் சுருதி சிற்றொலிகளை என்விடிஏ எழுப்பும். இந்தச் செயல்முறை பொதுவாக விரைவாக இருக்கும் என்பதால் அது கவனிக்கப்படாமல் இருக்கும்.
  8. என்விடிஏ வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்தி ஒரு உரையாடல் பெட்டி தோன்றும். நிறுவப்பட்டுள்ள படியை இயக்க "சரி" பொத்தானை அழுத்தச் சொல்லி இவ்வுரையாடல் அறிவுறுத்தும். நிறுவப்பட்டுள்ள படியை இயக்க உள்ளிடு விசையை அழுத்தவும்.
  9. "என்விடிஏவிற்கு வருக" உரையாடல் பெட்டி தோன்றி, ஒரு வரவேற்புத் தகவலை என்விடிஏ படிக்கும். விசைப் பலகைத் தளவமைப்பு சேர்க்கைப் பெட்டியின் மீது குவிமையம் இருக்கும். இயல்பில், மேசைத் தள தளவமைப்பு, சில செயல்பாடுகளுக்கு எண் திட்டினை பயன்படுத்தும். எண் திட்டின் செயல்பாடுகளை பிற விசைகளுக்கு ஒதுக்க விரும்பினால், கீழம்பு விசையை அழுத்தி மடிக்கணினி தலவமைப்பைத் தெரிவுச் செய்யவும். இயல்பில், என்விடிஏ மாற்றியமைப்பி விசையாக "செருகு" விசை அமைக்கப்பட்டிருக்கும்.
  10. தத்தல் விசையை அழுத்தி, "முகப்பெழுத்துப் பூட்டு விசையை என்விடிஏ மாற்றியமைப்பி விசையாகப் பயன்படுத்துக" தேர்வுப் பெட்டிக்குச் செல்லவும். முகப்பெழுத்துப் பூட்டு விசையை மாற்றியமைப்பி விசையாகப் பயன்படுத்த இடைவெளிப்பட்டையை அழுத்தி இத்தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்யவும். என்விடிஏ மாற்றியமைப்பி விசையிலிருந்து விசைப் பலகை தளவமைப்பு தனித்து அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்கவும். என்விடிஏ மாற்றியமைப்பி விசையையும், விசைப் பலகைத் தளவமைப்பையும் விசைப் பலகை அமைப்பில் பிறகு மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
  11. இத்திரையில் காணப்படும் மற்ற இரு விருப்பத் தேர்வுகளை மாற்றியமைக்க, தத்தல் விசையையும், இடைவெளிப்பட்டையையும் பயன்படுத்தவும். புகுபதிந்தவுடன் என்விடிஏ துவங்குவதற்கும், என்விடிஏ துவங்கியவுடன் வரவேற்பு உரையாடல் காட்டப்படுவதற்கும் இந்த இரு தேர்வுப் பெட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  12. வரவேற்பு உரையாடல் பெட்டியை மூட, உள்ளிடு விசையை அழுத்தவும்.

என்விடிஏவை இயக்குதல்

எல்லா என்விடிஏ கட்டளைகளும் முழு பயனர் வழிகாட்டியில் குறிப்புக்காக பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
"கட்டளைகள் விரைவுப் பார்வையிலும்" கட்டளைகளின் அட்டவணைகள் உள்ளன. என்விடிஏவிற்கான அடிப்படைப் பயிற்சியில் ஒவ்வொரு கட்டளையும் படிப்படியான செயல்பாடுகளுடன் ஆழ்ந்து விளக்கப்பட்டுள்ளது. என்வி அக்ஸஸ் அங்காடியில் என்விடிஏவிற்கான அடிப்படைப் பயிற்சி கிடைக்கிறது.

அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சில கட்டளைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. எல்லாக் கட்டளைகளையும் பயனர்கள் அமைவடிவமாக்கிக்கொள்ளலாம் என்பதால் செயல்பாடுகளுக்குறிய இயல்பான விசைக் கட்டளைகளே இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

என்விடிஏ மாற்றியமைப்பி விசை

பூட்டு விலக்கப்பட்ட நிலையில் எண் திட்டில் இருக்கும் "சுழியம்" விசையும், அழி, தொடக்கம், முடிவு ஆகிய விசைகளுக்கருகே இருக்கும் "செருகு" விசையும் என்விடிஏவின் மாற்றியமைப்பி விசையாக இயல்பில் அமைந்திருக்கும். "முகப்பெழுத்து பூட்டு" விசையையும் என்விடிஏ மாற்றியமைப்பி விசையாக அமைத்துக்கொள்ளலாம்.

உள்ளீடு உதவி

விசைகளின் இருப்பிடத்தைக் கற்றுக்கொள்ளவும், அவைகளை இயக்கி பயிற்சி செய்யவும், என்விடிஏ+1 விசையை அழுத்தி, உள்ளீட்டு உதவியை இயக்கவும். உள்ளீட்டு உதவி நிலையில், உள்ளிடப்படும் விசையையும், தொடு சைகையையும் அறிவித்து, அதற்கான செயல்பாடு ஏதேனுமிருந்தால், அதையும் என்விடிஏ அறிவிக்கும். உள்ளீட்டு உதவி நிலையில் உள்ளிடப்படும் விசைக் கட்டளைகள் கணினிக்கு அனுப்பப்படமாட்டாது என்பதால், அவை கட்டளைகளாக இயங்காது.

என்விடிஏவைத் துவக்குதல் மற்றும் நிறுத்துதல்

பெயர் மேசைத்தள விசை மடிக்கணினி விசை விளக்கம்
என்விடிஏவைத் துவக்குக கட்டுப்பாடு+நிலைமாற்றி+n கட்டுப்பாடு+நிலைமாற்றி+n என்விடிஏவைத் துவக்குகிறது, அல்லது மறுதுவக்குகிறது
என்விடிஏவைவிட்டு வெளியேறுக என்விடிஏ+q. பிறகு உள்ளிடு விசை என்விடிஏ+q. பிறகு உள்ளிடு விசை என்விடிஏவைவிட்டு வெளியேறுகிறது
பேச்சை இடைநிறுத்துக, அல்லது மறுதுவக்குக மாற்றழுத்தி மாற்றழுத்தி பேச்சை உடனடியாக நிறுத்துகிறது. விசையை மறுமுறை அழுத்தினால், விட்ட இடத்திலிருந்து பேச்சை தொடரும்
பேச்சை நிறுத்துக கட்டுப்பாடு கட்டுப்பாடு பேச்சை உடனடியாக நிறுத்துகிறது

உரையைப் படித்தல்

பெயர் மேசைத்தள விசை மடிக்கணினி விசை விளக்கம்
எல்லாம் படித்திடுக என்விடிஏ+கீழம்பு என்விடிஏ+a கணினிச் சுட்டி இருக்குமிடத்திலிருந்து ஆவணத்தை முழுமையாகப் படிக்கும். அப்படிப் படிக்கும்பொழுது, கணினிச் சுட்டியும் உடன் நகரும்
தற்போதைய வரியைப் படித்திடுக என்விடிஏ+மேலம்பு என்விடிஏ+l கணினிச் சுட்டி இருக்கும் வரியைப் படிக்கும். இருமுறை அழுத்தினால், வரியை எழுத்துகளாகப் படிக்கும். மும்முறை அழுத்தினால், வரியை எழுத்து விளக்கங்களைக் கொண்டு படிக்கும்.
தெரிவாகியுள்ள உரையைப் படித்திடுக என்விடிஏ+மாற்றழுத்தி+மேலம்பு என்விடிஏ+மாற்றழுத்தி+s தற்பொழுது தெரிவாகியிருக்கும் உரையைப் படிக்கும். இருமுறை அழுத்தினால், தகவலை எழுத்துகளாகப் படிக்கும். மும்முறை அழுத்தினால், தகவலை எழுத்து விளக்கங்களைக் கொண்டு படிக்கும்.
பிடிப்புப்பலகையில் இருக்கும் உரையைப் படித்திடுக என்விடிஏ+c என்விடிஏ+c பிடிப்புப்பலகையில் உரை ஏதேனுமிருந்தால், அதைப் படிக்கும். இருமுறை அழுத்தினால், தகவலை எழுத்துகளாகப் படிக்கும். மும்முறை அழுத்தினால், தகவலை எழுத்து விளக்கங்களைக் கொண்டு படிக்கும்.

அமைவிடத்தையும், பிற தகவல்களையும் அறிவித்தல்

பெயர் மேசைத்தள விசை மடிக்கணினி விசை விளக்கம்
தலைப்பை அறிவித்திடுக என்விடிஏ+t என்விடிஏ+t முன்னணியில் இருக்கும் சாளரத்தின் தலைப்பைப் படிக்கும். இருமுறை அழுத்தினால், தலைப்பை எழுத்துகளாகப் படிக்கும். மும்முறை அழுத்தினால், தலைப்பைப் பிடிப்புப்பலகைக்குப் படியெடுக்கும்
தற்போதைய குவிமையத்தை அறிவித்திடுக என்விடிஏ+தத்தல் என்விடிஏ+தத்தல் குவிமையத்தில் இருக்கும் பொருளையோ, கட்டுப்பாட்டையோ அறிவிக்கும். இருமுறை அழுத்தினால், தகவலை எழுத்துகளாகப் படிக்கும். மும்முறை அழுத்தினால், தகவலை எழுத்து விளக்கங்களைக் கொண்டு படிக்கும்.
இயக்கத்திலிருக்கும் சாளரத்தை அறிவித்திடுக என்விடிஏ+b என்விடிஏ+b இயக்கத்திலிருக்கும் சாளரத்தின் உரைகளையும், கட்டுப்பாட்டுப் பொருட்களையும் அறிவிக்கும்
நிலைப் பட்டையை அறிவித்திடுக என்விடிஏ+முடிவு என்விடிஏ+மாற்றழுத்தி+முடிவு நிலைப் பட்டை இருந்தால், அதைப் படிக்கும். இருமுறை அழுத்தினால், தகவலை எழுத்துகளாகப் படிக்கும். மும்முறை அழுத்தினால், தகவலை பிடிப்புப் பலகைக்குப் படியெடுக்கும்
நேரம்/தேதி அறிவிப்பு என்விடிஏ+f12 என்விடிஏ+f12 ஒருமுறை அழுத்தினால், அப்போதைய நேரத்தை அறிவிக்கும்; இருமுறை அழுத்தினால், அன்றைய தேதியை அறிவிக்கும். விண்டோஸ் அமைப்பில் கணினித் தட்டு கடிகாரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும் வடிவூட்டத்தின் அடிப்படையில் /ணேரம்/தேதி அறிவிக்கப்படும்.
உரை வடிவூட்டத்தை அறிவித்திடுக என்விடிஏ+f என்விடிஏ+f கணினிச் சுட்டியின் தற்போதைய நிலையில் இருக்கும் உரையின் வடிவூட்டத்தை அறிவித்திடும். இரு முறை அழுத்தினால், தகவலை உலாவும் நிலையில் காட்டிடும்.
தொடுப்பின் இலக்கை அறிவித்திடுக என்விடிஏ+k என்விடிஏ+k ஒரு முறை அழுத்தினால், கணினிச் சுட்டி, அல்லது குவிமையத்தில் இருக்கும் தொடுப்பின் இணைய முகவரியை அறிவிக்கிறது. இரு முறை அழுத்தினால், கவனமான சீராய்விற்கு அதை ஒரு சாளரத்தில் காட்டுகிறது.

எந்தத் தகவலை என்விடிஏ படிக்கவேண்டுமென்பதை மாற்றியமைத்தல்

பெயர் மேசைத்தள விசை மடிக்கணினி விசை விளக்கம்
தட்டச்சிடப்படும் வரியுருக்களை பேசுக என்விடிஏ+2 என்விடிஏ+2 இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், தட்டச்சிடப்படும் எல்லா வரியுருக்களையும் என்விடிஏ அறிவிக்கும்.
தட்டச்சிடப்படும் சொற்களைப் பேசுக என்விடிஏ+3 என்விடிஏ+3 இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், தட்டச்சிடப்படும் எல்லாச் சொற்களையும் என்விடிஏ அறிவிக்கும்.
கட்டளை விசைகளைப் பேசுக என்விடிஏ+4 என்விடிஏ+4 இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், கட்டுப்பாடு விசையுடன் அழுத்தப்படும் கட்டளை விசைகள் உட்பட, வரியுருக்கள் அல்லாத விசை உள்ளீடுகளும் அறிவிக்கப்படும்.
சொடுக்கியைப் பின்தொடருக என்விடிஏ+m என்விடிஏ+m இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், கணினித் திரையில், சொடுக்கியின் குறிமுள்ளை நகர்த்தும்பொழுது, குறிமுள்ளின் கீழிருக்கும் உரை படிக்கப்படும். பொருள் வழிசெலுத்தலைப் பயன்படுத்தாமல், சொடுக்கியைப் பயன்படுத்தும்பொழுது, இது உதவும்.

ஒலிப்பான் அமைப்பு வலையம்

பெயர் மேசைத்தள விசை மடிக்கணினி விசை விளக்கம்
அடுத்த ஒலிப்பான் அமைப்பிற்கு நகர்க என்விடிஏ+கட்டுப்பாடு+வலதம்பு என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+வலதம்பு தற்போதைய அமைப்பிற்கு அடுத்ததாக இருக்கும் பேச்சமைப்பிற்கு நகரும். கடைசி அமைப்பை அடைந்தவுடன், மீண்டும் முதல் அமைப்பிற்கு வந்து சேரும்
முந்தைய ஒலிப்பான் அமைப்பிற்கு நகர்க என்விடிஏ+கட்டுப்பாடு+இடதம்பு என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+இடதம்பு தற்போதைய அமைப்பிற்கு முந்தையதாக இருக்கும் பேச்சமைப்பிற்கு நகரும். முதல் அமைப்பை அடைந்தவுடன், மீண்டும் கடைசி அமைப்பிற்கு வந்து சேரும்
தற்போதைய ஒலிப்பான் அமைப்பைக் கூட்டுக என்விடிஏ+கட்டுப்பாடு+மேலம்பு என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+மேலம்பு தற்போதைய பேச்சமைப்பை என்விடிஏ கூட்டும். எடுத்துக்காட்டாக, விகிதத்தை கூட்டுதல், அடுத்த குரலுக்குச் செல்லுதல், ஒலியளவைக் கூட்டுதல் ஆகியவைகளைக் கூறலாம்
பெருமளவுகளில் தற்போதைய ஒலிப்பான் அமைப்பைக் கூட்டுக என்விடிஏ+கட்டுப்பாடு+பக்கம் மேல் என்விடிஏ+மாற்றழுத்தி+கட்டுப்பாடு+பக்கம் மேல் தாங்கள் தற்போதிருக்கும் ஒலிப்பான் அமைப்பின் மதிப்பை பெருமளவுகளில் கூட்டுகிறது. எ.கா. குரல் அமைப்பில் தாங்கள் இருந்தால், ஒருமுறைக்கு இருபது குரல்களைத் தாண்டி முன்செல்லும்; விகிதம், சுருதி போன்ற வழுக்கி அமைப்பில் தாங்கள் இருந்தால், ஒருமுறைக்கு 20% மதிப்பு முன்செல்லும்
தற்போதைய ஒலிப்பான் அமைப்பைக் குறைத்திடுக என்விடிஏ+கட்டுப்பாடு+கீழம்பு என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+கீழம்பு தற்போதைய பேச்சமைப்பை என்விடிஏ குறைக்கும். எடுத்துக்காட்டாக, விகிதத்தை குறைத்தல், முந்தைய குரலுக்குச் செல்லுதல், ஒலியளவைக் குறைத்தல் ஆகியவைகளைக் கூறலாம்
பெருமளவுகளில் தற்போதைய ஒலிப்பான் அமைப்பைக் குறைத்திடுக என்விடிஏ+கட்டுப்பாடு+பக்கம் கீழ் என்விடிஏ+மாற்றழுத்தி+கட்டுப்பாடு+பக்கம் கீழ் தாங்கள் தற்போதிருக்கும் ஒலிப்பான் அமைப்பின் மதிப்பை பெருமளவுகளில் குறைக்கிறது. எ.கா. குரல் அமைப்பில் தாங்கள் இருந்தால், ஒருமுறைக்கு இருபது குரல்களைத் தாண்டி பின்செல்லும்; விகிதம், சுருதி போன்ற வழுக்கி அமைப்பில் தாங்கள் இருந்தால், ஒருமுறைக்கு 20% மதிப்பு பின்செல்லும்

பேச்சு வகைமையின் கீழிருக்கும் உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலில் தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைப்பதன் மூலம், தற்போதைய ஒலிப்பான் அமைப்பின் முதல், அல்லது கடைசி மதிப்பை அமைக்க இயலும். எடுத்துக்காட்டாக, தாங்கள் இருக்கும் தற்போதைய அமைப்பு விகிதமாக இருந்தால், அதன் மதிப்பை 0, அல்லது 100 என்று அமைக்கும். தாங்கள் இருப்பது குரல் அமைப்பாக இருந்தால், முதல், அல்லது கடைசி குரலை அமைக்கும்.

இணையத்தில் வழிசெலுத்தல்

ஒற்றை எழுத்துடன் வழிசெலுத்தும் விசைகளின் முழுப் பட்டியல் பயனர் வழிகாட்டியின் உலாவும் நிலை பிரிவில் உள்ளது.

கட்டளை விசை விளக்கம்
தலைப்பு h அடுத்த தலைப்பிற்கு நகர்க
தலைப்பு மட்டம் 1, 2, அல்லது 3 1, 2, 3 குறிப்பிட்ட அடுத்த தலைப்பிற்கு நகர்க
படிவக் களம் f அடுத்த களத்திற்கு நகர்க (தொகு களம், பொத்தான் போன்று)
தொடுப்பு k அடுத்த தொடுப்பிற்கு நகர்க
நிலக்குறி d அடுத்த நிலக்குறிக்கு நகர்க
வரிசைப் பட்டியல் l அடுத்த வரிசைப் பட்டியலுக்கு நகர்க
அட்டவணை t அடுத்த அட்டவணைக்கு நகர்க
பின்நகர்க மாற்றழுத்தி+எழுத்து மாற்றழுத்தியுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து ஏதேனும் ஒன்றினை அழுத்தினால், அவ்வகைக் கூறின் முந்தைய தோற்றத்திற்கு நகரும்
கூறுகளின் பட்டியல் என்விடிஏ+f7 தொடுப்புகள், தலைப்புகள் போன்ற பல கூறுகளின் வகைகளைப் பட்டியலிடுகிறது

விருப்பங்கள்

என்விடிஏ அமைப்புகளின் வாயிலாக பெரும்பாலான என்விடிஏவின் செயல்பாடுகளை முடுக்கலாம், அல்லது மாற்றியமைக்கலாம். அமைப்புகளும், பிற விருப்பத் தேர்வுகளும் என்விடிஏ பட்டியல் வழியாக கிடைக்கப்பெறுகின்றன. என்விடிஏவின் பட்டியலைத் திறக்க, என்விடிஏ+n விசையை அழுத்தவும். என்விடிஏவின் பொது அமைப்புகள் உரையாடலை நேரடியாகத் திறக்க, என்விடிஏ+கட்டுப்பாடு+G விசையை அழுத்தவும். ஒலிப்பான் அமைப்புகள் உரையாடலுக்கு, என்விடிஏ+கட்டுப்பாடு+S, பேச்சு அமைப்புகளுக்கு, என்விடிஏ+கட்டுப்பாடு+v போன்று, பல அமைப்புகளின் உரையாடலை நேரடியாகத் திறக்க விசைக் கட்டளைகள் உள்ளன.

நீட்சிநிரல்கள்

நீட்சிநிரல்கள் என்விடிஏவிற்கான புதிய அல்லது மாற்றப்பட்ட செயல்பாட்டை வழங்கும் நிரல்களாகும். என்விடிஏவின் சமூகம், அல்லது என்வி அக்ஸஸிற்கு தொடர்பில்லாத வெளிப்புற நிறுவனங்களினால் நீட்சிநீரல்கள் உருவாக்கப்படுகின்றன. எந்தவொரு மென்பொருளையும் போலவே, ஒரு நீட்சிநிரலைப் பயன்படுத்துவதற்கு முன், அதன் மேம்படுத்துநரை நம்புவது முக்கியமாகும். நிறுவலுக்கு முன் நீட்சிநிரல்களை சரிபார்க்கும் வழிகளுக்கு, நீட்சிநிரல்களை நிறுவுதல் தலைப்பைப் பார்க்கவும்.

முதன்்முறையாக நீட்சிநிரல் அங்காடி திறக்கப்படும்பொழுது, ​​என்விடிஏ நீட்சிநிரல்களைப் குறித்த எச்சரிக்கையைக் காட்டிடும். என்வி அக்ஸஸால் நீட்சிநிரல்கள் சரிபார்க்கப்படவில்லை என்பதோடு, அவை வரம்பின்றி செயல்படலாம், தகவல்களையும் அணுகலாம். எச்சரிக்கையைப் படித்துவிட்டீர்கள், மீண்டும் அது காட்டப்படவேண்டாம் என்று தாங்கள் கருதினால், இடைவெளிப் பட்டையை அழுத்தவும். நீட்சிநிரல் அங்காடிற்குச் செல்ல, தத்தல் விசையை அழுத்தி 'சரி' பொத்தானுக்குச் சென்று, உள்ளிடு விசையை அழுத்தி எச்சரிக்கையை ஏற்கவேண்டும். நீட்சிநிரல் அங்காடியின் ஒவ்வொரு அம்சம் குறித்த தகவலை, பயனர் வழிகாட்டியின் "நீட்சிநிரல்களும் நீட்சிநிரல் அங்காடியும்" பிரிவு கொண்டுள்ளது.

கருவிகள் உட்பட்டியலில் நீட்சிநிரல் அங்காடி கிடைப்பிலுள்ளது. என்விடிஏ+n விசையை அழுத்தி என்விடிஏ பட்டியலைத் திறந்து, 't' விசையை அழுத்தி கருவிகள் உட்பட்டியலுக்குச் சென்று, 'a' விசையை அழுத்தி நீட்சிநிரல் அங்காடியைத் திறக்கவும். நீட்சிநிரல்கள் நிறுவப்பட்டிருக்கவில்லை என்றால், நீட்சிநிரல் அங்காடி திறந்தவுடன், கிடைப்பிலிருக்கும் நீட்சிநிரல்களைக் காட்டிடும். நீட்சிநிரல்கள் நிறுவப்பட்டிருந்தால், நீட்சிநிரல் அங்காடி திறந்தவுடன், நிறுவப்பட்டுள்ள நீட்சிநிரல்கள் கீற்றினைக் காட்டிடும்.

கிடைப்பிலிருக்கும் நீட்சிநிரல்கள்

சாளரம் முதலில் திறக்கும்பொழுது, நீட்சிநிரல்களை ஏற்றுவதற்கு சில வினாடிகள் ஆகலாம். நீட்சிநிரல்களின் பட்டியல் ஏற்றப்பட்டவுடன், முதல் நீட்சிநிரலின் பெயரை என்விடிஏ படித்திடும். கிடைப்பிலிருக்கும் நீட்சிநிரல்கள், அகர வரிசைப்படி ஒரு பல நெடுவரிசைப் பட்டியலில் காட்டப்படும். பட்டியலை உலாவி, ஒரு குறிப்பிட்ட நீட்சிநிரலைக் குறித்து அறிய:

  1. பட்டியலில் இருக்கும் நீட்சிநிரல்களுக்கிடையே நகர, அம்பு விசைகளைப் பயன்படுத்தவும், அல்லது நீட்சிநிரல் பெயரின் முதல் எழுத்தை அழுத்தவும்.
  2. தற்பொழுது தெரிவுசெய்யப்பட்டிருக்கும் நீட்சிநிரலின் விளக்கத்திற்குச் செல்ல, தத்தல் விசையை ஒருமுறை அழுத்தவும்.
  3. முழு விளக்கத்தையும் படிக்க, படித்தல் விசைகளை, அல்லது அம்பு விசைகளைப் பயன்படுத்தவும்.
  4. பிற செயல்களுக்கிடையில் நீட்சிநிரல் நிறுவுதலுக்குப் பயன்படும் "செயல்கள்" பொத்தானுக்குச் செல்ல, தத்தல் விசையை அழுத்தவும்.
  5. பதிப்பாளர், பதிப்பு மற்றும் முகப்புப்பக்கம் போன்ற விவரங்களைப் பட்டியலிடும் "பிற விவரங்கள்" பொத்தானுக்குச் செல்ல, தத்தல் விசையை அழுத்தவும்.
  6. நீட்சிநிரல்களின் பட்டியலுக்குத் திரும்ப, நிலைமாற்றி+a விசையை அழுத்தவும், அல்லது பட்டியலை அடையும்வரை மாற்றழுத்தி+தத்தல் விசையை அழுத்தவும்.

நீட்சிநிரல்களைத் தேடுதல்

கிடைப்பிலிருக்கும் எல்லா நீட்சிநிரல்களையும் உலாவுவதுடன், காட்டப்பட்டுள்ள நீட்சிநிரல்களை வடிகட்டவும் இயலும்ம். தேடுவதற்கு, நிலைமாற்றி+s விசையை அழுத்தி, "தேடுக" களத்திற்குச் சென்று, தேடல் உரையைத் தட்டச்சிடவும். நீட்சிநிரலின் அடையாள எண், காட்சியளிக்கும் பெயர், பதிப்பாளர், படைப்பாளர், விளக்கம் ஆகிய களங்களில் உள்ள உரைப் பொருத்தங்களை இத்தேடுதல் சரிபார்க்கிறது. தேடல் சொற்கள் தட்டச்சிடப்படும்பொழுது, சொற்களுக்கேற்ப பட்டியல் இற்றாக்கப்படும். முடிந்ததும், தத்தல் விசையை அழுத்தி, வடிகட்டப்பட்ட நீட்சிநிரல்களின் பட்டியலுக்குச் சென்று முடிவுகளை உலாவலாம்.

நீட்சிநிரல்களை நிறுவுதல்

ஒரு நீட்சிநிரலை நிறுவ:

  1. தாங்கள் நிறுவ விரும்பும் நீட்சிநிரலை குவிமையத்தில் கொண்டுவந்து, உள்ளிடு விசையை அழுத்தவும்.
  2. "செயல்கள்" பட்டியல் பல செயல்களைக் காட்டிடும். அதில், "நிறுவுக" என்பது முதல் உருப்படியாகும்.
  3. நீட்சிநிரலை நிறுவ, 'i' விசையை அழுத்தவும், அல்லது கீழம்பு விசையைப் பயன்படுத்தி 'நிறுவுக' உருப்படிக்குச் சென்று உள்ளிடு விசையை அழுத்தவும்.
  4. பட்டியலில் இருக்கும் நீட்சிநிரலுக்குக் குவிமையம் திரும்பி, அந்நீட்சிநிரல் குறித்த விவரங்களை என்விடிஏ படித்திடும்.
  5. என்விடிஏவால் அறிவிக்கப்படும் "நிலைத் தகவல்", "கிடைப்பிலுள்ளது" என்பதிலிருந்து "தரவிறக்கப்படுகிறது" என மாறிடும்.
  6. நீட்சிநிரல் பதிவிறக்கம் முடிந்தவுடன், "தரவிறக்கப்பட்டுவிட்டது. நிறுவல் நிலுவையில் உள்ளது" என மாறிடும்.
  7. அதே நேரத்தில் பிற நீட்சிநிரல்களை நிறுவ, மேற்சொன்ன முறையை மீண்டும்செய்யவும்.
  8. முடிந்தவுடன், தத்தல் விசையை அழுத்தி, "மூடுக" பொத்தானுக்குச் சென்று உள்ளிடு விசையை அழுத்தவும்.
  9. நீட்சிநிரல் அங்காடி மூடப்பட்டவுடன், தரவிறக்கப்பட்ட நீட்சிநிரல்கள், நிறுவல் செயல்முறையைத் தொடங்கும். நிறுவல் செயல்முறையின்பொழுது, தாங்கள் அளவளாவ வேண்டிய உரையாடல்களை நீட்சிநிரல்கள் தோற்றுவிக்கலாம்.
  10. நீட்சிநிரல்கள் நிறுவப்பட்டவுடன், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, நீட்சிநிரல்களின் நிறுவல் முழுமையடைய என்விடிஏவைத் தாங்கள் மறுதுவக்க வேண்டுமென்று அறிவுறுத்தி ஒரு உரையாடல் தோன்றும்.
  11. என்விடிஏவை மறுதுவக்க உள்ளிடு விசையை அழுத்தவும்.

நிறுவப்பட்டுள்ள நீட்சிநிரல்களை மேலாளுதல்

நீட்சிநிரல் அங்காடியின் கீற்றுகளுக்கிடையே நகர, கட்டுப்பாடு+தத்தல் விசையை அழுத்தவும். நிறுவப்பட்டுள்ள நீட்சிநிரல்கள், இற்றாக்கத்தக்க நீட்சிநிரல்கள், கிடைப்பிலுள்ள நீட்சிநிரல்கள், நிறுவப்பட்டுள்ள இணக்கமற்ற நீட்சிநிரல்கள் ஆகிய கீற்றுகளை இது உள்ளடக்கியிருக்கும். ஒவ்வொரு கீற்றும் ஒன்றுக்கொன்று ஒத்த நீட்சிநிரல்களின் பட்டியலாகவும், தெரிவுசெய்யப்பட்டிருக்கும் நீட்சிநிரலின் கூடுதல் விவரங்கள், செயல்கள் ஆகிய பொத்தான்களைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். நிறுவப்பட்டுள்ள நீட்சிநிரல்களின் "செயல்கள்" பட்டியலில், "நிறுவுக" என்பதற்கு மாற்றாக, "முடக்குக", "நீக்குக" ஆகிய உருப்படிகள் அடங்கியிருக்கும். ஒரு நீட்சிநிரல் முடக்கப்பட்டிருந்தால், என்விடிஏ அதை ஏற்றாது என்றாலும் அது நிறுவல் நிலையில் விட்டுவைக்கப்பட்டிருக்கும். முடக்கப்பட்ட நீட்சிநிரலை மீண்டும் முடுக்க, "செயல்கள்" பட்டியலில் இருக்கும் "முடுக்குக" உருப்படியை இயக்கவும். நீட்சிநிரல்களின் முடுக்கம், முடக்கம், நீக்கம் ஆகிய செயல்கள் முடிந்தவுடன், நீட்சிநிரல் அங்காடியை மூடும்பொழுது என்விடிஏவை மறுதுவக்க தாங்கள் அறிவுறுத்தப்படுவீர்கள். என்விடிஏ மறுதுவக்கப்பட்டால் மட்டுமே, இந்த மாற்றங்கள் செயலுக்கு வரும். நீட்சிநிரல் அங்காடி சாளரத்தில், "விடுபடு" விசை, "மூடுக" பொத்தானைப் போலவே செயல்படுகிறது என்பதைக் கவனிக்கவும்

நீட்சிநிரல்களை இற்றாக்குதல்

தாங்கள் நிறுவியிருக்கும் நீட்சிநிரலுக்கான இற்றாக்கம் கிடைப்பிலிருந்தால், ​​அது "இற்றாக்கத்தக்க நீட்சிநிரல்கள்" கீற்றில் பட்டியலிடப்படும். நீட்சிநிரல் அங்காடியில் எங்கிருந்தாயினும் இந்த கீற்றிற்கு நகர, கட்டுப்பாடு+தத்தல் விசையை அழுத்தவும். நீட்சிநிரலின் நிலை, "இற்றாக்கம் கிடைப்பிலுள்ளது" என்று காட்டப்படும். தற்பொழுது நிறுவியிருக்கும் பதிப்பையும், கிடைப்பிலிருக்கும் பதிப்பையும் பட்டியல் காட்டிடும். நீட்சிநிரலின் மீது உள்ளிடு விசையை அழுத்தி, தோன்றும் "செயல்கள்" பட்டியலில் "இற்றாக்குக" உருப்படியை இயக்கவும்.

இயல்பில், என்விடிஏ துவங்கியவுடன், நீட்சிநிரல்களுக்கான இற்றாக்கங்கள் ஏதேனும் கிடைப்பிலுள்ளதா என்று தங்களுக்கு அறிவிக்கப்படும். இத்தன்மை குறித்து மேளும் அறியவும், அதை அமைவடிவமாக்கவும், "இற்றாக்க அறிவிக்கைகள்" பிரிவைக் காணவும்.

சமூகம்

என்விடிஏ ஒரு துடிப்பான பயனர் சமூகத்தைக் கொண்டுள்ளது. பிரதான ஆங்கில மின்னஞ்சல் குழுமமும், ஒரு பக்கம் முழுக்க உள்ளூர் மொழிகளுக்கான குழுமங்களும் உள்ளன. என்விடிஏவின் உருவாக்குநர்களான என்வி அக்ஸஸ், டுவிட்டரிலும், முகநூலிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றனர். என்வி அக்ஸஸ், வழமையான செயல்முறையிலுள்ள வலைப்பூவினையும் கொண்டுள்ளது.

என்விடிஏவினால் சான்றளிக்கப்பட்ட நிபுனர் என்கிற திட்டமும் உள்ளது. என்விடிஏவில் தங்களுக்கிருக்கும் நிபுனத்துவத்தை பரைசாற்ற, இந்த இணையவழித் தேர்வினை தாங்கள் முடிக்கலாம். என்விடிஏவினால் சான்றளிக்கப்பட்ட நிபுனர்கள், தங்களின் தொடர்பு மற்றும் பொருத்தமான வணிகத் தகவல்களை பட்டியலிடலாம்.

உதவிப் பெறுதல்

என்விடிஏவுக்கான உதவிக்கு, என்விடிஏ+n விசையை அழுத்தி, என்விடிஏ பட்டியலைத் திறந்து, 'h' விசையை அழுத்தவும். இந்த உட்பட்டியலிலிருந்து தாங்கள் பயனர் வழிகாட்டி, கட்டளைகளுக்கான விரைவுக் குறிப்பு, புதிய கூறுகளின் வரலாறு ஆகியவைகளோடு இன்னும் பலவற்றையும் அணுகலாம். இந்த முதல் மூன்று விருப்பத் தேர்வுகள், இயல்பாக அமைந்திருக்கும் இணைய உலாவியில் திறக்கப்படும். என்வி அக்ஸஸ் அங்காடியில் மேலும் விரிவான பயிற்சிப் பாடங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

என்விடிஏவிற்கான அடிப்படைப் பயிற்சியுடன் துவங்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த பயிற்சியானது, தொடங்குவது முதல் இணையத்தில் உலாவுதல் மற்றும் பொருள் வழிசெலுத்தலைப் பயன்படுத்துவது வரையிலான கருத்துகளை உள்ளடக்கியது. பின்வரும் வடிவங்களில் இது கிடைக்கப்பெறுகின்றன:

பிற பயிற்சித் தொகுப்புகளும், தள்ளுபடியிலான என்விடிஏ உற்பத்தித் திறன் தொகுப்பும் என்வி அக்ஸஸ் அங்காடியில் கிடைக்கப்பெறுகின்றன.

என்விடிஏ உற்பத்தித் திறன் தொகுப்பின் பகுதியாக, அல்லது தொகுதிகளாக தொலைப்பேசி ஆதரவினை என்வி அக்ஸஸ் விற்கிறது. தொலைபேசி ஆதரவில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் உள்ள உள்ளூர் எண்கள் அடங்கும்.

சான்றளிக்கப்பட்ட என்விடிஏ நிபுனர்களைப் போலவே, மின்னஞ்சல் பயனர் குழுமங்களும் சமூக உதவிக்கு பெரும் ஆதாரமாக உள்ளன.

GitHub வாயிலாக என்விடிஏவில் உள்ள வழ்க்களை தெரிவிக்கலாம், அல்லது புதிய அம்சங்களைக் கோரலாம். சமூகத்திற்குப் பங்களிக்க, பங்களிப்பு வழிமுறைகள் பக்கம் மதிப்புமிக்கத் தகவலைக் கொண்டுள்ளது.

கூடுதல் அமைவு விருப்பத் தேர்வுகள்

நிறுவல் விருப்பத் தேர்வுகள்

தரவிறக்கப்பட்ட என்விடிஏ செலுத்தியிலிருந்து நேரடியாக நிறுவுவதாக இருந்தால், "என்விடிஏவை நிறுவுக" பொத்தானை அழுத்தவும். இந்த உரையாடலை ஏற்கெனவே தாங்கள் மூடியிருந்தால், அல்லது கொண்டுசெல்லத்தக்கப் படியிலிருந்து என்விடிஏவை நிறுவுவதாக இருந்தால், என்விடிஏ பட்டியலில் இருக்கும் "கருவிகள்" உட்பட்டியலுக்குச் சென்று, "என்விடிஏவை நிறுவுக" உருப்படியை தேர்ந்தெடுக்கவும்.

தோன்றும் உரையாடல் பெட்டி, என்விடிஏவை தாங்கள் நிறுவ விரும்புகிறீர்களா என்று கேட்பதோடு, ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் என்விடிஏவை இது இற்றைப்படுத்துமா என்பதையும் தெரிவிக்கும். "தொடர்க" பொத்தானை அழுத்தியவுடன் என்விடிஏவின் நிறுவுதல் தொடங்கும். இவ்வுரையாடலில், கீழே விளக்கப்பட்டிருக்கும் சில விருப்பத் தேர்வுகளும் உண்டு. நிறுவுதல் முடிந்தவுடன், அது வெற்றிகரமாக அமைந்ததாக ஒரு செய்தி தெரிவிக்கும். இவ்விடத்தில் "சரி" பொத்தானை அழுத்தியவுடன், புதிதாக நிறுவப்பட்டிருக்கும் என்விடிஏவின் படி துவக்கப்படும்.

இணக்கமற்ற நீட்சிநிரல்கள் எச்சரிக்கை

நீட்சிநிரல்களை தாங்கள் ஏற்கெனவே நிறுவியிருந்தால், இணக்கமற்ற நீட்சிநிரல்கள் முடக்கப்படும் என்று எச்சரிக்கப்படும். "தொடர்க" பொத்தானை அழுத்துவதற்கு முன், இணக்கமற்ற நீட்சிநிரல்கள் முடக்கப்படும் என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று உறுதிசெய்ய, அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வுப் பெட்டியினைத் தேர்வுசெய்ய வேண்டும். முடக்கப்படும் நீட்சிநிரல்களை சீராய்வதற்கு ஒரு பொத்தானும் கொடுக்கப்பட்டிருக்கும். இப்பொத்தான் குறித்த உதவிக்கு, இணக்கமற்ற நீட்சிநிரல்கள் உரையாடல் பிரிவைக் காணவும். நிறுவுதலுக்குப் பிறகு, நீட்சிநிரல் அங்காடியின் உள்ளிருந்து, தங்களின் சொந்தப் பொறுப்பில் இணக்கமற்ற நீட்சிநிரல்களை மீண்டும் முடுக்கிவிடலாம்.

புகுபதியும்பொழுது என்விடிஏவைப் பயன்படுத்துக

விண்டோஸ் புகுபதிவுத் திரையில் இருக்கும் நிலையில், கடவுச்சொல்லை தாங்கள் உள்ளிடுவதற்கு முன் என்விடிஏ தானாகத் தொடங்க வேண்டுமா, வேண்டாமா என்று தேர்வுச்செய்ய இவ்விருப்பத் தேர்வு தங்களை அனுமதிக்கிறது. பயனர் கணக்கு கட்டுப்பாடு மற்றும் பிற பாதுகாப்பான திரைகளும்இதில் உள்ளடங்கும். புதிய நிறுவல்களுக்கு இவ்விருப்பத் தேர்வு இயல்பாக முடுக்கப்பட்டிருக்கும்.

மேசைத்தள குறுக்குவிசையை உருவாக்குக (கட்டுப்பாடு+நிலைமாற்றி+n)

என்விடிஏவைத் துவக்க மேசைத்தளத்தில் குறுக்குவிசையை என்விடிஏ உருவாக்க வேண்டுமா, அல்லது வேண்டாமா என்று தேர்வுச்செய்ய இவ்விருப்பத் தேர்வு தங்களை அனுமதிக்கிறது. இக்குறுக்குவழி உருவாக்கப்பட்டால், கட்டுப்பாடு+நிலைமாற்றி+n என்ற குறுக்குவிசையும் ஒதுக்கப்பட்டு, இவ்விசையை அழுத்துவதன் மூலம், எந்நேரத்திலும் என்விடிஏவைத் துவக்க தங்களுக்கு வசதியளிக்கிறது.

தற்போதைய பயனர் கணக்கிற்கு கொண்டுசெல்லத்தக்க அமைவடிவத்தைப் படியெடுத்திடுக

நிறுவப்பட்டிருக்கும் என்விடிஏவின் படிக்கு, இயக்கத்திலிருக்கும் கொண்டுசெல்லத்தக்க என்விடிஏவின் அமைவடிவத்தை தற்போதைய பயனர் கணக்கிற்கு படியெடுக்க வேண்டுமா, அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்க இவ்விருப்பத் தேர்வு தங்களை அனுமதிக்கிறது. கணினியின் பிற பயனர் கணக்கிற்கு, அல்லது சாளரப் புகுபதிவு மற்றும் பிற பாதுகாப்பானத் திரைகளில் பயன்படுத்த அமைந்திருக்கும் கணினி அமைவடிவத்திற்கு, கொண்டுசெல்லத்தக்க அமைவடிவம் படியெடுக்கப்பட மாட்டாது. கொண்டுசெல்லத்தக்கப் படியிலிருந்து என்விடிஏவை நிறுவும்பொழுது மட்டும்தான் இவ்விருப்பத் தேர்வு கிடைப்பிலிருக்கும். தரவிறக்கப்பட்ட செலுத்தித் தொகுப்பிலிருந்து நேரடியாக நிறுவும்பொழுது இருக்காது.

கொண்டுசெல்லத்தக்கப் படியை உருவாக்குக

என்விடிஏ தரவிறக்கத் தொகுப்பிலிருந்து நேரடியாக கொண்டுசெல்லத்தக்கப் படியை உருவாக்குவதாக இருந்தால், 'கொண்டுசெல்லத்தக்கப் படியை உருவாக்குக' பொத்தானை அழுத்தவும். இவ்வுரையாடலை ஏற்கெனவே தாங்கள் மூடியிருந்தால், அல்லது நிறுவப்பட்ட என்விடிஏவை தாங்கள் இயக்குவதாக இருந்தால், என்விடிஏ பட்டியலின் 'கருவிகள்' உட்பட்டியலில் காணப்படும் 'கொண்டுசெல்லத்தக்கப் படியை உருவாக்குக' உருப்படியைத் தேர்ந்தெடுக்கவும்.

கொண்டுசெல்லத்தக்கப் படி எங்கு உருவாக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்வுச்செய்ய, தோன்றும் உரையாடல் தங்களை அனுமதிக்கிறது. தங்களின் வன்தட்டின் ஒரு அடைவு, அல்லது யுஎஸ்பி விரலி, அல்லது பிற கொண்டுசெல்லத்தக்க ஊடகமாக இது இருக்கலாம். இயல்பில், கொண்டுசெல்லத்தக்கப் படிக்கு ஒரு புதிய அடைவு உருவாக்கப்படும். ஏற்கெனவே இருக்கும் ஒரு அடைவைத் தாங்கள் பயன்படுத்தலாம். அப்படிச் செய்யும்பொழுது, அவ்வடைவில் இருக்கும் கோப்புகள் அழிக்கப்பட்டு புதிய கோப்புகள் எழுதப்படும். ஏற்கெனவே இருக்கும் அடைவு, என்விடிஏவின் கொண்டுசெல்லத்தக்கப் படியாக இருந்தால், அது இற்றாக்கப்படும்.

தற்போதைய பயனரின் என்விடிஏ அமைவடிவத்தை, புதிதாக உருவாக்கப்படும் கொண்டுசெல்லத்தக்கப் படிக்கு படியெடுக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க ஒரு விருப்பத் தேர்வும் உண்டு. இதில் நீட்சிநிரல்களும் அடங்கும். நிறுவப்பட்ட படியிலிருந்து கொண்டுசெல்லத்தக்கப் படியை உருவாக்கும்பொழுது மட்டுமே இவ்விருப்பத் தேர்வு கிடைப்பிலிருக்கும். தரவிறக்கத் தொகுப்பிலிருந்து உருவாக்கும்பொழுது இருக்காது.

'தொடர்க' பொத்தானை அழுத்தினால், கொண்டுசெல்லத்தக்கப் படி உருவாக்கப்படும். உருவாக்கம் முடிந்தவுடன், அது வெற்றிகரமாக அமைந்ததாகத் தெரிவித்து ஒரு செய்தி தோன்றும். இவ்வுரையாடலை மூட, 'சரி' பொத்தானை அழுத்தவும்.

கொண்டுசெல்லத்தக்க மற்றும் தற்காலிகப் படிகளில் இருக்கும் கட்டுப்பாடுகள்

யுஎஸ்பி விரலி, அல்லது பிற எழுதப்படக் கூடிய ஊடகங்களில் என்விடிஏவை எடுத்துச் செல்ல விரும்பினால், கொண்டுசெல்லத்தக்கப் படி உருவாக்கத்தைத் தாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். நிறுவப்பட்டிருக்கும் என்விடிஏவைக் கொண்டு எந்நேரத்திலும் கொண்டுசெல்லத்தக்க என்விடிஏவை உருவாக்கிக் கொள்ளலாம். பிறிதொரு தருணம் தங்களின் கணினியில் என்விடிஏவை நிறுவ விரும்பினால், கொண்டுசெல்லத்தக்கப் படியைக் கொண்டு அதை நிறுவிக் கொள்ளலாம். ஆனால், குறுந்தட்டு போன்ற படிக்க மட்டுமேயான ஊடகங்களில் என்விடிஏவைப் படியெடுக்க விரும்பினால், என்விடிஏவின் தரவிறக்குக் கோப்பினைப் படியெடுக்கவும். படிக்க மட்டுமேயான ஊடகங்களிலிருந்து கொண்டுசெல்லத்தக்க என்விடிஏவை இயக்கும் வசதி தற்போதைக்கு இல்லை.

என்விடிஏ நிறுவியைஎன்விடிஏவின் தற்காலிகப் படியாக பயன்படுத்தலாம். அமைப்புகள் சேமிக்கப்படுவதை தற்காலிகப் படிகள் தடுக்கின்றன. நீட்சிநிரல் அங்காடியை முடக்குவதும் இதில் உள்ளடங்கும்.

என்விடிஏவின் கொண்டுசெல்லத்தக்கப் படிகளிலும், தற்காலிகப் படிகளிலும் பின்வரும் கட்டுப்பாடுகள் உள்ளன:

என்விடிஏவைப் பயன்படுத்துதல்

என்விடிஏவைச் செலுத்துதல்

என்விடிஏ ஏற்கெனவே நிறுவப்பட்டிருந்தால், அதை செலுத்துவது மிக எளிதாகும். கட்டுப்பாடு+நிலைமாற்றி+n கூட்டு விசையை அழுத்தியோ, அல்லது துவக்குப் பட்டியலிலுள்ள என்விடிஏவைத் தேர்ந்தெடுத்தோ செலுத்தலாம். கூடுதலாக, 'இயக்குக' உரையாடலில் 'nvda' என்று தட்டச்சிட்டு உள்ளிடு விசையை அழுத்தினாலும், என்விடிஏ செலுத்தப்படும். என்விடிஏ ஏற்கெனவே இயக்கத்திலிருந்தால், அது மறுதுவக்கப்படும். மேலும், என்விடிஏவைவிட்டு வெளியேற, அல்லது நீட்சிநிரல்களை செயலிழக்கச் செய்ய, என்விடிஏவின் கட்டளை வரி விருப்பத் தேர்வுகளைத் தாங்கள் செயற்படுத்தலாம்.

இயல்பில், நிறுவு வகை என்விடிஏவிற்கான அமைவடிவத்தை, நடப்புப் பயனரின் ரோமிங் அப்ளிகேஷன் டேட்டா கோப்புறையில் என்விடிஏ சேமிக்கிறது. (எ.கா. "C:\Users\\AppData\Roaming"). மாற்றாக, லோக்கல் அப்ளிகேஷன் டேட்டா கோப்புறையிலிருந்து அமைவடிவத்தை என்விடிஏ ஏற்றும் வண்ணமும் அமைத்திட இயலும். கூடுதல் தகவல்களுக்கு, முழுதளாவிய கணினி அளவுருக்கள் பிரிவைக் காணவும்.

கொண்டுசெல்லத்தக்கப் படியை செலுத்த, என்விடிஏ வைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று, nvda.exe கோப்பின் மீது இருமுறை சொடுக்கவும், அல்லது உள்ளிடு விசையை அழுத்தவும். என்விடிஏ ஏற்கெனவே இயக்கத்திலிருந்தால், அது நிறுத்தப்பட்டு, கொண்டுசெல்லத்தக்கப் படி இயக்கப்படும்.

என்விடிஏ துவக்கப்படும்பொழுது, என்விடிஏ ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறிய, ஏறுமுகமான ஒலிகளை முதலில் கேட்பீர்கள். தங்களின் கணினி, அல்லது கொண்டுசெல்லத்தக்கப் படி வைக்கப்பட்டுள்ள ஊடகத்தின் வேகம் குறைவாக இருந்தால், என்விடிஏ துவங்க தாமதமாகும். என்விடிஏ துவங்க மிகவும் தாமதமானால், "என்விடிஏ ஏற்றப்படுகிறது, அருள்கூர்ந்து காத்திருக்கவும்..." என்று அறிவிக்கப்படும்.

என்விடிஏ பேசாதிருந்தாலோ, சாளரப் பிழை ஒலி எழுந்தாலோ, இறங்குமுகமான ஒலிகள் எழுந்தாலோ, என்விடிஏவில் பிழை என்று பொருள். இப்பிழைக் குறித்து என்விடிஏ மேம்படுத்துநர்களிடம் தாங்கள் தெரிவிக்க வேண்டும். இதை எவ்வாறு செய்வதென்பதையறிய, என்விடிஏவின் இணையதளத்தை பார்க்கவும்.

வரவேற்பு உரையாடல்

என்விடிஏ முதன்முதலாக துவங்கும்பொழுது, வரவேற்பு உரையாடல் பெட்டித் தோன்றும். இப்பெட்டியில், என்விடிஏ மாற்றியமைப்பி விசைக் குறித்தும், என்விடிஏ பட்டியல் குறித்தும் சில அடிப்படைத் தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். (இத்தலைப்புகள் குறித்து தொடர்ந்து வரும் உட்பிரிவுகளைக் காணவும்.) இவ்வுரையாடல் பெட்டியில், ஒரு சேர்க்கைப் பெட்டியும், மூன்று தேர்வுப் பெட்டிகளும் காணப்படும். விசைப் பலகைத் தளவமைப்பைத் தெரிவுச் செய்ய, சேர்க்கைப் பெட்டி அனுமதிக்கிறது. முதற் தேர்வுப் பெட்டி, முகப்பெழுத்துப் பூட்டு விசையை என்விடிஏ மாற்றியமைப்பி விசையாகப் பயன்படுத்த வேண்டுமா என்பதைக் கட்டுப்படுத்த கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவதுப் பெட்டி, தாங்கள் சாளரத்தில் புகுபதிவு செய்தவுடன், என்விடிஏ தானாகத் துவங்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நிறுவு வகைப் படிகளில் மட்டுமே காண்பீர்கள். மூன்றாம் பெட்டி, இவ்வரவேற்பு உரையாடல் ஒவ்வொரு முறையும் என்விடிஏ துவங்கும்பொழுது காட்டப்பட வேண்டுமா எந்பதைக் கட்டுப்படுத்த கொடுக்கப்பட்டுள்ளது.

தரவுப் பயன்பாட்டுப் புள்ளிவிவரங்கள் உரையாடல்

என்விடிஏவை முதன்முதலாக துவக்கும்பொழுது, என்விடிஏவின் வருங்கால மேம்பாட்டிற்கு உதவும் நோக்கில், என்விடிஏ பயன்பாட்டுத் தரவுகளை என்வி அக்ஸஸ் நிறுவனத்திற்கு அனுப்பிவைப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்டு ஒரு உரையாடல் பெட்டி தோன்றும். என்வி அக்ஸஸ் சேகரிக்கும் தரவுகள் குறித்த கூடுதல் தகவல்களை, 'பொது' அமைப்பின் கீழ் காணப்படும் என்விடிஏவின் பயன்பாட்டுப் புள்ளிவிவரங்களை சேகரிக்க என்வி அக்ஸஸை அனுமதித்திடுக பிரிவில் படிக்கலாம். 'ஆம்', அல்லது 'இல்லை' பொத்தானை அழுத்தினால், அமைப்புகள் சேமிக்கப்பட்டு, என்விடிஏவை மறுபடியும் நி றுவினாலொழிய இவ்வுரையாடல் மீண்டும் தோன்றாது என்பதை கவனிக்கவும். 'பொது' உரையாடல் பெட்டியில் காணப்படும் என்விடிஏவின் பயன்பாட்டுப் புள்ளிவிவரங்களை சேகரிக்க என்விடிஏ திட்டப் பணியை அனுமதித்திடுக தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்வதுன் மூலம், அல்லது அதன் தேர்வினை நீக்குவதன் மூலம், இவ்வமைப்பினை கைமுறையில் மாற்றியமைக்கலாம்.

என்விடிஏ விசைப்பலகை கட்டளைகள் குறித்து

என்விடிஏ மாற்றியமைப்பி விசை

பெரும்பான்மையான என்விடிஏவிற்கான விசைப்பலகை கட்டளைகள், ஒன்று, அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட விசைகளுடன் என்விடிஏ மாற்றியமைப்பி விசையையும் அழுத்துவதாக அமைந்திருக்கும். மேசைக்கணினி விசைப்பலகையின் எண் திட்டில் அமைந்துள்ள உரைச் சீராய்வுக் கட்டளைகள், இதற்கு விதிவிலக்காக அமைந்துள்ளன. இது தவிர, பிற விதிவிலக்குகளும் இதற்குண்டு.

செருகு விசை, எண் திட்டு செருகு விசை, முகப்பெழுத்துப் பூட்டு விசை, ஆகிய மூன்று விசைகளை என்விடிஏ மாற்றியமைப்பி விசையாக பயன்படுத்த என்விடிஏவை அமைவடிவமாக்கலாம். இயல்பில், செருகு விசையும், எண் திட்டு செருகு விசையும், என்விடிஏ மாற்றியமைப்பி விசைகளாக அமைந்துள்ளன.

ஒரு என்விடிஏ மாற்றியமைப்பி விசையை, கணினியின் இயல்பு விசையாகப் பயன்படுத்த வேண்டுமென்றால், அவ்விசையைத் தொடர்ந்து இருமுறை அழுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, முகப்பெழுத்துப் பூட்டு விசை என்விடிஏ மாற்றியமைப்பி விசையாக அமைந்திருக்கும்பொழுது, தாங்கள் முகப்பெழுத்துப் பூட்டு விசையை இட வேண்டுமென்றால், அவ்விசையைத் தொடர்ந்து இருமுறை அழுத்த வேண்டும்.

விசைப்பலகைத் தளவமைப்புகள்

என்விடிஏ தற்பொழுது இரு விசை கட்டளைத் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. மேசைக்கணினிக்கு ஒரு தளவமைப்பும், மடிக்கணினிக்கு ஒரு தளவமைப்பும் உள்ளது. என்விடிஏ, மேசைக்கணினித் தளவமைப்பை இயல்பான தளவமைப்பாகக் கொண்டிருந்தாலும், மடிக்கணினித் தளவமைப்பிற்கு மாறும் வசதியுமுள்ளது. விசைப்பலகைத் தளவமைப்பை மாற்றியமைக்க, என்விடிஏ பட்டியலிலுள்ள விருப்பங்கள் உட்பட்டியலில் இருக்கும் விசைப் பலகை வகைமையின் கீழ் காணப்படும் என்விடிஏ அமைப்புகள் உரையாடல் பெட்டிக்குச் செல்லவும்.

மேசைக்கணினித் தளவமைப்பில், எண் பூட்டு நீக்கப்பட்டிருக்கும்பொழுது, எண் திட்டு விசைகளை என்விடிஏ மிகுதியாகப் பயன்படுத்துகிறது. பெரும்பாலான மடிக்கணினிகளில் எண் திட்டு இருப்பதில்லை. ஆகவே, மடிக்கணினித் தளவமைப்பில் முகப்பெழுத்துப் பூட்டு, என்விடிஏ மாற்றியமைப்பி விசையாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்விசையுடன், தேவைப்படுமானால், கட்டுப்பாடு, மாற்றழுத்தி, போன்ற பிற விசைகளையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு, விசைப்பலகையின் வலப்பக்க விசைகளை (j k l 8 9 0 போன்றவை) அழுத்த வேண்டும். தங்கள் மடிக்கணினியில் இவ்வசதி இல்லாதிருந்தாலோ, எண் பூட்டினை நீக்க இயலாதிருந்தாலோ, மடிக்கணினித் தளவமைப்பிற்குத் தாங்கள் மாறிக் கொள்ளலாம்.

என்விடிஏ தொடு சைகைகள்

தொடுதிரைக் கொண்ட கணினியில் என்விடிஏவை தாங்கள் பயன்படுத்தும்பொழுது, தொடு கட்டளைகள் மூலம் என்விடிஏவைக் கட்டுப்படுத்தலாம். என்விடிஏ இயக்கத்தில் இருக்கும்பொழுது, தொட்டளவளாவலுக்கான ஆதரவு முடக்கப்பட்டிருக்காதபட்சத்தில், எல்லாத் தொடு உள்ளீடுகளும் என்விடிஏவிற்கு நேரடியாக அனுப்பப்படும். ஆகவே, என்விடிஏ இல்லாமல் செயற்படுத்தப்படும் இயல்புத் தொடு கட்டளைகள் செயற்படாது.

தொட்டலவளாவுதலுக்கான ஆதரவினை மாற்றியமைக்க, என்விடிஏ+கட்டுப்பாடு+நிலைமாற்றி+t விசைக்கட்டளையைப் பயன்படுத்தவும்.

என்விடிஏ அமைப்புகளில் காணப்படும் தொட்டளவளாவலுக்கான ஆதரவு வகைமைக்குச் சென்று, தொட்டளவளாவலுக்கான ஆதரவினை முடுக்கலாம், அல்லது முடக்கலாம்.

திரையை ஆராய்தல்

திரையின் ஓரிடத்தில் இருக்கும் கட்டுப்பாட்டையோ, உரையையோ அறிவிக்க செய்வதுதான், தொடு திரையைக் கொண்டு செய்யும் அடிப்படை செயலாகும். இதை செய்ய, ஏதேனும் ஒருவிரலை, திரையில் எவ்விடத்தில் வேண்டுமானாலும் வைக்கவும். மேலும், திரையில் விரலை வைத்து அங்குமிங்கும் நகர்த்தும்பொழுது, விரல் செல்லுமிடங்களில் உள்ள கட்டுப்பாடுகளையும், உரைகளையும் படிக்கும்.

தொடு சைகைகள்

தொடர்ந்து வரும் பகுதிகளில், என்விடிஏவின் கட்டளைகள் விளக்கப்படும்பொழுது, தொடு கட்டளைகள் சிலவும் பட்டியலிடப்படும். இத்தொடு கட்டளைகளைக் கொண்டு, தொடுதிரையில் சில கட்டளைகளை செயற்படுத்தலாம். தொடுதிரையில் என்விடிஏவின் தொடு கட்டளைகளை எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு அறிவுறுத்தப்படுகிறது:

தட்டுதல்

ஒன்று, அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட விரல்களைக் கொண்டு திரையைத் தட்டுதல்.

ஒருவிரலைக் கொண்டு ஒரு முறைத் தட்டினால், அது தட்டுதல் என்று அறியப்படும். இருவிரல்களைக் கொண்டு ஒரே நேரத்தில் தட்டினால், அது ிரு விரல் தட்டுதல் என்று அறியப்படும். இருவிரல்களுக்கு மேலான தட்டுதல்களும் இதுபோன்றே எண்ணிக்கைகளைக் கொண்டு அறியப்படுகின்றன.

ஒரே மாதிரியான தட்டுதலை, ஒரு முறைக்கு மேல் தொடர்ந்து தட்டினால், அதை பல தட்டுதல் சைகையாக என்விடிஏ புரிந்து கொள்ளும். இரு முறைத் தட்டினால், அது இரு முறைத் தட்டுதல் என்று அறியப்படும். மும்முறைத் தட்டினால், அது மும்முறைத் தட்டுதல் என்று அறியப்படும். மும்முறைக்கு மேலான தட்டுதல்களும் இதுபோன்றே எண்ணிக்கைகளைக் கொண்டு அறியப்படுகின்றன. மேற்கூறிய பல தட்டுதல் சைகைகள், எத்தனை விரல்கள் பயன்படுத்தப்பட்டன என்பதையும் அறிகின்றன. ஆகவே, இருவிரல் மும்முறைத் தட்டுதல், நால்விரல் தட்டுதல் போன்று பல வகைகளில் தட்டுதல்கள் அமையும்.

சுண்டுதல்

திரையின் குறுக்கே தங்களின் விரலை விரைவாக தேய்க்கவும்.

திசையைக் கொண்டு, சுண்டுதல் சைகைகள் இந்நான்கு விதங்களில் அமையும்: இடது சுண்டுதல், வலது சுண்டுதல், மேல் சுண்டுதல் மற்றும் கீழ் சுண்டுதல்.

தட்டுதல் சைகைப் போலவே, சுண்டுதல் சைகையிலும் ஒன்றிற்கும் மேற்பட்ட விரல்களைப் பயன்படுத்தலாம். ஆகவே, இருவிரல் மேல் சுண்டுதல், நான்கு விரல் இடது சுண்டுதல் போன்று எல்லாச் சைகைகளையும் செயல்படுத்த இயலும்.

தொடு நிலைகள்

தொடு சைகைகளைக் காட்டிலும் என்விடிஏ கட்டளைகள் மிகுந்து இருப்பதால், பல்வேறு கட்டளைகளை செயற்படுத்த, பல தொடு நிலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உரை நிலை, பொருள் நிலை ஆகிய இரு நிலைகள் உள்ளன. தொடு சைகைகளைத் தொடர்ந்து, அடைப்புக் குறியினுள் எத்தொடு நிலை என்பதையும் இவ்வாவணத்தில் பட்டியலிடப்படும் சில என்விடிஏ கட்டளைகள் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, மேல் சுண்டுதல் (உரை நிலை) என்றால், இச்சைகை, உரை நிலையில் மட்டுமே செயற்படும். ஒரு கட்டளைக்குக் குறிப்பான நிலை ஏதும் இணைக்கப்படாமல் இருந்தால், அக்கட்டளை எந்நிலையிலும் செயற்படும்.

தொடு நிலைகளை மாற்றியமைக்க, ஒரு மூவிரல் தட்டுதலை செயற்படுத்தவும்.

தொடு விசைப்பலகை

உரைகளையும், கட்டளைகளையும் தொடுதிரையிலிருந்து உள்ளிட, தொடு விசைப்பலகை பயன்படுகிறது. ஒரு தொகு களத்தில் குவிமையம் இருக்கும்பொழுது, திரையின் கீழ் பகுதியில் இருக்கும் தொடுதிரை படவுருவை இரு முறை தட்டுவதன் மூலம், தொடு விசைப்பலகையை திரையில் கொண்டுவர இயலும். மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ போன்ற டேப்ளெட்டுகளில், நிலையான நிலையிலிருந்து விசைப்பலகை விடுவிக்கப்பட்டால், அது எப்பொழுதும் கிடைப்பிலிருக்கும். தொடு விசைப்பலகையை விலக்க, தொடு விசைப்பலகையின் படவுருவை இரு முறை தட்ட வேண்டும், அல்லது, தொகு களத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டும்.

தொடு விசைப்பலகை செயலில் இருக்கும்பொழுது, அதன் விசைகள் எங்கிருக்கின்றன என்பதனை அறிய, முதலில் திரையின் கீழ்ப் பகுதியில் காணப்படும் விசைப்பலகையைத் தொட்டு, பின் அதன் மேல் ஒரு விரலைக் கொண்டு அங்குமிங்கும் நகர வேண்டும். தாங்கள் அழுத்த விரும்பும் விசையை கண்டவுடன், தொட்டளவளாவல் வகைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் விருப்பத் தேர்விற்கேற்ப, விசையை இரு முறைத் தட்ட வேண்டும், அல்லது விரலை விசையிலிருந்து நீக்க வேண்டும்.

விசை உள்ளீடு உதவி

பல என்விடிஏ விசை மற்றும் தொடு கட்டளைகள் குறித்து இவ்வழிகாட்டியில் தொடர்ந்து வரும் தலைப்புகளில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இக்கட்டளைகளின் பயன்பாடு குறித்து எளிதாக அறிய, விசை உள்ளீடு உதவியைப் பெறலாம்.

விசை உள்ளீடு உதவியை இயக்க, என்விடிஏ+1 விசையை அழுத்தவும். விசை உள்ளீடு உதவியை நிறுத்த, என்விடிஏ+1 விசையை மீண்டும் அழுத்தவும். விசை உள்ளீடு உதவி இயக்கத்தில், ஒரு விசையை அழுத்தும்பொழுது, அல்லது ஒரு தொடு சைகையை செயற்படுத்தும்பொழுது, அதற்கான செயற்பாடு ஏதேனும் இருந்தால், அதை அறிவிக்கும். விசை உள்ளீடு உதவி நிலையில், கட்டளைகள் உண்மையில் செயற்படுத்தப்படுவதில்லை.

என்விடிஏ பட்டியல்

என்விடிஏ அமைப்புகளை கட்டுப்படுத்தவும், உதவியைப் பெறவும், அமைவடிவத்தைச் சேமித்திடவும், சேமிக்கப்பட்ட அமைவடிவத்திற்குத் திரும்பிச் சென்றிடவும், பேச்சு அகரமுதலிகளை மாற்றியமைத்திடவும், என்விடிஏவை விட்டு வெளியேறவும் என்விடிஏ பட்டியல் உதவுகிறது.

கணினி இயங்கிக் கொண்டிருக்கும்பொழுது என்விடிஏ பட்டியலை விண்டோஸில் எங்கிருந்தாயினும் இயக்க, பின்வருவனவற்றுள் ஏதேனுமொன்றைச் செயல்படுத்தலாம்:

என்விடிஏ பட்டியல் தோன்றியவுடன், அம்பு விசைகளை அழுத்தி, பட்டியலில் இருக்கும் உருப்படிகளுக்கிடையே நகர்ந்து, தேவைப்படும் உருப்படியை இயக்க, அதன் மீது உள்ளிடு விசையை அழுத்தவும்.

அடிப்படை என்விடிஏ கட்டளைகள்

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை தொடு விளக்கம்
என்விடிஏவைத் துவக்குகிறது, அல்லது மறுதுவக்குகிறது கட்டுப்பாடு+நிலைமாற்றி+n கட்டுப்பாடு+நிலைமாற்றி+n ஏதுமில்லை என்விடிஏவின் நிறுவுதலின்பொழுது இக்குறுக்குவிசை முடுக்கப்பட்டால், என்விடிஏவை துவக்குகிறது, அல்லது மறுதுவக்குகிறது. என்விடிஏ கட்டளையாக இல்லாமல், விண்டோஸ் குறுக்குவிசையாக இது இருப்பதால், என்விடிஏவின் உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலுக்குச் சென்று இதை மாற்றியமைக்க இயலாது.
பேச்சை நிறுத்துக கட்டுப்பாடு கட்டுப்பாடு இருவிரல் தட்டுதல் உடனடியாக பேச்சை நிறுத்திக் கொள்ளும்
பேச்சைத் தற்காலிகமாக நிறுத்துக மாற்றழுத்தி மாற்றழுத்தி ஏதுமில்லை மாற்றழுத்தி விசையை அழுத்தினால், உடனடியாக பேச்சைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும். மீண்டும் மாற்றழுத்தி விசையை அழுத்தினால், நிறுத்திய இடத்திலிருந்து பேச்சைத் தொடரும் (இதற்கு, பேச்சொலிப்பானின் ஆதரவு தேவை)
என்விடிஏ பட்டியல் என்விடிஏ+n என்விடிஏ+n இருவிரல் இரு முறைத் தட்டுதல் பல அமைப்புகளின் உரையாடல்களை இயக்கவும், கருவிகளை அணுகவும், உதவிப் பெறவும், என்விடிஏவை விட்டு வெளியேறவும், என்விடிஏ பட்டியலைத் தோற்றுவிக்கும்
உள்ளீடு உதவியை இயக்குக, அல்லது நீக்குக என்விடிஏ+1 என்விடிஏ+1 ஏதுமில்லை இந்நிலையில் விசைகளுடன் கட்டப்பட்டுள்ள என்விடிஏ விசைக் கட்டளைகளை விளக்கும்
என்விடிஏவை விட்டு வெளியேறுக என்விடிஏ+q என்விடிஏ+q ஏதுமில்லை என்விடிஏவை விட்டு வெளியேறும்
விசையை நேரடியாக அனுப்புக என்விடிஏ+f2 என்விடிஏ+f2 ஏதுமில்லை இவ்விசைக்குப் பிறகு அழுத்தப்படும் விசை, அது என்விடிஏ கட்டளை விசையாக இருப்பினும், அதை என்விடிஏ கையாளாமல், கணினிக்கு நேரடியாக அனுப்பி வைக்கும்
பயன்பாட்டின் தூங்கு நிலையை இயக்குக, அல்லது நிறுத்துக என்விடிஏ+மாற்றழுத்தி+s என்விடிஏ+மாற்றழுத்தி+z ஏதுமில்லை நடப்புப் பயன்பாட்டிற்கானப் எல்லா என்விடிஏ கட்டளைகளையும், பேச்சு/பிரெயில் வெளியீடுகளையும் நிறுத்தும். பயன்பாடுகளுக்கென்று தனிப்பட்ட பேச்சு வசதி இருக்கும் நிலையில் இது பயன்படும். இவ்விசையை மீண்டும் அழுத்தினால், தூங்கு நிலையிலிருந்து வெளிவரும். மறுதுவக்கப்படும்வரைதான் தூங்கு நிலையை என்விடிஏ தக்கவைத்திருக்குமென்பதை கவனிக்கவும்.

கணினித் தகவலை அறிவித்தல்

பெயர் விசை விளக்கம்
தேதி/நேரம் அறிவிப்பு என்விடிஏ+f12 ஒருமுறை அழுத்தினால், தற்போதைய நேரத்தை அறிவிக்கும்; இருமுறை அழுத்தினால், இன்றைய தேதியை அறிவிக்கும்
மின்கல நிலைமை அறிவிப்பு என்விடிஏ+மாற்றழுத்தி+b மாறுதிசை மின்னோட்டம், அல்லது மின்கலம் செயலிலுள்ளதா என்று அறிவிக்கும். மின்கலமாக இருந்தால், அதன் தற்போதைய சேமிப்பு அளவை அறிவிக்கும்
பிடிப்புப்பலகை உரை அறிவிப்பு என்விடிஏ+c பிடிப்புப்பலகையில் உரை ஏதுமிருந்தால், அதை அறிவிக்கும்

பேச்சு முறைகள்

என்விடிஏ செயல்படும்பொழுது, திரை உள்ளடக்கம், அறிவிக்கைகள், கட்டளைகளுக்கான பின்னூட்டங்கள் மற்றும் பிற வெளியீடுகளை எவ்வாறு பேச வேண்டும் என்பதை பேச்சு முறைகள் வரையறுக்கின்றன. என்விடிஏ எங்கெல்லாம் பேச வேண்டும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் பேசும் வண்ணம், 'பேசுக' என்கிற பேச்சு முறையை இயல்பிருப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில சூழ்நிலைகளில், அல்லது குறிப்பிட்ட நிரல்களை இயக்கும்போது, பிற பேச்சு முறைகளில் ஒன்றை தாங்கள் மதிப்புமிக்கதாகக் காணலாம்.

கிடைப்பிலிருக்கும் நான்கு பேச்சு முறைகள்:

ஒரு முனைய சாளரத்தில், உரை மேல் நகர்த்தப்படுவதன் காரணமாக தாங்கள் பொருட்படுத்த விரும்பாத தொடர் குரல் வெளியீட்டினைத் தவிர்க்க விரும்பினால், அல்லது வெளியீடு இருக்கிறது என்பதை மட்டும் அறிந்தால் போதும், என்ன வெளியிடப்படுகிறது என்பது முக்கியமல்ல என்று தாங்கள் கருதினால், 'சிற்றொலிகள்' முறையைப் பயன்படுத்துவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

திரையில், அல்லது கணினியில் என்ன நடக்கிறது என்பது குறித்து நிலையான பின்னூட்டம் தேவைப்படாதபட்சத்தில், சில தகவல்களை சீராய்வுக் கட்டளைகள் போன்றவைகள் மூலம் அவ்வப்போது அறிய விரும்பினால், 'தேவையின் பேரில்' முரையைப் பயன்படுத்தலாம். ஒலிப் பதிவு, திரை உருப்பெருக்கம், கூடுகை, அல்லது அழைப்பு, சிற்றொலிகளுக்கு மாற்றாக பயன்படுத்துவது ஆகிய தருணங்கள் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.

பேச்சு முறைகளுக்கிடையே சுழன்று நகர, பின்வரும் விசைச் சைகை அனுமதிக்கிறது:

பெயர் விசை விளக்கம்
பேச்சு முறை சுழற்சி என்விடிஏ+s பேச்சு முறைகளுக்கிடையே சுழன்று நகர்கிறது.

பேச்சு முறைகளில் சிலவற்றை மட்டும் தாங்கள் பயன்படுத்த விரும்பினால், தேவைப்படாத பேச்சு முறைகளை முடக்கிவிடலாம். இதை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி அறிய, பேச்சு முறைக் கட்டளையில் காணப்படும் பேச்சு முறைகள் என்கிற பகுதியைக் காணவும்.

கணினியை ஆராயவும், அதனூடாக வழிசெல்லவும், என்விடிஏ பயன்படுகிறது. இதை எளிய நிலையிலும், சீராய்வுச் சுட்டியின் மூலமாகவும் செய்யலாம்.

பொருட்கள்

ஒவ்வொரு பயன்பாடும், இயக்கமுறைமையும் தன்னுள்ளாகப் பொருட்களைக் கொண்டுள்ளது. உரையின் சிறு பகுதி, தேர்வுப் பெட்டி, தொகு களம், பொத்தான், வரிசைப் பட்டியல் போன்ற ஒவ்வொரு ஒற்றை உருப்படியும் ஒரு பொருளாகும்.

கணினிக் குவிமையத்தைக் கொண்டு வழிசெலுத்தல்

குவிமையம் என்று பொதுவாகக் குறிக்கப்படும் கணினிக் குவிமையம், விசைப்பலகையில் தட்டச்சிடப்படும் விசைகளை உள்வாங்கும் பொருளாகும். எடுத்துக்காட்டாக, தாங்கள் ஒரு தொகு களத்தில் தட்டச்சிடுகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், அத்தொகு களம் குவிமையத்தில் உள்ளது என்று பொருள்.

தத்தல், அல்லது மாற்றழுத்தி+தத்தல் விசையை அழுத்தி, குவிமையத்தை பொருட்களின் ஊடாக நகர்த்தல், நிலைமாற்றி விசையை அழுத்தி, கிடநீளப் பட்டியலை் அடைந்து, அம்பு விசைகளைக் கொண்டு அதனுளிருக்கும் உருப்படிகளுக்கு நகர்தல், நிலைமாற்றி+தத்தல் விசையை அழுத்தி, செயற்பட்டுக் கொண்டிருக்கும் பயன்பாடுகளுக்கு மாறுதல் போன்ற முறைகளே, சாளரத்தில் இருக்கும் பொருட்களுக்கிடையே நகரும் பொதுவான முறைகளாகும். இப்படிச் செய்யும்பொழுது, குவிமையத்தில் இருக்கும் பொருளின் பெயர், விளக்கம், வகை, நிலை, குறுக்கு விசை போன்ற தகவல்களை என்விடிஏ அறிவிக்கும். பார்வைக்குத் துலக்கமாக்குக விருப்பத் தேர்வு தேர்வாகியிருந்தால், கணினிக் குவிமையத்தின் தற்போதைய அமைவிடம் பார்வைக்கு துலக்கமாக்கிக் காட்டப்படும்.

கணினிக் குவிமையத்தில் இருக்கும்பொழுது, பொருட்களினூடாக நகர சில விசைக் கட்டளைகள் உதவுகின்றன.

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை விளக்கம்
தற்போதைய குவிமையத்தை அறிவித்திடுக என்விடிஏ+தத்தல் என்விடிஏ+தத்தல் குவிமையத்தில் இருக்கும் பொருளையோ, கட்டுப்பாட்டையோ அறிவிக்கும். இருமுறை அழுத்தினால், தகவலை எழுத்துகளாகப் படிக்கும்
தலைப்பை அறிவித்திடுக என்விடிஏ+t என்விடிஏ+t முன்னணியில் இருக்கும் சாளரத்தின் தலைப்பைப் படிக்கும். இருமுறை அழுத்தினால், தலைப்பை எழுத்துகளாகப் படிக்கும். மும்முறை அழுத்தினால், தலைப்பைப் பிடிப்புப்பலகைக்குப் படியெடுக்கும்
இயக்கத்திலிருக்கும் சாளரத்தை அறிவித்திடுக என்விடிஏ+b என்விடிஏ+b இயக்கத்திலிருக்கும் சாளரத்தின் உரைகளையும், கட்டுப்பாட்டுப் பொருட்களையும் அறிவிக்கும்
நிலைப் பட்டையை அறிவித்திடுக என்விடிஏ+முடிவு என்விடிஏ+மாற்றழுத்தி+முடிவு நிலைப் பட்டை இருந்தால், அதைப் படிக்கும். இருமுறை அழுத்தினால், தகவலை எழுத்துகளாகப் படிக்கும். மும்முறை அழுத்தினால், தகவலை பிடிப்புப் பலகைக்குப் படியெடுக்கும்
குறுக்குவிசையை அறிவித்திடுக மாற்றழுத்தி+எண் திட்டு 2 என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+. தற்பொழுது குவிமையத்தில் இருக்கும் பொருளின் குறுக்குவிசையை (முடுக்கியை) அறிவித்திடும்

கணினிச் சுட்டியுடன் வழிசெலுத்தல்

வழிசெலுத்தல், தொகுத்தல் போன்ற செயல்களை ஆதரிக்கும் பொருட்கள் குவிமையத்தில் இருக்கும்பொழுது, அப்பொருட்களினுள் இருக்கும் உரையினூடே தொகுச் சுட்டி என்றும் அழைக்கப்படும் கணினிச் சுட்டியைக் கொண்டு நகரலாம்.

கணினிச் சுட்டியைக் கொண்டுள்ள பொருள் குவிமையத்தில் இருக்கும்பொழுது, அப்பொருளினுள் இருக்கும் உரையிநூடே நகர, அம்பு, பக்கம் மேல், பக்கம் கீழ், தொடக்கம், முடிவு போன்ற விசைகளைப் பயன்படுத்தலாம். குவிமையத்தில் இருக்கும் பொருள் தொகு களமாக இருந்தால், அதனுள் இருக்கும் உரையைத் திருத்தலாம். உரையினூடே வரியுருக்களாகவோ, சொற்களாகவோ, வரிகளாகவோ நகரும்பொழுதும், தெரிவு, அல்லது தெரிவு நீக்கம் செய்யும்பொழுதும் என்விடிஏ அறிவிக்கும்.

கணினிச் சுட்டித் தொடர்பாக கீழ் கண்ட விசைக் கட்டளைகளை என்விடிஏ அளிக்கிறது:

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை விளக்கம்
எல்லாம் படித்திடுக என்விடிஏ+கீழம்பு என்விடிஏ+a கணினிச் சுட்டி இருக்குமிடத்திலிருந்து ஆவணத்தை முழுமையாகப் படிக்கும். அப்படிப் படிக்கும்பொழுது, கணினிச் சுட்டியும் உடன் நகரும்
தற்போதைய வரியைப் படித்திடுக என்விடிஏ+மேலம்பு என்விடிஏ+l கணினிச் சுட்டி இருக்கும் வரியைப் படிக்கும். இருமுறை அழுத்தினால், வரியை எழுத்துகளாகப் படிக்கும். மும்முறை அழுத்தினால், வரியை எழுத்து விளக்கங்களைக் கொண்டு படிக்கும்.
தெரிவாகியுள்ள உரையைப் படித்திடுக என்விடிஏ+மாற்றழுத்தி+மேலம்பு என்விடிஏ+மாற்றழுத்தி+s தற்பொழுது தெரிவாகியிருக்கும் உரையைப் படிக்கும்
உரை வடிவூட்டத்தை அறிவித்திடுக என்விடிஏ+f என்விடிஏ+f கணினிச் சுட்டியின் தற்போதைய நிலையில் இருக்கும் உரையின் வடிவூட்டத்தை அறிவித்திடும். இரு முறை அழுத்தினால், தகவலை உலாவும் நிலையில் காட்டிடும்.
தொடுப்பின் இலக்கை அறிவித்திடுக என்விடிஏ+k என்விடிஏ+k ஒரு முறை அழுத்தினால், தற்பொழுது கணினிச் சுட்டி, அல்லது குவிமையத்தின் கீழிருக்கும் தொடுப்பின் இணைய முகவரியை அறிவித்திடும். இருமுறை அழுத்தினால், இணைய முகவரியை சீராய, அதை உலாவு நிலையில் காட்டிடும்
கணினிச் சுட்டியின் அமைவிடத்தை அறிவித்திடுக என்விடிஏ+எண் திட்டு அழி என்விடிஏ+ அழி கணினிச் சுட்டியின் இடத்திலிருக்கும் உரை, அல்லது பொருளின் இருப்பிடத் தகவலை அறிவித்திடும். எடுத்துக்காட்டாக, ஆவணத்தில் கடந்துவந்துள்ள நீளம் எத்தனை விழுக்காடு, பக்கத்தின் ஓரத்திலிருந்து எத்தனை தொலைவு, அல்லது திரைநிலையின் துல்லியம் ஆகியவை இதில் உள்ளடங்கும். இருமுறை அழுத்தினால், கூடுதல் தகவல்களை வழங்கும்.
அடுத்த சொற்றொடர் நிலைமாற்றி+கீழம்பு நிலைமாற்றி+கீழம்பு கணினிச் சுட்டியை அடுத்த சொற்றொடருக்கு நகர்த்தி, அதைப் படிக்கிறது. (இது மைக்ரோசாஃப்ட் வேர்ட் மற்றும் ஔட்லுக்கில் மட்டும் ஆதரிக்கப்படுகிறது.)
முந்தைய சொற்றொடர் நிலைமாற்றி+மேலம்பு நிலைமாற்றி+மேலம்பு கணினிச் சுட்டியை முந்தைய சொற்றொடருக்கு நகர்த்தி, அதைப் படிக்கிறது. (இது மைக்ரோசாஃப்ட் வேர்ட் மற்றும் ஔட்லுக்கில் மட்டும் ஆதரிக்கப்படுகிறது.)

ஒரு அட்டவணைக்குள் இருக்கும்பொழுது, கீழ் கண்ட விசைக் கட்டளைகளைப் பயன்படுத்தலாம்:

பெயர் விசை விளக்கம்
முந்தைய நெடுவரிசைக்குச் செல்க நிலைமாற்றி+கட்டுப்பாடு+இடதம்பு தற்போதைய கிடை வரிசையில் இருந்து கொண்டே, முந்தைய நெடுவரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும்
அடுத்த நெடுவரிசைக்குச் செல்க நிலைமாற்றி+கட்டுப்பாடு+வலதம்பு தற்போதைய கிடை வரிசையில் இருந்து கொண்டே, அடுத்த நெடுவரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும்
முந்தைய கிடை வரிசைக்குச் செல்க நிலைமாற்றி+கட்டுப்பாடு+மேலம்பு தற்போதைய நெடுவரிசையில் இருந்து கொண்டே, முந்தைய கிடை வரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும்
அடுத்த கிடை வரிசைக்குச் செல்க நிலைமாற்றி+கட்டுப்பாடு+கீழம்பு தற்போதைய நெடுவரிசையில் இருந்து கொண்டே, முந்தைய கிடை வரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும்
முதல் நெடுவரிசைக்கு செல்க கட்டுப்பாடு+நிலைமாற்றி+தொடக்கம் தற்போதைய கிடைவரிசையில் இருந்து கொண்டே, முதல் நெடுவரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும்
கடைசி நெடுவரிசைக்கு செல்க கட்டுப்பாடு+நிலைமாற்றி+முடிவு தற்போதைய கிடைவரிசையில் இருந்து கொண்டே, கடைசி நெடுவரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும்
முதல் கிடைவரிசைக்கு செல்க கட்டுப்பாடு+நிலைமாற்றி+பக்கம் மேல் தற்போதைய நெடுவரிசையில் இருந்து கொண்டே, முதல் கிடைவரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும்
கடைசி கிடைவரிசைக்கு செல்க control+alt+pageDown தற்போதைய நெடுவரிசையில் இருந்து கொண்டே, கடைசி கிடைவரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும்
நெடுவரிசையில் எல்லாம் படித்திடுக என்விடிஏ+கட்டுப்பாடு+நிலைமாற்றி+கீழம்பு நெடுவரிசையின் தற்போதைய சிறுகட்டத்திலிருந்து கீழ்நோக்கி கடைசி சிறுகட்டம் வரை செங்குத்தாகப் படிக்கிறது.
கிடைவரிசையில் எல்லாம் படித்திடுக என்விடிஏ+கட்டுப்பாடு+நிலைமாற்றி+வலதம்பு கிடைவரிசையின் தற்போதைய சிறுகட்டத்திலிருந்து வலதுநோக்கி கடைசி சிறுகட்டம் வரை கிடைமட்டமாகப் படிக்கிறது.
நெடுவரிசை முழுதும் படித்திடுக என்விடிஏ+கட்டுப்பாடு+நிலைமாற்றி+மேலம்பு கணினிச் சுட்டியை நகர்த்தாமல், தற்போதைய நெடுவரிசை முழுதும் மேலிருந்து கீழாக செங்குத்தில் படிக்கிறது.
கிடைவரிசை முழுதும் படித்திடுக என்விடிஏ+கட்டுப்பாடு+நிலைமாற்றி+இடதம்பு கணினிச் சுட்டியை நகர்த்தாமல், தற்போதைய நெடுவரிசை முழுதும் இடமிருந்து வலமாக கிடைமட்டத்தில் படிக்கிறது.

பொருள் வழிசெலுத்தல்

பெரும்பாலான தருணங்களில், கணினிக் குவிமையத்தையும், கணினிச் சுட்டியையும் நகர்த்தும் கட்டளைகளைக் கொண்டு பயன்பாடுகளுடன் அளவளாவுவீர்கள். ஆனால், சில தருணங்களில், ஒரு பயன்பாட்டையோ, இயக்கமுறைமையையோ குவிமையத்தை விட்டு விலகாமல் ஆராய முற்படுவீர்கள். அதேபோல், விசைப்பலகை மூலம் சென்றடைய முடியாத சில பொருட்களையும் அணுகி ஆராய முற்படுவீர்கள். இதுபோன்ற தருணங்களில், தாங்கள் பொருள் வழிசெலுத்தியைப் பயன்படுத்தலாம்.

பல பொருட்களுக்கிடையே ஒவ்வொன்றாக நகரவும், ஒரு பொருளின் தகவலை அறியவும் பொருள் வழிசெலுத்தி துணைபுரிகிறது. ஒரு பொருளுக்கு நகரும்பொழுது, குவிமையம் இருக்கும்பொழுது எப்படி என்விடிஏ அப்பொருளின் தகவலை அறிவிக்குமோ, அவ்வாறே பொருள் வழிசெலுத்தி மூலம் நகரும்பொழுதும் அறிவிக்கும். திரையில் தோன்றும் உரைகளை இருப்பது இருப்பதுபோலவே ஆராய, திரைச் சீராய்வைப் பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு பொருளுக்கும் முன்னும் பின்னும் நகர்வதைத் தவிர்க்க, கணினியில் பொருட்களின் நிலைகள் அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அறிவது என்னவென்றால், ஒரு பொருள் தனக்குள் பிற பொருட்களைக் கொண்டிருக்கும். ஆகவே, பிற பொருட்களைக் கொண்டிருக்கும் பொருளுக்குள் முதலில் சென்று, அதனுள் இருக்கும் தேவையான பொருளுக்குச் செல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு வரிசைப் பட்டியல் பல உருப்படிகளைக் கொண்டிருக்கும். ஒரு உருப்படியை சென்றடைய, முதலில் அவ்வரிசைப் பட்டியலுக்குள் செல்ல வேண்டும். வரிசைப் பட்டியல் உருப்படியை அடைந்த பின்னர், அம்பு விசைகளை அழுத்தினால், அதே பட்டியலில் இருக்கும் பிற உருப்படிகளுக்கு நகர்வீர்கள். வரிசைப் பட்டியல் உருப்படி, குவிமையத்தில் இருக்கும்பொழுது, 'பின்நகர்' விசையை அழுத்தினால், அவ்வுருப்படிகளைக் கொண்டிருக்கும் பொருளான வரிசைப் பட்டியலுக்குச் செல்வீர்கள். இதன் பிறகு, பிற பொருட்களைத் தாங்கள் ஆராய விரும்பினால், தற்பொழுது குவிமையத்தில் இருக்கும் வரிசைப் பட்டியலை விட்டு நகரலாம். அதுபோலவே, ஒரு கருவிப்பட்டையை அணுகும்பொழுது, முதலில் அதனுள் நுழைந்த பின்னரே, அதற்குள் இருக்கும் கட்டுப்பாடுகளை அணுக இயலும்.

திரையில் உள்ள ஒவ்வொரு பொருளுக்குமிடையே முன்னும் பின்னும் நகர தாங்கள் விரும்பினால், முந்தைய/அடுத்த பொருளுக்கு நகர்த்துவதற்கான கட்டளைகளை தட்டையான பார்வையில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, இந்தத் தட்டையான பார்வையில் அடுத்த பொருளுக்கு தாங்கள் நகரும்பொழுது, தற்போதைய பொருளில் மற்ற பொருள்கள் இருந்தால், தற்போதைய பொருள் கொண்டிருக்கும் முதல் பொருளுக்கு என்விடிஏ தானாக நகரும். மாற்றாக, தற்போதைய பொருளில் எந்தப் பொருளும் இல்லை என்றால், தற்போதைய படிநிலை மட்டத்தில் உள்ள அடுத்த பொருளுக்கு என்விடிஏ நகரும். அத்தகைய அடுத்த பொருள் இல்லாதபட்சத்தில், நகர்வதற்கு அடுத்த பொருள் இல்லை என்கிற நிலை வரும்வரை, கொண்டிருக்கும் பொருள்களின் அடிப்படையில் அடுத்த பொருளை கண்டறிய என்விடிஏ முயலும். படிநிலையில் பின்னோக்கி நகர்வதற்கும் அதே விதிகள் பொருந்தும்.

தற்பொழுது சீராயப்படும் பொருள்தான் வழிசெலுத்திப் பொருளாகும். பொருள் சீராய்வு நிலையில் இருக்கும் பொழுது, ஒரு பொருளுக்கு நகர்ந்த பின்னர், அப்பொருளின் உள்ளடக்கங்களை உரைச் சீராய்வுக் கட்டளைகளைக் கொண்டு சீராயலாம். பார்வைக்குத் துலக்கமாக்குக விருப்பத் தேர்வு தேர்வாகியிருந்தால், வழிசெலுத்திப் பொருளின் தற்போதைய அமைவிடம் பார்வைக்கு துலக்கமாக்கிக் காட்டப்படும். இயல்பில், பொருள் வழிசெலுத்தி, கணினிக் குவிமையத்தைத் தொடர்ந்து செல்லும். இருப்பினும், இத்தன்மையை முடுக்கவும், முடக்கவும் வசதியுண்டு.

பொருள் வழிசெலுத்தலை பிரெயில் பின்தொடரும் தன்மையினை பிரெயில் கட்டப்படுவதன் மூலம் அமைவடிவமாக்கலாம்.

பொருட்களாக நகர, பின்வரும் விசைகளைப் பயன்படுத்தவும்:

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை தொடு விளக்கம்
தற்போதைய பொருளை அறிவித்திடுக என்விடிஏ+எண் திட்டு 5 என்விடிஏ+மாற்றழுத்தி+o ஏதுமில்லை தற்போதைய பொருளை அறிவிக்கும். இருமுறை அழுத்தினால், தகவலை எழுத்துகளாக படிக்கும். மும்முறை அழுத்தினால், பொருளின் தகவலையும், மதிப்பையும் பிடிப்புப்பலகைக்குப் படியெடுக்கும்
பொருளைக் கொண்டிருக்கும் பொருளுக்கு நகர்க என்விடிஏ+எண் திட்டு 8 என்விடிஏ+மாற்றழுத்தி+மேலம்பு மேல் சுண்டுதல் (பொருள் நிலை) வழிசெலுத்திப் பொருளைக் கொண்ட பொருளுக்கு நகரும்
முந்தைய பொருளுக்கு நகர்க என்விடிஏ+எண் திட்டு 4 என்விடிஏ+மாற்றழுத்தி+இடதம்பு ஏதுமில்லை தற்போதைய வழிசெலுத்திப் பொருளின் முந்தைய பொருளுக்கு நகரும்
தட்டையான பார்வையில் முந்தைய பொருளுக்கு நகர்க என்விடிஏ+ெண் திட்டு 9 என்விடிஏ+மாற்றழுத்தி+[ இடது சுண்டுதல் (பொருள் நிலை) பொருள் வழிசெலுத்தல் படிநிலையின் தட்டையான பார்வையில் முந்தைய பொருளுக்கு நகர்கிறது
அடுத்தப் பொருளுக்கு நகர்க என்விடிஏ+எண் திட்டு 6 என்விடிஏ+மாற்றழுத்தி+வலதம்பு ஏதுமில்லை தற்போதைய வழிசெலுத்திப் பொருளின் அடுத்த பொருளுக்கு நகரும்
தட்டையான பார்வையில் அடுத்த பொருளுக்கு நகர்க என்விடிஏ+ெண் திட்டு 3 என்விடிஏ+மாற்றழுத்தி+] வலது சுண்டுதல் (பொருள் நிலை) பொருள் வழிசெலுத்தல் படிநிலையின் தட்டையான பார்வையில் அடுத்த பொருளுக்கு நகர்கிறது
உள்ளிருக்கும் முதற்பொருளுக்கு நகர்க என்விடிஏ+எண் திட்டு2 என்விடிஏ+மாற்றழுத்தி+கீழம்பு கீழ் சுண்டுதல் (பொருள் நிலை) வழிசெலுத்திப் பொருளுக்குள் இருக்கும் முதல் பொருளுக்கு நகரும்
குவிமையத்திலிருக்கும் பொருளுக்கு நகர்க என்விடிஏ+எண் திட்டு கழித்தல் என்விடிஏ+பின் நகர்க ஏதுமில்லை கணினிக் குவிமையத்திலிருக்கும் பொருளுக்கு நகர்ந்து, அப்பொருளில், கணினிச் சுட்டியிருந்தால், சீராய்வுச் சுட்டியையும் அவ்விடத்திற்கு நகர்த்தும்
தற்போதைய வழிசெலுத்திப் பொருளை இயக்குக என்விடிஏ+எண் திட்டு உள்ளிடு என்விடிஏ+உள்ளிடு இரு முறைத் தட்டுதல் கணினிக் குவிமையத்தில் இருக்கும் ஒரு பொருளை சொடுக்கி/உள்ளிடு விசை எப்படி இயக்குமோ, அவ்வியக்கத்தை நிகழ்த்தும்
தற்போதைய சீராய்வு நிலைக்கு, கணினிக் குவிமையத்தை, அல்லது சுட்டியை நகர்த்துக என்விடிஏ+மாற்றழுத்தி+எண் திட்டு கழித்தல் என்விடிஏ+மாற்றழுத்தி+பின் நகர்க ஏதுமில்லை ஒருமுறை அழுத்தினால், கணினிக் குவிமையத்தைத் தற்போதைய வழிசெலுத்திப் பொருளுக்கு நகர்த்தும், இருமுறை அழுத்தினால், கணினிச் சுட்டியை, சீராய்வுச் சுட்டிக்கு நகர்த்தும்
சீராய்வுச் சுட்டியின் இருப்பிடத்தை அறிவித்திடுக என்விடிஏ+மாற்றழுத்தி+எண் திட்டு அழி என்விடிஏ+மாற்றழுத்திஅழி ஏதுமில்லை சீராய்வுச் சுட்டியின் கீழிருக்கும் உரை, அல்லது பொருளின் இருப்பிடம் குறித்த தகவலை அறிவிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு ஆவணத்தில் எத்தனை விழுக்காடு, பக்கத்தின் விளிம்பிலிருந்து எத்தனைத் தொலைவு, அல்லது திரையின் துல்லிய நிலை போன்றவைகளை அறிவிக்கும். இரு முறை அழுத்தினால், கூடுதல் தகவல்களை அறிவிக்கும்.
சீராய்வுச் சுட்டியை நிலைப் பட்டைக்கு நகர்த்திடுக ஏதுமில்லை ஏதுமில்லை ஏதுமில்லை நிலைப் பட்டை ஒன்றைக் கண்டால், என்விடிஏ அதை அறிவித்து, வழிசெலுத்திப் பொருளையும் அவ்விடத்திற்கு நகர்த்தும்.

குறிப்பு: எண் திட்டு விசைகள் சரிவர இயங்க, எண் பூட்டு நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

உரைச் சீராய்வு

திரை, தற்போதைய ஆவணம், அல்லது தற்போதைய பொருள் ஆகியவைகளின் உள்ளடக்கங்களை வரியுருக்களாகவும், சொற்களாகவும், வரிகளாகவும் சீராய்வு செய்ய என்விடிஏ உதவுகிறது. விண்டோஸ் கட்டளைகளுக்கான கட்டுப்பாட்டகம் போன்ற கணினிச் சுட்டி இல்லாத இடங்களில் இது பயன்படும். எடுத்துக்காட்டாக, ஒரு உரையாடல் பெட்டியில் இருக்கும் நீண்ட உரையை சீராய இதைப் பயன்படுத்துவீர்கள்.

சீராய்வுச் சுட்டி நகரும்பொழுது, கணினிச் சுட்டியும் உடன் நகர்வதில்லை என்பதால், தற்போதைய தொகு நிலையை விட்டு விலகாமல், உரைகளை சீராய இயலும். ஆனால், இயல்பில், கணினிச் சுட்டி நகரும்பொழுது, சீராய்வுச் சுட்டியும் உடன் நகரும். இத்தன்மையை முடுக்கவும், முடக்கவும் வசதியுண்டு.

சீராய்வுச் சுட்டியை பிரெயில் பின்தொடரும் தன்மையினை பிரெயில் கட்டப்படுவதன் மூலம் அமைவடிவமாக்கலாம்.

உரைகளைச் சீராய, பின்வரும் விசைக் கட்டளைகள் பயன்படும்:

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை தொடு விளக்கம்
சீராய்வில் இருக்கும் மேல் வரிக்கு நகர்க மாற்றழுத்தி+எண் திட்டு 7 என்விடிஏ+கட்டுப்பாடு+தொடக்கம் ஏதுமில்லை சீராய்வுச் சுட்டியை மேல் வரிக்கு நகர்த்தும்
சீராய்வில் இருக்கும் முந்தைய வரிக்கு நகர்க என்விடிஏ+எண் திட்டு 7 என்விடிஏ+மேலம்பு மேல் சுண்டுதல் (உரை நிலை) சீராய்வுச் சுட்டியை முந்தைய வரிக்கு நகர்த்தும்
தற்போதைய வரியை அறிவித்திடுக எண் திட்டு 8 என்விடிஏ+மாற்றழுத்தி+முற்றுப் புள்ளி ஏதுமில்லை சீராய்வுச் சுட்டியினிடத்திலிருக்கும் வரியைப் படிக்கும், இருமுறை அழுத்தினால், வரியை எழுத்துகளாகப் படிக்கும், மும்முறை அழுத்தினால், வரியை எழுத்து விளக்கங்களைக் கொண்டுப் படிக்கும்
சீராய்வில் இருக்கும் அடுத்த வரிக்கு நகர்க எண் திட்டு 9 என்விடிஏ+கீழம்பு கீழ் சுண்டுதல் (உரை நிலை) சீராய்வுச் சுட்டியை அடுத்த வரிக்கு நகர்த்தும்
சீராய்வில் இருக்கும் கீழ் வரிக்கு நகர்க மாற்றழுத்தி+எண் திட்டு 9 என்விடிஏ+கட்டுப்பாடு+முடிவு ஏதுமில்லை சீராய்வுச் சுட்டியை கீழ் வரிக்கு நகர்த்தும்
சீராய்வில் இருக்கும் முந்தைய சொல்லிற்கு நகர்க எண் திட்டு 4 என்விடிஏ+கட்டுப்பாடு+இடதம்பு இருவிரல் இடது சுண்டுதல் (உரை நிலை) சீராய்வுச் சுட்டியை முந்தைய சொல்லிற்கு நகர்த்தும்
சீராய்வில் இருக்கும் தற்போதைய சொல்லை அறிவித்திடுக எண் திட்டு 5 என்விடிஏ+கட்டுப்பாடு+முற்றுப் புள்ளி ஏதுமில்லை சீராய்வுச் சுட்டியினிடத்திலிருக்கும் சொல்லைப் படிக்கும், இருமுறை அழுத்தினால், அச்சொல்லை எழுத்துகளாகப் படிக்கும், மும்முறை அழுத்தினால், அச்சொல்லை எழுத்து விளக்கங்களைக் கொண்டுப் படிக்கும்
சீராய்வில் இருக்கும் அடுத்த சொல்லிற்கு நகர்க எண் திட்டு 6 என்விடிஏ+கட்டுப்பாடு+வலதம்பு இருவிரல் வலது சுண்டுதல் (உரை நிலை) சீராய்வுச் சுட்டியை அடுத்த சொல்லிற்கு நகர்த்தும்
சீராய்வில் இருக்கும் வரியின் துவக்கத்திற்கு நகர்க மாற்றழுத்தி+எண் திட்டு 1 என்விடிஏ+தொடக்கம் ஏதுமில்லை சீராய்வுச் சுட்டியை வரியின் துவக்கத்திற்கு நகர்த்தும்
சீராய்வில் இருக்கும் முந்தைய எழுத்திற்கு நகர்க எண் திட்டு 1 என்விடிஏ+இடதம்பு இடது சுண்டுதல் (உரை நிலை) சீராய்வுச் சுட்டியை முந்தைய எழுத்திற்கு நகர்த்தும்
சீராய்வில் இருக்கும் தற்போதைய எழுத்தை அறிவித்திடுக எண் திட்டு 2 என்விடிஏ+முற்றுப் புள்ளி ஏதுமில்லை சீராய்வுச் சுட்டியினிடத்திலிருக்கும் எழுத்தைப் படிக்கும், இருமுறை அழுத்தினால், அவ்வெழுத்திற்கான விளக்கத்தைப் படிக்கும், மும்முறை அழுத்தினால், அவ்வெழுத்திற்கான எண் மதிப்பை அறிவிக்கும்
சீராய்வில் இருக்கும் அடுத்த எழுத்திற்கு நகர்க எண் திட்டு 3 என்விடிஏ+வலதம்பு வலது சுண்டுதல் (உரை நிலை) சீராய்வுச் சுட்டியை அடுத்த எழுத்திற்கு நகர்த்தும்
சீராய்வில் இருக்கும் வரியின் முடிவிற்கு நகர்க மாற்றழுத்தி+எண் திட்டு 3 என்விடிஏ+முடிவு ஏதுமில்லை சீராய்வுச் சுட்டியை வரியின் முடிவிற்கு நகர்த்தும்
சீராய்வில் இருக்கும் முந்தைய பக்கத்திற்கு நகர்க என்விடிஏ+பக்கம் மேல் என்விடிஏ+மாற்றழுத்தி+பக்கம் மேல் ஏதுமில்லை பயன்பாட்டின் ஆதரவிருந்தால், உரையின் முந்தைய பக்கத்திற்கு சீராய்வுச் சுட்டியை நகர்த்தும்
சீராய்வில் இருக்கும் அடுத்த பக்கத்திற்கு நகர்க என்விடிஏ+பக்கம் கீழ் என்விடிஏ+மாற்றழுத்தி+பக்கம் கீழ் ஏதுமில்லை பயன்பாட்டின் ஆதரவிருந்தால், உரையின் அடுத்த பக்கத்திற்கு சீராய்வுச் சுட்டியை நகர்த்தும்
சீராய்வுச் சுட்டியைக் கொண்டு எல்லாம் படித்திடுக எண் திட்டு கூட்டல் என்விடிஏ+மாற்றழுத்தி+a மூவிரல் கீழ் சுண்டுதல் (உரை நிலை) சீராய்வுச் சுட்டியினிடத்திலிருந்து எல்லாவற்றையும் படிக்கும். சீராய்வுச் சுட்டியும் உடன் நகரும்
சீராய்வுச் சுட்டியினிடத்திலிருந்து தெரிவுச் செய்து படியெடுக்கவும் என்விடிஏ+f9 என்விடிஏ+f9 ஏதுமில்லை சீராய்வுச் சுட்டியினிடத்திலிருந்து தெரிவுச் செய்து படியெடுக்க, உரையின் துவக்கத்தைக் குறித்துக் கொள்ளும். அடுத்ததாக விளக்கப்படும் என்விடிஏ+f10 விசையை அழுத்தி, உரையின் முடிவை வரையறுத்தப் பிறகுதான், செயல் நிறைவேற்றப்படும்
சீராய்வுச் சுட்டி வரை தெரிவுச் செய்து படியெடுக்கவும் என்விடிஏ+f10 என்விடிஏ+f10 ஏதுமில்லை முதன்்முறை இவ்விசையை அழுத்தும்பொழுது, என்விடிஏ+f9 விசை மூலம் குறிக்கப்பட்ட துவக்கத்திலிருந்து, தற்போதைய சீராய்வுச் சுட்டியின் நிலை வரை உள்ள உரையைத் தெரிவுச் செய்யும். உரையை அடைய கணினிச் சுட்டிக்கு இயலுமானால், தெரிவாகியிருக்கும் உரைக்கு அது நகர்த்தப்படும். மறுமுறை இவ்விசையை அழுத்தும்பொழுது, உரையைப் பிடிப்புப்பலகைக்குப் படியெடுக்கும்
படியெடுப்பதற்காக துவக்கக் குறியிடப்பட்ட இடத்திற்கு சீராய்வுச் சுட்டியை நகர்த்துக என்விடிஏ+மாற்றழுத்தி+f9 என்விடிஏ+மாற்றழுத்தி+f9 ஏதுமில்லை முன்னதாக படியெடுப்பதற்கு துவக்கக் குறியிடப்பட்ட இடத்திற்கு சீராய்வுச் சுட்டியை நகர்த்துகிறது
உரையின் வடிவூட்டத்தை அறிவித்திடுக என்விடிஏ+மாற்றழுத்தி+f என்விடிஏ+மாற்றழுத்தி+f ஏதுமில்லை சீராய்வுச் சுட்டியினிடத்திலிருக்கும் உரையின் வடிவூட்டத்தை அறிவித்திடும். இரு முறை அழுத்தினால், தகவலை உலாவும் நிலையில் காட்டிடும்.
குறியெழுத்தின் தற்போதைய மாற்றமர்வினை அறிவித்திடுக ஏதுமில்லை ஏதுமில்லை ஏதுமில்லை சீராய்வுச் சுட்டியினிஇடத்திலிருக்கும் குறியெழுத்தினை அறிவிக்கும். இருமுறை அழுத்தினால், அக்குறியெழுத்தினையும், அதை ஒலிக்க பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துகளையும் உலாவும் நிலையில் காட்டும்.

குறிப்பு: எண் திட்டு சரிவர இயங்க, எண் பூட்டு நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேசைக்கணினித் தளவமைப்பைப் பயன்படுத்தும் பொழுது, மேற்கூறிய சீராய்வு விசைகளை நினைவில் கொள்ள, எண் திட்டில் அவை அமைக்கப்பட்டிருக்கும் முறையை கவனிக்கவும். மேலிருந்து கீழாக இருப்பவை: வரி, சொல், வரியுரு. இடமிருந்து வலமாக இருப்பவை: முந்தையது, தற்போதையது, அடுத்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ளத் தளவமைப்பு, இதைத் தெளிவாக்கும்:

. . .
முந்தைய வரி தற்போதைய வரி அடுத்த வரி
முந்தைய சொல் தற்போதைய சொல் அடுத்த சொல்
முந்தைய வரியுரு தற்போதைய வரியுரு அடுத்த வரியுரு

சீராய்வு நிலைகள்

தெரிவுச் செய்யப்பட்டிருக்கும் சீராய்வின் நிலையைப் பொறுத்து, தற்போதைய பொருள், தற்போதைய ஆவணம், அல்லது திரை ஆகியவைகளின் உள்ளடக்கங்களை உரைச் சீராய்வுக் கட்டளைகளைக் கொண்டு என்விடிஏ சீராய்வு செய்யும்.

சீராய்வு நிலைகளுக்கிடையே மாற பின்வரும் கட்டளைகள் பயன்படுகிறது.

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை தொடு விளக்கம்
அடுத்த சீராய்வு நிலைக்கு மாறுக என்விடிஏ+எண் திட்டு 7 என்விடிஏ+பக்கம் மேல் இருவிரல் மேல் சுண்டுதல் கிடைப்பிலிருக்கும் அடுத்த சீராய்வு நிலைக்கு மாறுகிறது
முந்தைய சீராய்வு நிலைக்கு மாறுக என்விடிஏ+எண் திட்டு 1 என்விடிஏ+பக்கம் கீழ் இருவிரல் கீழ் சுண்டுதல் கிடைப்பிலிருக்கும் முந்தைய சீராய்வு நிலைக்கு மாறுகிறது

பொருள் சீராய்வு

பொருள் சீராய்வு நிலையில் இருக்கும் பொழுது, வழிசெலுத்திப் பொருளின் உள்ளடக்கங்களை மட்டுமே தங்களால் சீராய்வு செய்ய இயலும். பொதுவில், தொகு களம், அல்லது பிற அடிப்படை ஆவண கட்டுப்பாடுகள் போன்ற பொருட்களில், இவைகள் உரை உள்ளடக்கங்களாக இருக்கும். பிற பொருட்களுக்கு, பெயர் மற்றும் மதிப்பாக இருக்கலாம். அல்லது, இவைகளில் ஏதேனும் ஒன்றாகவும் இருக்கலாம்.

ஆவணச் சீராய்வு

இணையப் பக்கம் போன்ற உலாவும் நிலை ஆவணத்திலோ, அல்லது லோட்டஸ் சிம்ஃபனி போன்ற ஆவணத்திலோ வழிசெலுத்திப் பொருள் இருக்கும் பொழுது, ஆவணச் சீராய்வு நிலைக்கு மாற இயலும். முழு ஆவணத்தின் உரையையும் சீராய்வு செய்ய, ஆவணச் சீராய்வு அனுமதிக்கிறது.

பொருள் சீராய்வு நிலையிலிருந்து ஆவணச் சீராய்வு நிலைக்கு மாறும் பொழுது, வழிசெலுத்திப் பொருள் ஆவணத்தில் இருக்கும் நிலையில் சீராய்வுச் சுட்டியை வைக்கும். சீராய்வுக் கட்டளைகளைக் கொண்டு ஆவணத்தில் வலம் வரும் பொழுது, தற்போதைய சுட்டியின் நிலையிலிருக்கும் பொருளுக்கு வழிசெலுத்திப் பொருளை இற்றைப்படுத்தும்.

உலாவும் நிலை ஆவணங்களில் நகரும் பொழுது, பொருள் சீராய்வு நிலையிலிருந்து ஆவணச் சீராய்வு நிலைக்கு என்விடிஏ தானாக மாறுமென்பதைக் கவனிக்கவும்.

திரைச் சீராய்வு

தற்போதைய பயன்பாட்டின் திரையில் காணப்படும் உரையை, பார்வைக்கு இருப்பது போலவே சீராய்வு செய்ய, திரைச் சீராய்வு நிலை அனுமதிக்கிறது. இது, பிற விண்டோஸ் திரைநவிலிகளில் காணப்படும் திரைச் சீராய்வு, அல்லது சொடுக்கிக் குறிமுள்ளின் செயலை ஒத்தது.

திரைச் சீராய்வு நிலைக்கு மாறும் பொழுது, தற்போதைய வழிசெலுத்திப் பொருளின் திரை நிலையில் சீராய்வுச் சுட்டியை வைக்கும். சீராய்வுக் கட்டளைகளைக் கொண்டு திரையில் வலம் வரும் பொழுது, சீராய்வுச் சுட்டியின் திரை நிலையில் இருக்கும் பொருளுக்கு வழிசெலுத்திப் பொருளை இற்றைப்படுத்தும்.

புதிய திரைத் தளவமைப்புத் தொழில்நுட்பங்களுக்கு தற்போதைக்கு ஆதரவளிக்க இயலவில்லையென்பதால், சில பயன்பாடுகளின் திரையில் காணப்படும் சில, அல்லது எல்லா உரைகளையும் என்விடிஏ கண்டுணர்வதில்லை.

கணினிச் சொடுக்கியைப் பயன்படுத்தும்பொழுது, சொடுக்கியின் குறிமுள் நகர்கையில், நேரடியாக அதன்கீழ் இருக்கும் உரையைப் படிக்கும். ஆதரவிருந்தால், குறிமுள்ளை சுற்றியிருக்கும் உரைப் பத்தியையும் படிக்கும். ஆனால், சில கட்டுப்பாடுகளில், உரைகளை வரிகளாக மட்டுமே படிக்க முடியும்.

சொடுக்கியின் குறிமுள் நகர்கையில், அதன்கீழ் இருக்கும் பொருளின் வகையையும் அறிவிக்க என்விடிஏவை அமைவடிவமாக்கலாம். எடுத்துக்காட்டாக, பொத்தான், வரிசைப் பட்டியல், சேர்க்கைப் பெட்டி போன்றவைகளைக் கூறலாம். கட்டுப்பாடுகளில் இருக்கும் உரை, போதுமான அளவு இருக்காத தருணங்களில், முழுமையாகப் பார்வையிழந்தவர்களுக்கு இது பயன்படும்.

கேட்பொலி இசைவுகளை சிற்றொலிகளாக எழுப்புவதன் மூலம், திரையின் பரிமாணத்தை ஒப்பு நோக்கி, சொடுக்கியின் குறிமுள் திரையில் எங்கிருக்கிறது என்றரிய என்விடிஏ உதவுகிறது. குறிமுள் திரையில் எவ்வளவுக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, ஒலி இசைவின் சுருதி மிகுதியாக இருக்கும். குறிமுள் திரையின் இட, அல்லது வலப் பக்கமாக இருந்தால், பிரியோசை ஒலிபெருக்கி பயனிலுள்ளதாக அனுமானித்து, சிற்றொலிகள், இட, அல்லது வலப் பக்கமாக ஒலிக்கும்.

மேற்கூறிய கூடுதல் சிறப்புக்கூறுகள், என்விடிஏவின் இயல்பில் இயக்கப்பட்டிருப்பதில்லை. இச்சிறப்புக் கூறுகளை இயக்க, என்விடிஏ பட்டியலின், விருப்பங்கள் உட்பட்டியலில் இருக்கும் என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் சொடுக்கி அமைப்புகள் வகைமைக்குச் சென்று, என்விடிஏவை அமைவடிவமாக்கலாம்.

சொடுக்கியுடன் வழிசெல்ல, சொடுக்கிக் கருவி/பின்தொடர் திட்டு தேவைப்பட்டாலும், என்விடிஏவில் இதற்கென்று சில விசைக் கட்டளைகள் உள்ளன.

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை தொடு சைகை விளக்கம்
இடது சொடுக்கு எண் திட்டு வகுத்தல் என்விடிஏ+இட அடைப்பு ஏதுமில்லை சொடுக்கியின் இடப்பொத்தான் ஒருமுறை சொடுக்கப்படும். இயல்பான இரட்டை சொடுக்கிற்கு, இப்பொத்தானை தொடர்ந்து விரைவாக இருமுறை அழுத்தவும்
இடது சொடுக்குப் பூட்டு மாற்றழுத்தி+எண் திட்டு வகுத்தல் என்விடிஏ+மாற்றழுத்தி+இட அடைப்பு ஏதுமில்லை ஒருமுறை அழுத்தினால், சொடுக்கியின் இடப்பொத்தான் பூட்டப்படும். பூட்டைத் திறக்க, இவ்விசையை மீண்டும் ஒருமுறை அழுத்தவும். பொருளை இழுக்க, இவ்விசையை அழுத்தியபின், சொடுக்கியையோ, சொடுக்கியின் வழிக் கட்டளைகளையோ பயன்படுத்தலாம்
வலது சொடுக்கு எண் திட்டு பெருக்கல் என்விடிஏ+வல அடைப்பு தட்டு, பிறகு நிலைநிறுத்து சொடுக்கியின் வலது பொத்தான் ஒருமுறை சொடுக்கப்படும். பெரும்பாலும், இக்கட்டளை சொடுக்கி இருக்குமிடத்திற்கான சூழலுணர்ப் பட்டியலைத் தோற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
வலது சொடுக்குப் பூட்டு மாற்றழுத்தி+எண் திட்டு பெருக்கல் என்விடிஏ+கட்டுப்பாடு+வல அடைப்பு ஏதுமில்லை ஒருமுறை அழுத்தினால், சொடுக்கியின் வலப்பொத்தான் பூட்டப்படும். பூட்டைத் திறக்க, இவ்விசையை மீண்டும் ஒருமுறை அழுத்தவும். பொருளை இழுக்க, இவ்விசையை அழுத்தியபின், சொடுக்கியையோ, சொடுக்கியின் வழிக் கட்டளைகளையோ பயன்படுத்தலாம்
சொடுக்கியின் நிலையில் மேலுருட்டுக ஏதுமில்லை ஏதுமில்லை ஏதுமில்லை தற்போதைய சொடுக்கியின் நிலையில் சொடுக்கியின் சக்கரத்தை மேலுருட்டுகிறது
சொடுக்கியின் நிலையில் கீழுருட்டுக ஏதுமில்லை ஏதுமில்லை ஏதுமில்லை தற்போதைய சொடுக்கியின் நிலையில் சொடுக்கியின் சக்கரத்தை கீழுருட்டுகிறது
சொடுக்கியின் நிலையில் இடப்புறம் உருட்டுக ஏதுமில்லை ஏதுமில்லை ஏதுமில்லை தற்போதைய சொடுக்கியின் நிலையில் சொடுக்கியின் சக்கரத்தை இடப்புறம் உருட்டுகிறது
சொடுக்கியின் நிலையில் வலப்புறம் உருட்டுக ஏதுமில்லை ஏதுமில்லை ஏதுமில்லை தற்போதைய சொடுக்கியின் நிலையில் சொடுக்கியின் சக்கரத்தை வலப்புறம் உருட்டுகிறது
தற்போதைய வழிசெலுத்திப் பொருளுக்குச் சொடுக்கியை நகர்த்துக என்விடிஏ+எண் திட்டு வகுத்தல் என்விடிஏ+மாற்றழுத்தி+m ஏதுமில்லை சொடுக்கியின் குறிமுள்ளைத் தற்போதைய வழிசெலுத்திப் பொருளுக்கும், சீராய்வுச் சுட்டிக்கும் நகர்த்தும்
சொடுக்கியின் கீழிருக்கும் பொருளுக்கு நகர்த்துக என்விடிஏ+எண் திட்டு பெருக்கல் என்விடிஏ+மாற்றழுத்தி+n ஏதுமில்லை வழிசெலுத்திப் பொருளை, தற்பொழுது சொடுக்கியின் கீழிருக்கும் பொருளுக்கு நகர்த்தும்

உலாவும் நிலை

சிக்கலான இணையப் பக்கங்கள் போன்று, படிக்க மட்டுமேயான ஆவணங்களைப் படிக்க என்விடிஏ உலாவும் நிலையைப் பயன்படுத்துகிறது. பின்வரும் பயன்பாடுகளின் ஆவணங்கள் இதில் உள்ளடங்கும்:

மைக்ரோசாஃப்ட் வேர்ட் ஆவணங்களினூடே வழிசெல்ல உலாவும் நிலையைப் பயன்படுத்தும் விருப்பத் தேர்வும் உள்ளது.

உலாவும் நிலையில், எளிய ஆவணங்களை சுட்டி விசைகளைக் கொண்டு படிப்பதுபோல், படிக்க மட்டுமேயான ஆவணமும் தட்டைக் காட்சியில் வழங்கப்படும். உலாவும் நிலையில், கணினிச் சுட்டியின் எல்லா விசைக் கட்டளைகளையும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, எல்லாம் படித்திடுக, வடிவூட்டத்தை அறிவித்திடுக, அட்டவணை வழிசெலுத்தல் கட்டளைகள் போன்றவைகளைக் கூறலாம். பார்வைக்குத் துலக்கமாக்குக விருப்பத் தேர்வு தேர்வாகியிருந்தால், நிகர்நிலை உலாவும் நிலைச் சுட்டியின் தற்போதைய அமைவிடம் பார்வைக்கு துலக்கமாக்கிக் காட்டப்படும். தாங்கள் நகரும்பொழுது, ஒரு உரை, தொடுப்பா, தலைப்பா போன்ற தகவல்களையும் அறிவிக்கும்.

சில தருணங்களில், இவ்வாவணங்களில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் தாங்கள் நேரடியாக அளவளாவ வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக, தொகு களங்களில் தட்டச்சிடவும், பட்டியல்களின் உருப்படிகளினூடே அம்பு விசைகளைக் கொண்டு நகரவும் வேண்டியிருக்கும்.
இதைச் செய்ய, தாங்கள் குவிமைய நிலைக்கு மாற வேண்டும். இந்நிலையில், அழுத்தப்படும் எல்லா விசைகளும் என்விடிஏ கையாளாமல், கணினிக்கு அனுப்பி வைக்கப்படும். உலாவும் நிலையில், குவிமைய நிலைக்கு மாற வேண்டியிருக்கும் கட்டுப்பாடுகளுக்குத் தத்தல் விசையின் மூலமாகவோ, சொடுக்கியின் மூலமாகவோ நகரும்பொழுது, இயல்பில் குவிமைய நிலைத் தானாக இயக்கப்படும். அதேபோல், குவிமைய நிலையில் இருக்கும்பொழுது, குவிமைய நிலைத் தேவையில்லாத கட்டுப்பாடுகளுக்குத் தத்தல் விசை மூலமாகவோ, சொடுக்கி மூலமாகவோ நகரும்பொழுது, உலாவும் நிலைத் தானாக இயக்கப்படும். குவிமைய நிலைத் தேவைப்படும் கட்டுப்பாடுகளில், குவிமைய நிலையை இயக்க, உள்ளிடு விசையையோ, இடைவெளிப் பட்டையையோ அழுத்தலாம். விடுபடு விசையை அழுத்தினால், உலாவும் நிலைக்கு மாறும். கூடுதலாக, தாங்கள் கட்டாய குவிமைய நிலையை ஏற்படுத்தலாம். தாங்கள் மீண்டும் உலாவும் நிலைக்கு மாற விரும்பும்வரை, குவிமைய நிலை இயக்கத்தில் இருக்கும்.

பெயர் விசை விளக்கம்
உலாவும் நிலை, குவிமைய நிலைகளுக்கிடையே மாற்றுக என்விடிஏ+இடைவெளி உலாவும் நிலை, குவிமைய நிலை ஆகிய இருநிலைகளுக்கிடையே மாற்றியமைக்கும்
குவிமைய நிலையை விட்டு வெளியேறுக விடுபடு முன்னதாக குவிமைய நிலை தானாக இயக்கப்பட்டிருந்தால், உலாவும் நிலைக்கு மீண்டும் மாறும்
உலாவும் நிலை ஆவணத்தைப் புத்தாக்குக என்விடிஏ+f5 ஆவணத்தின் சில உள்ளடக்கப் பகுதிகள் திரையில் சரிவர தோன்றாதபொழுது, ஆவணத்தை மீளேற்றம் செய்யும். இக்கட்டளை மைக்ரோசாஃப்ட் வேர்டிலும், அவுட்லுக்கிலும் கிடையாது.
கண்டறிக என்விடிஏ+கட்டுப்பாடு+f தற்போதைய ஆவணத்தில் ஒரு உரையைக் கண்டறிய, இவ்விசையை அழுத்தினால், கண்டறிதளுக்கான உரையாடல் பெட்டித் தோன்றும். கூடுதல் தகவல்களுக்கு உரையைக் கண்டறிதல் பிரிவைக் காணவும்.
அடுத்ததைக் கண்டறிக என்விடிஏ+f3 ஏற்கெனவே கண்டறிந்த உரையின் அடுத்த தோற்றம் எங்கிருக்கிறது என்று கண்டறியும்
முந்தையதைக் கண்டறிக என்விடிஏ+மாற்றழுத்தி+f3 ஏற்கெனவே கண்டறிந்த உரையின் தோற்றம் முந்தையதாக எங்கிருக்கிறது என்று கண்டறியும்

ஒற்றை எழுத்துடன் வழிசெலுத்தல்

உலாவும் நிலையில், ஒரு ஆவணத்திலிருக்கும் சில களங்களுக்கு விரைவாக சென்றடைய, ஒற்றை எழுத்துடன் வழிசெல்லும் வசதியை என்விடிஏ கொண்டுள்ளது. இவ்விசைகள் யாவும், ஒவ்வொரு வகை ஆவணத்திலும் ஆதரிக்கப்படுவதில்லை என்பதைக் கவனிக்கவும்.

உலாவும் நிலையில், கீழ் கண்ட விசைகளை அழுத்தினால், அடுத்ததாகத் தோன்றும் கூறுக்குச் செல்லும். மாற்றழுத்தி விசையுடன் இவ்விசைகளை சேர்த்து அழுத்தினால், முந்தைய கூறுக்குச் செல்லும்.

வரிசைப் பட்டியல்கள், அட்டவணைகள் போன்ற கொள்களங்களின் துவக்கத்திற்கு, அல்லது முடிவிற்குச் செல்ல:

பெயர் விசை விளக்கம்
கொள்களத்தின் துவக்கத்திற்குச் செல்க மாற்றழுத்தி+கால் புள்ளி சுட்டியின் இடத்திலுள்ள வரிசைப் பட்டியல், அட்டவணை போன்ற கொள்களத்தின் துவக்கத்திற்குச் செல்லும்
கொள்களத்தின் முடிவிற்கு அப்பால் செல்க கால் புள்ளி சுட்டியின் இடத்திலுள்ள வரிசைப் பட்டியல், அட்டவணை போன்ற கொள்களத்தின் முடிவிற்கு அப்பால் செல்லும்

ஜிமெயில், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சில வலைய பயன்பாடுகள், ஒற்றை எழுத்துகளை குறுக்கு விசைகளாகப் பயன்படுத்துகின்றன. என்விடிஏவின் ஒற்றை எழுத்துடன் வழிசெல்லும் வசதி இயக்கத்திலிருந்தால், மேற்கூறிய பயன்பாடுகளின் ஒற்றை எழுத்து குறுக்கு விசைகளைப் பயன்படுத்த இயலாது. ஆகவே, இப்பயன்பாடுகளின் குறுக்கு விசைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் தருணங்களில், என்விடிஏவின் ஒற்றை எழுத்துடன் வழிசெல்லும் வசதியைத் தற்காலிகமாக முடக்க வேண்டும்.

தற்போதைய ஆவணத்திற்கு ஒற்றை எழுத்துடன் வழிசெல்லும் வசதியை இயக்க, அல்லது நிறுத்த, என்விடிஏ+மாற்றழுத்தி+இடைவெளிப்பட்டையை அழுத்தவும்.

உரைப் பத்தி வழிசெலுத்தல் கட்டளை

அடுத்த, அல்லது முந்தைய உரைப் பத்திக்கு தாங்கள் நகர, p, அல்லது மாற்றழுத்தி+p விசையை அழுத்தலாம். முழுமையான சொற்றடர்களால் எழுதப்பட்டவையாகத் தோன்றும் உரைக் குழுக்கள் உரைப் பத்திகள் என்று வரையறுக்கப்படுகின்றன. பின்வருவன போன்ற பல இணையப் பக்கங்களின் படிக்கத்தக்க உள்ளடக்கத்தின் துவக்கத்தை அறிய இது பயனுள்ளதாக இருக்கும்:

பின்வருவன போன்ற சில வகையான ஒழுங்கற்ற குவியல்களைத் தவிர்க்கவும் இக்கட்டளைகள் உதவிகரமாக இருக்கும்:

உரைப் பத்திகளை அடையாளங்காண என்விடிஏ இயன்றவரை முயன்றாலும், அதற்கான வழிமுறை சரியாக இருக்காது என்பதோடு, சில தருணங்களில் தவறுகளையும் இழைக்கலாம் என்பதை கவனிக்கவும். பத்தி வழிசெலுத்துதல் கட்டளைகளான கட்டுப்பாடு+மேலம்பு/கீழம்புக்கு வேறானதாகும் இந்த உரைப் பத்தி வழிசெலுத்திக் கட்டளைகள். உரைப் பத்திக் கட்டளைகள் அடுத்த/முந்தைய பத்திக்கு, உரைகள் இருந்தால் மட்டும் நகரும். ஆனால், பத்தி வழிசெலுத்தல் கட்டளைகள், அடுத்த/முந்தைய பத்திக்கு, உரைகள் இல்லாதபொழுதும் நகரும்.

பிற வழிசெலுத்தல் கட்டளைகள்

மேலே பட்டியலிடப்பட்டுள்ள விரைவு வழிசெலுத்தல் கட்டளைகளுக்கு கூடுதலாக, இயல்புநிலை விசைகள் ஒதுக்கப்படாத கட்டளைகளை என்விடிஏ கொண்டுள்ளது. இக்கட்டளைகளைப் பயன்படுத்த, முதலில் உள்ளீட்டு சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, அவைகளுக்கு சைகைகளை ஒதுக்க வேண்டும். கிடைப்பிலிருக்கும் கட்டளைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

ஒவ்வொரு வகை கூறுக்குமிடையே ஆவணத்தில் முன்னும் பின்னும் நகர இரு வேறு கட்டளைகள் உல்ளன என்பதை நினைவில் கொண்டு, இரு திசைகளிலும் விரைவாக நகர, இவ்விரு கட்டளைகளுக்கான சைகைகளை தனித் தனியே ஒதுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தத்தல்களுக்கிடையே 'y', 'மாற்றழுத்தி+y' விசைகளைப் பயன்படுத்தி விரைவாக வழிசெலுத்த, பின்வருவனவற்றை தாங்கள் செய்ய வேண்டும்:

  1. உலாவு நிலையில், உள்ளீட்டுச் சைகை உரையாடலைத் திறக்கவும்.
  2. உலாவு நிலைப் பிரிவில், 'அடுத்த தத்தல் ுருப்படிக்கு நகர்க' என்கிற சைகையைக் கண்டறியவும்.
  3. இச்சைகைக்கு, 'y' விசையை இணைக்கவும்.
  4. 'முந்தைய தத்தல் உருப்படிக்கு நகர்க' என்கிற சைகையைக் கண்டறியவும்.
  5. இச்சைகைக்கு, 'மாற்றழுத்தி+y' விசையை இணைக்கவும்.

கூறுகளின் பட்டியல்

பயன்பாடுகளுக்கேற்ற வகையில், ஒரு ஆவணத்தின் பல்வேறு கூறுகளைக் கொண்ட பட்டியலை என்விடிஏ வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, இணைய உலாவிகளில், தொடுப்புகள், தலைப்புகள், படிவக் களங்கள், பொத்தான்கள், நிலக்குறிகள் போன்ற கூறுகளைக் கொண்ட பட்டியலைக் காண்பிக்கிறது. பல்வேறுபட்ட கூறுகளுக்கிடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க, வானொலிப் பொத்தான்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கூறுகளின் பட்டியல் உரையாடலில், தாங்கள் தேடும் கூறின் உரைகளை வடிகட்ட, ஒரு தொகு களமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு உருப்படியைத் தேர்ந்தெடுத்தவுடன், கொடுக்கப்பட்டுள்ள பொத்தான்களை அழுத்தி, அவ்வுருப்படியை இயக்கலாம், அல்லது அவ்வுருப்படிக்குச் செல்லலாம்.

பெயர் விசை விளக்கம்
உலாவும் நிலைக்கான கூறுகளின் பட்டியல் என்விடிஏ+f7 ஆவண கூறுகளின் உருப்படிகளைக் கொண்ட பட்டியலை வழங்குகிறது

உரையைக் கண்டறிதல்

நடப்பு ஆவணத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட உரையைக் கண்டறிய இவ்வுரையாடல் அனுமதிக்கிறது. "தாங்கள் கண்டறிய விரும்பும் உரையைத் தட்டச்சிடுக" என்கிற தொகு களத்தில் கண்டறியப்பட வேண்டிய உரையை உள்ளிடலாம். "வகையுணரி" தேர்வுப் பெட்டி, முகப்பெழுத்துகள் அமைந்திருக்கும், அல்லது அமைந்திருக்காத ஆங்கில உரைகளைப் பிரித்துக் கண்டறியும். எடுத்துக்காட்டாக, "வகையுணரி" தேர்வுப் பெட்டி தேர்வான நிலையில், "NV Access" என்பதனைத் தாங்கள் கண்டறியலாம். ஆனால், "nv access" என்பதனைக் கண்டறிய இயலாது. உரைகளைக் கண்டறிய, பின்வரும் விசைக் கட்டளைகளைப் பயன்படுத்தவும்:

பெயர் விசை விளக்கம்
உரையைக் கண்டறிக என்விடிஏ+கட்டுப்பாடு+f கண்டறிவதற்கான உரையாடல் பெட்டியைத் திறக்கிறது
அடுத்ததைக் கண்டறிக என்விடிஏ+f3 தற்பொழுது கண்டறியப்பட்டிருக்கும் உரையின் அடுத்த தோற்றம் எங்கிருக்கிறது என்று கண்டறிந்து அங்குச் செல்லும்
முந்தையதைக் கண்டறிக என்விடிஏ+மாற்றழுத்தி+f3 தற்பொழுது கண்டறியப்பட்டிருக்கும் உரையின் முந்தையத் தோற்றம் எங்கிருக்கிறது என்று கண்டறிந்து அங்குச் செல்லும்

பொதிந்துள்ள பொருட்கள்

பக்கங்களில் ஆரக்கிள் ஜாவா, எச்டிஎம்எல் 5 போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டு, உள்ளடக்கங்கள் செரிவூட்டப்பட்டிருப்பதோடு, பயன்பாடுகளும், உரையாடல்களும் அவைகளில் காணப்படலாம். உலாவும் நிலையில் இவைகளை என்விடிஏ எதிர்கொள்ளும்பொழுது, "பொதிந்துள்ள பொருள்", "பயன்பாடு", அல்லது "உரையாடல்" என்று தகுந்தவாறு அறிவிக்கும். இவைகளுக்கிடையே விரைவாக நகர, o, மற்றும் மாற்றழுத்தி+o ஒற்றையெழுத்து வழிசெலுத்தி விசையைப் பயன்படுத்தலாம். இப்பொருட்களினுடன் அளவளாவ, அவைகளின் மீது உள்ளிடு விசையை அழுத்தலாம். பொருளை அணுக முடியுமானால், பிற பயன்பாடுகளில் செயற்படுவதுபோல, இப்பொருளின் ஊடேயும் தத்தல் விசையைக் கொண்டு வழிசெலுத்தலாம். பொதிந்துள்ள பொருளைக் கொண்டுள்ள பக்கத்திற்குத் திரும்பிச் செல்ல, ஒரு விசைக் கட்டளையும் கொடுக்கப்பட்டுள்ளது.

பெயர் விசை விளக்கம்
பொதிந்துள்ள பொருளைக் கொண்டுள்ளப் பக்கத்திற்குத் திரும்பிச் செல்க என்விடிஏ+கட்டுப்பாடு+இடைவெளி பொதிந்துள்ள பொருளைத் தன்னுள் கொண்டிருக்கும் ஆவணத்திற்குத் திரும்பிச் செல்லும்

பயன்பாட்டுத் தெரிவு முறை

இயல்பில், உலாவு நிலையில் மாற்றழுத்தி விசையுடன் அம்பு விசைகளைப் பயன்படுத்தி உரையைத் தெரிவுச் செய்யும்பொழுது, உண்மையில் அந்தப் பயன்பாட்டினுள் உரை தெரிவு செய்யப்படுவதில்லை, என்விடிஏவில் இருக்கும் அவ்வாவணத்தின் உலாவு நிலை பிரதிநித்துவத்தில்தான் தெரிவுச் செய்யப்படுகிறது. அதாவது, திரையில் தெரிவு தோற்றமளிக்காது என்பதோடு,கட்டுப்பாடு+c விசையைப் பயன்படுத்தி உரையைத் தெரிவுச் செய்யும்பொழுது, அட்டவணைகளின் வடிவூட்டம், தொடுப்பு போன்ற செரிவுட்டப்பட்ட உள்ளடக்கம் தெரிவுச் செய்யப்படுவதில்லை, அவ்வாவணத்திற்குரிய என்விடிஏவின் எளிய உரைப் பிரதிநித்துவம் மட்டும்தான் தெரிவுச் செய்யப்படுகிறது. இருப்பினும், சில உலாவு நிலை ஆவணங்களில் (தற்போதைக்கு மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ்) பயன்பாட்டுத் தெரிவு முறையை என்விடிஏவில் முடுக்கிக்கொள்ளலாம். என்விடிஏவின் உலாவு நிலைத் தெரிவினை, பயன்பாட்டுத் தெரிவு முறை பின்தொடர வேண்டுமென்பதை இது வரையறுக்கிறது.

பெயர் விசை விளக்கம்
பயன்பாட்டுத் தெரிவு முறையை முடுக்குகிறது, அல்லது முடக்குகிறது என்விடிஏ+மாற்றழுத்தி+f10 பயன்பாட்டுத் தெரிவு முறையை முடுக்குகிறது, அல்லது முடக்குகிறது

பயன்பாட்டுத் தெரிவு முறை முடுக்கப்பட்டிருந்தால், கட்டுப்பாடு+c விசையைப் பயன்படுத்தி உரையைத் தெரிவுச் செய்யும்பொழுது, ஆவணத்தின் செரிவூட்டப்பட்ட உள்ளடக்கம் தெரிவுச் செய்யப்படும், என்விடிஏவின் எளிய உரை பிரதிநித்துவம் தெரிவுச் செய்யப்பட மாட்டாது. அதாவது, மைக்ரோசாஃப்ட் வேர்ட், அல்லது எக்ஸெல் போன்ற ஆவணங்களில் இவ்வுள்ளடக்கம் ஒட்டப்படும்பொழுது, அட்டவணைகளின் வடிவூட்டம், தொடுப்பு போன்றவைகளும் சேர்த்துுக்கொள்ளப்படும். ஆனால், உலாவு நிலையில் என்விடிஏ உருவாக்கும் அணுகுதிறன் சிட்டைகள், அல்லது பிற தகவல்கள், பயன்பாட்டுத் தெரிவு முறையில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும். மேலும், என்விடிஏவின் உலாவு நிலைத் தெரிவுடன் பயன்பாட்டுத் தெரிவு முறையைப் பொருத்திக்கொள்ள சிறந்த முயற்சியை ஒரு பயன்பாடு மேற்கொண்டாலும், அது எப்பொழுதும் முழுத் துல்லியத்துடன் இருக்காது. இருப்பினும், செரிவுட்டப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட ஒரு முழு அட்டவணை, அல்லது பத்தியைப் படியெடுக்கவேண்டிய சூழ்நிலைகளில் இவ்வசதி பயனுள்ளதாக இருக்கும்.

கணக்கு உள்ளடக்கங்களைப் படித்தல்

பேச்சு, பிரெயில் ஆகிய இரண்டிலும் அணுகலை வழங்கி, வலைதளங்களிலும் பிற பயன்பாடுகளிலும் கணக்கு உள்ளடக்கத்தைப் படிக்கவும் வழிசெலுத்தவும் என்விடிஏவினால் இயலும். ஆனால், என்விடிஏ, கணக்கு உள்ளடக்கத்தைப் படிக்கவும், அதனுடன் அளவளாவவும், என்விடிஏவிற்கான கணக்கு கூறு ஒன்றினை முதலில் தாங்கள் நிறுவ வேண்டும். மேத்கேட் என்விடிஏ நீட்சிநிரல் மற்றும் அக்ஸஸ்8மேத் உட்பட என்விடிஏ அங்காடியில் இருக்கும் பல என்விடிஏ நீட்சிநிரல்கள் கணக்கிற்கு ஆதரவளிக்கின்றன. என்விடிஏவில் இருக்கும் நீட்சிநிரல்களை எவ்வாறு உலாவித் தேடி நிறுவுவது என்பது குறித்து அறிய, நீட்சிநிரல் அங்காடி பிரிவைக் காணவும். விரிஸ் நிறுவனத்தின் தொடர்ந்து பராமரிக்கப்படாத பழைய மேத்பிளேயர் மென்பொருள் தங்கள் கணினியில் காணப்பட்டால், அதை என்விடிஏவினால் பயன்படுத்த இயலும்.

ஆதரவளிக்கப்படும் கணக்கு உள்ளடக்கம்

பொருத்தமானதொரு கணக்குக் கூறு நிறுவப்பட்டிருக்கும் நிலையில், கீழ்க்காணப்படும் கணக்கு உள்ளடக்க வகைகளை என்விடிஏ ஆதரிக்கிறது:

ஒரு ஆவணத்தைப் படிக்கும் பொழுது, ஆதரிக்கப்படும் கணக்கு உள்ளடக்கங்களை எதிர்படும் இடங்களில் என்விடிஏ படிக்கிறது. தாங்கள் பிரெயில் காட்சியமைவைப் பயன்படுத்துவதாக இருந்தால், இது பிரெயிலிலும் காட்டப்படும்.

அளவளாவலுடனான வழிசெலுத்தல்

பிரெயில் காட்சியமைவைப் பயன்படுத்தாமல், என்விடிஏவின் பேச்சை முதன்மையாகப் பயன்படுத்துபவராகத் தாங்கள் இருந்தால், பெரும்பான்மையானத் தருணங்களில், கணக்கின் முழுத் தொகுதியையும் ஒரே நேரத்தில் கேட்க முற்படாமல், அதன் சிறு பகுதியை மட்டும் முதலில் ஆராய முற்படுவீர்கள்.

உலாவும் நிலையில் தாங்கள் இருந்தால், கணக்கு உள்ளடக்கத்திற்கு சுட்டியைக் கொண்டுசென்று, உள்ளிடு விசையை அழுத்தவும்.

உலாவும் நிலையில் தாங்கள் இல்லையென்றால்,

  1. சீராய்வுச் சுட்டியை கணக்கு உள்ளடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். இயல்பில், கணினிச் சுட்டியை சீராய்வுச் சுட்டிப் பின்தொடர்வதால், தாங்கள் விரும்பும் கணக்கு உள்ளடக்கத்திற்குச் செல்ல கணினிச் சுட்டியைப் பயன்படுத்தலாம்.
  2. பிறகு, கீழ்க் காணும் கட்டளையை இயக்கவும்:
பெயர் விசை விளக்கம்
கணக்கு உள்ளடக்கத்துடன் அளவளாவுக என்விடிஏ+நிலைமாற்றி+m கணக்கு உள்ளடக்கத்துடன் அளவளாவத் துவங்குகிறது

இக்கட்டத்தில், கணக்கு பயன்முறைக்குள் என்விடிஏ நுழையும். அங்கே விசை அம்புகள் போன்ற மேத்ப்ளேயர் கட்டளைகளைப் பயன்படுத்தி, கணக்கினை ஆராயலாம். எடுத்துக்காட்டாக, கணக்குத் தொகுதிக்கிடையே இடது, அல்லது வலது அம்பு விசைகளைப் பயன்படுத்தி நகரலாம், பின்னம் போன்ற கணக்கின் ஒரு சிறு பகுதியை விரித்து உள்நோக்க கீழம்பினைப் பயன்படுத்தலாம்.

ஆவணத்திற்குத் தாங்கள் திரும்ப விரும்பினால், விடுபடு விசையை அழுத்தவும்.

கணித உள்ளடக்கத்தினுள் படிப்பதற்கும், வழிசெலுத்துவதற்கும் கிடைப்பிலிருக்கும் கட்டளைகள் மற்றும் விருப்பத்தேர்வுகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, தாங்கள் நிறுவியிருக்கும் குறிப்பிட்ட தங்களது கணிதக் கூறிற்கான ஆவணத்தைப் பார்க்கவும்.

கணக்கு உள்ளடக்கங்கள் சில தருணங்களில் பொத்தானில், அல்லது பிற களங்களில் காண்பிக்கப்படும். இவைகளை அழுத்தும்பொழுது, ஒரு உரையாடல் பெட்டி, அல்லது சூத்திரம் குறித்த கூடுதல் தகவல்கள் காண்பிக்கப்படும். சூத்திரத்தைக் கொண்டுள்ள பொத்தானை, அல்லது பிற களங்களை இயக்க, கட்டுப்பாடு+உள்ளிடு விசையை அழுத்தவும்.

மேத் பிளேயரை நிறுவுதல்

என்விடிஏவில் கணக்கை ஆதரிக்க புதிய என்விடிஏ நீட்சிநிரல்களில் ஒன்றைப் பயன்படுத்துவது பொதுவாக பரிந்துரைக்கப்பட்டாலும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மேத் பிளேயர் இன்னும் பொருத்தமான தேர்வாக இருக்கும். எ.கா. புதிய நீட்சிநிரல்களில் ஆதரிக்கப்படாத குறிப்பிட்ட மொழி, அல்லது பிரெயில் குறியீட்டினை மேத் பிளேயர் ஆதரிக்கலாம். மேத் பிளேயர் விரிஸ் வலைதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. மேத் பிளேயரைத் தரவிறக்கிக் கொள்ளவும். மேத் பிளேயரை நிருவிய பிறகு என்விடிஏவை தாங்கள் மறுதுவக்க வேண்டியிருக்கும். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 போன்ற பழைய உலாவிகளுக்கு மட்டுமே என்று மேத் பிளேயர் குறித்த தகவல் குறிப்பிடலாம் என்பதைக் கவனிக்கவும். இது கணக்கு உள்ளடக்கத்தை பார்வைக்குத் தெரியும் வண்ணம் மேத் பிளேயரைப் பயன்படுத்துவதை மட்டுமே குறிக்கிறது. என்விடிஏவுடன் கணக்கைப் படிக்க, அல்லது வழிசெலுத்த மேத் பிளேயரைப் பயன்படுத்துபவர்கள் இச்செய்தியைப் புறக்கணிக்கலாம்.

பிரெயில்

பிரெயில் காட்சியமைவினை தாங்கள் வைத்திருந்தால், தகவல்களை என்விடிஏ பிரெயிலில் அளிக்கும். தங்களின் பிரெயில் காட்சியமைவு பெர்க்கின்ஸ் மாதிரியான விசைப்பலகையைக் கொண்டிருந்தால், குறுக்கப்பட்ட, அல்லது குறுக்கப்படாத பிரெயிலினை உள்ளிடலாம். பிரெயில் காட்சியமைவுடன் இணைந்தோ, அல்லது தனித்தோ, பிரெயில் தோற்றத்தைப் பயன்படுத்தி, திரையில் பிரெயிலைக் காட்சிபடுத்தலாம்.

ஆதரவளிக்கப்படும் பிரெயில் காட்சியமைவுகள் குறித்து அறிய, இவ்வழிகாட்டியிலுள்ள ஆதரவளிக்கப்படும் பிரெயில் காட்சியமைவுகள் என்கிற பிரிவினைக் காணவும். பிரெயில் காட்சியமைவுகளைப் பின்னணியில் தானாகக் கண்டறியும் என்விடிஏவின் செயல்பாட்டினை எந்தெந்த பிரெயில் காட்சியமைவுகள் ஆதரிக்கின்றன என்கிற தகவலையும் இப்பிரிவு கொண்டிருக்கிறது. என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பிரெயில் அமைப்புகள் வகைமையைக் கொண்டு, பிரெயிலை அமைவடிவமாக்கலாம்.

பிரெயில் கட்டுப்பாட்டு வகைகள், அவைகளின் நிலைகள் மற்றும் நிலக்குறி குறுக்கங்கள்

பிரெயில் காட்சியமைவில் இயன்ற அளவு தகவல்களையளிக்க, கட்டுப்பாட்டு வகைகள், அவைகளின் நிலை மற்றும் நிலக்குறிக்கான பின்வரும் குறுக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன. குழப்பத்தைத் தவிர்க்க, ஆங்கிலக் குறுக்கங்கள் தக்கவைக்கப்பட்டுள்ளன.

குறுக்கம் கட்டுப்பாட்டு வகை
app பயன்பாடு
art பிரிவுக்கூறு
bqt உரைத் தொகுதி
btn பொத்தான்
drbtn கீழ்விடு பொத்தான்
spnbtn சுழற்பொத்தான்
splbtn பிளவுப் பொத்தான்
tgbtn மாற்றியமைப் பொத்தான்
cap தலைப்புரை
cbo சேர்க்கைப் பெட்டி
chk தேர்வுப் பெட்டி
dlg உரையாடல்
doc ஆவணம்
edt தொகு களம்
pwdedt கடவுச்சொல் தொகு
embedded பொதிந்துள்ளப் பொருள்
enote முடிவுக் குறிப்பு
fig வடிவம்
fnote அடிக் குறிப்பு
gra வரைகலை
grp குழுவாக்கம்
hN தலைப்பின் மட்டம், எ.கா. h1, h2.
hlp உதவிக் குமிழி
lmk நிலக்குறி
lnk தொடுப்பு
vlnk வருகையளிக்கப்பட்டத் தொடுப்பு
lst வரிசைப் பட்டியல்
mnu கிடைப் பட்டியல்
mnubar கிடைப் பட்டியல் பட்டை
mnubtn கிடைப் பட்டியல் பொத்தான்
mnuitem கிடைப் பட்டியல் உருப்படி
pnl பலகை
prgbar முன்னேற்றப் பட்டை
bsyind மும்முர நிலைகாட்டி
rbtn வானொலிப் பொத்தான்
scrlbar உருள் பட்டை
sect பிரிவு
stbar நிலைப் பட்டை
tabctl தத்தல் கட்டுப்பாடு
tbl அட்டவணை
cN அட்டவணையின் நெடுவரிசை, எ.கா. c1, c2.
rN அட்டவணையின் கிடைவரிசை, எ.கா. r1, r2.
term முனையம்
tlbar கருவிப் பட்டை
tltip கருவிக் குறிப்பு
tv கிளைத் தோற்றம்
tvbtn கிளைத் தோற்றப் பொத்தான்
tvitem கிளைத் தோற்ற உருப்படி
lv N கிளைத் தோற்ற மட்டம் N
wnd சாளரம்
⠤⠤⠤⠤⠤ பிரிப்பான்
mrkd குறியிடப்பட்ட உள்ளடக்கம்

கீழ் காணும் கட்டுப்பாட்டு நிலைகளுக்கான பின்வரும் குறுக்கங்களும் விளக்கப்பட்டுள்ளன:

குறுக்கம் கட்டுப்பாட்டு நிலை
... தன்னியக்க நிறைவை ஆதரிக்கும் பொருளைக் குறிப்பது
⢎⣿⡱ அழுத்தப்பட்ட மாற்றிப் பொத்தானை/பொருளைக் குறிப்பது
⢎⣀⡱ அழுத்தப்படாத மாற்றிப் பொத்தானை/பொருளைக் குறிப்பது
⣏⣿⣹ தேர்வானத் தேர்வுப் பெட்டியை/பொருளைக் குறிப்பது
⣏⣸⣹ பாதித் தேர்வானத் தேர்வுப் பெட்டியை/பொருளைக் குறிப்பது
⣏⣀⣹ தேர்வாகாதத் தேர்வுப் பெட்டியை/பொருளைக் குறிப்பது
- குறுக்கப்படக்கூடிய கிளைத் தோற்றத்தை/பொறுளைக் குறிப்பது
+ விரிவாக்கப்படக்கூடிய கிளைத் தோற்றத்தை/பொறுளைக் குறிப்பது
*** பாதுகாக்கப்பட்டக் கட்டுப்பாட்டை, அல்லது ஆவணத்தைக் குறிப்பது
clk ஒரு பொருள் சொடுக்கப்படக் கூடியது என்பதைக் குறிப்பது
cmnt விரிதாள் பணிக்களத்திற்கான, அல்லது ஒரு ஆவணத்தில் இருக்கும் சிறு உரைக்கான கருத்துரையைக் குறிப்பது
frml விரிதாள் பணிக்களத்தில் இருக்கும் சூத்திரத்தைக் குறிப்பது
invalid செல்லாத உள்ளீட்டைக் குறிப்பது
ldesc வரைகலை போன்ற பொருட்களில் இருக்கும் நெடுவிளக்கத்தைக் குறிப்பது
mln வலைத் தளங்களில் இருக்கும் கருத்துரைக் களங்கள் போன்ற பல வரிகளைத் தட்டச்சிடக் கூடியத் தொகுகளத்தைக் குறிப்பது
req தேவைப்படும் படிவக் களத்தைக் குறிப்பது
ro படிக்க மட்டுமேயான தொகு களம் போன்ற பொருளைக் குறிப்பது
sel தெரிவாகியுள்ளப் பொருளைக் குறிப்பது
nsel தெரிவாகாதப் பொருளைக் குறிப்பது
sorted asc ஏறுமுகமாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் பொருளைக் குறிப்பது
sorted desc இறங்குமுகமாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் பொருளைக் குறிப்பது
submnu உட்பட்டியலைக் கொண்டிருக்கும் பொருளைக் குறிப்பது

இறுதியாக, நிலக்குறிகளுக்கான பின்வரும் குறுக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன:

குறுக்கம் நிலக்குறி
bnr பதாகை
cinf உள்ளடக்கத் தகவல்
cmpl நிரைவுண்டாக்கும்
form படிவம்
main முதன்மை
navi வழிசெலுத்தல்
srch தேடுக
rgn பகுதி

பிரெயில் உள்ளீடு

பிரெயில் விசைப்பலகை மூலம் செய்யப்படும் குறுக்கப்பட்ட மற்றும் குறுக்கப்படாத பிரெயில் உள்ளீடுகளை என்விடிஏ ஆதரிக்கிறது. என்விடிஏ உரையாடலிலிருக்கும் பிரெயில் அமைப்புகள் வகைமையில் காணப்படும் உள்ளீட்டு அட்டவணையைப் பயன்படுத்தி, பிரெயிலிருந்து உரைக்கு மொழிபெயர்க்கப் பயன்படுத்தப்படும் மொழிபெயர்ப்பு அட்டவணையைத் தெரிவுச் செய்யலாம்.

குறுக்கப்படாத பிரெயிலைப் பயன்படுத்தி உள்ளிடும்பொழுது, உடனுக்குடன் உரை செருகப்படுகிறது. குறுக்கப்பட்ட பிரெயிலைப் பயன்படுத்தி உள்ளிடும்பொழுது, ஒரு சொல்லின் இறுதியில் இடைவெளிப் பட்டை, அல்லது உள்ளிடு விசையை அழுத்தும்பொழுது உரை செருகப்படுகிறது. தாங்கள் தட்டச்சிடும் சொல்லைத்தான் மொழிபெயர்ப்பு பிரதிபலிக்குமேயன்றி, இருக்கும் உரையை அது கருத்தில் கொள்வதில்லை என்பதைக் கவனிக்கவும். எடுத்துக்காட்டாக, எண் குறியுடன் துவங்கும் எண்களைத் தட்டச்சிடும் பிரெயில் குறியைத் தாங்கள் பயன்படுத்தும் தருணங்களில், எண்களின் முடிவிற்குச் செல்ல பின்நகர் விசையை அழுத்தினால், கூடுதல் எண்களைத் தட்டச்சிட எண் குறியைத் தாங்கள் மீண்டும் தட்டச்சிட வேண்டியிருக்கும்.

ஏழாம் புள்ளியை அழுத்தும்பொழுது, இறுதியாக உள்ளிடப்பட்டிருக்கும் பிரெயில் குறியை, அல்லது வரியுருவை அழிக்கிறது. எட்டாம் புள்ளி, உள்ளிடப்பட்டிருக்கும் பிரெயிலை உரையாக மொழிபெயர்த்து, உள்ளிடு விசையை அழுத்துகிறது. ஏழாம் எட்டாம் புள்ளிகளைச் சேர்த்து அழுத்தும்பொழுது, இறுதியில் இடைவெளிப் பட்டை, அல்லது உள்ளிடு விசையை அழுத்தாமல், உள்ளிடப்பட்டிருக்கும் பிரெயிலை உரையாக மொழிபெயர்க்கிறது.

விசைப்பலகை குறுக்குவிசைகளை உள்ளிடுதல்

பிரெயில் காட்சியமைவைப் பயன்படுத்தி விசைப்பலகை குறுக்குவிசைகளை உள்ளிடுவதையும், விசை உள்ளீடுகளை ஒப்புருவாக்குவதையும் என்விடிஏ ஆதரிக்கிறது. இந்த ஒப்புவுவாக்கம் இரு வடிவங்களில் வருகிறது: விசை உள்ளீட்டிற்கு நேரடியாக ஒரு பிரெயில் உள்ளீட்டை ஒதுக்குவது மற்றும் மெய்நிகர் மாற்றியமைப்பி விசைகளைப் பயன்படுத்துவது.

விசை அம்புகள், அல்லது பட்டியல்களுக்கு செல்ல அழுத்தப்படும் நிலைமாற்றி விசை போன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் விசைகளை பிரெயில் காட்சியமைவுடன் நேரடியாக வரையறுக்கலாம். ஒவ்வொரு பிரெயில் காட்சியமைவிற்கான இயக்கி, இந்த ஒதுக்கீடுகளில் சிலவற்றை உள்ளடக்கி வெளிவருகிறது. உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி இந்த ஒதுக்கீடுகளை மாற்றியமைக்கலாம், அல்லது புதிய ஒப்புருவாக்கப்பட்ட விசைகளைச் சேர்க்கலாம்.

தத்தல் போன்ற தனித்துவமான, அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்படும் விசைகளுக்கு இந்த அணுகுமுறை பயனுள்ளதாக இருந்தாலும், ஒவ்வொரு விசைப்பலகை குறுக்குவிசைக்கும் தனித்துவமான விசையை தாங்கள் ஒதுக்க விரும்பமாட்டீர்கள். மாற்றியமைப்பி விசை அழுத்தப்பட்ட நிலையில், ஒப்புருவாக்கப்பட்ட விசைகளின் உள்ளீடுகளை அனுமதிக்க, கட்டுப்பாடு, நிலைமாற்றி, மாற்றியழுத்தி, சாளரங்கள் மற்றும் என்விடிஏ விசைகளை மாற்றியமைக்க கட்டளைகளை என்விடிஏ வழங்குவதோடு, இவ்விசைகளின் சில சேர்க்கைகளுக்கான கட்டளைகளையும் வழங்குகிறது. இந்த மாற்றும் தன்மையைப் பயன்படுத்த, தாங்கள் அழுத்த விரும்பும் மாற்றியமைப்பி விசைக்கான கட்டளை, அல்லது கட்டளைத் தொடரை அழுத்தவும். பின்னர், தாங்கள் உள்ளிட விரும்பும் குறுக்குவிசையின் பகுதியாக விளங்கும் வரியுருவை உள்ளிடவும். எடுத்துக்காட்டாக, கட்டுப்பாடு+f கூட்டுவிசையை அழுத்த, கட்டுப்பாடு விசைக்கான கட்டளையை முதலில் பயன்படுத்தி, பின்னர் f விசையை அழுத்தவும். கட்டுப்பாடு+நிலைமாற்றி+t கூட்டுவிசையை உள்ளிட, கட்டுப்பாடு மற்றும் நிலைமாற்றி விசைகளுக்கான கட்டளைகளைத் தனித்தனியே எந்த வரிசையிலும், அல்லது கட்டுப்பாடு நிலைமாற்றிக்கான ஒற்றைக் கட்டளையை முதலில் அழுத்தி, பின்னர் t விசையை அழுத்தவும்.

மாற்றியமைப்பி விசைகளை தாங்கள் தவறுதலாக மாற்றியமைத்துவிட்டால், மாற்றுவதற்கான கட்டளையை மீண்டும் அழுத்துவதன் மூலம் அந்த மாற்றத்தை நீக்கிவிடலாம்.

குறுக்கப்பட்ட பிரெயிலில் தட்டச்சிடும்பொழுது, மாற்றியமைப்பியை மாற்றும் விசைகளைப் பயன்படுத்தினால், 7+8 பிரெயில் புள்ளிகளை தாங்கள் உள்ளிட்டதாக கொண்டு, தங்களின் உள்ளீடு மொழிபெயர்க்கப்படும். மேலும், மாற்றியமைப்பி விசை அழுத்தப்படுவதற்கு முன் உள்ளிடப்பட்ட பிரெயிலை, ஒப்புருவாக்கப்பட்ட விசை உள்ளீடு பிரதிபலிக்காது. எண் குறியைப் பயன்படுத்தும் பிரெயில் குறியீட்டினைக் கொண்டு நிலைமாற்றி+2 விசையை அழுத்தினால், நிலைமாற்றி விசையை முதலில் தாங்கள் மாற்றி, பிறகு எண் குறியை தட்டச்சிட வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

பார்வை

பார்வையற்றோரும், பார்வைக் குறைபாடுள்ளோரும் கணினி மற்றும் பிரெயிலைப் பயன்படுத்துவதை தன் முதல் நோக்கமாக என்விடிஏ கொண்டிருந்தாலும், திரையின் உள்ளடக்கங்களை மாற்ற, உட்கட்டப்பட்டிருக்கும் வசதிகளை அது கொண்டுள்ளது. இத்தகைய உதவி, என்விடிஏவில் பார்வைத் துலக்க ஊக்கி என அறியப்படுகிறது.

உட்கட்டப்பட்டிருக்கும் பல பார்வைத் துலக்க ஊக்கிகளை என்விடிஏ கொண்டுள்ளது. அவை கீழே விளக்கப்பட்டுள்ளன: கூடுதல் பார்வைத் துலக்க ஊக்கிகளை, என்விடிஏ நீட்சிநிரல்கள் மேலாளரில் வழங்கலாம்.

என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் இருக்கும் பார்வை வகைமையில் என்விடிஏவின் பார்வை அமைப்புகளை மாற்றியமைக்கலாம்.

பார்வைக்குத்் துலக்கமாக்குக

கணினிக் குவிமையம், வழிசெலுத்திப் பொருள், உலாவும் நிலை ஆகியவைகளின் நிலைகளைக் கண்டறிய பார்வைத் துலக்கம் உதவுகிறது. இந்நிலைகள், நிறங்கொண்ட செவ்வக வெளிக்கோடுகளால் துலக்கமாக்கப்படும்.

என்விடிஏ அமைப்புகளின் உரையாடலில் காணப்படும் பார்வை வகைமையில் பார்வைக்குத் துலக்கமாக்குக வசதி முடுக்கப்பட்டால், குவிமையம், வழிசெலுத்திப் பொருள், உலாவும் நிலைச் சுட்டி ஆகியவைகளைத் துலக்கமாக்கும் வசதியை மாற்றியமைக்க இயலும்.

திரைச்சீலை

பார்வையற்ற, அல்லது பார்வைக் குறைபாடு உள்ள ஒரு பயனர், அடிக்கடி கணினித் திரையைப் பார்க்க முடிவதில்லை, அல்லது அதற்கு தேவை இருப்பதில்லை. அதுதவிர, தனது தோளின் மேலாக யாரேனும் தனது கணினித் திரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களா என்பதையும் அந்தப் பயனரால் உறுதிசெய்துகொள்ள இயலாது. இச்சூழ்நிலைக்காகவே, 'திரைச்சீலை' என்கிற ஒரு வசதியை என்விடிஏ கொண்டுள்ளது. இவ்வசதியை முடுக்குவதன் மூலம், கணினித் திரையை கருமையாக்கலாம்.

என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பார்வை வகைமையில் திரைச்சீலையை முடுக்கலாம்.

பெயர் விசை விளக்கம்
திரைச்சீலையின் நிலையை மாற்றியமைக்கிறது என்விடிஏ+கட்டுப்பாடு+விடுபடு முடுக்கப்பட்டால் திரை கருமையாக்கப்படும், முடக்கப்பட்டால் திரையின் உள்ளடக்கங்கள் காட்டப்படும். ஒருமுறை அழுத்தினால், என்விடிஏ மறுதுவக்கப்படும்வரை திரைச்சீலை இடப்பட்டிருக்கும். இருமுறை அழுத்தினால், திலைச்சீலை முடக்கப்படும்வரை அது இடப்பட்டிருக்கும்.

திரைச்சீலை முடுக்கப்பட்டிருக்கும்பொழுது, எழுத்துணரி, திரையைப் படமெடுத்தல் போன்று, திரையில் தோன்றுவனவற்றை அடிப்படையாகக்கொண்டிருக்கும் செயல்களை நிறைவேற்றிக்கொள்ள இயலாது.

விண்டோஸ் உருப்பெருக்க ஏ.பி.ஐ.யில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்தினால், விண்டோஸின் புதிய பதிப்புகளை ஆதரிக்கும் வண்ணம் திரைச்சீலையை இற்றைப்படுத்த வேண்டியிருந்தது. விண்டோஸ் 10 21H2 (10.0.19044), அல்லது அதற்கும் பிறகான பதிப்புகளில் திரைச்சீலையைப் பயன்படுத்த, என்விடிஏ 2021.2, அல்லது அதற்கும் பிறகான பதிப்பைப் பயன்படுத்தவும். புதிய விண்டோஸ் பதிப்புகளைப் பயன்படுத்தும்பொழுது, பாதுகாப்பைக் கருதி, திரைச்சீலை, திரையை முழுமையாகக் கருமையாக்குகிறதா என்பதை பார்வையுள்ளவர்களைக் கொண்டு உறுதிசெய்துகொள்ளவும்.

விண்டோஸ் உருப்பெருக்கியையும், தலைகீழ் திரை நிறங்களையும் பயன்படுத்தும்பொழுது, திரைச்சீலையை இட இயலாது என்பதை கவனிக்கவும்.

உள்ளடக்கத்தை உணருதல்

ஒரு பொருளில் காணப்படும் உள்ளடக்கத்தை திரைநவிலி கொண்டு அறிய போதுமான தகவலை படைப்பாளர் அளிக்காத தருணங்களில், படிமத்தில் இருக்கும் உள்ளடக்கத்தை உணர, பல கருவிகளைக் கொண்டு முயலலாம். படிமங்களில் காணப்படும் உள்ளடக்கங்களை உணர, விண்டோஸ் 10, அல்லது அதற்கும் பிறகான இயக்கமுறைமையுடன் கட்டப்பட்டிருக்கும் எழுத்துணரிக்கு என்விடிஏ ஆதரவளிக்கிறது. கூடுதல் உள்ளடக்க எழுத்துணரிகளை, என்விடிஏவின் நீட்சிநிரல்களில் அளிக்கலாம்.

ஒரு உள்ளடக்க உணர் கட்டளையைத் தாங்கள் பயன்படுத்தும்பொழுது, நடப்பு வழிசெலுத்திப் பொருளில்் இருக்கும் உள்ளடக்கத்தை என்விடிஏ உணருகிறது. இயல்பில், கணினிக் குவிமையத்தையும், உலாவும் நிலைச் சுட்டியையும் வழிசெலுத்திப் பொருள் பின்தொடர்வதால், தாங்கள் விருப்பப்படும் இடத்திற்கு குவிமையத்தையும், உலாவும் நிலைச் சுட்டியையும் நகர்த்தலாம். எடுத்துக்காட்டாக, உலாவும் நிலைச் சுட்டியை ஒரு வரைகலைக்குத் தாங்கள் நகர்த்தினால், அவ்வரைகலையில் காணப்படும் உள்ளடக்கத்தை என்விடிஏ உணரும். ஒரு பயன்பாட்டின் முழுத் திரையையும் உணர்வது போன்ற தருணங்களில், பொருள் வழிசெலுத்தியை நேரடியாகப் பயன்படுத்த தாங்கள் விரும்புவீர்கள்.

உள்ளடக்க உணருதல் முடிந்தவுடன், உணரப்பட்ட உள்ளடக்கம், உலாவும் நிலைக்கு ஒத்தான ஆவணத்தில் அளிக்கப்படுவதால், அவ்வுள்ளடக்கத்தை அம்பு விசை போன்ற விசைகளைக் கொண்டு தாங்கள் படிக்க அனுமதிக்கிறது. உள்ளீடு, அல்லது இடைவெளிப் பட்டை விசையை அழுத்தும்பொழுது, சுட்டி இருக்குமிடத்தில் காணப்படும் உரையை இயன்றால் இயக்குகிறது. விடுபடு விசையை அழுத்தினால், உணரப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட திரை நிராகரிக்கப்படும்.

விண்டோஸ் உணரி

விண்டோஸ் 10, அல்லது அதற்கும் பிறகான இயக்கமுறைமை, பல மொழிகளுக்கான உணரிகளை கொண்டுள்ளது. படிமத்திலும், அணுகவியலாத பயன்பாடுகளிலும் காணப்படும் உரைகளை உணர என்விடிஏ இவ்வெழுத்துணரிகளைப் பயன்படுத்துகிறது.

உரையை உணருதலுக்கான மொழியை, என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் விண்டோஸ் எழுத்துணரி அமைப்புகளில் அமைக்கலாம். கூடுதல் மொழிகளை நிறுவ, துவக்குப் பட்டியலில் காணப்படும் அமைப்புகள் உருப்படியைச் சொடுக்கவும். பிறகு, நேரம் & மொழியைத் தெரிவுச் செய்து, பகுதி & மொழிக்குச் சென்று மொழியைக் கூட்டுக உருப்படியைத் தேர்ந்தெடுக்கவும்.

காணொளிகளில் காணப்படும் துணைத் தலைப்புகள் போன்று தொடர்ந்து மாறும் உல்ளடக்கத்தை தாங்கள் கண்காணிக்க வேண்டுமானால், உணரப்பட்ட ுள்ளடக்கத்தை தானாகப் புத்தாக்குக என்கிற விருப்பத் தேர்வினை முடுக்கிக்கொள்ளலாம். என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் விண்டோஸ் எழுத்துணரி வகைமையைப் பயன்படுத்தியும் ிதைச் செய்யலாம்.

என்விடிஏவின் பார்வைத் துலக்க ஊக்கிகள், அல்லது வெளிப்புற பார்வைத் துணைக் கருவிகளுடன் விண்டோஸ் எழுத்துணரி, பகுதியளவு, அல்லது முழுமையாக இணக்கத்துடன் செயல்படாது. ஆகவே, எழுத்துணரியைப் பயன்படுத்தும் முன்னர், இத்துணைக் கருவிகளை முடக்கவேண்டும்.

நடப்பு வழிசெலுத்திப் பொருளில் காணப்படும் உரையை விண்டோஸ் எழுத்துணரியைக் கொண்டு உணர, என்விடிஏ+r விசையை அழுத்தவும்.

பயன்பாடுகளுக்கான தனிப்பட்ட சிறப்புக்கூறுகள்

சில பணிகளை எளிதாக்கவும், திரைநவிலியைப் பயன்படுத்துபவர்கள் அணுகவியலாத செயல்பாடுகளை செயற்படுத்தவும், பயன்பாடுகளுக்கென்று வரையறுக்கப்பட்ட சில கூடுதல் சிறப்புக்கூறுகளை என்விடிஏ அளிக்கிறது.

மைக்ரோசாஃப்ட் வேர்ட்

நெடுவரிசை மற்றும் கிடைவரிசைகளின் தலைப்புரைகளைத் தானாகப் படித்தல்

மைக்ரோசாஃப்ட் வேர்டில் இருக்கும் அட்டவணைகளின் ஊடே நகரும் பொழுது, பொருத்தமான நெடுவரிசை மற்றும் கிடைவரிசைகளின் தலைப்புரைகளைத் தானாக அறிவிக்க என்விடிஏவால் இயலும். இதற்கு, என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் ஆவண வடிவூட்டம் அமைப்புகளிலிருக்கும் அட்டவணையின் கிடைவரிசை/நெடுவரிசைகளின் தலைப்புரையை அறிவித்திடுக என்கிற தேர்வுப் பெட்டி முதலில் தேர்வாகி இருக்க வேண்டும்.

வேர்ட் மற்றும் விண்டோஸின் அண்மைப் பதிப்புகளில் இயல்பிருப்பாக அமைந்திருக்கும் வேர்ட் ஆவணங்களை அணுகுவதற்கான பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கலை தாங்கள் பயன்படுத்தினால், முதல் கிடைவரிசையின் பணிக்களங்கள் நெடுவரிசைத் தலைப்புரையாகக் கொள்ளப்படும். அதுபோலவே, முதல் நெடுவரிசையின் பணிக்களங்கள் கிடைவரிசைத் தலைப்புரையாகக் கொள்ளப்படும்.

மாறாக, வேர்ட் ஆவணங்களை அணுகுவதற்கான பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கலை தாங்கள் பயன்படுத்தவில்லை என்றால், கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு ஆவணத்தில், எந்த கிடைவரிசை/நெடுவரிசை தலைப்புரையைக் கொண்டுள்ளது என்பதை என்விடிஏவிற்கு தாங்கள் குறிப்பிட வேண்டும். தலைப்புரைகளைக் கொண்டுள்ள நெடுவரிசை, அல்லது கிடைவரிசையின் முதல் பணிக்களத்திற்கு நகர்ந்த பிறகு, பின் வரும் கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தவும்:

பெயர் விசை விளக்கம்
நெடுவரிசையின் தலைப்புரையை அமைத்திடுக என்விடிஏ+மாற்றழுத்தி+c ஒரு முறை அழுத்தினால், கிடைவரிசையின்் முதல் தலைப்புரைப் பணிக்களம், நெடுவரிசையின் தலைப்புரையைக் கொண்டிருக்கிறது எனவும், இக்கிடைவரிசையின் கீழிருக்கும் நெடுவரிசைகளுக்கிடையே நகரும்பொழுது, நெடுவரிசையின் தலைப்புரையைத் தானாக அறிவிக்க வேண்டுமெனவும் என்விடிஏவை அறிவுறுத்தும். இரு முறை அழுத்தினால், அமைப்பினை நீக்கிவிடும்.
கிடைவரிசையின் தலைப்புரையை அமைத்திடுக என்விடிஏ+மாற்றழுத்தி+r ஒரு முறை அழுத்தினால், நெடுவரிசையின் முதல் தலைப்புரைப் பணிக்களம், கிடைவரிசையின் தலைப்புரையைக் கொண்டிருக்கிறது எனவும், இந்நெடுவரிசைக்கு அடுத்திருக்கும் கிடைவரிசைகளுக்கிடையே நகரும்பொழுது, கிடைவரிசையின் தலைப்புரையைத் தானாக அறிவிக்க வேண்டுமெனவும் என்விடிஏவை அறிவுறுத்தும். இரு முறை அழுத்தினால், அமைப்பினை நீக்கிவிடும்.

இவ்வமைப்புகள், ஜாஸ் போன்ற பிற திரைநவிலிகளில் செயற்படுவதற்கு ஏற்ற வண்ணம், ஆவணத்தில் நூற்குறிகளாக சேமிக்கப்படுகின்றன. இதன் மூலம் அறிவது என்னவென்றால், பிற திரைநவிலிகளைப் பயன்படுத்தும் பயனர்கள், இவ்வாவணத்தை பின்னொரு தேதியில் திறக்கும் பொழுது, நெடுவரிசை மற்றும் கிடைவரிசையின் தலைப்புரை, அவர்களுக்காக தானாக சேமிக்கப்பட்டிருப்பதைக் காண்பார்கள்.

மைக்ரோசாஃப்ட் வேர்டில் உலாவும் நிலை

இணையப் பக்கங்களில் பயன்படுத்துவது போல், மைக்ரோசாஃப்ட் வேர்டிலும் உலாவும் நிலையைப் பயன்படுத்தி, கூறுகளின் பட்டியல், ஒற்றை எழுத்துடன் வழிசெலுத்தல் போன்ற வசதிகளை பயன்படுத்தலாம்.

மைக்ரோசாஃப்ட் வேர்டில் உலாவும் நிலையை இயக்க, அல்லது இயக்கத்தை நிறுத்த, என்விடிஏ+இடைவெளிப் பட்டையை அழுத்தவும்.

உலாவும் நிலை மற்றும் ஒற்றை எழுத்துடன் வழிசெலுத்தல் குறித்த கூடுதல் தகவல்களைக் காண, ுலாவும் நிலை பிரிவைக் காணவும்.

கூறுகளின் பட்டியல்

மைக்ரோசாஃப்ட் வேர்டில் உலாவும் நிலை செயற்பாட்டில் இருக்கும் பொழுது, கூறுகளின் பட்டியலைத் தோற்றுவிக்க, என்விடிஏ+f7 விசையை அழுத்தவும்.

கருத்துரைகள், மாற்றங்களறிதல், எழுத்துப் பிழைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொடுப்புகள், தலைப்புகள், விளக்கவுரைகளை கூறுகளின் பட்டியல்் கொண்டிருக்கும்.

கருத்துரைகளை அறிவித்தல்

தற்போதைய சுட்டியின் நிலையில் கருத்துரை ஏதேனும் இருந்தால், அதை அறிவிக்க, என்விடிஏ+நிலைமாற்றி+c விசையை அழுத்தவும்.

கூறுகளின் பட்டியலில் விளக்கவுரை என்கிற உருப்படியைத் தெரிவுச் செய்தால், கருத்துரைகளையும், மாற்றங்களறிதல்களையும் பட்டியலிடும்.

மைக்ரோசாஃப்ட் எக்ஸெல்

நெடுவரிசை மற்றும் கிடைவரிசைகளின் தலைப்புரைகளைத் தானாகப் படித்தல்

மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் பணித் தாள்களின் ஊடே நகரும் பொழுது, பொருத்தமான நெடுவரிசை மற்றும் கிடைவரிசைகளின் தலைப்புரைகளைத் தானாக அறிவிக்க என்விடிஏவால் இயலும். இதற்கு, என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் ஆவண வடிவூட்டம் அமைப்புகளிலிருக்கும் அட்டவணையின் கிடைவரிசை/நெடுவரிசைகளின் தலைப்புரையை அறிவித்திடுக என்கிற தேர்வுப் பெட்டி முதலில் தேர்வாகி இருக்க வேண்டும். அடுத்ததாக, ஒரு அட்டவணையில் தலைப்புரை எந்த கிடைவரிசை, அல்லது நெடுவரிசையில் உள்ளது என்பதை என்விடிஏ அரிய வேண்டும். தலைப்புரைகளைக் கொண்டுள்ள நெடுவரிசை, அல்லது கிடைவரிசையின் முதல் பணிக்களத்திற்கு நகர்ந்த பிறகு, பின் வரும் கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தவும்:

பெயர் விசை விளக்கம்
நெடுவரிசையின் தலைப்புரையை அமைத்திடுக என்விடிஏ+மாற்றழுத்தி+c ஒரு முறை அழுத்தினால், கிடைவரிசையின்் முதல் தலைப்புரைப் பணிக்களம், நெடுவரிசையின் தலைப்புரையைக் கொண்டிருக்கிறது எனவும், இக்கிடைவரிசையின் கீழிருக்கும் நெடுவரிசைகளுக்கிடையே நகரும்பொழுது, நெடுவரிசையின் தலைப்புரையைத் தானாக அறிவிக்க வேண்டுமெனவும் என்விடிஏவை அறிவுறுத்தும். இரு முறை அழுத்தினால், அமைப்பினை நீக்கிவிடும்.
கிடைவரிசையின் தலைப்புரையை அமைத்திடுக என்விடிஏ+மாற்றழுத்தி+r ஒரு முறை அழுத்தினால், நெடுவரிசையின் முதல் தலைப்புரைப் பணிக்களம், கிடைவரிசையின் தலைப்புரையைக் கொண்டிருக்கிறது எனவும், இந்நெடுவரிசைக்கு அடுத்திருக்கும் கிடைவரிசைகளுக்கிடையே நகரும்பொழுது, கிடைவரிசையின் தலைப்புரையைத் தானாக அறிவிக்க வேண்டுமெனவும் என்விடிஏவை அறிவுறுத்தும். இரு முறை அழுத்தினால், அமைப்பினை நீக்கிவிடும்.

இவ்வமைப்புகள், ஜாஸ் போன்ற பிற திரைநவிலிகளில் செயற்படுவதற்கு ஏற்ற வண்ணம், பணிப் புத்தகத்தில் வரையறுக்கப்பட்ட பெயர் வீச்சுகளாக சேமிக்கப்படுகின்றன. இதன் மூலம் அறிவது என்னவென்றால், பிற திரைநவிலிகளைப் பயன்படுத்தும் பயனர்கள், இப்பணிப் புத்தகத்தை பின்னொரு தேதியில் திறக்கும் பொழுது, நெடுவரிசை மற்றும் கிடைவரிசையின் தலைப்புரை, அவர்களுக்காக ஏற்கெனவே தானாக சேமிக்கப்பட்டிருப்பதைக் காண்பார்கள்.

கூறுகளின் பட்டியல்

இணையப் பக்கத்தில் பயன்படுத்துவதுபோல, மைக்ரோசாஃப்ட் எக்ஸெலிலும், பல்வகைப்பட்ட தகவல்களை பட்டியலிட்டு அணுக, கூறுகளின் பட்டியலை என்விடிஏ கொண்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் எக்ஸெலில் கூறுகளின் பட்டியலைத் தோற்றுவிக்க, என்விடிஏ+f7 விசையை அழுத்தவும்.

பின் வரும் பல்வகைப்பட்ட தகவல்கள், கூறுகளின் பட்டியலில் காணப்படுகின்றன:

குறிப்புகளை அறிவித்தல்

தற்போது குவிமையத்தில் இருக்கும் பணிக்களத்தில் குறிப்புகள் ஏதேனும் இருந்தால், அதை அறிவிக்க, என்விடிஏ+நிலைமாற்றி+c விசையை அழுத்தவும்.
மைக்ரோசாஃப்ட் 2016, 365 மற்றும் அதற்கும் பிறகான பதிப்புகளின் மைக்ரோசாஃப்ட் எக்ஸெலில் இருக்கும் மரபார்ந்த கருத்துரைகள், குறிப்புகள் என மறுபெயரிடப்பட்டுள்ளன.

பணித்் தாளில் இருக்கும் எல்லாக் குறிப்புகளையும், என்விடிஏ+f7 விசையை அழுத்துவதன் மூலம், என்விடிஏவின் கூறுகளின் பட்டியலில் பட்டியலிடலாம்.

ஒரு குறிப்பினைச் சேர்க்க, அல்லது தொகுக்க, குறிப்பிட்ட ஒரு உரையாடல் பெட்டியைத் தோற்றுவிக்க என்விடிஏவினால் இயலும். அணுகுவதில் இருக்கும் சில கட்டுப்பாடுகளினால், எம்எஸ் எக்ஸலின் குறிப்பினைத் தொகுக்கும் உள்ளகப் பகுதியை என்விடிஏ அழித்தெழுதுகிறது. இருப்பினும், உரையாடல் பெட்டியைத் தோற்றுவிப்பதற்கான விசைக் கட்டளை, எம்எஸ் எக்ஸலில் இருந்துதான் பெறப்படுகிறது. ஆகவே, என்விடிஏ இயக்கத்தில் இல்லாதபொழுதும் இவ்விசைக் கட்டளை செயற்படும்.

ஒரு குறிப்பினைச் சேர்க்க, அல்லது தொகுக்க, குவிமையத்தில் இருக்கும் பணிக்களத்தில், மாற்றழுத்தி+f2 விசையை அழுத்தவும்.

என்விடிஏவின் உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலில் இவ்விசைக் கட்டளை காட்சியளிக்காது என்பதால், அதை தொகுக்கவும் இயலாது.

ஒரு பணிப் புத்தகத்தின் பணிக்களத்திற்கான சூழலுணர்ப் பட்டியலின் வாயிலாகவும், எம்எஸ் எக்ஸலின் குறிப்பினைத் தொகுக்கும் பகுதியைத் திறக்க இயலும் என்பதைக் கவனிக்கவும். ஆனால், அணுகவியலாத குறிப்பினைத் தொகுக்கும் பகுதியைத்தான் இது திறக்கும், குறிப்பினைத் தொகுப்பதற்கான என்விடிஏவின் உரையாடலை இது திறக்காது.

மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2016, 365 மற்றும் அதற்கும் பிறகான பதிப்புகளில், ஒரு புதிய பாங்குக் கருத்துரை உரையாடல் பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது. அணுகக்கூடியதாகவும், கருத்துரைகளுக்கு மறுமொழியிடுவது போன்ற கூடுதல் வசதிகளைக் கொண்டதாகவும் இவ்வுரையாடல் பெட்டி அமைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பணிக்களத்தின் சூழலுணர்ப் பட்டியலின் வாயிலாகவும் இதைத் திறக்கலாம். இப்புதிய பாங்குக் கருத்துரை உரையாடல் பெட்டியின் வாயிலாக சேர்க்கப்படும் கருத்துரைகளுக்கும், முந்தைய பத்திகளில் விளக்கப்பட்டிருக்கும் குறிப்புகளுக்கும் தொடர்பில்லை.

பாதுகாக்கப்பட்ட பணிக்களங்களைப் படித்தல்

ஒரு பணிப் புத்தகம் பாதுகாக்கப்பட்டிருக்கும் நிலையில், தொகுக்கப்படாமலிருக்க பூட்டப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பணிக்களங்களுக்குக் குவிமையத்தை நகர்த்த இயலாதிருக்கும்.

தற்போதைய பணித்தாளில் பூட்டப்பட்டிருக்கும் பணிக்களங்களுக்கிடையே நகர, என்விடிஏ+இடைவெளிப்பட்டை விசையை அழுத்தி, உலாவும் நிலைக்கு மாறிய பின்னர், அம்பு விசைகளைக் கொண்டு அப்பணிக்களங்களுக்கிடையே நகரலாம்.

படிவக் களங்கள்

எக்ஸெல் பணித்தாள்கள், படிவக் களங்களைக் கொண்டிருக்கலாம். கூறுகளின் பட்டியல், அல்லது f மற்றும் மாற்றழுத்தி+f ஆகிய படிவக் கள ஒற்றை எழுத்துடன் வழிசெல்லும் விசைகளைக் கொண்டு இவைகளை அணுகலாம். ஒரு படிவக் களத்திற்கு உலாவும் நிலையில் நகர்ந்த பின்னர், கட்டுப்பாட்டிற்கு ஏற்ற வண்ணம், அக்களத்தை இயக்க, அல்லது குவிமைய நிலைக்கு மாறி அதனுடன் அளவளாவ, உள்ளிடு, அல்லது இடைவெளி விசையை அழுத்தவும். உலாவும் நிலை மற்றும் ஒற்றை எழுத்துடன் வழிசெலுத்தல் குறித்து கூடுதல் தகவல்களுக்கு, ுலாவும் நிலைப் பிரிவைக் காணவும்.

மைக்ரோசாஃப்ட் பவர் பாய்ண்ட்

பெயர் விசை விளக்கம்
அறிவிப்பாளரின் குறிப்புகளின் படித்தலை மாற்றியமைத்திடுக கட்டுப்பாடு+மாற்றழுத்தி+s நிலைப்படக் காட்சியில், அறிவிப்பாளரின் குறிப்புகள், நிலைப்படத்தின் உள்ளடக்கம் ஆகியவைகளுக்கிடையே அறிவிப்பை மாற்றியமைக்கிறது. திரையில் காணப்படுவதை இது மாற்றுவதில்லை. ஆனால், என்விடிஏவைக் கொண்டு ஒரு பயனர் எவைகளைப் படிக்கலாம் என்று வரையறுக்கிறது.

foobar2000

பெயர் விசை விளக்கம்
எஞ்சியுள்ள நேரத்தை அறிவித்திடுக கட்டுப்பாடு+மாற்றழுத்தி+r ஏதேனும் ஒரு தடம் தற்போதைக்கு ஓடிக் கொண்டிருந்தால், அதன் எஞ்சியுள்ள நேரத்தை அறிவிக்கும்
கடந்துள்ள நேரத்தை அறிவித்திடுக கட்டுப்பாடு+மாற்றழுத்தி+e ஏதேனும் ஒரு தடம் தற்போதைக்கு ஓடிக் கொண்டிருந்தால், அதன் கடந்துள்ள நேரத்தை அறிவிக்கும்.
தடத்தின் நீளத்தை அறிவித்திடுக கட்டுப்பாடு+மாற்றழுத்தி+t ஏதேனும் ஒரு தடம் தற்போதைக்கு ஓடிக் கொண்டிருந்தால், அதன் நீலத்தை அறிவிக்கும்.

குறிப்பு: மேற்கூறிய குறுக்கு விசைகள், ஃபூபாரின் நிலைப் பட்டைக்கான இயல்பான வடிவூட்ட சரத்தில்தான் செயல்படும்.

Miranda IM

பெயர் விசை விளக்கம்
அண்மைய தகவலை அறிவித்திடுக என்விடிஏ+கட்டுப்பாடு+1-4 அழுத்தப்பட்ட ெண்ணைப் பொருத்து, அண்மைய தகவல் ஒன்றினை அறிவிக்கும். எடுத்துக்காட்டாக, என்விடிஏ+கட்டுப்பாடு+2 விசையை அழுத்தினால், அண்மையில் வந்துள்ள இரண்டாம் தகவலை அறிவிக்கும்

Poedit

போயெடிட் 3.4, அல்லது அதற்கும் பிறகான பதிப்புகளுக்கு மேம்படுத்தப்பட்ட ஆதரவை என்விடிஏ வழங்குகிறது.

பெயர் விசை விளக்கம்
மொழிபெயர்ப்பாளர்களுக்கான குறிப்புகளை அறிவித்திடுக கட்டுப்பாடு+மாற்றழுத்தி+a மொழிபெயர்ப்பாளர்களுக்கான குறிப்புகள் ஏதேனும் இருந்தால், அதை அறிவித்திடும். இருமுறை அழுத்தினால், அக்குறிப்புகளை உலாவு நிலையில் காட்டிடும்.
கருத்துரை சாளரத்தை அறிவித்திடுக கட்டுப்பாடு+மாற்றழுத்தி+c கருத்துரை சாளரத்தில் கருத்துரை ஏதேனும் இருந்தால், அதை அறிவித்திடும். இருமுறை அழுத்தினால், அக்கருத்துரைகளை உலாவு நிலையில் காட்டிடும்.
பழைய மூல உரையை அறிவித்திடுக கட்டுப்பாடு+மாற்றழுத்தி+o பழைய மூல உரை ஏதேனும் இருந்தால், அதை அறிவித்திடும். இருமுறை அழுத்தினால், அவ்வுரையை உலாவு நிலையில் காட்டிடும்.
மொழிபெயர்ப்பு எச்சரிக்கையை அறிவித்திடுக கட்டுப்பாடு+மாற்றழுத்தி+w மொழிபெயர்ப்பு எச்சரிக்கை ஏதேனும் இருந்தால், அதை அறிவித்திடும். இருமுறை அழுத்தினால், அவ்வெச்சரிக்கையை உலாவு நிலையில் காட்டிடும்.

கணினிக்கான கிண்டில்

அமேசான் நிறுவனத்தின் கணினிக்கான கிண்டில் மூலம் நூல்களைப் படித்திடவும், அவைகளின் ஊடே வழிசெலுத்தவும் என்விடிஏ துணைபுரிகிறது. திரைநவிலிக்கு ஆதரவளிக்கும் கிண்டில் நூல்களில் மட்டும் இவ்வசதி உள்ளது. இது குறித்த தகவலை நூலின் விவரங்கள் பக்கத்தில் தாங்கள் காணலாம்.

நூல்களைப் படிக்க, உலாவும் நிலை பயன்படுத்தப்படுகிறது. ஒரு நூலினைத் திறக்கும் பொழுது, அல்லது குவிமையத்தை நூலின் பகுதியின் மேல் குவிக்கும் பொழுது, உலாவும் நிலைத் தானாக முடுக்கப்படும். சுட்டியை நகர்த்தும் பொழுது, அல்லது எல்லாம் படிக்கும் வசதியை இயக்கும் பொழுது, நூலின் பக்கங்கள் பொருத்தமான முறையில் தானாக நகர்த்தப்படும்.

அடுத்தப் பக்கம், அல்லது முந்தையப் பக்கத்திற்கு கைமுறையில் நகர, பக்கம் கீழ், அல்லது பக்கம் மேல் விசையை முறையே அழுத்தவும்.

தொடுப்புகளுக்கும், வரைகலைகளுக்கும் இடையே ஒற்றை எழுத்துடன் வழிசெல்லும் வசதி, நடப்புப் பக்கத்திற்கு உள்ளாக மட்டும் உள்ளது. தொடுப்புகளுக்கிடையே வழிசெல்லும் வசதி, அடியுரையையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

அணுகக் கூடிய கணக்குகளைக் கொண்ட நூல்களில் காணப்படும் கணக்கு உள்ளடக்கங்களைப் படித்து, அவைகளுடன் அளவளாவதற்கான துவக்க வசதியை என்விடிஏ அளிக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு, கணக்கு உள்ளடக்கங்களைப் படித்தல் பிரிவைக் காணவும்.

உரைத் தெரிவு

ஒரு அகரமுதலியின் பொருளைப் பெறுதல், குறிப்புகளை எழுதுதல், முனைப்புறுத்துதல், பிடிப்புப்பலகைக்கு படியெடுத்தல், இணையத்தில் தேடுதல் போன்ற பல செயல்களைத் தெரிவுச் செய்யப்பட்டிருக்கும் உரையின் மீது நிகழ்த்த கிண்டில் அனுமதிக்கிறது. இதைச் செய்ய, முதலில் உரையைத் தெரிவுச் செய்யவும். இதற்கு, உலாவும் நிலையில் பொதுவாகச் செய்வது போல, மாற்றழுத்தி மற்றும் அம்பு விசைகளைப் பயன்படுத்தவும்.

உரையைத் தெரிவுச் செய்த பின்னர், தெரிவின் மீது செயல்களை நிகழ்த்துவதற்கான விருப்பத் தேர்வுகளை காண்பிக்க, பயன்பாடுகள், அல்லது மாற்றழுத்தி+f10 விசையை அழுத்தவும்.

எந்த உரையும் தெரிவுச் செய்யப்படாத நிலையில் இதைச் செய்தால், சுட்டியினிடத்திலிருக்கும் சொல்லுக்கான விருப்பத் தேர்வுகள் காண்பிக்கப்படும்.

பயனர் குறிப்புகள்

ஒரு சொல், அல்லது உரையின் ஒரு பகுதி குறித்து ஒரு குறிப்பினைத் தாங்கள் எழுதலாம். இதைச் செய்ய, மேலே விளக்கிய வண்ணம், பொருத்தமான உரையை முதலில் தெரிவுச் செய்யவும். பிறகு, 'Add Note' விருப்பத் தேர்வினைத் தேர்வுச் செய்யவும்.

உலாவும் நிலையில் படிக்கும் பொழுது, இக்குறிப்புகளை கருத்துரைகளாக என்விடிஏ அறிவிக்கிறது.

ஒரு குறிப்பினைக் காண, தொகுக்க, அல்லது அழிக்க:

  1. குறிப்பினைக் கொண்ட உரைக்குச் சுட்டியை நகர்த்தவும்.
  2. மேலே விளக்கிய வண்ணம், தெரிவிற்கான விருப்பத் தேர்வுகளை அணுகவும்.
  3. 'Edit Note' விருப்பத் தேர்வினைத் தேர்ந்தெடுக்கவும்.

அசார்டி

சேர்க்கப்பட்டுள்ள நூல்களின் அட்டவணைத் தோற்றத்தில் இருக்கும்பொழுது:

பெயர் விசை விளக்கம்
உள்ளிடு உள்ளிடு தெரிவுச் செய்யப்பட்டிருக்கும் நூலைத் திறக்கிறது.
சூழலுணர்ப் பட்டியல் பயன்பாடுகள் தெரிவுச் செய்யப்பட்டிருக்கும் நூலுக்கான சூழலுணர்ப் பட்டியலைத் திறக்கிறது.

விண்டோஸ் கட்டுப்பாட்டகம்

கட்டளைத் தூண்டி, பவர்ஷெல், லினக்ஸிற்கான விண்டோஸ் துணை அமைப்பு ஆகியவை பயன்படுத்தும் விண்டோஸ் கட்டளைக் கட்டுப்பாட்டகத்திற்கு என்விடிஏ ஆதரவளிக்கிறது. கட்டுப்பாட்டகச் சாளரம் நிலைத்த அளவுடையதாகவும், வெளியீட்டினை உள்ளடக்கியிருக்கும் இடையகத்தைவிட மிகச் சிறியதாகவும் இருக்கும். புதிய உரை தட்டச்சிடப்படும்பொழுது, உள்ளடக்கம் மேல் நகர்த்தப்பட்டு, பழைய உரை பார்வையிலிருந்து மறைக்கப்படும். விண்டோஸ் 11 22H2 பதிப்புக்கு முந்தைய பதிப்புகளில், என்விடிஏவின் உரைச் சீராய்வுக் கட்டளைகளைக் கொண்டு பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டக உரையை அணுக இயலாது. ஆகவே, பழைய உரையைப் படிக்க, கட்டுப்பாட்டகத்தின் சாளரத்தை கீழே நகர்த்த வேண்டும். விண்டோஸ் கட்டுப்பாட்டகம் மற்றும் முனையத்தின் புதிய பதிப்புகளில், சாளரத்தை நகர்த்தும் தேவையில்லாமல், உரைக் கட்டுப்பாட்டகத்தை, கட்டுப்பாடின்றி முழுமையாகச் சீராய இயலும்.

என்விடிஏவைக் கொண்டு உரையைச் சீராயும்பொழுது, விண்டோஸ் கட்டுப்பாட்டகத்தினுள் கட்டப்பட்டிருக்கும் கீழ்க் காணும் விசைப் பலகை கட்டளைகள், விண்டோஸ் கட்டுப்பாட்டகத்தின் பழைய பதிப்புகளில் பயனுள்ளதாக இருக்கும்:

பெயர் விசை விளக்கம்
மேலே நகர்த்துக கட்டுப்பாடு+மேலம்பு முந்தைய உரையைப் படிப்பதற்கு வசதியாக, கட்டுப்பாட்டகச் சாளரத்தை மேலே நகர்த்துகிறது.
கீழே நகர்த்துக கட்டுப்பாடு+கீழம்பு அடுத்த உரையைப் படிப்பதற்கு வசதியாக, கட்டுப்பாட்டகச் சாளரத்தை கீழே நகர்த்துகிறது.
துவக்கத்திற்கு நகர்த்துக கட்டுப்பாடு+தொடக்கம் இடையகத்தின் துவக்கத்திற்கு கட்டுப்பாட்டகச் சாளரத்தை நகர்த்துகிறது.
முடிவிற்கு நகர்த்துக கட்டுப்பாடு+முடிவு இடையகத்தின் முடிவிற்கு கட்டுப்பாட்டகச் சாளரத்தை நகர்த்துகிறது.

என்விடிஏவை அமைவடிவமாக்கல்

என்விடிஏ பட்டியலில் காணப்படும் விருப்பங்கள் உட்பட்டியலில் இருக்கும் உரையாடல் பெட்டிகளைக் கொண்டு என்விடிஏவின் பல அமைவடிவங்களை மாற்றியமைக்கலாம். இதிலிருக்கும் பல அமைப்புகளை, பல பக்கங்களைக் கொண்ட என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணலாம். எல்லா உரையாடல் பெட்டிகளிலும், என்விடிஏவில் தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை சேமிக்க, 'சரி' பொத்தானை அழுத்தவும். மாற்றங்களை சேமிக்காமல் வெளியேற, 'விலக்குக' பொத்தான், அல்லது விடுபடு விசையை அழுத்தவும். குறிப்பிட்ட சில உரையாடல்களில், 'இடுக' பொத்தானை அழுத்துவதன் மூலம், உரையாடலை மூடாமல், அமைப்புகளைச் செயலுக்குக் கொண்டு வரலாம். பெரும்பாலான என்விடிஏ உரையாடல்கள் சூழலுணர் உதவியை ஆதரிக்கின்றன.

ஒரு உரையாடலில் இருக்கும்பொழுது, f1 விசையை அழுத்தினால், குவிமையத்திலிருக்கும் அமைப்பு, அல்லது தற்போதைய உரையாடலுக்குத் தொடர்பான பத்தியில் பயனர் வழிகாட்டியைத் திறக்கும்.

சில அமைப்புகளை குறுக்கு விசைகள் கொண்டும் மாற்றலாம். கீழ்வரும் உட்பிரிவுகளில், பொருத்தமான இடங்களில் குறுக்கு விசைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

என்விடிஏ அமைப்புகள்

அமைப்புகள் உரையாடலைப் பயன்படுத்தி மாற்றப்படக்கூடிய பல அமைவடிவ அளவுருக்களை என்விடிஏ வழங்குகிறது. தாங்கள் மாற்ற விரும்பும் அமைப்புகளின் வகையை கண்டறிவதை எளிதாக்க, தேர்வுச் செய்யப்படவேண்டிய அமைவடிவ வகைமைகளின் பட்டியலை இவ்வுரையாடல் காட்டுகிறது. தாங்கள் ஒரு வகைமையைத் தேர்ந்தெடுக்கும்பொழுது, அது தொடர்பான அனைத்து அமைப்புகளும் உரையாடலில் காண்பிக்கப்படும். வரிசைப் பட்டியலில் இருக்கும் வகைமைகளுக்கிடையே நகர, மேலம்பு, கீழம்பு விசைகளைப் பயன்படுத்தவும், ஒரு வகைமைக்கான அமைப்புகளுக்கிடையே நகர, தத்தல், அல்லது மாற்றழுத்தி+தத்தல் விசையை அழுத்தவும். உரையாடலில் எங்கிருந்தாயினும், வகைமைகளுக்கிடையே முன்னும் பின்னும் நகர, கட்டுப்பாடு+தத்தல், கட்டுப்பாடு+மாற்றழுத்தி+தத்தல் விசைகளைப் பயன்படுத்தவும்.

ஒன்று, அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளை தாங்கள் மாற்றிய பிறகு, அமைப்புகளைச் சேமிக்க, 'இடுக' பொத்தானை அழுத்தவும். 'இடுக' பொத்தானை அழுத்துவதன் மூலம், உரையாடல் பெட்டி மூடாமல் திறந்தே இருக்கும். பிற அமைப்புகளை மாற்றுவதற்கும், பிற வகைமைகளுக்கு நகர்வதற்கும் இது அனுமதிக்கிறது. தங்களின் அமைப்புகளை சேமித்துவிட்டு என்விடிஏ அமைப்புகள் உரையாடலை மூட விரும்பினால், 'சரி' பொத்தானை அழுத்தவும்.

சில அமைப்பு வகைமைகள் அர்ப்பணிக்கப்பட்ட குறுக்கு விசைகளைக் கொண்டிருக்கின்றன. அழுத்தப்படும் குறுக்குவிசை, என்விடிஏ அமைப்புகள் உரையாடலை அந்த குறிப்பிட்ட வகைமைக்கு நேரடியாக திறக்கும். இயல்பில், எல்லா வகைமைகளையும் விசைக் கட்டளைகளைக் கொண்டு அணுகவியலாது. அர்ப்பணிக்கப்பட்ட குறுக்கு விசைகள் இல்லாத வகைமைகளை தாங்கள் அடிக்கடி அணுக வேண்டியிருந்தால், உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலுக்குச் சென்று, தனிப்பயனாக்கப்பட்ட விசைக் கட்டளை, அல்லது சைகையை அவ்வகைமைகளுக்கு இணைக்கவும்.

என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பல அமைப்பு வகைமைகள் பின்வரும் பத்திகளில் சுருக்கமாக விளக்கப்படுகின்றன:

பொது

பொது அமைப்புகளைத் திறவுக

விசை: என்விடிே+கட்டுப்பாடு+g

இடைமுகப்பு மொழி, இற்றாக்கத்திற்குத் தானாகத் துழாவுதல் போன்ற பொது செயல்பாட்டுக் கூறுகளை இந்த என்விடிஏ அமைப்புகளின் பொது வகைமை அமைக்கிறது. இவ்வகைமை, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

மொழி

இது, என்விடிஏவின் இடைமுகப்பு மற்றும் தகவல்களை வழங்கும் மொழியைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் சேர்க்கைப் பெட்டியாகும். பல மொழிகள் இருப்பினும், இயல்பில் இருப்பது "பயனர் இயல்பிருப்பு, விண்டோஸ்". இவ்விருப்பத் தேர்வு, என்விடிஏவை விண்டோஸ் இயக்கமுறைமையின் இயல்பு மொழியைப் பயன்படுத்த அறிவுருத்தும்.

மொழியை மாற்றும்பொழுது, என்விடிஏ மறுதுவக்கப்பட வேண்டுமென்பதை அருள்கூர்ந்து கவனிக்கவும். மொழி மாற்றத்தை உறுதிப்படுத்தச் சொல்லும் உரையாடல் பெட்டி தோன்றும்பொழுது, புதிய மொழியை உடனே பயன்படுத்த, 'இப்பொழுது மறுதுவக்குக' பொத்தானை அழுத்தவும். பிறகு பயன்படுத்துவதாக இருந்தால், 'பிறகு மறுதுவக்குக' பொத்தானை அழுத்தவும். 'பிறகு மறுதுவக்குக' பொத்தானை அழுத்தினால், கைமுறை, அல்லது வெளியேறும்பொழுது அமைவடிவத்தை சேமித்திடுக தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்து அமைவடிவத்தைச் சேமித்திடுக.

வெளியேறும்பொழுது அமைவடிவத்தை சேமித்திடுக

இவ்விருப்பத் தேர்வு ஒரு தேர்வுப் பெட்டியாகும். இதைத் தேர்வுச் செய்தால், வெளியேறும்பொழுது அமைவடிவத்தை சேமித்திடுக என்று என்விடிஏவிற்கு அறிவுறுத்தும்.

என்விடிஏவை விட்டு வெளியேறும்பொழுது, வெளியேறுவதற்கான விருப்பத் தேர்வுகளைக் காட்டுக

இவ்விருப்பத் தேர்வு, என்விடிஏவை விட்டு வெளியேறும்பொழுது, வெளியேறுவதற்கான விருப்பத் தேர்வுகளைக் கொண்ட ஒரு உரையாடல் பெட்டித் தோன்ற வேண்டுமா எனத் தீர்மானிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தேர்வுப் பெட்டியாகும். இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், என்விடிஏவை விட்டு வெளியேறும்பொழுது, வெளியேற வேண்டுமா, மறுதுவக்க வேண்டுமா, நீட்சிநிரல்கள் முடக்கப்பட்ட நிலையில் மறுதுவக்க வேண்டுமா, அல்லது இற்றாக்கம் ஏதும் காத்திருப்பிலிருந்தால், அதை நிறுவ வேண்டுமா என்று வினவி, ஒரு உரையாடல் பெட்டித் தோன்றும். தேர்வாகியிருக்கவில்லை என்றால், என்விடிஏவை விட்டு உடனே வெளியேறும்.

என்விடிஏவை இயக்கும்பொழுதும், விட்டு வெளியேறும்பொழுதும் ஒலிகளை எழுப்புக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், என்விடிஏவை இயக்கும்பொழுதும், விட்டு வெளியேறும்பொழுதும் ஒலிகளை எழுப்புக என்று என்விடிஏவிற்கு அறிவுறுத்தும்.

புகுபதிவு நிலை

என்விடிஏ செயல்பட்டு கொண்டிருக்கும்பொழுது, எவ்வளவு தகவலை செயற்குறிப்பேட்டில் சேமிக்க வேண்டும் என்று வரையறுக்கும் சேர்க்கைப் பெட்டியாகும் இது. செயற்குறிப்பேட்டில் தகவல் குறிப்பிடும்படி சேமிக்கப்படாததால், பொதுவாகப் பயனர்கள் இதை மாற்றத் தேவையில்லை. ஆனால், என்விடிஏ மேம்படுத்துநர்களுக்கு வழு குறித்த அறிக்கையை அளிக்க விரும்பினால், அல்லது செயற்குறிப்பேட்டுப் பதிவினை முழுமையாக முடுக்க, அல்லது முடக்க விரும்பினால், இது பயனுள்ள விருப்பத் தேர்வாக இருக்கும்.

பின்வரும் செயற்குறிப்பேட்டுப் பதிவு நிலைகள் கிடைப்பிலுள்ளன:

சாளரத்தில் புகுபதிந்தவுடன், என்விடிஏவைத் தானாக இயக்குக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், தாங்கள் சாளரத்தில் புகுபதிந்தவுடன், என்விடிஏ தானாக இயங்கத் தொடங்கும். இவ்விருப்பத் தேர்வு, என்விடிஏ நிறுவி வகைப் படிகளில் மட்டுமே உள்ளது.

புகுபதியும்பொழுது என்விடிஏவைப் பயன்படுத்துக (இதற்கு நிர்வாகியின் சிறப்புரிமைத் தேவை)

சாளரத்தில் புகுபதிய, பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் தாங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், இத்தேர்வுப் பெட்டித் தேர்வான நிலையில், புகுபதிவு சாளரத்தில் என்விடிஏ தானாக பேசத் தொடங்கும். இவ்விருப்பத் தேர்வு, என்விடிஏ நிறுவி வகைப் படிகளில் மட்டுமே உள்ளது.

சாளரத்தில் புகுபதியும்பொழுதும், பிற பாதுகாப்பானத் திரைகளிலும் தற்போது சேமிக்கப்பட்டுள்ள அமைப்புகளைப் பயன்படுத்துக (இதற்கு நிர்வாகியின் சிறப்புரிமைத் தேவை)

இப்பொத்தானை அழுத்தினால், தற்போதைய அமைவடிவம் என்விடிஏவின் அடைவில் சேமிக்கப்பட்டு, சாளரப் புகுபதிவு, பயனர் கணக்குக் கட்டுப்பாடு, மற்றும் பிற பாதுகாப்பான சாளரங்களில் என்விடிஏ அதை பயன்படுத்திக் கொள்ளும். தங்களுடைய எல்லா அமைவடிவங்களும் அடைவிற்கு மாற்றப்படுவதை உறுதி செய்துகொள்ள, முதலில், தங்களின் அமைவடிவத்தை என்விடிஏ+கட்டுப்பாடு+c விசைக் கட்டளை, அல்லது என்விடிஏ பட்டியலிலிருக்கும் 'அமைவடிவத்தை சேமித்திடுக' உருப்படியைப் பயன்படுத்தி சேமிக்க வேண்டும். இவ்விருப்பத் தேர்வு, என்விடிஏ நிறுவி வகைப் படிகளில் மட்டுமே உள்ளது.

இற்றாக்கங்களுக்குத் தானாகத் துழாவுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், இற்றாக்கம் ஏதேனும் உள்ளதா என்பதை என்விடிஏ தானாகத் துழாவி, அதை அறிவிக்கும். என்விடிஏ பட்டியலின் 'உதவி' உட்பட்டியலிளுள்ள 'இற்றாக்கத்திற்குத் துழாவுக' உருப்படியை சொடுக்குவதன் மூலமும் இற்றாக்கம் ஏதேனும் உள்ளதா என்று அறியலாம். கைமுறையில், அல்லது தானாக இற்றாக்கங்கள் துழாவப்படும்பொழுது, தங்கள் கணினிக்கான சரியான இற்றாக்கத்தைப் பெற, சில தகவல்களை இற்றாக்கச் சேவையகத்திற்கு என்விடிஏ கட்டாயம் அனுப்பவேண்டும். பின்வரும் தகவல் எப்பொழுதும் அனுப்பப்படும்:

என்விடிஏ பயன்பாட்டுப் புள்ளிவிவரங்களை சேகரிக்க என்வி அக்ஸஸை அனுமதித்திடுக

இத்தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்தால், இற்றாக்கம் துழாவப்படும்பொழுது, பயனர்களின் எண்ணிக்கை, பயன்பாட்டில் இருக்கும் இயக்கமுறைமை மற்றும் அது எந்த நாட்டிலிருந்து இயக்கப்படுகிறது என்கிற தகவல்களை என்வி அக்ஸஸ் திரட்டுகிறது. இற்றாக்கம் துழாவப்படும்பொழுது, தங்களின் நாட்டையறிய, தங்களின் இணைய முகவரி பயன்படுத்தப்பட்டாலும், அம்முகவரி வைத்துக்கொள்ளப்படுவதில்லை என்பதைக் கவனிக்கவும். இற்றாக்கத்தைத் துழாவத் தேவைப்படும் கட்டாயத் தகவல்களைத் தவிர, பின்வரும் கூடுதல் தகவல்களும் தற்போதைக்கு அனுப்பப்படுகின்றன:

என்விடிஏவின் எதிர்கால மேம்பாட்டிற்கு முன்னுரிமையளிக்க, மேற்கண்ட தகவல்கள் துணைபுரிகின்றன.

துவக்கப்படும்பொழுது காத்திருப்பிலிருக்கும் இற்றாக்கத்தைத் தெரியப்படுத்துக

இத்தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்தால், என்விடிஏ துவக்கப்படும்பொழுது காத்திருப்பிலிருக்கும் இற்றாக்கத்தைத் தெரியப்படுத்தும். தாங்கள் விரும்பினால் அதை நிறுவிக் கொள்ளலாம். பொது அமைப்புகள் உரையாடலில் காணப்படும் 'என்விடிஏவை விட்டு வெளியேறும்பொழுது வெளியேறுவதற்கான விருப்பத் தேர்வுகளைக் காட்டுக' தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், காத்திருப்பிலிருக்கும் இற்றாக்கத்தை கைமுறையில் நிறுவலாம். மாற்றாக, என்விடிஏவின் உதவி உட்பட்டியலுக்குச் சென்று, இற்றாக்கத்தை புதிதாகத் துழாவலாம்.

பேச்சு அமைப்புகள்

பேச்சு அமைப்புகளைத் திறவுக

விசை: என்விடிஏ+கட்டுப்பாடு+v

என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பேச்சு வகைமை, ஒலிப்பானையும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒலிப்பானின் குரலின் தன்மையையும் மாற்றும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது. பேச்சு அளவுருக்களை மாற்று வழியில் எங்கிருந்தாயினும் விரைவாக மாற்றியமைக்க, ஒலிப்பான் வலையம் பிரிவைக் காணவும்.

பேச்சு அமைப்புகள் வகைமை, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

ஒலிப்பானை மாற்றுக

பேச்சு அமைப்புகள் வகைமையில் காணப்படும் முதல் விருப்பத் தேர்வு, "மாற்றுக..." என்கிற பொத்தானாகும். இப்பொத்தான், ஒலிப்பானைத் தெரிவுச் செய்க உரையாடலை இயக்குகிறது. இவ்வுரையாடல், இயக்கத்திலிருக்க வேண்டிய ஒலிப்பானையும், வெளியீட்டுக் கருவியையும் தெரிவுச் செய்ய தங்களை அனுமதிக்கிறது. என்விடிஏ அமைப்புகள் உரையாடலின் மீது இவ்வுரையாடல் திறக்கும். ஆகவே, ஒலிப்பானைத் தெரிவுச் செய்க உரையாடலில் காணப்படும் அமைப்புகளைச் சேமித்துவிட்டு, அல்லது சேமிக்காமல் உரையாடலை மூடினால், என்விடிஏ அமைப்புகள் உரையாடலுக்குத் தங்களை மீண்டும் கொண்டுச் செல்லும்.

குரல்

தாங்கள் தற்பொழுது நிறுவியிருக்கும் ஒலிப்பானின் எல்லாக் குரல்களையும், குரல் விருப்பத் தேர்வு ஒரு சேர்க்கைப் பெட்டியில் பட்டியலிட்டிருக்கும். அம்பு விசைகளைக் கொண்டு, பட்டியலில் உள்ள அனைத்து குரல்களையும் தாங்கள் கேட்கலாம். மேலம்பு, இடதம்பு விசைகலைப் பயன்படுத்தினால், வரிசைப் பட்டியலில் மேல்நோக்கி நகரலாம். கீழம்பு, வலதம்பு விசைகளைப் பயன்படுத்தினால், வரிசைப் பட்டியலில் கீழ்நோக்கி நகரலாம்.

குரல் மாற்றொலி

என்விடிஏவினுள் கட்டப்பட்டு வெளிவரும் ஈஸ்பீக் என்ஜி ஒலிப்பானைத் தாங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், இச்சேர்க்கைப் பெட்டியில் தோன்றும் குரலின் பல மாற்றொலிகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். ஈஸ்பீக் என்ஜி, குரல்களின் தன்மையில் சில மாறுதல்களை செய்து பேசுவதால், இக்குரல் மாற்றொலிகளும் ஒரு வகையில் தனிப்பட்ட குரல்களே. சில குரல் மாற்றொலிகள், ஆண் போலவும், சில பெண் போலவும், இன்னும் சில தவளைப் போலவும் பேசும். மூன்றாம் தரப்பு ஒலிப்பானைப் பயன்படுத்தும்பொழுது, தாங்கள் தேர்ந்தெடுக்கும் குரல் ஆதரவளிக்குமேயானால், இம்மதிப்பை மாற்றியமைக்கலாம்.

விகிதம்

இவ்விருப்பத் தேர்வு, தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள குரலின் வேக விகிதத்தை மாற்றியமைக்க அனுமதிக்கிறது. குரலின் வேகம், வழுக்கிக் கட்டுப்பாடு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. வழுக்கியில், 0 மிகக் குறைந்த வேகத்தையும், 100 உட்சபட்ச வேகத்தையும் குறிக்கும்.

விகித ஊக்கி

இவ்விருப்பத் தேர்வு முடுக்கப்பட்ட நிலையில், பேச்சின் வேகம் கணிசமாகக் கூட்டப்படும். நடப்பு ஒலிப்பானில் இவ்வசதிக்கு ஆதரவு இருக்க வேண்டும்.

சுருதி

இவ்விருப்பத் தேர்வு, தற்போதைய குரலின் சுருதியை மாற்றியமைக்க அனுமதிக்கிறது. குரலின் சுருதி, வழுக்கிக் கட்டுப்பாடு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. வழுக்கியில், 0 மிகக் குறைந்த சுருதியையும், 100 உட்சபட்ச சுருதியையும் குறிக்கும்.

ஒலியளவு

இவ்விருப்பத் தேர்வு, ஒரு வழுக்கியாகும். வழுக்கியில், 0 மிகக் குறைந்த ஒலியளவையும், 100 உட்சபட்ச ஒலியளவையையும் குறிக்கும்.

குரல் ஏற்ற இறக்கம்

இவ்விருப்பத் தேர்வு, ஒரு வழுக்கியாகும். இவ்வழுக்கியைக் கொண்டு, ஒரு குரலின் ஏற்ற இறக்கத்தை வரையறுக்கலாம்.

தானாக ஒரு மொழிக்கு மாறும் வசதி

இத்தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்து, மொழிக் குறியீடு ஒரு உரையில் இருந்தால், என்விடிஏ படித்துக் கொண்டிருக்கையிலேயே, ஒலிப்பானின் மொழி அம்மொழிக்கு மாறும். இயல்பில், இத்தேர்வுப் பெட்டி தேர்வாகியிருக்கும்.

ஒரு வட்டார வழக்கிற்கு மாறும் வசதி

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு மொழிக்கு மாறும் வசதி முடுக்கப்பட்டிருந்தால், இத்தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்தவுடன், ஒரு மொழிக்குள் இருக்கும் வட்டார மாறுதலையும் கண்டுணர்ந்து படிக்கும். எடுத்துக்காட்டாக, ஆங்கில மொழியில் இருக்கும் இரு வட்டார வழக்குகளான பிரிட்டிஷ் ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம் ஆகியவைகளை வேறுபடுத்திப் படிக்கும். இயல்பில், இத்தேர்வுப் பெட்டி தேர்வாகியிருக்கும்.

நிறுத்தற்குறிகள்/குறியெழுத்துகளின் நிலை

விசை: என்விடிஏ+p

எந்த நிறுத்தற் குறி/குறியெழுத்து, எந்த நிலையில் சொற்களாகப் படிக்கப்பட வேண்டுமென்று இது வரையறுக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குறியெழுத்தின் நிலை 'அனைத்தும்' என்று வரையறுத்தால், அக்குறியெழுத்து எப்பொழுதும் சொல்லாகப் படிக்கப்படும். இவ்விருப்பத் தேர்வு, தற்போதைய ஒலிப்பானுக்கு மட்டுமல்லாமல், எல்லா ஒலிப்பான்களுக்கும் பொருந்தும்.

வரியுருக்களையும், குறியெழுத்துகளையும் கையாளும்பொழுது குரலின் மொழியை நம்புக

இயல்பில் தேர்வாகியிருக்கும் இத்தேர்வுப் பெட்டி, வரியுருக்களையும், குறியெழுத்துகளையும் கையாளும்பொழுது, குரலின் மொழியை நம்பிக்கையுடன் பயன்படுத்தலாமென என்விடிஏவிற்கு அறிவுறுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட ஒலிப்பானுக்கு, அல்லது குரலுக்கு, நிறுத்தற்குறிகளை என்விடிஏ தவறான மொழியில் படிக்கும்பொழுது, இத்தேர்வினை நீக்குவதன் மூலம், முழுதளாவிய மொழி அமைப்புகளைப் பயன்படுத்த என்விடிஏவை கட்டாயப்படுத்தலாம்.

ஒருங்குறி இயல்பாக்கம்
. .
விருப்பத் தேர்வுகள் இயல்பிருப்பு (முடக்கப்பட்டது), முடுக்கப்பட்டது, முடக்கப்பட்டது
இயல்பிருப்பு முடக்கப்பட்டது

இவ்விருப்பத் தேர்வு முடுக்கப்பட்டிருந்தால், என்விடிஏ படிக்கும் உரையின் மீது ஒருங்குறி இயல்பாக்கம் நிகழ்த்தப்படும். பல வடிவங்களில் குறிப்பிடப்படக்கூடிய வரியுருக்களைப் படிக்கும்பொழுது, இது நன்மை பயப்பதாக இருக்கும். பிறவற்றுடன் கீழ்க்கண்ட பயன்களையளிக்கும் NFKC (இயல்பாக்க வடிவ இணக்க இயற்றல்) படிமுறைத் தீர்வினை என்விடிஏ பயன்படுத்துகிறது:

  1. ஒருங்குறி தகுதரத்தின் பகுதியாகவும், சமூக ஊடகங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வரியுருக்களின் அடர்ந்த, சாய்வுப் பதிப்புகள், அவைகளுக்குப் பொதுவாக இருக்கும் இணையான மற்றும் இணக்கமான வரியுருவிற்கு இயல்பாக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, லத்தீன் எழுத்து "h", அடர்த்தி வடிவில் "𝐡" என்றும், சாய்வு வடிவில் "â„Ž" என்று எழுதப்பட்டிருந்தாலும், இயல்பாக்கம் முடுக்கப்பட்டிருந்தால், இவ்வெழுத்துக்கள் 'h' என்றே படிக்கப்படும். இயல்பாக்கத்தின் இந்த அம்சம், மைக்ரோசாஃப்ட் வேர்ட் சமன்பாடு எடிட்டரில் சமன்பாடுகளைப் படிக்கவும் உதவுகிறது.

  2. வரியுருக்களை இயற்றுவதற்கான இயல்பாக்கம். எடுத்துக்காட்டாக, ஜெர்மானியம், துருக்கியம் போற மொழிகளில் பொதுவாக அறியப்படும் "ü" (umlaut/diaeresis குறிகளைக் கொண்ட u) எழுத்தினை, இரு வடிவங்களில் குறிப்பிட இயலும்:

  3. ஒரு தனித்து நிற்கும் ஒருங்குறி வரியுரு (ü)
  4. ஒரு வரியுருவை இரண்டாகப் பிரித்து எழுதுதல் (ü). அதாவது, எளிய லத்தீன் எழுத்து U மற்றும் diaeresis ஒலிப்பு கொண்ட அதன் மாற்றுரு. ஒருங்குறி இயல்பாக்கம், அனைத்து பேச்சு வெளியீடுகளிலும் ஒரே ஒரு வரியுரு வடிவம் அதாவது ஒரு மாற்றுரு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்கிறது.

"ij" (பிணைவரியுரு ij) உள்ளிட்ட சில பிணைவரியுருக்களை அவைகளின் இரு வரியுரு வடிவத்திற்கு மாற்றுதல் ("ij").

  1. கூட்டு வரியுருக்களில் மாற்றியமைப்பிகளை நிலையாக ஒழுங்குபடுத்துதல். எ.கா. பண்டைய ஹீப்ரு.

ஒருங்குறி இயல்பாக்கத்தை எங்கிருந்தாயினும் மாற்றியமைக்க, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலுக்குச் சென்று, தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

வரியுருக்களாக வழிசெலுத்தும்பொழுது "இயல்பாக்கப்பட்டது" என்று அறிவித்திடுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், எழுத்துகளாகப் படிக்கும் நிலையில், இயல்பாக்கப்பட்ட வரியுருக்களை படிக்கும்பொழுது, "இயல்பாக்கப்பட்டது" என்று என்விடிஏ அறிவித்திடும். எடுத்துக்காட்டாக, "ij" என்கிற எழுத்தினை, "இயல்பாக்கப்பட்ட i j" என்று படித்திடும்.

"ஒருங்குறி இயல்பாக்கம்" முடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே, இவ்வமைப்பு கிடைப்பிலிருக்கும் என்பதைக் கவனிக்கவும்.

வரியுருக்களையும், குறியெழுத்துகளையும் கையாளும்பொழுது முகவடிகள் உட்பட ஒருங்குறிக் கூட்டமைப்பின் தரவுகளை சேர்த்துக்கொள்க

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், வரியுருக்களையும், குறியெழுத்துகளையும் ஒலிக்கும்பொழுது, கூடுதல் குறியெழுத்து ஒலிப்பு அகரமுதலிகளை என்விடிஏ சேர்த்துக்கொள்ளும். ஒருங்குறிக் கூட்டமைப்பின் உள்ளூர் பொதுத் தரவுக் களஞ்சியத்தில் இருக்கும் குறியெழுத்துகளின், குறிப்பாக முகவடிகளின் விளக்கங்களை இவ்வகரமுதலிகள் கொண்டிருக்கும். முகவடிகளின் விளக்கங்களை இத்தரவினைக் கொண்டு என்விடிஏ பேச வேண்டுமென்று தாங்கள் விரும்பினால், இத்தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்ய வேண்டும். ஆனால், தாங்கள் பயன்படுத்தும் ஒலிப்பானைக் கொண்டு முகவடிகளின் உள்ளூர் விளக்கங்களைக் கேட்க விரும்பினால், இத்தேர்வுப் பெட்டியின் தேர்வினை நீக்கிவிட வேண்டும்.

கைமுறையில் சேர்க்கப்பட்ட, அல்லது தொகுக்கப்பட்ட குறியெழுத்துகளின் விளக்கங்கள், தங்களின் பயனர் அமைப்புகளில் ஒரு பகுதியாக சேமிக்கப்படுகின்றன என்பதைக் கவனிக்கவும். ஆகவே, முகவடிகளின் விளக்கங்களைத் தாங்கள் மாற்றியமைத்திருந்தால், இத்தேர்வுப் பெட்டி தேர்வாகாத நிலையிலும், அந்த முகவடிகளின் தனிப்பயனாக்கப்பட்ட விளக்கங்களையே என்விடிஏ படிக்கும். என்விடிஏவின் நிறுத்தற்குறிகள்/குறியெழுத்துகளின் ஒலிப்பு உரையாடலில், குறியெழுத்தின் விளக்கங்களை சேர்க்கவோ, தொகுக்கவோ, நீக்கவோ தங்களால் இயலும்.

ஒருங்குறிக் கூட்டமைப்பின் தரவினை, எங்கிருந்தாயினும் சேர்த்துக்கொள்ள, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

ஆங்கில முகப்பெழுத்திற்கான சுருதி மாற்று விழுக்காடு

ஆங்கில முகப்பெழுத்தைப் படிக்க, எவ்வளவு சுருதியை மாற்ற வேண்டுமென்று தாங்கள் கருதுகிறீர்களோ, அம்மதிப்பை இத்தொகு களத்தில் தட்டச்சிடவும். இதன் மதிப்பு விழுக்காட்டில் குறிக்கப்படுகிறது. சுழியத்திற்குக் கீழிருக்கும் மதிப்பு, சுருதியைக் குறைக்கும், சுழியத்திற்கு மேலிருக்கும் மதிப்பு, சுருதியை மேலேற்றும். சுருதியில் மாற்றம் தேவையில்லையென்றால், 0 எண்ணைத் தட்டச்சிடவும். வழக்கமாக, எந்தவொரு முகப்பெழுத்திற்கும் என்விடிஏ சுருதியை சிறிது மேலேற்றும். ஆனால், சில ஒலிப்பான்கள் இதை சரிவர ஆதரிப்பதில்லை. முகப்பெழுத்திற்கான சுருதி மாற்றம் ஆதரிக்கப்படாதபட்சத்தில், ஆங்கில முகப்பெழுத்துகளுக்கு முன், Cap என்று சொல்க, ஆங்கில முகப்பெழுத்துகளுக்கு சிற்றொலியை எழுப்புக ஆகிய இரு தேர்வுப் பெட்டிகளில் ஏதேனும் ஒன்றை, அல்லது இரண்டையும் மாற்றாகத் தேர்வுச் செய்யலாம்.

ஆங்கில முகப்பெழுத்துகளுக்கு முன் cap என்று சொல்க

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், ஆங்கில உரைகளை எழுத்துகளாக படிக்கும் தருணங்களில், முகப்பெழுத்துகள் எதிர்பட்டால், என்விடிஏ 'cap' என்று சொல்லியப் பிறகுதான், அவ்வெழுத்தைப் படிக்கும்.

ஆங்கில முகப்பெழுத்துகளுக்கு சிற்றொலியை எழுப்புக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், ஆங்கில உரைகளை எழுத்துகளாகப் படிக்கும் தருணங்களில், முகப்பெழுத்துகளைப் படிக்கும்பொழுது என்விடிஏ ஒரு சிற்றொலியை எழுப்பும்.

எழுத்துகளாக படிக்கும் வசதியிருந்தால், அதைப் பயன்படுத்துக

சில சொற்கள், வெறும் ஒற்றை எழுத்தை மட்டுமே கொண்டிருக்கும். இத்தகைய சொற்களின் ஒலிப்பு, அவ்வெழுத்து, தனியெழுத்தாகவோ, அல்லது ஒரு சொல்லாகவோ இருக்கும்பொழுது, அது ஒலிக்கப்படும் விதத்திலிருந்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, ஆங்கில எழுத்து 'a', ஒரு தனிச் சொல்லாகவும், சொல்லின் ஒரு எழுத்தாகவும் வருகிறது. அதன் ஒலிப்பு, தனிச் சொல்லாக இருக்கும்பொழுது வேறாகவும், சொல்லின் ஒரு பகுதியாக வரும்பொழுது வேறாகவும் உள்ளது. ஒலிப்பான் ஆதரித்தால், இத்தேர்வுப் பெட்டி, இவ்விரு வகைகளையும் வேறுபடுத்திப் படிக்க உதவுகிறது. பொதுவில், எல்லா ஒலிப்பான்களும், இதை ஆதரிக்கின்றன.

பொதுவாக, இத்தேர்வுப் பெட்டித் தேர்வுச் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சில மைக்ரோசாப்ட் SAPI ஒலிப்பான்கள், இதை சரிவர செயல்படுத்த முடிவதில்லையென்பதால், இத்தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்தால், அவ்வொலிப்பான்கள் விநோதமாக செயற்படும். நீட்சிநிரல், SAPI பயன்பாடு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கோட் ஃபாக்டரியின் ஒலிப்பான்களும் இதை சரிவர செயற்படுத்த முடிவதில்லையென்பதால், என்விடிஏ பட்டியல், உரையாடல்கள் போன்ற இடங்களில் உரை பேசப்படும்பொழுது, தேவையின்றி எழுத்துகளாகப் படிக்கும். தனிப்பட்ட எழுத்துகளின் பலுக்கலில் சிக்கலிருந்தால், இத்தேர்வுப் பெட்டியின் தேர்வினை நீக்கி, மீண்டும் முயலவும்.

சுட்டி நகரும்பொழுது தாமதிக்கப்பட்ட எழுத்து விளக்கங்கள்
. .
விருப்பத் தேர்வுகள் முடுக்கப்பட்டது, முடக்கப்பட்டது
இயல்பிருப்பு முடக்கப்பட்டது

இவ்விருப்பத் தேர்வு முடுக்கப்பட்டிருந்தால், தாங்கள் எழுத்துகளாக நகரும்பொழுது, எழுத்து விளக்கங்களை என்விடிஏ அறிவிக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒரு வரியை எழுத்துகளாகப் படிக்கும்பொழுது, 'அ' என்கிற எழுத்தின் மீது சுட்டி நகர்ந்தவுடன், ஒரு நொடி தாமதத்திற்குப் பிறகு, 'அம்மா' என்று சொல்லும். எழுத்துகளுக்கிடையேயான பலுக்கலை வேறுபடுத்தி அறிவதில் சிக்கல் இருப்பவர்களுக்கும், செவித் திறன் குறைபாடுள்ளவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

பிற உரை படிக்கப்பட்டால், அல்லது 'கட்டுப்பாடு' விசை அழுத்தப்பட்டால், தாமதிக்கப்பட்ட எழுத்து விளக்கம் விலக்கப்படும்.

சுழற்சி பேச்சு முறைக் கட்டளையில் இருக்கும் முறைகள்

என்விடிஏ+s விசையைப் பயன்படுத்தி பேச்சு முறைகளுக்கிடையே சுழற்சியில் நகரும்பொழுது, எந்தெந்த முறைகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்யப்படக் கூடிய இவ்வரிசைப் பட்டியல் அனுமதிக்கிறது. தேர்வு செய்யப்படாத முறைகள் விலக்கப்படும். எல்லா முறைகளும் இயல்பில் சேர்க்கப்பட்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக, 'சிற்றொலிகள்', 'அமைதி' ஆகிய இரு முறைகளைத் தாங்கள் பயன்படுத்த விரும்பவில்லையென்றால், இவ்விரு முறைகளையின் தேர்வினை நீக்கிவிட்டு, 'பேசுக', 'தேவையின் பேரில்' ஆகிய இரு முறைகளின் தேர்வினைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் இரு முறைகளையாவது தேர்வு செய்ய வேண்டும் என்பதை கவனிக்கவும்.

ஒலிப்பான் தெரிவு

ஒலிப்பான் தெரிவு உரையாடலைத் திறவுக

விசை: என்விடிஏ+கட்டுப்பாடு+s

என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பேச்சு வகைமையில் இருக்கும் "மாற்றுக..." பொத்தானை அழுத்துவதன் மூலம், ஒலிப்பான் உரையாடலைத் திறந்து, என்விடிஏ பயன்படுத்த வேண்டிய ஒலிப்பானைத் தேர்ந்தெடுக்க தங்களை அனுமதிக்கிறது. தாங்கள் விரும்பிய ஒலிப்பானைத் தேர்ந்தெடுத்தவுடன், 'சரி' பொத்தானை அழுத்தினால், அவ்வொலிப்பானை என்விடிஏ ஏற்றும். ஒலிப்பானை ஏற்றுவதில் பிழை இருந்தால், என்விடிஏ அதை அறிவித்துவிட்டு, முந்தைய ஒலிப்பானையே தொடர்ந்து பயன்படுத்தும்.

ஒலிப்பான்

பேச்சு வெளியீட்டிற்கு என்விடிஏ பயன்படுத்த வேண்டிய ஒலிப்பானைத் தேர்ந்தெடுக்க இவ்விருப்பத் தேர்வு தங்களை அனுமதிக்கிறது.

என்விடிஏ ஆதரவளிக்கும் ஒலிப்பான்களின் பட்டியலைப் பற்றி அறிய, ஆதரவளிக்கப்படும் ஒலிப்பான்கள் உட்பிரிவைக் காணவும்.

'பேச்சில்லை' என்கிற உருப்படி, இவ்வரிசைப் பட்டியலில் தோன்றும் ஒரு சிறப்புக்கூறு. இதைத் தேர்ந்தெடுத்தால், எந்நிலையிலும், என்விடிஏவைப் பேச்சில்லாமல் இயக்கலாம். என்விடிஏவின் பிரெயில் காட்சியமைவை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கும், என்விடிஏவை மேம்படுத்தும் பார்வையுள்ளவர்கள் பேச்சுத் தோற்றத்தைப் பயன்படுத்தும்பொழுதும் இவ்விருப்பத் தேர்வுப் பயன்படும்.

ஒலிப்பான் அமைப்புகள் வளையம்

என்விடிஏ இயக்கத்திலிருக்கும்பொழுது, என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பேச்சு வகைமைக்குச் செல்லாமல், எங்கிருந்தாயினும் பேச்சு அமைப்புகளை விரைவாக மாற்றியமைக்க, என்விடிஏ சில கட்டளை விசைகளைக் கொடுக்கிறது.

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை விளக்கம்
அடுத்த ஒலிப்பான் அமைப்பிற்கு நகர்க என்விடிஏ+கட்டுப்பாடு+வலதம்பு என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+வலதம்பு தற்போதைய அமைப்பிற்கு அடுத்ததாக இருக்கும் பேச்சமைப்பிற்கு நகரும். கடைசி அமைப்பை அடைந்தவுடன், மீண்டும் முதல் அமைப்பிற்கு வந்து சேரும்
முந்தைய ஒலிப்பான் அமைப்பிற்கு நகர்க என்விடிஏ+கட்டுப்பாடு+இடதம்பு என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+இடதம்பு தற்போதைய அமைப்பிற்கு முந்தையதாக இருக்கும் பேச்சமைப்பிற்கு நகரும். முதல் அமைப்பை அடைந்தவுடன், மீண்டும் கடைசி அமைப்பிற்கு வந்து சேரும்
தற்போதைய ஒலிப்பான் அமைப்பைக் கூட்டுக என்விடிஏ+கட்டுப்பாடு+மேலம்பு என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+மேலம்பு தற்போதைய பேச்சமைப்பை என்விடிஏ கூட்டும். எடுத்துக்காட்டாக, விகிதத்தை கூட்டுதல், அடுத்த குரலுக்குச் செல்லுதல், ஒலியளவைக் கூட்டுதல் ஆகியவைகளைக் கூறலாம்
பெருமளவுகளில் தற்போதைய ஒலிப்பான் அமைப்பைக் கூட்டுக என்விடிஏ+கட்டுப்பாடு+பக்கம் மேல் என்விடிஏ+மாற்றழுத்தி+கட்டுப்பாடு+பக்கம் மேல் தாங்கள் தற்போதிருக்கும் ஒலிப்பான் அமைப்பின் மதிப்பை பெருமளவுகளில் கூட்டுகிறது. எ.கா. குரல் அமைப்பில் தாங்கள் இருந்தால், ஒருமுறைக்கு இருபது குரல்களைத் தாண்டி முன்செல்லும்; விகிதம், சுருதி போன்ற வழுக்கி அமைப்பில் தாங்கள் இருந்தால், ஒருமுறைக்கு 20% மதிப்பு முன்செல்லும்
தற்போதைய ஒலிப்பான் அமைப்பைக் குறைத்திடுக என்விடிஏ+கட்டுப்பாடு+கீழம்பு என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+கீழம்பு தற்போதைய பேச்சமைப்பை என்விடிஏ குறைக்கும். எடுத்துக்காட்டாக, விகிதத்தை குறைத்தல், முந்தைய குரலுக்குச் செல்லுதல், ஒலியளவைக் குறைத்தல் ஆகியவைகளைக் கூறலாம்
பெருமளவுகளில் தற்போதைய ஒலிப்பான் அமைப்பைக் குறைத்திடுக என்விடிஏ+கட்டுப்பாடு+பக்கம் கீழ் என்விடிஏ+மாற்றழுத்தி+கட்டுப்பாடு+பக்கம் கீழ் தாங்கள் தற்போதிருக்கும் ஒலிப்பான் அமைப்பின் மதிப்பை பெருமளவுகளில் குறைக்கிறது. எ.கா. குரல் அமைப்பில் தாங்கள் இருந்தால், ஒருமுறைக்கு இருபது குரல்களைத் தாண்டி பின்செல்லும்; விகிதம், சுருதி போன்ற வழுக்கி அமைப்பில் தாங்கள் இருந்தால், ஒருமுறைக்கு 20% மதிப்பு பின்செல்லும்

பிரெயில்

என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பிரெயில் வகைமை, பல பிரெயில் உள்ளீட்டு/வெளியீட்டு சிறப்பியல்புகளை மாற்றியமைப்பதற்கான விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது. இவ்வகைமை, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

பிரெயில் காட்சியமைவை மாற்றியமைத்திடுக

என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பிரெயில் வகைமையில் இருக்கும் "மாற்றுக..." பொத்தானை அழுத்தும்பொழுது, பிரெயில் காட்சியமைவைத் தெரிவுச் செய்க உரையாடலை இயக்குகிறது. இவ்வுரையாடல், இயக்கத்திலிருக்க வேண்டிய பிரெயில் காட்சியமைவைத் தெரிவுச் செய்ய தங்களை அனுமதிக்கிறது. என்விடிஏ அமைப்புகள் உரையாடலின் மீது இவ்வுரையாடல் திறக்கும். ஆகவே, பிரெயில் காட்சியமைவைத் தெரிவுச் செய்க உரையாடலில் காணப்படும் அமைப்புகளைச் சேமித்துவிட்டு, அல்லது சேமிக்காமல் உரையாடலை மூடினால், என்விடிஏ அமைப்புகள் உரையாடலுக்குத் தங்களை மீண்டும் கொண்டுச் செல்லும்.

வெளீயீடு அட்டவணை

இவ்வகைமையில் அடுத்ததாக தாங்கள் எதிர்கொள்ளும் விருப்பத் தேர்வு, பிரெயில் வெளியீடு அட்டவணை என்கிற சேர்க்கைப் பெட்டியாகும். பலதரப்பட்ட மொழிகளுக்கான பிரெயில் அட்டவணைகள், பிரெயில் தகுதரங்கள் மற்றும் படிநிலைகளை இச்சேர்க்கைப் பெட்டியில் காண்பீர்கள். உரையிலிருந்து பிரெயிலுக்கு மொழிபெயர்த்து, தங்களின் பிரெயில் காட்சியமைவில் அளிக்க, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அட்டவணை பயன்படுத்தப்படும். வரிசைப் பட்டியலில் இருக்கும் பிரெயில் அட்டவணைகளுக்கிடையே நகர, அம்பு விசைகளைப் பயன்படுத்தவும்.

உள்ளீடு அட்டவணை

முந்தைய விருப்பத் தேர்வினை நிறைவு செய்வதுபோல் அமைந்திருக்கும் 'உள்ளீடு அட்டவணை', தாங்கள் அடுத்ததாக காணும் சேர்க்கைப் பெட்டியாகும். தங்களின் பிரெயில் காட்சியமைவின் பெர்க்கின்ஸ் வகை விசைப் பலகை மூலம் உள்ளிடப்படும் பிரெயில் உள்ளீடுகள், உரைக்கு மொழிபெயர்க்கப்பட, தேர்வுச் செய்யப்படும் அட்டவணை பயன்படுத்தப்படும். வரிசைப் பட்டியலில் இருக்கும் பிரெயில் அட்டவணைகளுக்கிடையே நகர, அம்பு விசைகளைப் பயன்படுத்தவும்.

தங்களின் பிரெயில் காட்சியமைவில் பெர்க்கின்ஸ் வகை விசைப் பலகை இருந்து, பிரெயில் காட்சியமைவின் இயக்கி அதனை ஆதரித்தால் மட்டுமே, இவ்விருப்பத் தேர்வுப் பயன்படும் என்பதைக் கவனிக்கவும். காட்சியமைவில் பிரெயில் விசைப் பலகை இருந்தபோதிலும், உள்ளீடு ஆதரிக்கப்படாமல் இருந்தால், அதுகுறித்து ஆதரவளிக்கப்படும் பிரெயில் காட்சியமைவுகள் பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பிரெயில் முறை

விசை: என்விடிஏ+நிலைமாற்றி+t

கிடைப்பிலிருக்கும் பிரெயில் முறைகளுக்கிடையே தேர்ந்தெடுக்க இவ்விருப்பத் தேர்வு தங்களை அனுமதிக்கிறது.

தற்போதைக்கு, "சுட்டிகளைப் பின்தொடர்க", "பேச்சு வெளியீட்டை காட்டிடுக" ஆகிய இரு பிரெயில் முறைகள் ஆதரிக்கப்படுகின்றன.

சுட்டிகளைப் பின்தொடர்க என்கிற விருப்பத் தேர்வு தெரிவுச் செய்யப்பட்டிருந்தால், பிரெயில் எதனுடன் கட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து, கணினி குவிமையம்/சுட்டியை, அல்லது வழிகாட்டிப் பொருள்/சீராய்வுச் சுட்டியை பிரெயில் காட்சியமைவு பின்தொடரும்.

பேச்சு வெளியீட்டைக் காட்டிடுக என்கிற விருப்பத் தேர்வு தெரிவுச் செய்யப்பட்டிருந்தால், என்விடிஏ பேசுவதை, அல்லது "பேசுக" என்கிற பேச்சு முறையைத் தெரிவுச் செய்திருந்தால் என்விடிஏ எதைப் பேசிடுமோ, அதை பிரெயில் காட்சியமைவு காட்டிடும்.

சுட்டியினிடத்திலிருக்கும் சொல்லை கணினி பிரெயிலுக்காக விரிவாக்குக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், சுட்டியின் கீழிருக்கும் சொல்லிற்கு, குறுக்கப்படாத கணினி பிரெயிலைக் காண்பிக்கும்.

பிரெயில் சுட்டியைக் காட்டுக

இவ்விருப்பத் தேர்வு, பிரெயில் சுட்டியை இயக்கவும், நிறுத்தவும் பயன்படுகிறது. கணினிச் சுட்டிக்கும், சீராய்வுச் சுட்டிக்கும் இது பொருந்துகிறது. ஆனால், தெரிவு நிலைகாட்டிக்கு இது பொருந்தாது.

சுட்டி இமைத்தல்

இவ்விருப்பத் தேர்வு, பிரெயில் சுட்டியின் இமைத்தலை அனுமதிக்கிறது. இமைக்கும் வசதி நிறுத்தப்பட்டால், எப்பொழுதும் பிரெயில் சுட்டி நிற்கும் நிலையில் நிலையாக இருக்கும். தெரிவு நிலைக்காட்டியின் மீது இவ்விருப்பத் தேர்வு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இது எப்பொழுதும் இமைக்காத நிலையில் புள்ளிகள் ஏழு, எட்டு என்றே இருக்கும்.

சுட்டி இமைக்கும் விகிதம் (நுண்ணொடிகளில்)

இவ்விருப்பத் தேர்வு, ஒரு எண் களமாகும். சுட்டி இமைக்கும் விகிதத்தை நுண்ணொடிகளின் கணக்கில் மாற்றியமைக்கலாம்.

குவிமையத்திற்கான பிரெயில் சுட்டியின் வடிவம்

குவிமையத்துடன் பிரெயில் கட்டப்பட்டிருக்கும்பொழுது, பிரெயில் சுட்டியின் வடிவத்தை, அதாவது பிரெயில் புள்ளிகளின் வடிவவிதத்தைத் தேர்வுச் செய்ய இவ்விருப்பத் தேர்வு அனுமதிக்கிறது. தெரிவு நிலைக்காட்டியின் மீது இவ்விருப்பத் தேர்வு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இது எப்பொழுதும் இமைக்காத நிலையில் புள்ளிகள் ஏழு, எட்டு என்றே இருக்கும்.

சீராய்விற்கான பிரெயில் சுட்டியின் வடிவம்

சீராய்வுச் சுட்டியுடன் பிரெயில் கட்டப்பட்டிருக்கும்பொழுது, பிரெயில் சுட்டியின் வடிவத்தை, அதாவது பிரெயில் புள்ளிகளின் வடிவவிதத்தைத் தேர்வுச் செய்ய இவ்விருப்பத் தேர்வு அனுமதிக்கிறது. தெரிவு நிலைக்காட்டியின் மீது இவ்விருப்பத் தேர்வு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இது எப்பொழுதும் இமைக்காத நிலையில் புள்ளிகள் ஏழு, எட்டு என்றே இருக்கும்.

தகவல்களைக் காட்டிடுக

பிரெயில் தகவல்களை என்விடிஏ காட்டிட வேண்டுமா என்பதனையும், அத்தகவல்கள் எப்பொழுது தானாக மறைந்திட வேண்டுமென்பதனையும் தெரிவுச் செய்ய இச்சேர்க்கைப் பெட்டி அனுமதிக்கிறது.

பிரெயில் தகவல்கள் காட்டப்படும் வசதியை எங்கிருந்தாயினும் மாற்றியமைக்க, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

தகவல் காட்சியளிக்கும் நேரம்

இவ்விருப்பத் தேர்வு, ஒரு எண் களமாகும். என்விடிஏவின் தகவல்கள், பிரெயில் காட்சியமைவில் எத்தனை நொடிகள் காட்டப்பட வேண்டுமென்று, இக்களத்தில் குறிப்பிடலாம். பிரெயில் காட்சியமைவில் ஒரு வழியிடும் விசையை அழுத்தும்பொழுது, என்விடிஏவின் தகவல் உடனே விலக்கப்படும். ஆனால், என்விடிஏவின் தகவலை கொணரும் அதே, அல்லது மற்றொரு விசை அழுத்தப்படும்பொழுது, அதற்குப் பொருத்தமான தகவல் மீண்டும் காட்டப்படும். "தகவல்களைக் காட்டிடுக" விருப்பத் தேர்வில், "காட்சியளிக்கும் நேரத்தைப் பயன்படுத்திடுக" என்று அமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே, இவ்விருப்பத் தேர்வு காட்டப்படும்.

பிரெயிலைக் கட்டுக

விசை: என்விடிஏ+கட்டுப்பாடு+t

இவ்விருப்பத் தேர்வு, பிரெயில் காட்சியமைவு, கணினிக் குவிமையத்தை/சுட்டியைப் பின்தொடர வேண்டுமா, வழிசெலுத்திப் பொருளை/சீராய்வுச் சுட்டியைப் பின்தொடர வேண்டுமா, அல்லது இரண்டையும் பின்தொடர வேண்டுமா என்று தீர்மானிக்க உதவுகிறது. "தன்னியக்கம்" என்கிற விருப்பத் தேர்வு தேர்வாகியிருந்தால், கணினிக் குவிமையத்தையும், சுட்டியையும் என்விடிஏ இயல்பில் பின்தொடரும். தன்னியக்க நிலையில், வழிசெலுத்திப் பொருளின், அல்லது சீராய்வுச் சுட்டியின் நிலை பயனரின் வெளிப்படையான அளவளாவினால் மாற்றப்படும்பொழுது, குவிமையம், அல்லது சுட்டி மாறும் வரை, என்விடிஏ சீராய்விற்கு தற்காலிகமாக கட்டப்படும். கணினிக் குவிமையத்தையும் சுட்டியையும் மட்டுமே பிரெயில் பின்தொடரவேண்டுமென்று தாங்கள் விரும்பினால், குவிமையத்துடன் பிரெயில் கட்டப்படும் வகையில் அமைவடிவத்தை தாங்கள் மாற்றியமைக்க வேண்டும். இந்நிலையில், பொருள் வழிசெலுத்தலின்பொழுது,என்விடிஏவின் வழிசெலுத்தியைப் பிரெயில் பின்தொடராது. அதுபோலவே, சீராய்வின்பொழுது,சீராய்வுச் சுட்டியைப் பின்தொடராது. பொருள் வழிசெலுத்தலையும் உரைச் சீராய்வையும் பிரெயில் பின்தொடரவேண்டுமென்று தாங்கள் விரும்பினால், சீராய்வுச் சுட்டியுடன் பிரெயில் கட்டப்படும் வகையில் அமைவடிவத்தை தாங்கள் மாற்றியமைக்க வேண்டும். இந்நிலையில், கணினிக் குவிமையத்தையும் சுட்டியையும் பிரெயில் பின்தொடராது.

சீராய்வுச் சுட்டியை வழியமைத்திடும்பொழுது கணினிச் சுட்டியை நகர்த்திடுக
. .
விருப்பத் தேர்வுகள் இயல்பிருப்பு (ஒருபோதும் இல்லை), ஒருபோதும் இல்லை, தானாகக் கட்டப்படும்பொழுது மட்டும், எப்பொழுதும்
இயல்பிருப்பு ஒருபோதும் இல்லை

வழியமைத்திடும் பொத்தானை அழுத்தும்பொழுது கணினிச் சுட்டியும் நகர்த்தப்பட வேண்டுமா என்பதை வரையறுக்க இவ்வமைப்பு பயன்படுகிறது. 'ஒருபோதும் இல்லை' என்பதே இவ்விருப்பத் தேர்வின் இயல்பாக அமைக்கப்பட்டிருப்பதால், சீராய்வுச் சுட்டியை வழியமைத்திடும்பொழுது கணினிச் சுட்டி நகர்த்தப்பட மாட்டாது.

இவ்விருப்பத் தேர்வு 'எப்பொழுதும்' என்று அமைக்கப்பட்டு, பிரெயில் கட்டப்படுவது, 'தானாக', அல்லது 'சீராய்விற்கு' என்று அமைக்கப்பட்டால், சுட்டியை வழியமைத்திடும் ஒரு விசையை அழுத்தும்பொழுது, கணினிச் சுட்டியை, அல்லது ஆதரவிருந்தால், குவிமையத்தை நகர்த்திடும். தற்போதைய சீராய்வு நிலை, திரைச் சீராய்வு என்றிருந்தால், சுட்டியின் தோற்றம் கிடைப்பிலிருக்காது. இந்நிலையில், தாங்கள் வழியமைத்திடும் உரையின் கீழிருக்கும் பொருளை குவிமையத்திற்குள் கொண்டுவர என்விடிஏ முயலும். இது பொருள் சீராய்விற்கும் பொருந்தும்.

தானாகக் கட்டப்படும்பொழுது மட்டும் சுட்டியை நகர்த்திடும் விருப்பத் தேர்விற்கும்ம் அமைத்திடலாம். சுட்டியை வழியமைத்திடும் விசையை அந்நிலையில் அழுத்திடும்பொழுது, சீராய்வுச் சுட்டிக்கு என்விடிஏ தானாகக் கட்டப்பட்டிருந்தால், கணினிச் சுட்டி, அல்லது குவிமையத்தை நகர்த்திடும். சீராய்வுச் சுட்டிக்கு கைமுறையில் என்விடிஏ கட்டப்பட்டிருந்தால் எந்த நகர்வும் இருக்காது.

"பிரெயில் கட்டப்படுவது" 'தன்னியக்கம்', அல்லது 'சீராய்வு' என்று அமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இவ்விருப்பத் தேர்வு காட்டப்படும்.

சீராய்வுச் சுட்டியை வழியமைத்திடும்பொழுது கணினிச் சுட்டி நகர்வதை எங்கிருந்தாயினும் மாற்றியமைக்க, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

பத்தியாகப் படித்திடுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், பிரெயில், வரியாக அல்லாமல், பத்தியாக காட்டப்படும். மேலும், அடுத்த/முந்தைய வரி நகர்வு கட்டளைகள், பிரெயில் காட்சியமைவை அடுத்த/முந்தைய பத்திக்கு நகர்த்தும். இதனால், ஒவ்வொரு வரியின் இறுதியிலும் பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்தும் தேவையை நீக்குகிறது. இது, பெருமளவு உரைகளை எளிதாக படிக்க உதவுகிறது. இயல்பில், இவ்வசதி முடக்கப்பட்டிருக்கும்.

இயலும் இடங்களில் சொற்களின் பிளவைத் தவிர்த்திடுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், பிரெயில் காட்சியமைவின் இறுதியில் உள்ளடக்க இயலாத பெரியச் சொற்கள் பிளக்கப்படுவதில்லை. மாற்றாக, காட்சியமைவின் இறுதியில் சிறு பகுதி வெற்றிடமாக விடப்படும். காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்தும் பொழுது, முழுச் சொல்லையும் படிக்க இயலும். சில தருணங்களில், இது 'சொற்சுற்று' என அழைக்கப்படுகிறது. காட்சியமைவின் முழு வரியிலும் அடக்கவியலாத அளவு ஒரு சொல் பெரிதாக இருக்குமாயின், அச்சொல் கட்டாயம் பிளக்கப்படும் என்பதைக் கவனிக்கவும்.

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகாதிருந்தால், ஒரு சொல், இயன்றளவு அந்த வரியிலேயே காட்டப்படும். ஆனால், அச்சொல்லின் எஞ்சி நிற்கும் பகுதி அறுபட்டுப் போகும். காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்தும் பொழுது, சொல்லின் விட்டுப் போன பகுதியைப் படிக்கலாம்.

இத்தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்வது, உரையை சரளமாகப் படிக்க உதவினாலும், காட்சியமைவை அடிக்கடி நகர்த்த வேண்டியிருக்கும்.

ஒருங்குறி இயல்பாக்கம்
. .
விருப்பத் தேர்வுகள் இயல்பிருப்பு (முடக்கப்பட்டது), முடுக்கப்பட்டது, முடக்கப்பட்டது
இயல்பிருப்பு முடக்கப்பட்டது

இவ்விருப்பத் தேர்வு முடுக்கப்பட்டிருந்தால், பிரெயில் காட்சியமைவில் காட்சியளிக்கும் உரையின் மீது ஒருங்குறி இயல்பாக்கம் நிகழ்த்தப்படும். சமூக ஊடகங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அடர்ந்த மற்றும் சாய்ந்த வரியுருக்கள் போன்று, ஒரு குறிப்பிட்ட பிரெயில் அட்டவணையில் அறியப்படாத, ஆனால், இணக்கமான மாற்றீடு உள்ள வரியுருக்களை எதிர்கொள்ளும்பொழுது இது பயனளிக்கும். ஒருங்குறி இயல்பாக்கத்தின் பிற பயன்கள் இணையான பேச்சு அமைப்பு பிரிவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஒருங்குறி இயல்பாக்கத்தை எங்கிருந்தாயினும் மாற்றியமைக்க, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலுக்குச் சென்று, தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

குவிமைய சூழலளிக்கை

இவ்விருப்பத் தேர்வு, ஒரு பொருள் குவிமையத்திற்குள் வரும்பொழுது, பிரெயில் காட்சியமைவில், எந்தச் சூழலுணர்த்தும் தகவலை என்விடிஏ அளிக்க வேண்டுமெனத் தேர்வுச் செய்ய தங்களை அனுமதிக்கிறது. குவிமையத்தில் இருக்கும் பொருட்களின் அடுக்கமைப்பைத்தான் சூழலுணர்த்தும் தகவல் சுட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பட்டியல் உருப்படியைக் குவிமையத்திற்குள் கொண்டுவரும்பொழுது, இவ்வுருப்படி, ஒரு பட்டியலின் பகுதியாக இருக்கும். அது போலவே, உருப்படியைக் கொண்ட அப்பட்டியல், ஒரு உரையாடல் போன்ற பொருளின் பகுதியாக இருக்கும். என்விடிஏவில் காணப்படும் பொருட்களின் அடுக்கமைப்புக் குறித்து மேலும் அறிய, பொருள் வழிசெலுத்தல் பிரிவைக் காணவும்.

சூழல் மாற்றங்களுக்கு காட்சியமைவை நிரப்புக என்று அமைக்கும்பொழுது, மாறியச் சூழலின் பகுதிக்கு மட்டும், பிரெயில் காட்சியமைவில் எத்தனைச் சூழலுணர்த்தும் தகவல்களையளிக்க இயலுமோ, அத்தனையையும் அளிக்க என்விடிஏ முயல்கிறது. மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டில், ஒரு பட்டியலின் மீது குவிமையத்தை நகர்த்தும்பொழுது, அப்பட்டியலில் காணப்படும் பட்டியல் உருப்படியை, பிரெயில் காட்சியமைவில் என்விடிஏ காட்டுகிறது. மேலும், பிரெயில் காட்சியமைவில் போதுமான இடம் மீதமிருந்தால், அந்தப் பட்டியல் உருப்படி, ஒரு பட்டியலின் பகுதி என்பதைக் காட்ட என்விடிஏ முயல்கிறது. தாங்கள் அதன் பிறகு அம்பு விசைகளைக் கொண்டு பட்டியலினூடே நகர்ந்தால், தொடர்ந்து பட்டியலில் தாங்கள் இருப்பதைத் தாங்கள் அறிகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே, மீதமிருக்கும் பட்டியல் உருப்படிகளைத் தாங்கள் குவிமையத்திற்குள் கொண்டுவரும்பொழுது, குவிமையத்தில் இருக்கும் உருப்படியை மட்டும் காட்சியமைவில் என்விடிஏ காட்டும். தாங்கள் ஒரு பட்டியலில் இருப்பதையும், அப்பட்டியல், ஒரு உரையாடலின் ஒரு பகுதியாக இருப்பதையும் சூழலுணர்த்தும் தகவலைக் கொண்டு அறிய வேண்டுமானால், தாங்கள் பிரெயில் காட்சியமைவை பின்னுருட்ட வேண்டும்.

எப்பொழுதும் காட்சியமைவை நிரப்புக என்று இவ்விருப்பத் தேர்வினை அமைத்தால், இச்சூழலுணர்த்தும் தகவலைத் தாங்கள் முன்னமே கண்டிருக்கிறீர்களா என்பதைக் கருத்தில் கொள்ளாமல், எத்தனைச் சூழலுணர்த்தும் தகவல்களை பிரெயில் காட்சியமைவில் காட்ட இயலுமோ, அத்தனையையும் என்விடிஏ காட்ட முயல்கிறது. எத்தனைத் தகவல்களை அளிக்க இயலுமோ, அத்தனைத் தகவல்களையும் என்விடிஏ பிரெயில் காட்சியமைவில் அளிக்கும் என்பதுதான் இதன் அனுகூலம். ஆனால், பிரெயில் காட்சியமைவில் குவிமையம் துவங்கும் நிலையில் எப்பொழுதும் மாற்றமிருக்கும் என்பது இதன் குறைபாடாக உள்ளது. ஒரு உருப்படியின் துவக்கம் எங்கிருக்கிறது என்பதையறிய தங்களின் விரலைத் தொடர்ந்து நகர்த்த வேண்டியிருக்கும் என்பதால், நீலமான பட்டியல் உருப்படிகளைப் படிப்பதில் இது சிக்கலை ஏற்படுத்தும். என்விடிஏ 2017.2 மற்றும் அதன் முந்தைய பதிப்புகளில் இது என்விடிஏவின் இயல்பான போக்காக இருந்தது.

பின்னுருட்டும்பொழுது மட்டும் சூழலுணர்த்தும் தகவலை காட்டுக என்று இவ்விருப்பத் தேர்வினை அமைத்தால், பிரெயில் காட்சியமைவில் சூழலுணர்த்தும் தகவலை இயல்பில் என்விடிஏ எப்பொழுதும் காட்டுவதில்லை. ஆகவே, மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டில், ஒரு பட்டியல் உருப்படியைத் தாங்கள் குவிமையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். தாங்கள் ஒரு பட்டியலில் இருப்பதையும், அப்பட்டியல், ஒரு உரையாடலின் ஒரு பகுதியாக இருப்பதையும் சூழலுணர்த்தும் தகவலைக் கொண்டு அறிய வேண்டுமானால், தாங்கள் பிரெயில் காட்சியமைவை பின்னுருட்ட வேண்டும்.

குவிமைய சூழலளிக்கையை எங்கிருந்தாயினும் மாற்றியமைக்க, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்டச் சைகையை இணைக்கவும்.

நகர்த்துதலின்பொழுது பேச்சைக் குறுக்கிடுக
. .
விருப்பத் தேர்வுகள் இயல்பிருப்பு (முடுக்கப்பட்டது), முடுக்கப்பட்டது, முடக்கப்பட்டது
இயல்பிருப்பு முடுக்கப்பட்டது

பிரெயில் காட்சியமைவு முன்னுருட்டப்படும்பொழுது, அல்லது பின்னுருட்டப்படும்பொழுது பேச்சு குறுக்கிடப்பட வேண்டுமா என்பதை இவ்விருப்பத் தேர்வு தீர்மானிக்கிறது. அடுத்த/முந்தைய வரிக்கு நகர்த்தும் கட்டளைகள் எப்பொழுதும் பேச்சைக் குறுக்கிடும்.

தொடர்ந்த பேச்சு, பிரெயிலைப் படித்துக் கொண்டிருக்கும்பொழுது கவனச் சிதறலை ஏற்படுத்தலாம். ஆகவே, இவ்விருப்பத் தேர்வு இயல்பில் முடுக்கப்பட்டிருக்கும்.

இவ்விருப்பத் தேர்வினை முடக்கினால், பிரெயிலைப் படித்துக்கொண்டிருக்கும் நேரம், பேச்சும் கேட்கும்.

தெரிவைக் காட்டிடுக
. .
விருப்பத் தேர்வுகள் இயல்பிருப்பு (முடுக்கப்பட்டது), முடுக்கப்பட்டது, முடக்கப்பட்டது
இயல்பிருப்பு முடுக்கப்பட்டது

பிரெயில் காட்சியமைவில் தெரிவுக் காட்டி (புள்ளிகல் 7, 8) காட்டப்படுவதை இவ்வமைப்பு வரையறுக்கிறது. இயல்பில் இவ்வமைப்பு முடுக்கப்பட்டிருப்பதால், தெரிவுக் காட்டி காட்டப்படும். படிக்கும்பொழுது தெரிவுக் காட்டி கவனச் சிதறலை ஏற்படுத்தலாம். இவ்வமைப்பை முடக்குவது, படிப்பனுபவத்தை மேம்படுத்தலாம்.

தெரிவுக் காட்டி காட்டப்படுவதை எங்கிருந்தாயினும் மாற்றியமைக்க, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

பிரெயில் காட்சியமைவைத் தெரிவு செய்க

பிரெயில் காட்சியமைவுத் தெரிவு உரையாடலைத் திறவுக

விசை: என்விடிஏ+கட்டுப்பாடு+a

என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பிரெயில் வகைமையில் இருக்கும் "மாற்றுக..." பொத்தானை அழுத்துவதன் மூலம், பிரெயில் காட்சியமைவைத் தெரிவுச் செய்க உரையாடல் இயக்கப்படும். பிரெயில் வெளியீட்டிற்கு எந்த பிரெயில் காட்சியமைவை என்விடிஏ பயன்படுத்த வேண்டுமென்பதை வரையறுக்க இவ்வுரையாடல் தங்களை அனுமதிக்கிறது. தாங்கள் விரும்பும் பிரெயில் காட்சியமைவைத் தெரிவுச் செய்த பின்னர், 'சரி' பொத்தானை அழுத்தினால், அக்காட்சியமைவை என்விடிஏ ஏற்றும். காட்சியமைவிற்கான இயக்கியை ஏற்றுவதில் பிழையிருந்தால், என்விடிஏ அதை அறிவித்துவிட்டு, முந்தைய காட்சியமைவு ஏதேனும் இருக்குமாயின், அதைத் தொடர்ந்து பயன்படுத்தும்.

பிரெயில் காட்சியமைவு

தங்கள் கணினியில் எந்த பிரெயில் இயக்கிகள் இருக்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, பல விருப்பத் தேர்வுகள், இச்சேர்க்கைப் பெட்டியில் முன்வைக்கப்படும். அம்பு விசைகளைக் கொண்டு, இவ்விருப்பத் தேர்வுகளுக்கிடையே நகரவும்.

ஆதரவளிக்கப்படும் பல பிரெயில் காட்சியமைவுகளை பின்னணியில் தேடிக் கண்டறிய, தன்னியக்கம் விருப்பத் தேர்வு என்விடிஏவை அனுமதிக்கிறது. இந்த விருப்பத் தேர்வு தேர்வாகியிருந்து, ஆதரவளிக்கப்படும் ஒரு காட்சியமைவை ஊடலை, அல்லது யுஎஸ்பி மூலம் இணைக்கப்பட்டிருந்தால், என்விடிஏ அக்காட்சியமைவுடன் தானாக இணையும்.

'பிரெயில் ஏதுமில்லை' என்றால், தாங்கள் பிரெயிலைப் பயன்படுத்துவதில்லை என்று பொருள்.

பிரெயில் காட்சியமைவுகளையும், இவைகளில் எவை பின்னணியில் தானாகக் கண்டறியும் வசதியை ஆதரிக்கின்றன என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, ஆதரவளிக்கப்படும் பிரெயில் காட்சியமைவுகள் பிரிவைக் காணவும்.

தானாகக் கண்டறிவதற்கான காட்சியமைவுகள்

பிரெயில் காட்சியமைவு 'தன்னியக்கம்' என்று அமைக்கப்பட்டிருக்கும்பொழுது, தன்னியக்க செயல்முறையில் ஈடுபடும் காட்சியமைவுகளின் இயக்கிகளை முடுக்கவும், முடக்கவும் இவ்வரிசைப் பட்டியலில் இருக்கும் தேர்வுப் பெட்டிகள் அனுமதிக்கின்றன. தாங்கள் வழமையாகப் பயன்படுத்தாத பிரெயில் காட்சியமைவு இயக்கிகளை விலக்க இது அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, பௌம் இயக்கி மட்டுமே செயல்பட வேண்டிய பிரெயில் காட்சியமைவைத் தாங்கள் பயன்படுத்தினால், பௌம் இயக்கியை மட்டும் முடுக்கிவிட்டு, பிற இயக்கிகளை முடக்கிவைக்கலாம்.

தானாகக் கண்டறிவதை ஆதரிக்கும் எல்லா இயக்கிகளும் இயல்பில் முடுக்கப்பட்டிருக்கும். வருங்கால என்விடிஏ பதிப்பு, அல்லது ஒரு நீட்சிநிரலினால் சேர்க்கப்படும் இயக்கிகளும் இயல்பில் முடுக்கப்படும்.

தாங்கள் பயன்படுத்தும் பிரெயில் காட்சியமைவின் இயக்கி தன்னியக்க கண்டறிதலை ஆதரிக்கிறதா என்பதை, ஆதரிக்கப்படும் பிரெயில் காட்சியமைவுகள் பிரிவில் இருக்கும் அந்த காட்சியமைவிற்கான விளக்கத்தைப் படித்து அறிந்துகொள்ளவும்.

நுழைவாயில்

இவ்விருப்பத் தேர்வு இருக்கும்பட்சத்தில், தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பிரெயில் காட்சியமைவுடன் தொடர்பாடலை மேற்கொள்ள, எந்த நுழைவாயில், அல்லது தொடர்பு பயன்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்க அது உதவும். இது, தங்களின் பிரெயில் காட்சியமைவிற்கான இயன்ற தேர்வுகளைக் கொண்டிருக்கும் சேர்க்கைப் பெட்டியாகும்.

இயல்பில், கணினியில் இருக்கும் நுழைவாயில்களை என்விடிஏ தானாகக்் கண்டறியும். அதாவது, கணினியில் இருக்கக் கூடிய யுஎஸ்பி, அல்லது ஊடலையைக் கண்டறிந்து, அதன் மூலம் பிரெயில் காட்சியமைவுடன் தொடர்பை ஏற்படுத்தும். ஆனால், சில பிரெயில் காட்சியமைவுகளுக்கு, பயன்படுத்தத்தக்க நுழைவாயிலைத் தாங்கள் வெளிப்படையாகத் தேர்வுச் செய்யக் கூடியதாக இருக்கும். தன்னியக்கம், யுஎஸ்பி, ஊடலை ஆகியவைகள் பொதுவான விருப்பத் தேர்வுகளாகும். தன்னியக்கம் என்றால், நுழைவாயிலைத் தானாகக் கண்டறியும் முறைமையை என்விடிஏ பயன்படுத்தும். மேலும், தங்கள் பிரெயில் காட்சியமைவு, மரபுத் தொடர் தொடர்பாடல் நுழைவாயிலுக்கு ஆதரவளிக்கும்பட்சத்தில், அதுவும் ஒரு விருப்பத் தேர்வாக அமையும்.

தங்களின் பிரெயில் காட்சியமைவு, நுழைவாயிலைத் தானாகக் கண்டறியும் வசதியை மட்டும் கொண்டிருந்தால், இவ்விருப்பத் தேர்வு காணப்பட மாட்டாது.

ஆதரவளிக்கப்படும் தொடர்பாடல்கள், நுழைவாயில்கள் குறித்து மேலும் அறிய, ஆதரவளிக்கப்படும் பிரெயில் காட்சியமைவுகள் பகுதியில் காணப்படும் ஆவணத்தைக் காணவும்.

சேக்கா பிரெயில் காட்சியமைவுகளை இணைப்பது போன்று, ஒரே இயக்கியைப் பயன்படுத்தும் பல காட்சியமைவுகளை தங்கள் கணினியுடன் இணைப்பதாக இருந்தால், எந்தக் காட்சியமைவைப் பயன்படுத்த வேண்டுமென்பதை என்விடிஏவிற்கு அறிவுறுத்த இப்போதைக்கு இயலாது என்பதை அருள்கூர்ந்து கவனிக்கவும். ஆகவே, ஒரு உற்பத்தியாளர், அல்லது ஒரு வகை காட்சியமைவை மட்டும் தங்கள் கணினியுடன் ஒரே தருணத்தில் இணைக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

ஒலிதம்

ஒலித அமைப்புகளைத் திறவுக

விசை: என்விடிஏ+கட்டுப்பாடு+u

என்விடிஏ அமைப்புகளில் இருக்கும் ஒலிதம் வகைமை, ஒலி வெளியீட்டின் பல்வேறு சிறப்பியல்புகளை மாற்றியமைக்கும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது.

வெளியீட்டுக் கருவி

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒலிப்பான், எந்த ஒலிக் கருவி வழியே பேச வேண்டும்ென்று என்விடிஏவை அறிவுறுத்த, இச்சேர்க்கைப் பெட்டி உதவுகிறது.

பின்புல ஒலியின் அளவைத் தாழ்த்தும் நிலை

விசை: என்விடிஏ+மாற்றழுத்தி+d

என்விடிஏ பேசிக் கொண்டிருக்கும்பொழுது, அல்லது இயக்கத்தில் இருக்கும் எல்லா நேரமும் பின்புலத்தில் கேட்கும் பிற பயன்பாடுகளின் கேட்பொலிகளின் அளவைத் தாழ்த்த வேண்டுமா என்று தீர்மானிக்க இச்சேர்க்கைப் பெட்டி உதவுகிறது.

என்விடிஏ நிறுவப்பட்டிருக்கும் பொழுதுதான் இவ்விருப்பத் தேர்வு கிடைப்பில் இருக்கும். என்விடிஏவின் கொண்டுசெல்லத்தக்க, மற்றும் தற்காலிகப் படிகளில் பின்புல ஒலியைத் தாழ்த்தும் வசதிக்கு ஆதரவில்லை.

குரல் ஒலியளவை என்விடிஏ ஒலிகளின் அளவு பின்தொடரும்
. .
விருப்பத் தேர்வுகள் முடக்கப்பட்டது, முடுக்கப்பட்டது
இயல்பிருப்பு முடக்கப்பட்டது

இத்தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்தால், தாங்கள் பயன்படுத்தும் குரல் அமைப்பின் ஒலியளவை, என்விடிஏவின் ஒலிகள் மற்றும் சிற்றொலிகளுக்கான ஒலியளவு பின்தொடரும். குரல் ஒலியளவைத் தாங்கள் தாழ்த்தினால், ஒலிகளின் ஒலியளவும் தாழ்த்தப்படும். அதுபோலவே, குரல் ஒலியளவைத் தாங்கள் உயர்த்தினால், ஒலிகளின் ஒலியளவும் உயர்த்தப்படும். மேம்பட்ட அமைப்புகளில், ஒலி வெளியீட்டிற்கு வாஸாப்பி முடக்கப்பட்ட நிலையில் என்விடிஏவைத் தாங்கள் துவக்கியிருந்தால், இவ்விருப்பத் தேர்வு கிடைப்பிலிருக்காது.

என்விடிஏ ஒலிகளின் அளவு

என்விடிஏவின் ஒலிகள், சிற்றொலிகளின் ஒலியளவை அமைக்க இவ்வழுக்கி தங்களை அனுமதிக்கிறது. 'குரல் ஒலியளவை என்விடிஏவின் ஒலிகள் பின்தொடரும்' விருப்பத் தேர்வு முடக்கப்பட்டிருந்தால் மட்டுமே இவ்வமைப்பு செயலிற்கு வரும். மேம்பட்ட அமைப்புகளில், ஒலி வெளியீட்டிற்கு வாஸாப்பி முடக்கப்பட்ட நிலையில் என்விடிஏவைத் தாங்கள் துவக்கியிருந்தால், இவ்விருப்பத் தேர்வு கிடைப்பிலிருக்காது.

ஒலிப் பிளவு

தலையணி ஒலிவழங்கி மற்றும் ஒலிப்பெருக்கி போன்ற வெளியீட்டுக் கருவிகளின் பிரியோசை வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஒலிப் பிளவு அனுமதிக்கிறது. என்விடிஏவின் பேச்சு ஒரு அலைத்தடத்திலும் எ.கா. இடது, பிற பயன்பாடுகளின் ஒலிகள் மற்றொரு அலைத்தடத்திலும் எ.கா. வலது ஒலிக்கச் செய்ய ஒலிப் பிளவினால் இயலும். ஒலிப் பிளவு இயல்பில் முடக்கப்பட்டிருக்கும். பல ஒலிப் பிளவு முறைகளுக்கு ஊடாக சுழல ஒரு சைகை அனுமதிக்கிறது

பெயர் விசை விளக்கம்
ஒலிப் பிளவு முறைகளுக்கு ஊடாகச் சுழலுக என்விடிஏ+நிலைமாற்றி+s ஒலிப் பிளவு முறைகளுக்கு ஊடாகச் சுழல்கிறது.

இயல்பில், இக்கட்டளை பின்வரும் முறைகளுக்கு ஊடாகச் சுழலும்:

என்விடிஏ அமைப்பு சேர்க்கைப் பெட்டியில் இன்னும் பல மேம்பட்ட ஒலிப் பிளவு முறைகள் உள்ளன. இம்முறைகளில், "இரு அலைத்தடங்களிலும் என்விடிஏ" மற்றும் "இரு அலைத்தடங்களிலும் பயன்பாடுகள்" என்கிற முறை, எல்லா ஒலிகளையும் இரு அலைத்தடங்களிலும் ஒலிக்கக் கட்டாயப்படுத்தப்படும். அலைத்தடங்களின் ஒலியளவில் பிற ஒலிகளின் செயலாக்கம் குறுக்கிடும்பட்சத்தில், ஒலிப் பிளவு முடக்கப்பட்ட முறை யிலிருந்து இம்முறை வேறுபடலாம்.

ஒலிப் பிளவு ஒலிக் களவையாகச் செயல்படாது என்பதைக் கவனிக்கவும். எடுத்துக்காட்டாக, என்விடிஏ இடப்புறமாகவும், பிற பயன்பாடுகள் வலப்புறமாகவும் என்று ஒலிப் பிளவு அமைக்கப்பட்ட நிலையில் ஒரு பயன்பாடு பிரியோசையை இசைத்தால், அந்தப் பிரியோசையின் வலப்புற ஒலித்தடத்தை மட்டும்தான் தாங்கள் கேட்க இயலும், இடப்புற ஒலித்தடம் அமைதியாக்கப்பட்டிருக்கும்.

மேம்பட்ட அமைப்புகளில், ஒலி வெளியீட்டிற்கு வாஸாப்பி முடக்கப்பட்ட நிலையில் என்விடிஏவைத் தாங்கள் துவக்கியிருந்தால், இவ்விருப்பத் தேர்வு கிடைப்பிலிருக்காது.

என்விடிஏ செயலிழந்தால், அது பயன்பாட்டு ஒலிகளின் ஒலியளவை மீட்டெடுக்க இயலாது என்பதோடு, அந்தப் பயன்பாடுகள், ஒரு அலைத்தடத்தில் மட்டுமே ஒலியை வெளியிடும் என்பதைக் கவனிக்கவும். இதை சரிசெய்ய, என்விடிஏவை மறுதுவக்கி, "இரு அலைத்தடங்களிலும் என்விடிஏ" மற்றும் "இரு அலைத்தடங்களிலும் பயன்பாடுகள்" என்கிற முறையைத் தெரிவு செய்யவும்.

ஒலிப் பிளவு முறைகளைத் தனிப்பயனாக்குதல்

என்விடிஏ+நிலைமாற்றி+s விசையைப் பயன்படுத்தி ஒலிப் பிளவு முறைகளுக்கிடையே சுழலும்பொழுது, எந்தெந்த முறைகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென்பதை வரையறுக்க இந்த தேர்வுப் பட்டியல் அனுமதிக்கிறது. தேர்வு செய்யப்படாத முறைகள் விலக்கப்படும். இயல்பில், மூன்று முறைகள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கும்.

குறைந்தபட்சம் ஒரு முறையையாவது தேர்வு செய்ய வேண்டுமென்பதைக் கவனிக்கவும். மேம்பட்ட அமைப்புகளில், ஒலி வெளியீட்டிற்கு வாஸாப்பி முடக்கப்பட்ட நிலையில் என்விடிஏவைத் தாங்கள் துவக்கியிருந்தால், இவ்விருப்பத் தேர்வு கிடைப்பிலிருக்காது.

பேச்சுக்குப் பிறகு ஒலிதக் கருவியை விழிப்புடன் வைத்திருக்க வேண்டிய நேரம்

பேச்சு முடிந்த பிறகு எத்தனை நேரம் ஒலிதக் கருவி விழிப்புடன் வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதை இந்த தொகுகளம் வரையறுக்கிறது. சொற்களின் பகுதிகள் கைவிடப்படுவது போன்ற சில பேச்சுக் குறைபாடுகளைத் தவிர்க்க என்விடிஏவை இது அனுமதிக்கிறது. ஒலிதக் கருவிகள், குறிப்பாக ஊடலை மற்றும் இழையிலாக் கருவிகள் காத்திருப்பு நிலைக்கு செல்வதால் இது ஏற்படலாம். சிட்ரிக்ஸ் மெய்நிகர் மேசைத்தளம் போன்ற மெய்நிகர் கருவிகளில், அல்லது சில மடிக்கணினிகளில் என்விடிஏவைப் பயன்படுத்தும்பொழுது இது பயனுள்ளதாக இருக்கும்.

குறைந்த மதிப்புகள், கருவியை காத்திருப்பு நிலைக்கு விரைவில் இட்டுச் செல்லும் என்பதால், ஒலி வெளியீடு அடிக்கடி துண்டிக்கப்பட்டு, தொடர்ந்து வரும் பேச்சின் துவக்கம் வெட்டப்படும். மதிப்பை மிகவும் உயர்த்தி அமைத்தால், ஒலி வெளியீடு இல்லாத நிலையிலும் ஒலிக் கருவிகள் நெடுநேரம் இயக்கத்தில் இருக்குமென்பதால், ஒலிக் கருவிகளின் மின்கலன்கள் மின்சாரத்தை விரைவில் இழக்கும்.

இவ்வசதியை முடக்க, நேரத்தை சுழியம் என்று அமைக்கலாம்.

பார்வை

என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பார்வை வகைமையில் பார்வைக்கான துணைக் கருவிகளை முடுக்கலாம், முடக்கலாம், மற்றும் அமைவடிவமாக்கலாம்.

இவ்வகைமையில் கிடைப்பிலிருக்கும் விருப்பத் தேர்வுகளை என்விடிஏவின் நீட்சிநிரல்களைக் கொண்டு நீட்டிக்கலாம். இயல்பில், பின்வரும் விருப்பத் தேர்வுகளை இவ்வகைமை கொண்டுள்ளது:

பார்வைக்குத் துலக்கமாக்குக

பார்வைத் துலக்கம் குழுவாக்கத்தில் காணப்படும் பின்வரும் தேர்வுப் பெட்டிகள், பார்வைத் துலக்கத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துகிறது:

முதலில் காணப்படும் 'துலக்கமாக்குக' தேர்வுப் பெட்டியின் தேர்வு நிலை, அதை தொடர்ந்து வரும் பிற மூன்று தேர்வுப் பெட்டிகளின் தேர்வு நிலையை தகுந்தவாறு மாற்றியமைக்கும் என்பதை கவனிக்கவும். ஆகவே, தேர்வாகாத நிலையில் இருக்கும் 'துலக்கமாக்குக' தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்தால், பிற மூன்று தேர்வுப் பெட்டிகளும் தானாகவே தேர்வுச் செய்யப்படும். 'கணினிக் குவிமையத்தைத் துலக்கமாக்குக' தேர்வுப் பெட்டியை மட்டும் தேர்வுச் செய்துவிட்டு, 'வழிசெலுத்திப் பொருளைத் துலக்கமாக்குக', 'உலாவும் நிலைச் சுட்டியைத் துலக்கமாக்குக' ஆகிய பிற இரு தேர்வுப் பெட்டிகளை தேர்வுச் செய்யாமல் விட்டிருந்தால், 'துலக்கமாக்குக' தேர்வுப் பெட்டி, பாதி தேர்வான நிலையில் இருக்கும்.

திரைச்சீலை

'திரையை உடனே கருமையாக்குக' என்கிற தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்வதன் மூலம், திரைச்சீலையை இடலாம். செயற்படுத்திய பிறகு தங்களின் திரை கருமையாக்கப்படும் என்கிற எச்சரிக்கை காட்டப்படும். 'ஆம்' பொத்தானை அழுத்தி தொடர்வதற்கு முன், பேச்சு மற்றும் பிரெயில் காட்சியமைவு இயக்கத்தில் இருப்பதையும், திரையைப் பயன்படுத்தாமல் கணினியை தங்களால் கட்டுப்படுத்த இயலுமென்பதையும் உறுதிசெய்துகொள்ளவும். உறுதிசெய்துகொண்ட பின்னர், திரைச்சீலையை இட, 'ஆம்' பொத்தானை அழுத்தவும். திரைச்சீலையை இட தாங்கள் விறும்பவில்லையென்றால், 'இல்லை' பொத்தானை அழுத்தவும். இந்த எச்சரிக்கைச் செய்தியை ஒவ்வொரு முறையும் தாங்கள் காண விரும்பவில்லையென்றால், இவ்வுரையாடல் பெட்டியிலேயே கொடுக்கப்பட்டிருக்கும் வசதியைக் கொண்டு இதன் தன்மையை மாற்றியமைக்கலாம். 'திரையை உடனே கருமையாக்குக' என்கிற தேர்வுப் பெட்டிக்கு அருகே இருக்கும் 'திரைச்சீலையை இடும்பொழுது எப்பொழுதும் எச்சரிக்கவும்' என்கிற தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்வதன் மூலம், இந்த எச்சரிக்கைச் செய்தியை மீண்டும் கொண்டுவரலாம்.

இயல்பில், திரைச்சீலையை இடும்பொழுதும், விலக்கும்பொழுதும் ஒலிகள் எழுப்பப்படும். இத்தன்மையை மாற்றியமைக்க, 'திரைச்சீலையை இடும்பொழுதும், விலக்கும்பொழுதும் ஒலியை எழுப்புக' என்கிற தேர்வுப் பெட்டியின் தேர்வினை நீக்கிவிடவும்.

மூன்றாம் தரப்பு பார்வைத் துணைக் கருவிகளுக்கான அமைப்புகள்

கூடுதல் பார்வைத் துலக்க ஊக்கிகளை என்விடிஏ நீட்சிநிரல்களில் வழங்கலாம். இவ்வூக்கிகள், மாற்றியமைக்கும் அமைப்புகளைக் கொண்டிருந்தால், இவ்வமைப்பு வகைமையில் அவை தனித் தனி குழுக்களாகக் காட்டப்படும். ஒவ்வொரு ஊக்கிக்கான ஆதரவளிக்கப்படும் அமைப்புகளைத் தெரிந்துகொள்ள, அந்தந்த ஊக்கிக்கான ஆவணத்தைக் காணவும்.

விசைப்பலகை

விசைப்பலகை அமைப்புகளைத் திறவுக

விசை: என்விடிே+கட்டுப்பாடு+k

விசைப் பலகையைப் பயன்படுத்தி தட்டச்சிடும்பொழுது, என்விடிஏ எவ்வாறு செயல்பட வேண்டுமென்பதை வரையறுக்க, என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் விசைப் பலகை வகைமை அனுமதிக்கிறது. இவ்வமைப்புகள் வகைமை, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

விசைப்பலகைத் தளவமைப்பு

என்விடிஏ, எந்த விசைப்பலகைத் தளவமைப்பைப் பயன்படுத்த வேண்டுமென்று தீர்மானிக்க, இச்சேர்க்கைப் பெட்டி உதவுகிறது. தற்போது, மேசைக்கணினி, மடிக்கணினி ஆகிய இரு தளவமைப்புகளைக் கொண்டு என்விடிஏ வெளிவருகிறது.

என்விடிஏ மாற்றியமைப்பி விசைகளைத் தெரிவுச் செய்க

எந்தெந்த விசைகளை என்விடிஏ மாற்றியமைப்பி விசைகளாகப் பயன்படுத்தலாம் என்பதை இப்பட்டியலிலுள்ள தேர்வுப் பெட்டிகள் வரையறுக்கின்றன. பின்வரும் விசைகளைத் தேர்வுச் செய்யலாம்:

எந்தவொரு விசையும் என்விடிஏ விசையாக தேர்ந்தெடுக்கப்படாதிருந்தால், பல என்விடிஏ கட்டளைகளை அணுக இயலாமல் போகலாம். ஆகவே, குறைந்தபட்சம் ஒரு விசையாவது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

தட்டச்சிடப்படும் வரியுருக்களைப் பேசுக

விசை: என்விடிஏ+2

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், தட்டச்சிடப்படும் எல்லா வரியுருக்களையும் என்விடிஏ அறிவிக்கும்.

தட்டச்சிடப்படும் சொற்களைப் பேசுக

விசை: என்விடிஏ+3

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், தட்டச்சிடப்படும் எல்லாச் சொற்களையும் என்விடிஏ அறிவிக்கும்.

வரியுருக்கள் தட்டச்சிடப்படும்பொழுது பேச்சைக் குறுக்கிடுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், ஒரு வரியுரு ஒவ்வொரு முறையும் தட்டச்சிடப்படும்பொழுது, பேச்சு குறுக்கிடப்படும். இயல்பில், இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்கும்.

உள்ளிடு விசை அழுத்தப்படும்பொழுது பேச்சைக் குறுக்கிடுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், உள்ளிடு விசை ஒவ்வொரு முறையும் அழுத்தப்படும்பொழுது, பேச்சு குறுக்கிடப்படும். இயல்பில், இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்கும்.

எல்லாம் படிக்கும்பொழுது மேலோட்டப் படித்தலை அனுமதித்திடுக

இயல்பில் தேர்வாகாதிருக்கும் இத்தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்தால், உலாவும் நிலையில் பயன்படுத்தப்படும் ஒற்றை எழுத்து கட்டளைகளை, அல்லது அடுத்த வரி, அடுத்த பத்திக்குச் செல்ல பயன்படுத்தப்படும் கட்டளைகளை இயக்கும் பொழுது, எல்லாம் படித்தலை நிறுத்தாமல், புதிய நிலைக்குத் தாவி, எல்லாம் படித்தலைத் தொடரும்.

முகப்பெழுத்துப் பூட்டப்பட்டிருக்கும்பொழுது, கீழ்தட்டு விசையை அழுத்தினால், சிற்றொலியை எழுப்புக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், முகப்பெழுத்துப் பூட்டு இடப்பட்டிருக்கும் நிலையில், முகப்பெழுத்துகளைத் தட்டச்சிட மாற்றழுத்தி விசையை அழுத்தினால், என்விடிஏ சிற்றொலியை எழுப்பும். முகப்பெழுத்துப் பூட்டு இடப்பட்டிருக்கும்பொழுது, முகப்பெழுத்தைத் தட்டச்சிட, மாற்றழுத்தி விசையை அழுத்தத் தேவையில்லை. முகப்பெழுத்துப் பூட்டு இடப்பட்டிருக்கிறது என்பதை அறியாததுதான், இத்தவறுக்குக் காரணம். ஆகவே, இதுபோன்று தவறு செய்யும் தருணங்களில், என்விடிஏ எச்சரிப்பது மிகவும் தேவையானதாகும்.

கட்டளை விசைகளைப் பேசுக

விசை: என்விடிஏ+4

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், கட்டுப்பாடு விசையுடன் அழுத்தப்படும் கட்டளை விசைகள் உட்பட, வரியுருக்கள் அல்லாத விசை உள்ளீடுகளும் அறிவிக்கப்படும்.

தட்டச்சிடும்பொழுது ஏற்படும் எழுத்துப் பிழைகளை அறிவிக்க ஒலியை எழுப்புக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், தாங்கள் தட்டச்சிட்டிருக்கும் சொல்லில் எழுத்துப் பிழை இருப்பின், அதை அறிவிக்க வண்டொலி போன்றதொரு குறுவொலி எழுப்பப்்படும். இவ்விருப்பத் தேர்வினைப் பயன்படுத்த, என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் ஆவண வடிவூட்ட அமைப்புகளில் இருக்கும் எழுத்துப் பிழைகளை அறிவித்திடுக என்கிற தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்க வேண்டும்.

பிற பயன்பாடுகளின் விசைகளைக் கையாள்க

திரை விசைப் பலகை, பேச்சறியும் மென்பொருள் போன்ற பிற பயன்பாடுகளின் விசை உள்ளீடுகளை என்விடிஏ கையாள வேண்டுமா என்பதை பயனர்கள் கட்டுப்படுத்த இத்தேர்வுப் பெட்டி அனுமதிக்கிறது. இயல்பில், இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருப்பினும், வியட்னாமிய மொழியில் பயன்படுத்தப்படும் யுனிகீ (UniKey) உள்ளீடு போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள், தவறான உள்ளீடுகளைத் தவிர்க்க, இத்தேர்வினை நீக்க விரும்புவார்கள்.

சொடுக்கி

சொடுக்கி அமைப்புகளைத் திறவுக

விசை: என்விடிே+கட்டுப்பாடு+m

என்விடிஏ அமைப்புகளில் காணப்படும் சொடுக்கி வகைமை, சொடுக்கியைப் பின்தொடருதல், கேட்பொலி இசைவுகளை இயக்குதல் மற்றும் பிற சொடுக்கி பயன்பாட்டு விருப்பத் தேர்வுகளை அமைக்க என்விடிஏவை அனுமதிக்கிறது. இவ்வகைமை, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

சொடுக்கியின் உருவ மாற்றங்களை அறிவித்திடுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், சொடுக்கியின் குறிமுள், ஒவ்வொரு முறை உருவம் மாறும்பொழுதும், என்விடிஏ அறிவிக்கும். சாளரத்தில், தொகுக்கப்படும் வகையில் ஏதேனும் உள்ளதா, அல்லது ஏதேனும் ஏற்றப்படுகிறதா போன்ற தகவல்களை அறிவிக்க, சொடுக்கியின் உருவம் மாறும்.

சொடுக்கியைப் பின்தொடர்க

விசை: என்விடிஏ+m

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், கணினித் திரையில், சொடுக்கியின் குறிமுள்ளை நகர்த்தும்பொழுது, குறிமுள்ளின் கீழிருக்கும் உரை படிக்கப்படும். பொருள் வழிசெலுத்தலைப் பயன்படுத்தாமல், சொடுக்கியைப் பயன்படுத்தும்பொழுது, இது உதவும்.

உரைத் தொகுதியின் துல்லியம்

சொடுக்கியின் பின்தொடருதல் இயக்கத்தில் இருக்கும்பொழுது, இவ்விருப்பத் தேர்வு, எவ்வளவு துல்லியத்துடன் உரை படிக்கப்பட வேண்டுமென்று வரையறுக்க உதவுகிறது. வரியுரு, சொல், வரி, பத்தி ஆகியவைகளே அவ்விருப்பத் தேர்வுகளாகும்.

உரைத் தொகுதியின் துல்லியத்தை எங்கிருந்தாயினும் மாற்றியமைக்க, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

ஒரு பொருளின் ஊடாக சொடுக்கி நுழையும்பொழுது அப்பொருளை அறிவித்திடுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், பொருட்களின் ஊடாக சொடுக்கி நகரும்பொழுது, அப்பொருட்களின் தகவலை அறிவிக்கும். பொருட்களின் பங்கு (வகை), நிலைகள் (தேர்வானது/அழுத்தப்பட்டது), பணிக்களங்களின் சந்திநிலை போன்றவை இதில் உள்ளடங்கும். பொருளளிக்கை, ஆவண வடிவூட்டம் போன்ற வகைமைகளில் காணப்படும் அமைப்புகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து, பொருட்களின் சில தகவல்கள் அறிவிக்கப்படும் என்பதைக் கவனிக்கவும்.

சொடுக்கி நகரும்பொழுது கேட்பொலி இசைவுகளை இயக்குக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், சொடுக்கியின் குறிமுள் நகரும்பொழுது, என்விடிஏ சிற்றொலிகளை எழுப்பும். திரையின் பரிமாணத்தை ஒப்புநோக்கி, குறிமுள் எங்கிருக்கிறது என்றறிய இது உதவும். சொடுக்கியின் குறிமுள், திரையில் எத்தனைக்கு எத்தனை உயர்ந்த நிலையில் உள்ளதோ, அத்தனைக்கு அத்தனை, சிற்றொலிகளின் சுருதி உயர்வாக இருக்கும். பிரியோசை ஒலிவழங்கி, அல்லது தலையணிக் கேட்பொறியை பயன்படுத்தும்பட்சத்தில், சொடுக்கியின் குறிமுள், திரையில் எத்தனைக்கு எத்தனை இடமாகவும், வலமாகவும் இருக்கிறதோ, அத்தனைக்கு அத்தனை, ஒலி, இடமாகவும், வலமாகவும் ஒலிக்கும்.

கேட்பொலி இசைவுகலின் ஒலியளவை ஒளிர்வுக் கட்டுப்படுத்துகிறது

சொடுக்கி நகரும்பொழுது கேட்பொலி இசைவுகளை இயக்குக தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்து, இத்தேர்வுப் பெட்டியையும் தேர்வுச் செய்தால், குறிமுள்ளின் கீழிருக்கும் திரையின் ஒளிர்வு, சிற்றொலிகளின் ஒலியளவைக் கட்டுப்படுத்தும். இயல்பில், இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்காது.

பிற பயன்பாடுகளின் சொடுக்கி உள்ளீட்டினைப் புறந்தள்ளுக

பிற பயன்பாடுகளின் சொடுக்கி நகர்வுகள், சொடுக்கிப் பொத்தான்கள் அழுத்தப்படுதல் போன்ற சொடுக்கியின் செயல்களை புறந்தள்ள இத்தேர்வுப் பெட்டி அனுமதிக்கிறது. டீம் வியூவர் மற்றும் பிற தொலைக் கட்டுப்பாட்டு மென்பொருட்களில் சொடுக்கியின் செயல்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இயல்பில், இத்தேர்வுப் பெட்டி தேர்வாகியிருக்காது. இத்தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்தால், 'சொடுக்கியைப் பின்தொடர்க' தேர்வுப் பெட்டி தேர்வாகியிருப்பினும், பிரிதொரு பயன்பாடு சொடுக்கியை நகர்த்தும்பொழுது, சொடுக்கியின் கீழ் என்ன இருக்கிறது என்பதை என்விடிஏ அறிவிக்காது.

தொட்டளவளாவுதல்

தொடு வசதி கொண்ட கணினிகளில் மட்டும் காணப்படும் இவ்வகைமை அமைப்புகள் உரையாடல், தொடுதிரைகளுடன் என்விடிஏ எவ்வாறு அளவளாவ வேண்டுமென்பதை அமைவடிவமாக்க தங்களை அனுமதிக்கிறது. இவ்வகைமை, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

தொட்டளவளாவலுக்கான ஆதரவினை முடுக்குக

இத்தேர்வுப் பெட்டி, என்விடிஏவின் தொட்டளவளாவலுக்கான ஆதரவினை முடுக்குகிறது. முடுக்கப்பட்ட நிலையில், ஒரு தொடுதிரைக் கருவியைப் பயன்படுத்தி, தங்களின் விரல்களைக் கொண்டு, திரையில் காணப்படும் உருப்படிகளுக்குச் சென்று, அவைகளுடன் அளவளாவலாம். இவ்வசதி முடக்கப்பட்டால், என்விடிஏ இயக்கத்தில் இல்லாத நிலையில் இருப்பதுபோல் , தொட்டளவளாவலுக்கான ஆதரவு முடக்கப்படும். என்விடிஏ+கட்டுப்பாடு+நிலைமாற்றி+t விசையைப் பயன்படுத்தி இவ்வமைப்பினை மாற்றியமைக்கலாம்.

தொடு தட்டச்சு நிலை

தொடு விசைப்பலகையைப் பயன்படுத்தி உரைகளை எவ்வாறு உள்ளிட விரும்புகிறீர்கள் என்பதை வரையறுக்க இத்தேர்வுப் பெட்டி தங்களை அனுமதிக்கிறது. இத்தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்தால், தொடு விசைப்பலகையில் தாங்கள் உள்ளிட விரும்பும் விசையின் மீதிருந்து விரலை விலக்கினால், அவ்விசை உள்ளிடப்படும். இத்தேர்வுப் பெட்டி தேர்வாகாதிருந்தால், தொடு விசைப்பலகையில் தாங்கள் உள்ளிட விரும்பும் எழுத்தினை உள்ளிட, அவ்வெழுத்தின் விசையை இரு முறை தட்ட வேண்டும்.

சீராய்வுச் சுட்டி

என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் சீராய்வுச் சுட்டி வகைமை, என்விடிஏவின் சீராய்வுச் சுட்டியின் செயல்பாட்டினை அமைவடிவமாக்கப் பயன்படுகிறது. இவ்வகைமை, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

கணினிக் குவிமையத்தைப் பின்தொடர்க

விசை: என்விடிஏ+7

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், கணினிக் குவிமையத்திலிருக்கும் பொருளின் மீது சீராய்வுச் சுட்டியும் வைக்கப்படும். குவிமையத்தின் பொருள் மாறும்பொழுதெல்லாம், சீராய்வுச் சுட்டியும் உடன் நகரும்.

கணினிச் சுட்டியைப் பின்தொடர்க

விசை: என்விடிஏ+6

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், கணினிச் சுட்டி இருக்குமிடத்தில் சீராய்வுச் சுட்டியும் வைக்கப்படும். கணினிச் சுட்டி நகரும்பொழுது, சீராய்வுச் சுட்டியும் உடன் நகரும்.

சொடுக்கியின் சுட்டியைப் பின்தொடர்க

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், சீராய்வுச் சுட்டி, சொடுக்கியின் குறிமுள்ளைப் பின்தொடரும்.

எளிய சீராய்வு நிலை

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், பொருட்களின் அடுக்குகளில் இருக்கும் தென்படாத பொருட்கள், தளவமைப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் போன்ற பயனர்களுக்குத் தேவைப்படாத பொருட்களை என்விடிஏ வடிகட்டி விலக்கும்.

எளிய சீராய்வு நிலையை எங்கிருந்தாயினும் மாற்றியமைக்க, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

பொருளளிக்கை

பொருளளிக்கை அமைப்புகளைத் திறவுக

விசை: என்விடிஏ+கட்டுப்பாடு+o

என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பொருளளிக்கை வகைமை, பொருளின் நிலை, அதன் விளக்கம் போன்று கட்டுப்பாடுகள் குறித்து எந்த அளவு என்விடிஏ தகவலை அளிக்க வேண்டுமென்பதை வரையறுக்க பயன்படுகிறது. இவ்விருப்பத் தேர்வுகள் உலாவு நிலைக்குப் பொருந்தாது. குவிமைய அறிவித்தலுக்கும், என்விடிஏவின் பொருள் வழிசெலுத்தலுக்கும் இவ்விருப்பத் தேர்வுகள் பொருந்தும், ஆனால், உலாவும் நிலையில் இருப்பது போன்ற உரையின் உள்ளடக்கத்தின் படித்தலுக்குப் பொருந்தாது. இவ்வகைமை, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

கருவிக் குறிப்புகளை அறிவித்திடுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், கருவிக் குறிப்புகள் தோன்றும்பொழுது, அவைகளைப் படிக்கும். பல சாளரங்கள், கட்டுப்பாடுகள் மீது சொடுக்கியின் குறிமுள், அல்லது குவிமையத்தை நகர்த்தும்பொழுது, அவை ஒரு சிறுத் தகவலை, அல்லது கருவிக் குறிப்பினைக் காண்பிக்கும்.

அறிவிக்கைகளை அறிவித்திடுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், திரைகளில் தோன்றும் உதவிக் குமிழிகளையும், குமிழ் அறிவிக்கைகளையும் அறிவிக்கும்.

பொருளின் குறுக்கு விசைகளை அறிவித்திடுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், ஒரு பொருளின் மீது நகரும்பொழுது, அப்பொருளுக்கான குறுக்கு விசை ஏதுமிருந்தால், என்விடிஏ அதை அறிவிக்கும். எடுத்துக்காட்டாக, கிடநீளப் பட்டியலில் இருக்கும் 'ஃபைல்' உருப்படி, நிலைமாற்றி+f என்கிற குறுக்கு விசையைக் கொண்டிருக்கும்.

பொருள் நிலையின் தகவலை அறிவித்திடுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், பொருள் வழிசெலுத்தியுடன் நகரும்பொழுது, ஒரு பொருளின் நிலையை அறிவிக்கும். எடுத்துக்காட்டாக, வரிசைப் பட்டியலில், ஒரு உருப்படியின் நிலையை 4ல் 1 என்று அறிவிப்பதைக் கூறலாம்.

பொருள் நிலையின் தகவல் இல்லாதபொழுது, அதை ஊகித்திடுக

'பொருள் நிலையின் தகவலை அறிவித்திடுக' தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்து, சில கட்டுப்பாடுகளில் பொருளின் நிலை இல்லாதபொழுது, இவ்விருப்பத் தேர்வு அதை ஊகிக்கும்.

இவ்வசதி, பட்டியல், கருவிப்பட்டை போன்ற பல கட்டுப்பாடுகளில் செயற்பட்டாலும், அறிவிக்கப்படும் பொருள் நிலையின் தகவல் ஓரளவு துல்லியமற்று இருக்கும்.

பொருள் விளக்கங்களை அறிவித்திடுக

பொருட்களின் மீது என்விடிஏ நகரும்பொழுது, அப்பொருட்களின் விளக்கத்தை என்விடிஏ அறிவிக்கவேண்டாமென்று தாங்கள் கருதினால், இத்தேர்வுப் பெட்டியின் தேர்வை நீக்கிவிடவும். தேடு களத்தில் தட்டச்சிட்டவுடன் தோன்றும் பரிந்துரைகள், தோன்றும் உரையாடல் பெட்டியின் உள்ளடக்கங்கள் ஆகியவை படிக்கப்படத் தேவையில்லை எனக் கருதும் தருணங்களை எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.

முன்னேற்றப் பட்டையின் வெளியீடு

விசை: என்விடிஏ+u

இவ்விருப்பத் தேர்வு, முன்னேற்றப் பட்டையின் இற்றாக்கங்களை எவ்வாறு அறிவிக்க வேண்டுமென்று கட்டுப்படுத்துகிறது.

இது, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டிருக்கிறது:

பின்னணி முன்னேற்றப்பட்டைகளின் இயக்கத்தை அறிவித்திடுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், திரையின் முன்னணியில் இல்லாத முன்னேற்றப் பட்டைகளின் இற்றாக்கங்களை அறிவிக்கும். முன்னேற்றப் பட்டையைக் கொண்டுள்ள ஒரு சாளரத்தைத் தாங்கள் குறுக்க, அல்லது விட்டு விலக நேர்ந்தால், என்விடிஏ அச்சாளரத்தை கவனத்தில் வைத்துக் கொண்டு, முன்னேற்றப் பட்டையின் இற்றாக்கங்களை அறிவிக்கும்.

இயங்குநிலை உள்ளடக்க மாற்றங்களை அறிவித்திடுக

விசை: என்விடிஏ+5

முனையம், அரட்டை நிரலிகளின் வரலாறு போன்ற குறிப்பிட்ட பொருட்களில் தோன்றும் புதிய உள்ளடக்கங்களை என்விடிஏ பேசுவதை முடுக்குகிறது, அல்லது முடக்குகிறது.

தன்னியக்க எடுத்துரைகள் தோன்றும்பொழுது ஒலியை எழுப்புக

தன்னியக்க எடுத்துரைகள் தோன்றும்பொழுது, ஒலியை எழுப்பும் வசதியை முடுக்குகிறது, அல்லது முடக்குகிறது. இவ்வசதி முடுக்கப்பட்டிருந்தால், தன்னியக்க எடுத்துரைகள் தோன்றும்பொழுது, என்விடிஏ ஒலியை எழுப்பும். சில ஆவணங்களிலும், தொகு களங்கலிலும் உரை தட்டச்சிடப்படும்பொழுது, பட்டியலிடப்பட்டு எடுத்துரைக்கப்படும் உரைகளே தன்னியக்க எடுத்துரைகளாகும். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் விஸ்டா, அல்லது அதற்கும் பிறகான இயக்கமுறைமைகளில் காணப்படும் துவக்குப் பட்டியலின் 'தேடுக' களத்தில் தட்டச்சிடும்பொழுது, தட்டச்சிடப்பட்டுள்ள உரைக்கேற்ற வண்ணம் எடுத்துரைகள் பட்டியலிடப்படும். விண்டோஸ் 10 பயன்பாடுகளில் காணப்படும் 'தேடுக' களங்கள் போன்ற சில தொகு களங்களில் தாங்கள் தட்டச்சிடும்பொழுது, சில எடுத்துரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன என்பதை என்விடிஏ தங்களுக்கு அறிவிக்கும். தொகு களங்களைவிட்டுத் தாங்கள் நகர்ந்து செல்லும்பொழுது, தன்னியக்க எடுத்துரைகளின் பட்டியல் மூடிக்கொள்வதோடு, சில களங்களில் இது நிகழ்வதையும் என்விடிஏ தங்களுக்கு அறிவிக்கும்.

உள்ளீடு இயற்றல்

ஐ.எம்.இ., அல்லது உரைச் சேவை உள்ளீடு முறையைக் கொண்டு ஆசிய எழுத்துகளை உள்ளீடு செய்யும்பொழுது, என்விடிஏ இவ்வுள்ளீடுகளை எவ்வாறு அறிவிக்கிறது எந்பதனை உள்ளீடு இயற்றல் வகைமை கட்டுப்படுத்துகிறது. உள்ளீடு முறைகளின் சிறப்புக்கூறுகளும், தகவல்களை அவைகள் அறிவிக்கும் முறையும் மிகவும் வேறுபடுவதால், சிறப்பான தட்டச்சு அனுபவத்தைப் பெற, அனேகமாக ஒவ்வொரு உள்ளீடு முறைக்கான விருப்பத்தேர்வுகளையும் தனித் தனியே அமைவடிவமாக்க வேண்டியிருக்கும் என்பதை கவனிக்கவும்.

இருக்கும் எல்லாத் தேர்வுருக்களையும் தானாக அறிவித்திடுக

இயல்பில் தேர்வாகியிருக்கும் இத்தேர்வுப் பெட்டி, ஒரு தேர்வுருக்கள் உரையாடல் பெட்டித் தோன்றும்பொழுது, அல்லது அதன் பக்கம் மாற்றப்படும்பொழுது, பார்வையில் இருக்கும் எல்லாத் தேர்வுருக்களையும் தானாக அறிவிக்க வேண்டுமா என்று தீர்மானிக்க உதவுகிறது. இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், புதிய சீன சான்ஜாய், பாஷ்யமி போன்ற வரைகலை உள்ளீடு முறையைப் பயன்படுத்தும்பொழுது, எல்லாக் குறியீடுகளும், அதன் எண்களும் தானாக அறிவிக்கப்படும். ஒரு எழுத்தினைத் தாங்கள் எளிதில் தேர்வுச் செய்து கொள்ள இது பயன்படுகிறது. ஆனால், புதிய சீன ஃபொனடிக் போன்ற ஒலிப்பு முறை சார்ந்த உள்ளீட்டு முறையைப் பயன்படுத்தும்பொழுது, இத்தேர்வுப் பெட்டியின் தேர்வினை நீக்கிவிடவும். இவ்வுள்ளீட்டு முறையில் எல்லாக் குறியீடுகளும் ஒன்றுபோலவே ஒலிப்பதால், அம்பு விசைகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு எழுத்திற்கும் நகர்ந்து அதன் எழுத்து விளக்கங்களைக் கொண்டு தேவைப்படும் எழுத்தினைத் தேர்வுச் செய்துகொள்ளவும்.

தெரிவாகியுள்ள தேர்வுருவினை அறிவித்திடுக

இயல்பில் தேர்வாகியிருக்கும் இத்தேர்வுப் பெட்டி, தோன்றும் தேர்வுருக்கள் பட்டியலில் தெரிவாகியிருக்கும் வரியுருவினை, அல்லது தெரிவு மாறும்பொழுது, புதிதாக தெரிவாகியிருக்கும் வரியுருவினை அறிவிக்க வேண்டுமா என்று தீர்மானிக்க உதவுகிறது. அம்பு விசைகளைக் கொண்டு தெரிவினை மாற்றக் கூடிய புதிய சீன ஃபொனடிக் போன்ற உள்ளீடு முறைகளுக்கு, இத்தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்து கொள்ளலாம். ஆனால், சில உள்ளீடு முறைகளுக்கு இத்தேர்வினை நீக்குவது, சிறப்பான முறையில் தட்டச்சிட உதவும். இத்தேர்வு நீக்கப்பட்டிருந்தாலும்கூட, தெரிவாகியுள்ள தேர்வுருவின் மீது சீராய்வுச் சுட்டி வைக்கப்பட்டிருப்பதால், தெரிவாகியுள்ள தேர்வுருவினை, அல்லது பிற தேர்வுருக்களை, பொருள் வழிசெலுத்தி / சீராய்வினைப் பயன்படுத்திப் படிக்க இயலும்.

தேர்வுருவிற்கான குறுகிய எழுத்து விளக்கத்தை எப்பொழுதும் சேர்த்துக் கொள்க

இயல்பில் தேர்வாகியிருக்கும் இத்தேர்வுப் பெட்டி, தேர்வுரு தெரிவுச் செய்யப்படும்பொழுது, அல்லது தேர்வுருக்களின் பட்டியலில் தோன்றும் எழுத்துகளைத் தானாகப் படிக்கும்பொழுது, தேர்வுருவின் குறுகிய எழுத்து விளக்கத்தை என்விடிஏ வழங்க வேண்டுமா என்று தீர்மானிக்க உதவுகிறது. இவ்விருப்பத் தேர்வு, தெரிவாகியிருக்கும் தேர்வுருக்களுக்கு வழங்கப்படும் கூடுதல் எழுத்து விளக்கங்கள், சீனம் போன்ற மொழிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதை கவனிக்கவும். இவ்விருப்பத் தேர்வு, கொரிய, ஜப்பானிய உள்ளீட்டு முறைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

படிக்கும் சரத்தில் ஏற்படும் மாற்றங்களை அறிவித்திடுக

புதிய சீன ஃபொனடிக், புதிய சான்ஜாய் போன்ற சில உள்ளீடு முறைகள், முன் இயற்றப்பட்ட சரம் என்று சில தருணங்களில் அழைக்கப்படும் படிக்கும் சரத்தினை கொண்டிருக்கும். இந்தப் படிக்கும் சரத்தில் உள்ளீடு செய்யப்படும் புதிய எழுத்துகளை என்விடிஏ அறிவிக்க வேண்டுமா என்று தாங்கள் தீர்மானிக்க இத்தேர்வுப் பெட்டி உதவுகிறது. இயல்பில், இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்கும். சீன சாஞ்சாய் போன்ற பழைய உள்ளீட்டு முறைகளில், முன்னியற்றப்பட்ட சரங்களை வைத்துக் கொள்ள, படிக்கும் சரத்தைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், இயற்றல் சரத்தை இம்முறைகள் நேரடியாகப் பயன்படுத்துகின்றன. இயற்றல் சரத்தினை அமைவடிவமாக்குவது குறித்து அறிய, அடுத்து வரும் விருப்பத் தேர்வினைப் பார்க்கவும்.

இயற்றல் சரத்தில் ஏற்படும் மாற்றங்களை அறிவித்திடுக

படிக்கும் சரம், அல்லது முன்னியற்றப்பட்ட சரம், ஏற்புடைய வரைகலைக் குறியீடுகளாக ஒருங்கிணைக்கப்படும். பிறகு, பல உள்ளீடு முறைகள், இக்குறியீடுகளையும், பிற ஒருங்கிணைக்கப்பட்ட குறியீடுகளையும், ஆவணத்தில் இறுதியாக செருகுவதற்கு முன், ஒரு இயற்றல் சரத்தில் தற்காலிகமாக வைத்துக் கொள்ளும். இயற்றல் சரத்தில் தோன்றும் புதிய குறியீடுகளை என்விடிஏ அறிவிக்க வேண்டுமா என்று தீர்மானிக்க இது உதவுகிறது. இயல்பில், இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்கும்.

உலாவும் நிலை

உலாவும் நிலை அமைப்புகளைத் திறவுக

விசை: என்விடிே+கட்டுப்பாடு+b

என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் உலாவும் நிலை வகைமை, வலைப் பக்கங்கள் போன்ற சிக்கலான ஆவணங்களூடே படித்து வழிசெல்லும்பொழுது, என்விடிஏ எவ்வாறு செயல்பட வேண்டுமென்பதை அமைவடிவமாக்கப் பயன்படுகிறது. இவ்வகைமை, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

ஒரு வரியில் இருக்கக்கூடிய வரியுருக்களின் உச்ச அளவு

இவ்வெண் களம், உலாவும் நிலையில், ஒரு வரியில் இருக்கக் கூடிய வரியுருக்களின் உட்சபட்ச அளவை வரையறுக்க உதவுகிறது.

ஒரு பக்கத்தில் இருக்கக்கூடிய வரிகளின் உச்ச எண்ணிக்கை

உலாவும் நிலையில், பக்கம் மேல், பக்கம் கீழ் ஆகிய விசைகளை அழுத்தும்பொழுது, திரையில் தோன்ற வேண்டிய வரிகளின் உச்ச எண்ணிக்கையை, இவ்வெண் களம் கட்டுப்படுத்துகிறது.

திரைத் தளவமைப்பைப் பயன்படுத்துக

விசை: என்விடிஏ+v

தொடுப்புகள், களங்கள், பொத்தான்கள் போன்ற உலாவும் நிலையில் இருக்கும் சொடுக்கப்படக்கூடிய உள்ளடக்கங்களை அதனதன் வரியில் வைக்க வேண்டுமா, அல்லது பார்வையுள்ளவர்கள் திரையில் காண்பது போல, உரையின் ஓட்டத்துக்கேற்ப வைக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க இத்தேர்வுப் பெட்டி உதவுகிறது. அவுட்லுக், வேர்ட் போன்ற மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் பயன்பாடுகள் எப்பொழுதும் திரைத் தலவமைப்பையே பயன்படுத்துவதால், இவ்விருப்பத் தேர்வு அவைகளுக்குப் பொருந்தாது என்பதைக் கவனிக்கவும். இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், பக்கங்களின் கூறுகள், பார்வையுள்ளவர்கள் காண்பதுபோல், உரையின் ஓட்டத்துக்கேற்ப வைக்கப்படும். எடுத்துக்காட்டாக, பல தொடுப்புகளைக் கொண்ட ஒரு வரி, பேச்சிலும், பிரெயிலும் பார்வைக்குத் தெரிவதுபோல ஒரே வரியில் வைக்கப்படும். தேர்வினை நீக்கினால், அவைகள், அதனதன் வரிகளில் தனித் தனியே வைக்கப்படும். இப்படி தனித் தனி வரிகளில் வைப்பது, பக்கங்களை வரி வரியாக நகர்ந்து படிக்கும்பொழுது, அக்கூறுகளைப் புரிந்துகொள்ள வசதியாக இருப்பதுடன், அவைகளுடன் அளவளாவ சில பயனர்களுக்கு எளிதாகவும் இருக்கும்.

பக்கம் ஏற்றப்படும்பொழுது உலாவும் நிலையை முடுக்குக

ஒரு பக்கம் ஏற்றப்படும்பொழுது, உலாவும் நிலை தானாக முடுக்கப்படவேண்டுமா என்று தீர்மானிக்க இத்தேர்வுப் பெட்டி உதவுகிறது. இத்தேர்வுப் பெட்டி தேர்வாகாத நிலையிலும், உலாவும் நிலை ஆதரிக்கப்படும் ஆவணங்களில், உலாவும் நிலையை கைமுறையில் இயக்கலாம். உலாவும் நிலை ஆதரிக்கும் ஆவணங்களின் பட்டியலை உலாவும் நிலைப் பிரிவில் காணவும். உலாவும் நிலையை பயன்படுத்த வேண்டுமென்கிற கட்டாயம் இல்லாத மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற ஆவணங்களுக்கு இவ்விருப்பத் தேர்வு பொருந்தாது. இயல்பில், இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்கும்.

பக்கம் ஏற்றப்படும்பொழுது எல்லாவற்றையும் தானாகப் படித்திடுக

இத்தேர்வுப் பெட்டி, உலாவும் நிலையில், ஒரு பக்கம் ஏற்றப்படும்பொழுது, அது தானாகப் படிக்கப்படும் வசதியை முடுக்குகிறது, அல்லது முடக்குகிறது. இயல்பில், இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்கும்.

தளவமைப்பு அட்டவணைகளைச் சேர்த்துக் கொள்க

இத்தேர்வுப் பெட்டி, தளவமைப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் அட்டவணைகளை என்விடிஏ எவ்வாறு கையாள வேண்டுமென்பதை வரையறுக்க உதவுகிறது. தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், அட்டவணைகளை இயல்பானவைகளாகத் தீர்மானித்து, ஆவண வடிவூட்டம் அமைப்புகளைக் கொண்டு அவைகளை அறிவிப்பதுடன், விரைவுக் கட்டளைகளைக் கொண்டும் அவைகளை கண்டறியும். தேர்வாகியிருக்கவில்லை எனில், அட்டவணைகளை அறிவிக்காது என்பதோடில்லாமல், அவைகளை கண்டறிய விரைவுக் கட்டளைகளையும் பயன்படுத்தாது.
இருப்பினும், அட்டவணைகளின் உள்ளடக்கங்களை எளிய உரைகளாகக் காண்பிக்கும். இயல்பில், இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்காது.

தளவமைப்பு அட்டவணைகளைச் சேர்த்துக் கொள்ளும் வசதியை எங்கிருந்தாயினும் பயன்படுத்த, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலில் தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

தொடுப்புகள், தலைப்புகள் போன்ற களங்களின் அறிவித்தலை அமைவடிவமாக்கல்

தொடுப்புகள், தலைப்புகள், அட்டவணைகள் போன்ற களங்களின் அறிவித்தலை அமைவடிவமாக்க, என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் ஆவண வடிவூட்டம் வகைமையைக் காணவும்.

குவிமையம் மாறும்பொழுது, குவிமைய நிலையைத் தானாக இயக்குக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், குவிமையம் மாறும்பொழுது, குவிமைய நிலைத் தானாக இயக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு இணையப் பக்கத்தில், தத்தல் விசையை அழுத்தி தாங்கள் ஒரு படிவக் களத்திற்குச் சென்றால், குவிமைய நிலை உடனே தானாக இயக்கப்படும்.

கணினிச் சுட்டி நகரும்பொழுது, குவிமைய நிலையைத் தானாக இயக்குக

இத்தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்தால், அம்பு விசைகளைக் கொண்டு நகரும்பொழுது, குவிமையத்திற்குள் செல்லவும், வெளியேறவும் என்விடிஏவை அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு இணையப் பக்கத்தில் அம்பு விசையைக் கொண்டு கீழ்நோக்கி நகரும்பொழுது, ஒரு தொகுகளம் எதிர்பட்டால், என்விடிஏ தங்களை தானாக குவிமையத்திற்குள் கொண்டுவரும். அம்பு விசையைப் பயன்படுத்தி தொகுகளத்தைவிட்டு வெளியேறும்பொழுது, என்விடிஏ தங்களை மீண்டும் உலாவு நிலைக்கு கொண்டுசெல்லும்.

குவிமைய நிலை, உலாவும் நிலை ஆகியவைகளுக்குக் கேட்பொலிச் சைகையை எழுப்புக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், உலாவும் நிலை, குவிமைய நிலை ஆகியவைகளுக்கிடையே மாறும்பொழுது, என்விடிஏ, மாற்றத்தை அறிவிக்காமல், ஒலிச் சைகையை எழுப்பும்.

கட்டளைகள் அல்லாத சைகைகளை ஆவணத்திற்குச் செல்லாமல் தடுத்திடுக

என்விடிஏ, அல்லது பொதுவான கட்டளையாகக் கருதப்படாத சைகைகளை, தற்பொழுது குவிமையத்தில் இருக்கும் ஆவணத்திற்குச் செல்லாமல் தடுக்க வேண்டுமா என தீர்மானிக்க, இயல்பில் தேர்வாகியிருக்கும் இத்தேர்வுப் பெட்டி தங்களை அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, இத்தேர்வுப் பெட்டித் தேர்வான நிலையில், என்விடிஏவின் விரைவுக் கட்டளையாகவும், பயன்பாட்டின் பொதுவான கட்டளையாகவும் இல்லாத 'j' என்கிற விசையை அழுத்தினால், அவ்விசை, ஆவணத்திற்குச் செல்லாமல் தடுக்கப்படும். தடுக்கப்படும் விசையை அழுத்தும்பொழுதெல்லாம், இயல்பான ஒலியை இயக்குமாறு விண்டோஸிற்கு என்விடிஏ அறிவுறுத்தும்.

உலாவும் நிலையில் குவிமையத்திற்குள் கொண்டுவரக் கூடிய கூறுகளுக்கு கணினிக் குவிமையத்தை தானாக அமைத்திடுக

விசை: என்விடிஏ+8

இயல்பில் தேர்வாகாதிருக்கும் இத்தேர்வுப் பெட்டி, பக்கங்களின் உள்ளடக்கங்களை, உலாவும் நிலைச் சுட்டியைக் கொண்டு படிக்கும்பொழுது, கணினிக் குவிமையத்திற்குள் வரக்கூடிய தொடுப்புகள், படிவக் களங்கள் போன்ற கூறுகளுக்கு கணினிக் குவிமையத்தை அமைக்க தங்களை அனுமதிக்கிறது. தேர்வாகாத நிலையில், குவிமையத்திற்குள் வரக்கூடிய கூறுகளை உலாவும் நிலைச் சுட்டியைக் கொண்டு தெரிவுச் செய்யும்பொழுது, கணினிக் குவிமையத்தை அவைகளுடன் தானாக அமைக்காது. உலாவும் நிலையில், விரைவாக உலாவும் அனுபவத்தைக் கொடுப்பதுடன், வினைத்திறனுடனும் செயல்பட என்விடிஏவை இது அனுமதிக்கிறது. இருப்பினும், பொத்தானை அழுத்துதல், தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்தல் போன்ற செயல்களின் மூலம் கூறுகளுடன் அளவளாவும்பொழுது, கணினிக் குவிமையம், அக்கூறுகளுடன் இற்றைப்படுத்தப்பட்டு அமைக்கப்படும். இவ்வசதி முடுக்கப்பட்டால், சில இணையதளங்களுக்கான ஆதரவு மேம்பட்டாலும், என்விடிஏவின் செயல்பாட்டிலும், நிலைத் தன்மையிலும் சுணக்கம் ஏற்படும்.

ஆவண வடிவூட்டம்

ஆவண வடிவூட்ட அமைப்புகளைத் திறவுக

விசை: என்விடிஏ+கட்டுப்பாடு+d

இவ்வகைமையில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான விருப்பத் தேர்வுகள், சுட்டியை நகர்த்தி ஆவணங்களைப் படிக்கும்பொழுது, எந்தெந்த வடிவூட்டங்களை என்விடிஏ அறிவிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, 'எழுத்துருப் பெயரை அறிவித்திடுக' தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்தால், மற்றொரு எழுத்துருக் கொண்ட உரையின் மீது சுட்டியை நகர்த்தும்பொழுது, அவ்வுரையின் எழுத்துருப் பெயரை அறிவிக்கும்.

ஆவண வடிவூட்ட விருப்பத் தேர்வுகள் குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. கீழ்வரும் வடிவூட்டங்களை அறிவிக்க, என்விடிஏவை அமைவடிவமாக்கலாம்:

இவ்வமைப்புகளை எங்கிருந்தாயினும் மாற்றியமைக்க, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சைகைகளை இணைக்கவும்.

சுட்டிக்குப் பிறகு ஏற்படும் வடிவூட்ட மாற்றங்களை அறிவித்திடுக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், படிக்கப்படும் வரிகளிலுள்ள வடிவூட்ட மாற்றங்களை அறிவிக்க முயலுமாறு இவ்வமைப்பு என்விடிஏவை அறிவுறுத்தும்.

இயல்பில், கணினிச் சுட்டி/சீராய்வுச் சுட்டியின் கீழிருக்கும் வடிவூட்டத்தை மட்டுமே அறிவிக்கும். ஆனால், என்விடிஏவின் செயற்பாடு இடர்படாது என்கிற நிலையிருந்தால், மொத்த வரியின் வடிவூட்டத்தையும் அறிவிக்கும்.

வேர்ட்பேட் போன்ற வடிவூட்டங்கள் தலையாயதாக இருக்கும் ஆவணங்களை சரிபார்க்கும் தருணங்களில், இவ்விருப்பத் தேர்வினை முடுக்கிவிடலாம்.

வரியோரச் சீர்மையை அறிவித்தல்

வரியோரச் சீர்மை எவ்வாறு அறிவிக்கப்பட வேண்டுமென்று வரையறுக்க இச்சேர்க்கைப் பெட்டி அணுமதிக்கிறது. இது நான்கு விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது.

'வரியோரச் சீர்மை அறிவித்தலுக்கு வெற்று வரிகளைப் புறக்கணித்திடுக' தேர்வுப் பெட்டியைத் தாங்கள் தேர்வுச் செய்திருந்தால், வெற்று வரிகளின் ஓரச் சீர்மை மாற்றங்கள் அறிவிக்கப்பட மாட்டாது. ஓரச் சீர்மை கொண்ட உரைத் தொகுதிகளை பிரிக்கும் வெற்று வரிகளைக் கொண்ட ஆவணங்களைப் படிக்க இது பயனுள்ளதாக இருக்கும். எ.கா. ஆதாரக் குறியீட்டு நிரலாக்கம்.

ஆவண வழிசெலுத்தல்

ஆவண வழிசெலுத்தலின் பல்வேறு கூறுகளை சரிசெய்ய இவ்வகைமை தங்களை அனுமதிக்கிறது.

பத்திப் பாங்கு
. .
விருப்பத் தேர்வுகள் இயல்பிருப்பு (பயன்பாட்டினால் கையாளப்படும்), பயன்பாட்டினால் கையாளப்படும், ஒற்றை வரி முறிவு, பல வரி முறிவு
\இயல்பிருப்பு பயன்பாட்டினால் கையாளப்படும்

"கட்டுப்பாடு+மேலம்பு", "கட்டுப்பாடு+கீழம்பு" ஆகிய விசைகளைப் பயன்படுத்தி பத்திகளாக நகரும்பொழுது பயன்படுத்தப்பட வேண்டிய பத்திப் பாங்கினைத் தெரிவுச் செய்ய இச்சேர்க்கைப் பெட்டி தங்களை அனுமதிக்கிறது. பின்வருவன கிடைப்பிலிருக்கும் பத்திப் பாங்குகளாகும்:

கிடைப்பிலிருக்கும் பத்திப் பாங்குகளுக்கிடையே எங்கிருந்தாயினும் மாற, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலில் இதற்கான தனிப்பயனாக்கப்பட்ட விசையை இணைக்கவும்.

நீட்சிநிரல் அங்காடி அமைப்புகள்

நீட்சிநிரல் அங்காடியின் தன்மையை தக்கவாறு அமைத்துக்கொள்ள இவ்வகைமை தங்களை அனுமதிக்கிறது.

அறிவிக்கைகளை இற்றாக்குக

இவ்விருப்பத் தேர்வு "அறிவித்திடுக" என்று அமைக்கப்பட்டிருந்தால், என்விடிஏ துவங்கியவுடன், நீட்சிநிரல்களுக்கு இற்றாக்கம் ஏதேனும் இருந்தால், அதை நீட்சிநிரல் அங்காடி அறிவித்திடும். இந்த சரிபார்ப்பு ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் செய்யப்படுகிறது. அதே அலைத்தடத்தில் கிடைப்பிலிருக்கும் இற்றாக்கங்களுக்கு மட்டுமே அறிவிக்கைகள் தோன்றும். எடுத்துக்காட்டாக, நிறுவப்பட்டிருக்கும் பரிசோதனையிலுள்ள நீட்சிநிரல்களுக்கு, "பரிசோதனையிலுள்ளது" என்கிற அலைத்தடத்தினுள் உள்ள இற்றாக்கங்கள் குறித்து மட்டுமே தங்களுக்கு அறிவிக்கப்படும்.

. .
விருப்பத் தேர்வுகள் அறிவித்திடுக (இயல்பிருப்பு), முடக்கப்பட்டது
இயல்பிருப்பு அறிவித்திடுக
விருப்பத் தேர்வு தன்மை
அறிவித்திடுக நீட்சிநிரல்களுக்கான இற்றாக்கங்கள் அதே அலைத்தடத்தில் இருந்தால் மட்டும் அறிவித்திடுக
முடக்கப்பட்டது நீட்சிநிரல்களுக்கான இற்றாக்கங்களைத் தானாகத் துழாவாமல் இருந்திடுக

விண்டோஸ் எழுத்துணரி அமைப்புகள்

இவ்வகைமையில் இருக்கும் அமைப்புகள், விண்டோஸ் எழுத்துணரியை அமைவடிவமாக்க அனுமதிக்கின்றன. இவ்வகைமை, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

உணருதலுக்கான மொழி

இச்சேர்க்கைப் பெட்டி, உணருதலுக்குப் பயன்படுத்தவ்பட வேண்டிய மொழியைத் தேர்வுச் செய்ய தங்களை அனுமதிக்கிறது. கிடைப்பிலிருக்கும் மொழிகளுக்கிடையே எங்கிருந்தாயினும் நகர, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

உணரப்பட்ட உள்ளடக்கத்தை அவ்வப்போது புத்தாக்குக

இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், உணரப்பட்ட உள்ளடக்கத்தை, அது குவிமையத்தில் இருக்கும்பொழுது என்விடிஏ அவ்வப்போது புத்தாக்கும். துணைத் தலைப்புகள் கொண்ட காணொளிகள் போன்று தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் உள்ளடக்கத்தை தாங்கள் கண்காணிக்க இது மிக பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு ஒன்றரை நொடிகளுக்கும் உள்ளடக்கம் புத்தாக்கப்படுகிறது. இயல்பில் இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்காது.

மேம்பட்ட அமைப்புகள்

எச்சரிக்கை! இவ்வகைமையில் இருக்கும் அமைப்புகள் மேம்பட்ட பயனர்களுக்கு மட்டுமே. இவ்வமைப்புகளை தவறாக அமைவடிவமாக்கினால், என்விடிஏ சரிவர செயல்படாதென்பதை அறிக. தாங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை தாங்கள் முழுமையாக அறிந்திருந்தால், அல்லது என்விடிஏ மேம்படுத்துநர்களால் குறிப்பாக அறிவுருத்தப்பட்டிருந்தால் மட்டுமே இவ்வமைப்புகளை மாற்றியமைத்திடுக.

மேம்பட்ட அமைப்புகளில் மாற்றங்களைச் செய்தல்

மேம்பட்ட அமைப்புகளில் மாற்றங்களைச் செய்ய, இம்மாற்றங்களை செய்வதினால் ஏற்படக்கூடிய சிக்கல்களை தாங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்பதை உறுதிச் செய்யும் வண்ணம், கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வுப் பெட்டிகளைத் தேர்வுச் செய்து, கட்டுப்பாடுகளை முடுக்கிவிட வேண்டும்.

இயலமைப்புகளை மீட்டமைத்தல்

உறுதிபடுத்துவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வுப் பெட்டி தேர்வுச் செய்யப்படாத நிலையிலும், அமைப்புகளுக்கான இயல் மதிப்புகளை இப்பொத்தான் மீட்டமைக்கிறது. அமைப்புகளை மாற்றியமைத்த பின்னர், இயலமைப்புகளுக்குத் திரும்பிச் செல்ல தாங்கள் விரும்புவீர்கள். அதுபோன்ற தருணங்களில் இப்பொத்தான் பயன்படும். அமைப்புகள் மாற்றப்பட்டுவிட்டனவா என்பதை தாங்கள் உறுதியாக அறியாத நிலையிலும் இது பயன்படும்.

மேம்படுத்துநரின் தற்காலிக நினைவக அடைவிலிருந்து தனிப்பயனாக்கப்பட்ட குறிமுறையின் ஏற்றலை முடுக்குக

என்விடிஏவிற்கான நீட்சிநிரல்களை மேம்படுத்தும்பொழுது, எழுதப்படும் குறிமுறையை உடனுக்குடன் பரிசோதித்து சரிபார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். இத்தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்தால், தங்களின் என்விடிஏ பயனர் அமைவடிவ அடைவிலிருக்கும் மேம்படுத்துநர்களுக்கான சிறப்புத் தற்காலிக நினைவக அடைவிலிருந்து தனிப்பயனாக்கப்பட்ட பயன்பாட்டுக் கூறுகள், முழுதளாவிய செருகுநிரல்கள், பிரெயில் காட்சியமைவு இயக்கிகள், பேச்சொலிப்பான் இயக்கிகள், பார்வை ஊக்கிகள் ஆகியவைகளை என்விடிஏ ஏற்ற அனுமதிக்கிறது. நீட்சிநிரல்களுக்கு நிகரானவையாக இவை இருக்கும்பட்சத்தில், என்விடிஏ துவக்கப்படும்பொழுதும், பயன்பாட்டு நிரற்கூறுகள், அல்லது, முழுதளாவிய செருகுநிரல்களாக இருக்கும்பட்சத்தில், செருகுநிரல்கள் மீளேற்றப்படும்பொழுதும் இந்நிரற்கூறுகள் ஏற்றப்படும். பரிசோதிக்கப்படாத எந்தவொரு குறிமுறையும் தங்களின் வெளிப்படையான அனுமதியில்லாமல் என்விடிஏவில் இயக்கப்படாமலிருக்க, இத்தேர்வுப் பெட்டி இயல்பில் தேர்வாகியிருக்காது. தனிப்பயனாக்கப்பட்ட குறிமுறைகளை பிறருக்கு தாங்கள் அளிக்க விரும்பினால், அவைகளை என்விடிஏவின் நீட்சிநிரலாகத் தொகுக்க வேண்டும்.

மேம்படுத்துநரின் தற்காலிக நினைவக அடைவினைத் திறவுக

இப்பொத்தான், மேம்படுத்தப்படும் தனிப்பயனாக்கப்பட்ட குறிமுறைகளை வைப்பதற்கான அடைவினை திறக்கிறது. 'மேம்படுத்துநரின் தற்காலிக நினைவக அடைவிலிருந்து தனிப்பயனாக்கப்பட்ட குறிமுறையின் ஏற்றலை செயற்படுத்துக' தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்தால் மட்டுமே, இப்பொத்தான் கிடைப்பிலிருக்கும்.

பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கல் நிகழ்வுகளுக்கும், பண்பு மாற்றங்களுக்குமான பதிவு
. .
விருப்பத் தேர்வுகள் தன்னியக்கம், தெரிவு, முழுதளாவிய
இயல்பிருப்பு தன்னியக்கம்

இவ்விருப்பத் தேர்வு, மைக்ரோசாஃப் தன்னியக்கமாக்கல் அணுகல் ஏபிஐ தூண்டும் நிகழ்வுகளை என்விடிஏ எவ்வாறு பதிந்திட வேண்டுமென்பதை தீர்மானிக்க உதவுகிறது. பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கல் நிகழ்வுகளுக்கும், பண்பு மாற்றங்களுக்குமான பதிவுச் சேர்க்கைப் பெட்டி, கீழ்க்காணும் மூன்று விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

மைக்ரோசாஃப்ட் வேர்ட் ஆவணக் கட்டுப்பாடுகளை அணுக இடைமுகப்பு தன்னியக்கமாக்கலைப் பயன்படுத்துக

மைக்ரோசாஃப்ட் வேர்ட் ஆவணங்களை அணுக, பழைய மைக்ரோசாஃப் வேர்ட் பொருள் மாதிரியைப் பயன்படுத்தாமல், மைக்ரோசாஃப்ட் இடைமுகப்பு தன்னியக்க அணுகுதிறன் API-ஐ என்விடிஏ பயன்படுத்த வேண்டுமா என்று வரையறுக்க இவ்விருப்பத் தேர்வு அனுமதிக்கிறது. மைக்ரோசாஃப்ட் வேர் ஆவணங்களுக்கும், மைக்ரோசாஃப்ட் ஔட்லுக் செய்திகளுக்கும் இது பொருந்தும். பின்வரும் மதிப்புகளை இவ்வமைப்பு கொண்டுள்ளது:

மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் விரிதாள் கட்டுப்பாடுகளை அணுக, இடைமுகப்பு தன்னியக்கமாக்கலை கிடைப்பிலிருந்தால் பயன்படுத்துக

இவ்விருப்பத் தேர்வு முடுக்கப்பட்டிருந்தால், மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் விரிதாள் கட்டுப்பாடுகளிலிருந்து தகவல்களைப் பெற, பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கலின் API அணுகலைப் பயன்படுத்த என்விடிஏ முயலும். இது பரிசோதனை நிலையில் இருப்பதால், மைக்ரோசாஃப்ட் எக்ஸெலின் சில சிறப்புக்கூறுகள் இந்நிலையில் கிடைப்பிலிருக்காது. எடுத்துக்காட்டாக, சூத்திரங்களையும், கருத்துரைகளையும் பட்டியலிடும் என்விடிஏவின் கூறுகளின் பட்டியல், விரிதாளில் இருக்கும் படிவக்களங்களுக்கிடையே நகரப் பயன்படுத்தப்படும் உலாவு நிலை ஒற்றையெழுத்து வழிசெலுத்தல் போன்றவை கிடைப்பிலிருக்காது. ஆனால், அடிப்படை விரிதாள் வழிசெலுத்தல்/தொகுத்தல் செயல்களுக்கு, செயல்திறனில் பெருமளவு முன்னேற்றத்தை இவ்விருப்பத் தேர்வு ஏர்படுத்தும். இவ்விருப்பத் தேர்வினை இயல்பிருப்பாக வைத்திருக்க பெரும்பான்மையான பயனர்களுக்கு இந்நிலையிலும் நாங்கள் பரிந்துரைப்பதில்லை. இருந்தபோதிலும், மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் கட்டமைப்பு 16.0.13522.10000, அல்லது அதற்கும் பிறகான பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனர்கள், இச்சிறப்புக்கூறினை பரிசோதித்து பின்னூட்டமளிப்பதை வரவேற்கிறோம். மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கலின் செயலாக்கம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதோடு, மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 16.0.13522.10000 பதிப்புக்கு முந்தைய பதிப்புகள், இவ்விருப்பத் தேர்வு பயன்படுமளவிற்கு தகவல்களை அளிப்பதில்லை.

மேம்படுத்தப்பட்ட நிகழ்வு செயல்முறையைப் பயன்படுத்துக
. .
விருப்பத் தேர்வுகள் இயல்பிருப்பு (முடுக்கப்பட்டது), முடக்கப்பட்டது, முடுக்கப்பட்டது
இயல்பிருப்பு முடுக்கப்பட்டது

இவ்விருப்பத் தேர்வு முடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு முனையத்தில் பெருமளவிளான உரை போன்ற பல பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கல் நிகழ்வுகளினால் நிரம்பிவழியும்பொழுது, என்விடிஏ தொடர்ந்து வினையாற்றிக் கொண்டிருக்கும். இவ்விருப்பத் தேர்வினை மாற்றியமைத்த பிறகு, மாற்றத்தை செயலிற்கு கொண்டுவர, என்விடிஏவை மறுதுவக்க வேண்டும்.

விண்டோஸ் கட்டுப்பாட்டக ஆதரவு
. .
விருப்பத் தேர்வுகள் தன்னியக்கம், கிடைப்பிலிருக்கும்பொழுது பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கல், மரபு
இயல்பிருப்பு தன்னியக்கம்

கட்டளைத் தூண்டி, பவர் ஷெல், லினக்ஸிற்கான விண்டோஸ் துணை அமைப்பு ஆகியவை பயன்படுத்தும் விண்டோஸ் கட்டுப்பாட்டகத்துடன் என்விடிஏ எவ்வாறு அளவளாவவேண்டுமென்று தீர்மானிக்க இவ்விருப்பத் தேர்வு அனுமதிக்கிறது. நவீன விண்டோஸ் முனையத்துக்கு இது ஊறு விளைவிப்பதில்லை. விண்டோஸ் 10 பதிப்பு 1709ல், கட்டுப்பாட்டகத்திற்கான பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கல் ஏ.பி.ஐக்கு மைக்ரோசாஃப்ட் ஆதரவளிப்பதன் மூலம், இதை ஆதரவளிக்கும் திரைநவிலிகளின் செயல்திறனிலும், நிலைத்தன்மையிலும் மேம்பாட்டைக் கொண்டுவருகிறது. பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கல் கிடைப்பிலில்லாவிட்டால், அல்லது பயனர் அனுபவத்தில் குறையை இது ஏற்படுத்துவதாக அறியப்பட்டால், என்விடிஏவின் மரபுக் கட்டுப்பாட்டக ஆதரவு, மாற்றாக கிடைப்பிலிருக்கும். விண்டோஸ் கட்டுப்பாட்டக ஆதரவு சேர்க்கைப் பெட்டி, பின்வரும் மூன்று விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் பிற குரோமியம் அடிப்படையிலான உலாவிகளைப் பயன்படுத்தும்பொழுது பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கலை கிடைப்பிலிருந்தால் பயன்படுத்துக

மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்ற குரோமியம் அடிப்படையிலான உலாவிகளில் பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கலைப் பயன்படுத்த இச்சேர்க்கைப் பெட்டி அனுமதிக்கிறது. குரோமியம் அடிப்படையிலான உலாவிகளுக்கு பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கலின் ஆதரவு துவக்கநிலை மேம்பாட்டில் இருப்பதால், அணுகலுக்கு IA2 அளிக்கும் ஆதரவுக்கு இணையாக இதன் ஆதரவு இருப்பதில்லை. கீழ்க்கண்ட விருப்பத் தேர்வுகளை இச்சேர்க்கைப் பெட்டி கொண்டுள்ளது:

விளக்கவுரைகள்

இவ்விருப்பத் தேர்வு, பரிசோதனை அடிப்படையிலான ஆரியா விளக்கவுரை ஆதரவினை வழங்கும் கூறுகளை முடுக்க உதவுகிறது. இவைகளில் சில கூறுகள் முழுமையடையாமல் இருக்கலாம்.

கணினிச் சுட்டியின் இடத்தில் இருக்குவிளக்கவுரை விவரங்களின் சுருக்கத்தை அறிவிக்க, என்விடிஏ+d விசையை அழுத்தவும்.

பின்வரும் விருப்பத் தேர்வுகள் உள்ளன:

உயிர்ப்புடனிருக்கும் பகுதிகளை அறிவித்திடுக
. .
விருப்பத் தேர்வுகள் இயல்பிருப்பு (முடுக்கப்பட்டது), முடக்கப்பட்டது, முடுக்கப்பட்டது
இயல்பிருப்பு முடுக்கப்பட்டது

இணையத்திலிருக்கும் சில இயங்குநிலை உள்ளடக்கங்களை என்விடிஏ பிரெயிலில் காட்டுவதை இவ்விருப்பத் தேர்வு அனுமதிக்கிறது. இவ்விருப்பத் தேர்வினை முடக்குவது, 2023.1, அல்லது அதற்கும் முந்தைய பதிப்புகளில் காணப்படும் என்விடிஏவின் தன்மைக்கு ஒத்ததாகும். அதாவது, உள்ளடக்க மாற்றங்களை என்விடிஏ பிரெயிலில் காட்டாமல், வெறும் பேச்சில் மட்டும் அறிவிக்கும்.

எல்லா மேம்பட்ட முனையங்களிலும் கடவுச்சொற்களைப் பேசுக

பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கல் இயக்கத்திலிருக்கும் விண்டோஸ் மற்றும் மிண்டி கட்டுப்பாட்டகங்களில் கடவுச்சொல்லை உள்ளிடும் திரை போன்ற திரைகள் இற்றைப்படுத்தப்படாமல் இருக்கும். இதுபோன்ற தருணங்களில், தட்டச்சிடப்பட்ட வரியுருக்களை பேச வேண்டுமா, அல்லது தட்டச்சிடப்பட்ட சொற்களை பேச வேண்டுமா என்று எவ்வமைப்பைப் பயன்படுத்தி வரியுரு உள்ளிடப்படவேண்டுமென்று வரையறுக்க இவ்வமைப்பு அனுமதிக்கிறது. பாதுகாப்புக் காரனங்களைக் கருதி, இவ்வமைப்பு முடக்கப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கட்டுப்பாட்டகங்களில் தட்டச்சிடப்படும் வரியுருக்களை மற்றும்/அல்லது சொற்களை அறிவிக்கும் செயல்திறனில் சிக்கல்கள் இருந்தாலோ, அல்லது நிலைத்தன்மை இல்லாதிருந்தாலோ, அல்லது நம்பகமான சூழலில் பணிபுரிவதால், கடவுச்சொற்கள் அறிவிக்கப்பட வேண்டுமென்று விரும்பினாலோ, இவ்வமைப்புகளை தாங்கள் முடுக்க விரும்புவீர்கள்.

மரபு விண்டோஸ் கட்டுப்பாட்டகத்தில் தட்டச்சிடப்படும் எழுத்துகளைப் படிக்கும் மேம்பட்ட ஆதரவினை கிடைப்பிலிருந்தால் பயன்படுத்துக

மரபு விண்டோஸ் கட்டுப்பாட்டகத்தில் எழுத்துகளாக தட்டச்சிடப்படுவதை உணரும் மாற்று வசதியை இத்தேர்வுப் பெட்டி முடுக்குகிறது. செயல்திறனை இது மேம்படுத்தினாலும், சில கட்டுப்பாட்டக வெளியீட்டின் அறிவிப்பைத் தடுத்தாலும், சில முனைய நிரல்களுக்கு இது இணக்கமாக இருக்காது. இடைமுகப்பு தன்னியக்கமாக்கல் இல்லாதிருந்தால், அல்லது முடக்கப்பட்டிருந்தால், விண்டோஸ் 10 பதிப்புகள் 1607, மற்றும் அதற்கும் பிறகான பதிப்புகளில் இவ்வசதி இயல்பில் முடுக்கப்பட்டிருக்கும். எச்சரிக்கை: இத்தேர்வுப் பெட்டி தேர்வான நிலையில், கடவுச் சொற்கள் போன்று, திரையில் தோன்றாத எழுத்துகளாக இருந்தாலும், அவை அறிவிக்கப்படும். நம்பத் தகாத சூழல்களில், கடவுச் சொற்களை உள்ளிடும்பொழுது, தட்டச்சிடப்படும் வரியுருக்களை படிக்கும் வசதியையும், தட்டச்சிடப்படும் சொற்களைப் படிக்கும் வசதியையும் தற்காலிகமாக முடக்கவும்.

வேறுபாடுகளைக் கண்டறிவதற்கான படிமுறைத் தீர்வு

முனையங்களில் தோன்றும் புதிய உரைகளை எவ்வாறு படிக்கவேண்டுமென்று என்விடிஏ தீர்மானிப்பதை இவ்வமைப்பு கட்டுப்படுத்துகிறது. வேறுபாடுகளைக் கண்டறிவதற்கான படிமுறைத் தீர்வு சேர்க்கைப் பெட்டி, பின்வரும் மூன்று விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

விண்டோஸ் முனையத்தின் புதிய உரையை இவ்வழியே பேசுக
. .
விருப்பத் தேர்வுகள் இயல்பிருப்பு (தெரிவுச் செய்யப்பட்டிருக்கும் படிமுறைத் தீர்வினைப் பயன்படுத்துக), தெரிவுச் செய்யப்பட்டிருக்கும் படிமுறைத் தீர்வினைப் பயன்படுத்துக, பயனர் இடைமுகப்பு தன்னியக்கமாக்கல் அறிவிக்கைகள்
இயல்பிருப்பு தெரிவுச் செய்யப்பட்டிருக்கும் படிமுறைத் தீர்வினைப் பயன்படுத்துக

விண்டோஸ் முனையத்திலும், விஷுவல் ஸ்டூடியோ 2022ல் பயன்படுத்தப்படும் WPF விண்டோஸ் முனையக் கட்டுப்பாட்டிலும் இயங்குநிலை மாற்றங்களை அறிவிக்கும் வசதி முடுக்கப்பட்டிருந்தால், எந்த உரை புதிது, எதைப் பேச வேண்டுமென்று என்விடிஏ தீர்மானிக்க இவ்விருப்பத் தேர்வு வரையறுக்கிறது. விண்டோஸ் கட்டுப்பாட்டகத்தின்் மீது (conhost.exe) இது தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. விண்டோஸ் முனையத்தில் இருக்கும் 'புதிய உரையைப் பேசுக' சேர்க்கைப் பெட்டி மூன்று விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

காலாவதியான குவிமைய நிகழ்வுகளுக்கான பேச்சை விலக்கிக்கொள்ள முயல்க

இவ்விருப்பத் தேர்வு, காலாவதியான குவிமைய நிகழ்வுகளுக்கான பேச்சை விலக்கிக்கொள்ளும் முயற்சியை முடுக்கிவிடும். குறிப்பாக, கூகுள் குரோமில், ஜிமெயில் அஞ்சல்களை விரைவாகப் படிக்கும்பொழுது, காலாவதியான தகவல்களை என்விடிஏ படிப்பதைத் தவிர்க்க இது உதவும். என்விடிஏ 2021.1 பதிப்பு முதல் இச்செயல்பாடு இயல்பில் முடுக்கப்பட்டிருக்கும்.

சுட்டியின் நகர்வு காட்சியளிக்கும் நேரம் (நுண்ணொடிகளில்)

தொகுக்கப்படக்கூடிய உரைக் கட்டுப்பாடுகளில் சுட்டி நகர்வதற்காக என்விடிஏ எத்தனை நுண்ணொடிகள் காத்திருக்க வேண்டுமென்பதை வரையறுக்க இவ்விருப்பத் தேர்வு அனுமதிக்கிறது. என்விடிஏ எப்பொழுதும் சுட்டியினிடத்திற்கு ஒரு வரியுரு பின்தங்கியிருக்கிறது, அல்லது வரிகளை மறுபடியும் தோற்றுவிக்கிறது என்றால், சுட்டியை என்விடிஏ சரிவர பின்தொடர்வதில்லை என்று பொருள். இது போன்ற தருணங்களில், இக்களத்தின் மதிப்பை கூட்டிப் பார்க்கவும்.

நிறங்களின் தெளிவினை அறிவித்திடுக

தெளிந்த நிறங்களின் அறிவித்தலை இவ்விருப்பத் தேர்வு முடுக்குகிறது. மூன்றாம் தரப்பு பயன்பாட்டுடனான பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான தகவலைத் திரட்ட, நீட்சிநிரல்/நிரற்கூறு மேம்படுத்துநர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். சில வரைகலை இடைமுகப்பு பயன்பாடுகள், பின்புல நிறத்தினைக் கொண்டு உரையைத் துலக்கமாக்கும். காட்சியமைவு மாதிரியைக் கொண்டு, இந்தப் பின்புல நிறத்தை அறிவிக்க என்விடிஏ முயலும். சில சூழ்நிலைகளில், பிற வரைகலை இடைமுகப்பின் மீது உரை அமைந்திருப்பதால், உரையின் பின்புலம் முழுவதுமாக தெளிந்திருக்கும். பல பிரபலமான பயன்பாடுகள், தெளிந்த பின்புல நிறத்தைக் கொண்டு உரையை வழங்கலாம். ஆனால், பார்வைக்கு அந்தப் பின்புல நிறம் துல்லியமாக இருக்கும்.

ஒலி வெளியீட்டிற்கு வாஸாப்பியைப் பயன்படுத்துக
. .
விருப்பத் தேர்வுகள் இயல்பிருப்பு (முடுக்கப்பட்டது), முடக்கப்பட்டது, முடுக்கப்பட்டது
இயல்பிருப்பு முடுக்கப்பட்டது

விண்டோஸ் ஆடியோ செஷன் ஏபிஐ (WASAPI) வழியிலான ஒலி வெளியீட்டை இவ்விருப்பத் தேர்வு வழங்குகிறது. வாஸாப்பி என்பது மிக நவீன ஒலிக் கட்டமைப்பாகும். பேச்சு மற்றும் ஒலிகள் உட்பட என்விடிஏ ஒலி வெளியீட்டின் வினைத்திறன், செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை இது மேம்படுத்தலாம். இவ்விருப்பத் தேர்வினை மாற்றியமைத்தால், மாற்றத்தை செயலிற்குக் கொண்டுவர, என்விடிஏவை மறுதுவக்க வேண்டும். வாஸாப்பியை முடக்குவது, பின்வரும் விருப்பத் தேர்வுகளை முடக்கும்:

வழுநீக்க செயற்குறிப்பேட்டுப் பதிவு வகைமைகள்

இந்த வரிசைப் பட்டியலில் காணப்படும் தேர்வுப் பெட்டிகள், குறிப்பிட்ட வழுநீக்கத் தகவல்களை என்விடிஏ செயற்குறிப்பேட்டுப் பதிவில் செயற்படுத்த தங்களை அனுமதிக்கிறது. இத்தகவல்களை செயற்குறிப்பேட்டில் பதிந்தால், என்விடிஏவின் செயல்திறன் குறைவதோடு, செயற்குறிப்பேட்டுக் கோப்பின் அளவும் பெரிதாகும். என்விடிஏ மேம்படுத்துநரால் குறிப்பாக அறிவுறுத்தப்படும்பொழுது மட்டுமே இவைகளில் ஒன்றை செயற்படுத்தவும். எடுத்துக்காட்டாக, சரிவர செயல்படாத ஒரு பிரெயில் காட்சியமைவை சரிசெய்ய மேம்படுத்துநர் வழுநீக்க முயலும்போது, அவர் இதுபோன்று அறிவுறுத்தலாம்.

பதியப்படும் பிழைகளுக்கு ஒலியை எழுப்புக

ஒரு பிழை பதியப்படும்பொழுது, பிழை ஒலியை என்விடிஏ எழுப்பவேண்டுமா என்பதை வரையறுக்க இவ்விருப்பத் தேர்வு அனுமதிக்கிறது. பரிசோதனைப் பதிப்பில் மட்டும் என்கிற இயல்பிருப்பைத் தேர்வுச் செய்தால், ஆல்ஃபா, பீட்டா மற்றும் மூலத்திலிருந்து இயக்குக ஆகியவை என்விடிஏவின் தற்போதைய பரிசோதனைப் பதிப்பாக இருந்தால் மட்டும் என்விடிஏ பிழை ஒலியை எழுப்பும். 'ஆம்' என்பதைத் தேர்வுச் செய்தால், என்விடிஏவின் எந்தப் பதிப்பாக இருந்தாலும் பிழை ஒலியை என்விடிஏ எழுப்பும்.

உரைப் பத்தி விரைவு வழிசெலுத்தல் கட்டளைகளுக்கான சுருங்குறித்தொடர்

உலாவு நிலையில் உரை பத்திகளைக் கண்டறிவதற்கான சுருங்குறித்தொடரைத் தனிப்பயனாக்க இந்தக் களம் பயனர்களை அனுமதிக்கிறது. இந்த சுருங்குறித்தொடருடன் பொருந்தும் பத்திகளை உரைப் பத்தி வழிசெலுத்தல் கட்டளை தேடும்.

இதர அமைப்புகள்

என்விடிஏ அமைப்புகளைத் தவிர, என்விடிஏ பட்டியலில் இருக்கும் விருப்பங்கள் உட்பட்டியல், கீழே சுருக்கமாக விளக்கப்படும் பல உருப்படிகளையும் கொண்டுள்ளது:

பேச்சு அகரமுதலிகள்

விருப்பங்கள் உட்பட்டியலில் இருக்கும் இவ்வுரையாடல் பெட்டி, சொற்களையும், சொற்றொடர்களையும் என்விடிஏ எவ்வாறு கையாள வேண்டுமென்று அறிவுறுத்தப் பயன்படுகிறது. தற்பொழுது, மூன்று வகையான பேச்சு அகரமுதலிகள் உள்ளன. அவையாவன:

மேற்கூறிய அகரமுதலிகளில் ஏதேனும் ஒன்றை எங்கிருந்தாயினும் தாங்கள் திறக்க விரும்பினால், உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சைகைகளை தாங்கள் இணைக்க வேண்டும்.

எல்லா அகரமுதலி உரையாடல் பெட்டிகளும் பேச்சை செய்முறைப் படுத்த, விதிகளின் வரிசைப் பட்டியலைக் கொண்டிருக்கும். இவ்வுரையாடல், கூட்டுக, தொகுத்திடுக, நீக்குக, அனைத்தையும் நீக்குக ஆகிய பொத்தான்களையும் கொண்டிருக்கும்.

ஒரு விதியை கூட்ட, 'கூட்டுக' பொத்தானை அழுத்தி, உரையாடல் பெட்டியில் தோன்றும் களங்களை நிரப்பியவுடன், 'சரி' பொத்தானை அழுத்தவும். இதன் பிறகு, தாங்கள் கூட்டிய புதிய விதியை, விதிகளின் வரிசைப் பட்டியலில் காண்பீர்கள். தாங்கள் கூட்டியுள்ள விதி சேமிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய, கூட்டுக, தொகு ஆகிய பணிகள் முடிவடைந்தவுடன், 'சரி' பொத்தானை அழுத்தி, அகரமுதலி உரையாடல் பெட்டியை விட்டு முழுமையாக வெளியேறவும்.

பேச்சு அகரமுதலிகளின் விதிகள், எழுத்துகளின் ஒரு தொகுதியை மற்றொன்றாகப் பேச வைக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, 'பறவை' என்கிற சொல்லை எதிர்கொள்ளும் பொழுதெல்லாம், என்விடிஏ, அச்சொல்லை 'தவளை' என்று கூறுமாறு ஒரு விதியை தாங்கள் உருவாக்கலாம். இதைச் செய்ய, அகரமுதலியின் உரையாடல் பெட்டியில், 'வடிவவிதம்' எந்கிற தொகு களத்தில் 'பறவை' என்று தட்டச்சிடப்பட்டபிறகு, 'மாற்றமர்வு' என்கிற தொகு களத்தில் 'தவளை' என்று தட்டச்சிட்டு, 'சரி' பொத்தானை அழுத்தவும். தாங்கள் செய்துள்ள மாற்றத்தை, 'கருத்துரை' தொகு களத்தில் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, "'பறவை' என்கிற சொல் 'தவளை' என்று மாற்றப்பட்டுள்ளது" என்று குறிப்பிடலாம்.

சொற்களின் மாற்றமர்வுத் தவிர, இப்பேச்சு அகரமுதலிகள், மேலும் பல வலுவான கூறுகளைக் கொண்டுள்ளன. 'கூட்டுக' உரையாடல் பெட்டியில், தாங்கள் கூட்டும் விதி, வகையுணரியாக இருக்க வேண்டுமா என்று தீர்மானிக்க, ஒரு தேர்வுப் பெட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. இயல்பில், என்விடிஏ, எழுத்து வகையின் வேறுபாட்டைப் பிரித்துணர்வதில்லை.

இறுதியாக, தங்களின் வடிவவிதம், ஒரு முழுச் சொல்லா, எங்காயினும் பொருந்தக் கூடியதா, அல்லது சுருங்குறித்தொடரா என்பதை என்விடிஏவிற்கு அறிவுறுத்த, வானொலிப் பொத்தான்களின் தொகுதியொன்று கொடுக்கப்பட்டுள்ளது. முழுச் சொல் என்பதைத் தெரிவுச் செய்தால், ஒரு பெரியச் சொல்லின் பகுதியாக வடிவவிதம் அமையாத நிலையில் மட்டும்தான், அதற்கான மாற்றமர்வு செயற்படுத்தப்படும். எண், அடிக்கோடு, எழுத்து ஆகியவை தவிர, இடைவெளி, அல்லது பிற வரியுருக்களில் ஏதேனும் ஒன்று ஒரு சொல்லின் முன், அல்லது பின் அமைந்தால் மட்டும்தான் அது முழுச் சொல்லாகக் கருதப்படும். மேற்கூறிய எடுத்துக்காட்டில், முழுச் சொல் மாற்றமர்வைத் தாங்கள் தெரிவுச் செய்திருந்தால், , 'பறவைகள்', 'நீர்ப்பறவை' போன்ற சொற்கள் மாற்றப்பட மாட்டாது.

ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகளையோ, எண்களையோ, அல்லது வெறும் ஒற்றை எழுத்தினையோ ஒப்புநோக்கிக் காணப் பயன்படுத்தப்படும் குறியெழுத்துகளே 'சுருங்குறித்தொடர்' என்று அறியப்படுகிறது. சுருங்குறித்தொடர் குறித்து இப்பயனர் வழிகாட்டியில் விளக்கப்படவில்லை. அறிமுக பயிற்சிக்கு, பைத்தனின் சுருங்குறித்தொடர் பயனர் வழிகாட்டியைக் காணவும். தமிழ் விக்கிப்பீடியாவிலும் சுருங்குறித்தொடர் குறித்து ஒரு கட்டுரை உள்ளது.

நிறுத்தற்குறிகள்/குறியெழுத்துகளின் பலுக்கல்

நிறுத்தற் குறிகள்/குறியெழுத்துகள் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டுமென்பதையும், அவை எந்நிலையில் பேசப்பட வேண்டுமென்பதையும் கட்டுப்படுத்த இவ்வுரையாடல் பெட்டிப் பயன்படுகிறது.

எந்த மொழிக்காக குறியெழுத்துகளின் ஒலிப்பு தொகுக்கப்படுகிறது என்பதை உரையாடல் தலைப்பில் காண்பிக்கப்படும். என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பேச்சு அமைப்புகளில் இருக்கும் 'வரியுருக்களையும், குறியெழுத்துகளையும் கையாளும்பொழுது குரலின் மொழியை நம்புக' என்கிற விருப்பத் தேர்வினை இவ்வுரையாடல் மதிக்கிறது. அதாவது, இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்கும் பொழுது, என்விடிஏவின் முழுதளாவிய மொழி அமைப்புகளைப் பயன்படுத்தாமல், குரலின் மொழியைப் பயன்படுத்துகிறது.

ஒரு குறியெழுத்தின் பலுக்கலை மாற்ற, வரிசைப் பட்டியலில் அக்குறியெழுத்தை முதலில் தெரிவுச் செய்யவும். "இதைக் கொண்டு வடிகட்டுக" என்கிற தொகுகளத்தில் குறியெழுத்தின், அல்லது அதன் மாற்றமைவின் ஒரு பகுதியை தட்டச்சிடுவதன் மூலம், குறியெழுத்துகளை வடிகட்டித் தெரிவுச் செய்யலாம்.

'கூட்டுக' பொத்தானை அழுத்துவதன் மூலம், புதிய குறியெழுத்துகளை தாங்கள் சேர்க்கலாம். தோன்றும் உரையாடல் பெட்டியில், சேர்க்கப்பட வேண்டிய குறியெழுத்தினை உள்ளிட்டு, 'சரி' பொத்தானை அழுத்தவும். பிறகு, மற்ற குறியெழுத்துகளுக்குச் செய்வது போல, புதிய குறியெழுத்தின் களத்தையும் மாற்றவும்.

தாங்கள் ஏற்கெனவே சேர்த்துள்ள குறியெழுத்தினை நீக்க, 'நீக்குக' பொத்தானை அழுத்தவும்.

தாங்கள் மாற்றத்தை முடித்தவுடன், மாற்றங்களை சேமிக்க, 'சரி' பொத்தானை அழுத்தவும். மாற்றங்களை சேமிக்காமல் வெளியேற, 'விலக்குக' பொத்தானை அழுத்தவும்.

சிக்கலான குறியெழுத்துகளைப் பொறுத்தமட்டில், மாற்றமர்வுக் களம், ஒப்புநோக்கப்பட்ட உரையின் குழு மேற்கோள்களினை சேர்த்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒப்புநோக்கப்படவேண்டிய வடிவவிதம், ஒரு முழுத் தேதியாக இருக்கும்பட்சத்தில், மாற்றமர்வுக் களத்தில், \1, \2, மற்றும் \3 என்று தோன்ற வேண்டும். இப்படித் தோன்றினால் மட்டுமே, அவைகளுக்கேற்ற தேதியின் பகுதிகளால் மாற்றியமைக்கப்படும். இதன்படி, மாற்றமர்வுக் களத்தில் தோன்றும் பின்சாய்வுக் குறிகள், இரட்டிப்பாக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, "a\b" என்கிற மாற்றமர்வைப் பெற, "a\b" என்று தட்டச்சிட வேண்டும்.

உள்ளீட்டுச் சைகைகள்

என்விடிஏ கட்டளைகளில் பயன்படுத்தப்படும் விசைப்பலகை உள்ளீடுகள், பிரெயில் காட்சியமைவின் பொத்தான்கள் போன்றவைகளை இவ்வுரையாடல் பெட்டியில் தனிப்பயனாக்கலாம்.

உரையாடல் பெட்டித் தோன்றுவதற்கு உடனடியாக முன்னிருந்த நிலைக்குப் பொருத்தமான கட்டளைகள் மட்டுமே காண்பிக்கப்படும். எடுத்துக்காட்டாக, உலாவும் நிலைக்கான கட்டளைகளைத் தாங்கள் தனிப்பயனாக்க விரும்பினால், உலாவும் நிலையில் இருந்து கொண்டு, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைத் திறக்க வேண்டும்.

இவ்வுரையாடலில் இருக்கும் கிளை, பொருத்தமான எல்லா என்விடிஏ கட்டளைகளையும், வகைகளின் அடிப்படையில் குழுவாக்கிக் காண்பிக்கிறது. காண்பிக்கப்படும் கட்டளைகளை வடிகட்ட, கொடுக்கப்பட்டுள்ள தொகு களத்தில், கட்டளையின் பெயரில் இருக்கும் ஒன்று, அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட சொற்களைப் எவ்வரிசையிலும் உள்ளிடலாம். கட்டளையுடன் இணைக்கப்பட்டிருக்கும் சைகைகள், கட்டளையின் கீழ் பட்டியலிட்டுக் காண்பிக்கப்படும்.

ஒரு கட்டளைக்கு உள்ளீட்டுச் சைகையை இணைக்க விரும்பினால், அக்கட்டளையைத் தெரிவுச் செய்து, 'கூட்டுக' பொத்தானை அழுத்தவும். பிறகு, இணைக்க விரும்பும் சைகையை செயற்படுத்தவும். எடுத்துக்காட்டாக, விசைப்பலகையின் விசையை, அல்லது பிரெயில் காட்சியமைவின் பொத்தானை அழுத்தவும். பெரும்பாலான தருணங்களில், ஒரு சைகையை, ஒன்றிற்கும் மேற்பட்ட முறையில் வரையறுக்கலாம். எடுத்துக்காட்டாக, அழுத்தப்பட்டிருக்கும் உள்ளீட்டுச் சைகை, மேசைக்கணினி, அல்லது மடிக் கணினி போன்ற தற்போதைய விசைப்பலகைத் தளவமைப்பிற்கு மட்டும் வரையறுக்கலாம், அல்லது எல்லா விசைப்பலகைத் தளவமைப்புகளுக்கும் பொருந்துமாறு அமைக்கலாம். தங்களின் விருப்பத் தேர்வினைத் தெரிவுச் செய்ய, ஒரு பட்டியல் தோன்றும்.

ஒரு கட்டளையிடமிருந்து ஒரு சைகையை நீக்க, அச்சைகையைத் தெரிவுச் செய்து, 'நீக்குக' பொத்தானை அழுத்தவும்.

கணினி விசைப் பலகையின் விசைகளை ஒப்புருவாக்கத் தேவைப்படும் என்விடிஏ கட்டளைகளை, ஒப்புருவாக்கப்பட்ட கணினி விசைப் பலகை விசைகள் வகைமை கொண்டிருக்கும். தங்களின் பிரெயில் காட்சியமைவின் வாயிலாக கணினி விசைப் பலகையைக் கட்டுப்படுத்த, இந்த ஒப்புருவாக்கப்பட்டக் கணினி விசைப் பலகை விசைகளைப் பயன்படுத்தலாம். ஒரு ஒப்புருவாக்கப்பட்ட உள்ளீட்டுச் சைகையை சேர்க்க, ஒப்புருவாக்கப்பட்ட கணினி விசைப் பலகை விசைகள் வகைமையைத் தெரிவுச் செய்து, 'கூட்டுக' பொத்தானை அழுத்தவும். பிறகு, தாங்கள் ஒப்புருவாக்க விரும்பும் விசையை விசைப் பலகையில் அழுத்தவும். இதன் பிறகே, மேலே விளக்கியது போல, உள்ளீட்டுச் சைகையை இணைக்க, ஒப்புருவாக்கப்பட்டக் கணினி விசைப் பலகை பிசைகள் வகைமையில் விசைகள் கிடைக்கப்பெறும்.

குறிப்பு:

தாங்கள் மாற்றத்தை முடித்தவுடன், மாற்றங்களை சேமிக்க, 'சரி' பொத்தானை அழுத்தவும். மாற்றங்களை சேமிக்காமல் வெளியேற, 'விலக்குக' பொத்தானை அழுத்தவும்.

அமைவடிவத்தை சேமித்தல்/மீளேற்றம் செய்தல்

இயல்பில், என்விடிஏவை விட்டு வெளியேறும்பொழுது, அமைவடிவ மாற்றங்கள் தானாக சேமிக்கப்படுகிறது. குறிப்பு: ஆனால், இவ்விருப்பத் தேர்வினை, விருப்பங்கள் உட்பட்டியலில் இருக்கும் பொது அமைப்புகள் உரையாடலில் மாற்றியமைக்கலாம். எத்தருணத்திலும் தாங்களே அமைவடிவத்தை சேமிக்க, என்விடிஏ பட்டியலில் இருக்கும் 'அமைவடிவத்தை சேமித்திடுக' உருப்படியின் மீது உள்ளிடு விசையை அழுத்தவும்.

அமைவடிவத்தில் தவறு செய்துவிட்டு, அதிலிருந்து மீள நினைத்தால், என்விடிஏ பட்டியலில் இருக்கும் 'சேமிக்கப்பட்டுள்ள அமைவடிவத்திற்குத் திரும்பிச் செல்க' உருப்படியின் மீது உள்ளிடு விசையை அழுத்தவும். என்விடிஏ பட்டியலிலுள்ள 'அமைவடிவத்தைத் தொழிற்சாலை இயல்பிற்கு மாற்றியமைத்திடுக' உருப்படியின் மீது உள்ளிடு விசையை அழுத்துவதன் மூலமும், தங்களின் அமைப்புகளைத் தொழிற்சாலை இயல்பிற்கு மாற்றியமைக்கலாம்.

கீழ்வரும் என்விடிஏ விசைக் கட்டளைகளும் பயன்படும்:

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை விளக்கம்
அமைவடிவத்தை சேமித்திடுக என்விடிஏ+கட்டுப்பாடு+c என்விடிஏ+கட்டுப்பாடு+c என்விடிஏவை விட்டு வெளியேறும்பொழுது, அமைவடிவத்தை இழக்காமலிருக்க, தற்போதைய அமைவடிவத்தை சேமிக்கும்
சேமிக்கப்பட்டுள்ள அமைவடிவத்திற்குத் திரும்பிச் செல்க என்விடிஏ+கட்டுப்பாடு+r என்விடிஏ+கட்டுப்பாடு+r ஒரு முறை அழுத்தினால், அண்மையில் சேமிக்கப்பட்ட அமைவடிவத்திற்குத் திரும்பிச் செல்லும். மும்முறை அழுத்தினால், அமைவடிவத்தைத் தொழிற்சாலை இயல்பிற்கு மாற்றியமைக்கும்.

அமைவடிவ தனியமைப்புகள்

சில தருணங்களில், மாறுபட்ட சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபட்ட அமைப்புகளை வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். எடுத்துக்காட்டாக, ஒரு ஆவணத்தைத் தொகுக்கும் பொழுதோ, அதிலுள்ள பிழைகளை சரிபார்க்கும் பொழுதோ, ஓரச் சீர்மையை அறிவிக்கும் வசதியை முடுக்கிவிட விரும்புவீர்கள். அமைவடிவ தனியமைப்புகளைக் கொண்டு இதை செய்ய என்விடிஏ அனுமதிக்கிறது.

ஒரு தனியமைப்பு தொகுக்கப்படும்பொழுது ஏற்படுத்தப்படும் அமைப்புகளின் மாற்றங்களை மட்டுமே அமைவடிவ தனியமைப்பு தன்னுள் கொண்டிருக்கும். என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் என்விடிஏ முழுமைக்கும் செயல்படும் பொது வகைமையைத் தவிர, பெரும்பாலான பிற அமைப்புகளை அமைவடிவ தனியமைப்புகளில் மாற்றிக் கொள்ளலாம்.

ஒரு உரையாடலை, அல்லது தனிப்பயனாக்கப்பட்டச் சைகைகளைக் கொண்டு அமைவடிவ அமைப்புகளை கைமுறையில் இயங்கச் செய்யலாம். ஒரு பயன்பாட்டிற்கு மாறுவது போன்ற தூண்டுதல்களினாலும், அவைகளைத் தானாக இயங்கச் செய்யலாம்.

அடிப்படை மேலாண்மை

என்விடிஏ பட்டியலில் காணப்படும் 'அமைவடிவ தனியமைப்புகள்' உருப்படியைத் தெரிவுச் செய்வதின் மூலம், அமைவடிவ தனியமைப்புகளைத் தாங்கள் மேலாளுகிறீர்கள். தாங்கள் ஒரு விசைக் கட்டளையைக் கொண்டும் இதை செய்யலாம்.

இவ்வுரையாடலின் முதல் கட்டுப்பாடாக இருப்பது தனியமைப்புகளின் வரிசைப் பட்டியலாகும். இப்பட்டியலிலிருந்து ஒரு தனியமைப்பைத் தாங்கள் தெரிவுச் செய்து கொள்ளலாம். உரையாடலைத் தாங்கள் திறந்தவுடன், தாங்கள் தற்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கும் தனியமைப்பு தெரிவுச் செய்யப்படும். இயக்கத்திலிருக்கும் தனியமைப்பிற்கான கூடுதல் தகவலையும் இவ்வுரையாடல் காண்பிக்கும். இயக்கத்திலிருக்கும் தனியமைப்பு, கைமுறையில் இயக்கப்பட்டதா, தூண்டப்பட்டதா, அல்லது தற்பொழுது தொகுக்கப்படுகிறதா போன்ற தகவல்களை காண்பிக்கும்.

ஒரு தனியமைப்பை மறுபெயரிட, அல்லது அழிக்க, முறையே மறுபெயரிடுக, அல்லது அழித்திடுக பொத்தானை அழுத்தவும்.

உரையாடலை மூட, 'மூடுக' பொத்தானை அழுத்தவும்.

தனியமைப்பை உருவாக்குதல்

ஒரு தனியமைப்பை உருவாக்க, 'புதிது' பொத்தானை அழுத்தவும்.

'புதிய தனியமைப்பு' உரையாடலில், தனியமைப்பிற்கான பெயரைத் தாங்கள் உள்ளிடலாம். இத்தனியமைப்பு எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டுமென்பதையும் தாங்கள் தெரிவுச் செய்யலாம். இத்தனியமைப்பைத் தாங்கள் கைமுறையில் மட்டுமே பயன்படுத்த விரும்பினால், இயல்பில் அமைந்திருக்கும் 'கைமுறை இயக்கம்' வானொலிப் பொத்தானைத் தெரிவுச் செய்யவும். கைமுறையில் இயக்க விரும்பவில்லையென்றால், இத்தனியமைப்பைத் தானாக இயங்கச் செய்யும் தூண்டுதலின் பெயரைக் கொண்டிருக்கும் வானொலிப் பொத்தானைத் தெரிவுச் செய்யவும். தனியமைப்பின் பெயரைத் தாங்கள் குறிப்பிடவில்லை என்றால், தூண்டுதலின் பெயரைக் கொண்டிருக்கும் வானொலிப் பொத்தானைத் தெரிவுச் செய்யும் பொழுது, தனியமைப்பின் பெயரும் தக்கவாறு நிரப்பப்படும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. தூண்டுதல்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, கீழே காணவும்.

'சரி' பொத்தானை அழுத்தியவுடன், தனியமைப்பு உருவாக்கப்பட்டு, தாங்கள் அத்தனியமைப்பைத் தொகுக்க வசதியாக 'அமைவடிவ தனியமைப்புகள்' உரையாடல் மூடப்படும்.

கைமுறை இயக்கம்

ஒரு தனியமைப்பைத் தெரிவுச் செய்து, 'கைமுறையில் இயக்குக' பொத்தானை அழுத்துவதன் மூலம், அத்தனியமைப்பை கைமுறையில் இயங்கச் செய்யலாம். இயங்கச் செய்த பின்னரும் கூட, தூண்டுதல்களினால் பிற தனியமைப்புகளும் இயக்கப் படலாம். இருந்தாலும், கைமுறையில் இயக்கப்பட்டிருக்கும் தனியமைப்பின் அமைப்புகளுக்கு முன்னுரிமை அளித்த பின்னரே, தூண்டுதல்களினால் செயற்படும் தனியமைப்புகளின் அமைப்புகள் செயற்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, தற்போதைய பயன்பாட்டிற்கான தனியமைப்பு தூண்டப்பட்ட நிலையில், அத்தனியமைப்பில் தொடுப்புகளை அறிவிக்கும் வசதி முடுக்கப்பட்டிருந்து, கைமுறையில் இயக்கப்பட்ட தனியமைப்பில் தொடுப்புகளை அறிவிக்கும் வசதி முடக்கப்பட்டிருந்தால், என்விடிஏ தொடுப்புகளை அறிவிக்காது. ஆனால், தூண்டப்பட்டிருக்கும் தனியமைப்பில் குரலைத் தாங்கள் மாற்றியிருந்து, கைமுறையில் இயக்கப்பட்டிருக்கும் தனியமைப்பில் குரலை மாற்றியிருக்கவில்லை எனில், தூண்டப்பட்ட தனியமைப்பின் குரல் பயன்படுத்தப்படும். தாங்கள் மாற்றிய அமைப்புகள், கைமுறையில் இயக்கப்பட்ட தனியமைப்பில் சேமிக்கப்படும். கைமுறையில் இயக்கப்பட்ட தனியமைப்பின் இயக்கத்தை நிறுத்த, அத்தனியமைப்பை அமைவடிவ தனியமைப்புகள் உரையாடலில் தெரிவுச் செய்து, 'கைமுறை இயக்கத்தை நிறுத்துக' பொத்தானை அழுத்தவும்.

தூண்டுதல்கள்

தனியமைப்புகள் உரையாடலில் காணப்படும் 'தூண்டுதல்கள்' பொத்தானை அழுத்துவது, பலதரப்பட்ட தூண்டுதல்களினால் தானாக இயக்கப்பட வேண்டிய தனியமைப்புகளை மாற்றியமைக்க அனுமதிக்கிறது.

தூண்டுதல்களின் பட்டியல், கிடைப்பிலிருக்கும் தூண்டுதல்களை காண்பிக்கும். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஒரு தூண்டுதலுக்குத் தானாக செயற்பட வேண்டிய தனியமைப்பை மாற்ற, முதலில் தூண்டுதலைத் தெரிவுச் செய்து கொண்டு, தோன்றும் வரிசைப் பட்டியலில் காணப்படும் தனியமைப்புகளில் ஒன்றைத் தெரிவுச் செய்யவும். எத்தனியமைப்பையும் தாங்கள் பயன்படுத்த விரும்பவில்லையென்றால், இயல்பான அமைவடிவத்தைத் தெரிவுச் செய்யவும்.

அமைவடிவ தனியமைப்புகள் உரையாடலுக்குத் திரும்ப, 'மூடுக' பொத்தானை அழுத்தவும்.

தனியமைப்பைத் தொகுத்தல்

ஒரு தனியமைப்பை கைமுறையில் தாங்கள் இயக்கியிருந்தால், அமைப்புகளில் தாங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு மாற்றமும், அத்தனியமைப்பில் சேமிக்கப்படும். எத்தனியமைப்பும் கைமுறையில் இயக்கப்படாத தருணத்தில், அமைப்புகளில் தாங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு மாற்றமும், மிக அண்மையில் தூண்டப்பட்டிருக்கும் தனியமைப்பில் சேமிக்கப்படும். எடுத்துக்காட்டாக, நோட்பேட் பயன்பாட்டிற்கு ஒரு தனியமைப்பைத் தாங்கள் இணைத்திருந்து, நோட்பேடிற்குத் தாங்கள் மாறினால், அமைப்புகளில் தாங்கள் செய்யும் மாற்றங்கள் அத்தனியமைப்பில் சேமிக்கப்படும். இறுதியாக, கைமுறையில் இயக்கப்பட்ட, அல்லது தூண்டப்பட்ட தனியமைப்பு ஏதுமில்லாதபொழுது, அமைப்புகளில் தாங்கள் மேற்கொள்ளும் மாற்றங்கள், இயல்பான அமைவடிவத்தில் சேமிக்கப்படும்.

எல்லாம் படித்தலுக்கு இணைக்கப்பட்டிருக்கும் தனியமைப்பைத் தாங்கள் தொகுக்க வேண்டுமானால், அத்தனியமைப்பை கைமுறையில் தொகுக்க வேண்டும்.

தூண்டுதல்களைத் தற்காலிகமாக முடக்குதல்

சில தருணங்களில், எல்லாத் தூண்டுதல்களையும் தற்காலிகமாக முடக்குவது பயனளிப்பதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, தூண்டுதல்களின் இடையூறு இல்லாமல், கைமுறையில் இயக்கப்பட்ட தனியமைப்பையோ, இயல்பான அமைவடிவத்தையோ தாங்கள் தொகுக்க விரும்புவீர்கள். இதைச் செய்ய, அமைவடிவ தனியமைப்புகள் உரையாடலில் காணப்படும் 'எல்லாத் தூண்டுதல்களையும் தற்காலிகமாக முடக்குக' தேர்வுப் பெட்டியைத் தேர்வுச் செய்யவும்.

தூண்டுதல்களை எங்கிருந்தாயினும் மாற்றியமைக்க, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

உள்ளீட்டுச் சைகைகளைக் கொண்டு தனியமைப்பை இயக்குதல்

தாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு தனியமைப்பையும் இயக்க, ஒன்று, அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட உள்ளீட்டுச் சைகைகளை தங்களால் அதற்கு ஒதுக்க இயலும். தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட உள்ளீட்டுச் சைகைகளை அமைவடிவத் தனியமைப்புகள் இயல்பில் கொண்டிருக்காது. உள்லீட்டுச் சைகைகள் உரையாடலைக் கொண்டு, சைகைகளை இணைப்பதன் மூலம், தங்களால் ஒரு தனியமைப்பை இயக்க இயலும். இவ்வுரையாடலில் காணப்படும் அமைவடிவத் தனியமைப்புகள் வகைமையின் கீழ் ஒவ்வொரு தனியமைப்பிற்குமான விசை ஒதுக்கீடுகள் அமைந்திருக்கும். ஒரு தனியமைப்பின் பெயரை தாங்கள் மாற்றியமைத்தாலும், அத்தனியமைப்பிற்கு தாங்கள் ஏற்கெனவே இணைத்திருக்கும் சைகைகள் மாறாமல் இருக்கும். ஒரு தனியமைப்பை நீக்கினால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சைகைகளும் அழிக்கப்படும்.

அமைவடிவ கோப்புகளின் அமைவிடம்

ஒரு பயனரின் அமைப்புகள், தனிப்பயனாக்கப்பட்ட நிரற்கூறுகள் போன்றவைகளை, என்விடிஏ அடைவில் இருக்கும் UserConfig என்கிற கோப்புறையில் என்விடிஏவின் கொண்டுசெல்லத்தக்கப் பதிப்புகள் சேமித்து வைத்திருக்கும்.

ஒரு பயனரின் அமைப்புகள், தனிப்பயனாக்கப்பட்ட நிரற்கூறுகள் போன்றவைகளை, தங்களின் சாளர பயனர் தனியமைப்பில் இருக்கும் ஒரு சிறப்பு அடைவில் என்விடிஏவின் நிறுவிப் பதிப்புகள் சேமிக்கின்றன. இதன்மூலம் அறிவது என்னவென்றால், கணினியைப் பயன்படுத்தும் ஒவ்வொருப் பயனரும், தன்னுடையத் தனிப்பட்ட அமைப்புகளைப் பயன்படுத்தலாம். தங்கள் அமைப்புகளின் அடைவினை எங்கிருந்தாயினும் திறக்க, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலுக்குச் சென்று, தனிபயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும். கூடுதலாக, என்விடிஏ நிறுவியில், தங்களுக்கென்று இருக்கும் தனிப்பட்ட அமைப்புகளுக்குச் செல்ல, துவக்குப் பட்டியலில் இங்குச் செல்லவும்: programs -> NVDA -> explore user configuration directory.

புகுபதிவு, பயனர் கணக்குக் கட்டுப்பாடு சாளரங்களில் பயன்படுத்தப்படும் அமைப்புகள், என்விடிஏவின் நிறுவு அடைவின் கீழிருக்கும் SystemConfig அடைவில் சேமிக்கப்பட்டிருக்கும். இவ்வமைப்புகளை, போதுமான காரணமின்றி தாங்கள் மாற்றியமைக்கக் கூடாது. புகுபதிவு, பயனர் கணக்குக் கட்டுப்பாடு சாளரங்களில் என்விடிஏவின் அமைப்புகளை மாற்ற, முதலில் விண்டோஸ் சாளரத்தில் என்விடிஏவைத் தங்களின் விருப்பத்திற்கேற்ப அமைவடிவமாக்கி சேமியுங்கள். பிறகு, என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பொது வகைமைக்குச் சென்று, "சாளரப் புகுபதிவு, பிற பாதுகாப்பானத் திரைகளில் தற்போதைய அமைப்புகளைப் பயன்படுத்துக" பொத்தானை அழுத்தி, இவ்வமைப்புகளைப் படியெடுக்கவும்.

நீட்சிநிரல்களும் நீட்சிநிரல் அங்காடியும்

நீட்சிநிரல்கள் என்பது என்விடிஏவிற்கு புதிய, அல்லது மாற்றப்பட்ட செயல்திறனை வழங்கும் நிரல் தொகுதிகளாகும். என்விடிஏ சமூகமும், வணிக விற்பனையாளர்கள் போன்ற வெளியமைப்புகளும் இவைகளை உருவாக்குகின்றனர். பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றை நீட்சிநிரல்கள் செய்யலாம்:

நீட்சிநிரல் தொகுதிகளை உலாவித் தேடவும், அவைகளை மேலாளவும் நீட்சிநிரல் அங்காடி தங்களை அனுமதிக்கிறது. நீட்சிநிரல் அங்காடியில் கிடைக்கப்பெறும் எல்லா நீட்சிநிரல்களையும் இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம். இருப்பினும், அவைகளில் சில நீட்சிநிரல்கள், உரிமத்திற்காகவும், கூடுதல் மென்பொருளுக்காகவும் அவைகளை பயன்படுத்துவதற்குமுன் பயனர்களை கட்டணம் கட்டச் சொல்லலாம். வணிக பேச்சொலிப்பான்கள் இவ்வகை நீட்சிநிரலுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். கட்டணமடங்கிய நீட்சிநிரலைத் தாங்கள் நிறுவிய பிறகு, அதைப் பயன்படுத்துவதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து ஏற்பட்டால், அந்நீட்சிநிரலை எளிதாக நிறுவுநீக்கம் செய்துவிடலாம்.

என்விடிஏ பட்டியலிலுள்ள 'கருவிகள்' உட்பட்டியலுக்குச் சென்று நீட்சிநிரல் அங்காடியை அணுகலாம். நீட்சிநிரல் அங்காடியை எங்கிருந்தாயினும் அணுக, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலுக்குச் சென்று, தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

நீட்சிநிரல்களை உலாவித் தேடுதல்

நீட்சிநிரல் அங்காடி திறக்கப்பட்டவுடன், நீட்சிநிரல்களின் பட்டியலொன்றை அது காட்டும். இதுவரை தாங்கள் எந்த நீட்சிநிரலையும் நிறுவியிருக்கவில்லையென்றால், நிறுவுவதற்காக கிடைப்பிலிருக்கும் நீட்சிநிரல்களின் பட்டியலுடன் நீட்சிநிரல் அங்காடி திறக்கும். நீட்சிநிரல்களைத் தாங்கள் நிறுவியிருந்தால், நிறுவப்பட்டிருக்கும் நீட்சிநிரல்களை இப்பட்டியல் காட்டிடும்.

மேலம்பு, கீழம்பு விசைகளைப் பயன்படுத்தி, ஒரு நீட்சிநிரலைத் தாங்கள் தெரிவுச் செய்தால், அந்நீட்சிநிரலுக்கான தகவல் காட்டப்படும். நிறுவுக, உதவி, முடக்குக, நீக்குக போன்ற தொடர்புடைய செயல்களை நீட்சிநிரல்கள் கொண்டுள்ளன. இவைகளை செயல்கள் பட்டியலின் வாயிலாக அணுகலாம். ஒரு நீட்சிநிரல் நிறுவப்பட்டிருக்கிறதா, அல்லது நிறுவப்படாமலிருக்கிறதா என்பதையும், அது முடுக்கப்பட்டிருக்கிறதா, அல்லது முடக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் பொறுத்து, கிடைப்பிலிருக்கும் செயல்கள் மாறுபடும்.

நீட்சிநிரல் பட்டியல் காட்சிகள்

கிடைப்பிலிருக்கும், நிறுவப்பட்டிருக்கும், இற்றாக்கக்கூடிய, இணக்கமற்ற நீட்சிநிரல்களுக்கென்று தனித்தனியே பட்டியல் காட்சிகள் உள்ளன. நீட்சிநிரலின் காட்சியை மாற்றியமைக்க, கட்டுப்பாடு+தத்தல், அல்லது கட்டுப்பாடு+மாற்றழுத்தி+தத்தல் விசையை அழுத்தி, தேவைப்படும் பட்டியல் காட்சியை செயலுக்குக் கொண்டுவரலாம். தத்தல் விசையை அழுத்தி கீற்றுக் கட்டுப்பாட்டிற்குச் சென்று, இடதம்பு, அல்லது வலதம்பு விசையைப் பயன்படுத்தி, பட்டியல் காட்சியை மாற்றியமைக்கலாம்.

முடுக்கப்பட்ட, அல்லது முடக்கப்பட்ட நீட்சிநிரல்களுக்கான வடிகட்டுதல்

நிறுவப்படும் நீட்சிநிரல்கள் பொதுவாக முடுக்கப்பட்டிருக்கும் என்பதால், அவை என்விடிஏவில் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்று பொருள்கொள்ளலாம். ஆனால், நிறுவப்பட்டிருக்கும் தங்களின் சில நீட்சிநிரல்கள் முடக்கப்பட்ட நிலைக்கு அமைக்கப்பட்டிருக்கலாம். அதாவது, இதுபோன்ற நீட்சிநிரல்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்பதோடு, என்விடிஏவில் அவைகளின் செயல்களும் கிடைப்பிலிருக்காது. வேறொரு நீட்சிநிரல், அல்லது ஒரு பயன்பாட்டுடன் முரண்படுகிறது என்று கருதி ஒரு நீட்சிநிரலை தாங்கள் முடக்கியிருக்கலாம். என்விடிஏவை இற்றாக்கும்பொழுது சில நீட்சிநிரல்கள் இணக்கமற்றவையாகிவிடும் என்கிற நிலையில், அதுகுறித்து எச்சரிக்கப்பட்டு, அந்நீட்சிநிரல்கள் முடுக்கப்படும். நீண்ட காலத்திற்கு தேவைப்படாது என்றபோதிலும், எதிர்காலத்தில் அவை தேவைப்படலாம் என்று கருதி, சில நீட்சிநிரல்களை நிறுவுநீக்காமல் அவைகளை தாங்கள் முடக்கியிருக்கலாம்.

நிறுவப்பட்டுள்ள மற்றும் இணக்கமற்ற நீட்சிநிரல்களை, அவைகளின் முடுக்கப்பட்ட, அல்லது முடக்கப்பட்ட நிலையைக் கொண்டு பட்டியலில் வடிகட்டலாம். முடுக்கப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட நீட்சிநிரல்கள் இரண்டும் இயல்பில் காட்டப்படுகின்றன.

இணக்கமற்ற நீட்சிநிரல்களை சேர்த்துக்கொள்ளவும்

இணக்கமற்ற நீட்சிநிரல்களை சேர்த்துக்கொள்ள, நிறுவுவதற்காக கிடைப்பிலிருக்கும் மற்றும் இற்றாக்கக்கூடிய நீட்சிநிரல்களை வடிகட்டலாம்.

அலைத்தடத்தின்படி நீட்சிநிரல்களை வடிகட்டவும்

பின்வரும் நான்கு அலைத்தடங்கள் வரை நீட்சிநிரல்களை வழங்கலாம்:

குறிப்பிட்ட அலைத்தடத்திற்கான நீட்சிநிரல்களை மட்டும் பட்டியலிட, அலைத்தட வடிகட்டியில் தெரிவினை மாற்றியமைக்கவும்.

நீட்சிநிரல்களைத் தேடுதல்

நீட்சிநிரல்களைத் தேட, 'தேடுக' உரைப் பெட்டியைப் பயன்படுத்தவும். இப்பெட்டிக்குச் செல்ல, நீட்சிநிரல்களின் பட்டியலிலிருந்து மாற்றழுத்தி+தத்தல் விசையை அழுத்தவும். தாங்கள் கண்டறிய விரும்பும் நீட்சிநிரலின் ஓரிரு குறிச்சொற்களை தட்டச்சு செய்து, தத்தல் விசையை அழுத்தி நீட்சிநிரல் பட்டியலுக்குச் செல்லவும். தாங்கள் தட்டச்சு செய்த குறிச்சொற்கள், நீட்சிநிரல்களின் அடையாளம், பெயர், அவைகளின் பதிப்பாளர்/படைப்பாளர் பெயர், அல்லது விளக்கம் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றில் கண்டறியப்பட்டால்கூட, அந்நீட்சிநிரல்கள் பட்டியலிடப்படும்.

நீட்சிநிரல் செயல்கள்

நிறுவுதல், உதவி, முடக்குதல், நீக்குதல் போன்ற தொடர்புடையச் செயல்களை நீட்சிநிரல்கள் கொண்டுள்ளன. பட்டியலில் இருக்கும் ஒரு நீட்சிநிரலுக்கான மேற்கூறிய செயல்களை அணுக, அந்நீட்சிநிரலின் மீது 'பயன்பாடுகள்', 'உள்ளிடு', வலது சொடுக்கு, அல்லது இரட்டை சொடுக்கு விசையை அழுத்தலாம். தெரிவுச் செய்யப்பட்டிருக்கும் நீட்சிநிரலுக்கான விளக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 'செயல்கள்' பொத்தான் வாயிலாகவும் இப்பட்டியலை அணுகலாம்.

நீட்சிநிரல்களை நிறுவுதல்

என்விடிஏ நீட்சிநிரல் அங்காடியில் ஒரு நீட்சிநிரல் கிடைப்பிலிருக்கிறது என்பதால் மட்டுமே, என்வி அக்ஸஸ், அல்லது வேறொருவரால் அந்நீட்சிநிரல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அல்லது சரிபார்க்கப்பட்டுள்ளது என்று பொருளல்ல. தாங்கள் நம்பும் ஆதாரங்களிலிருந்து பெறப்படும் நீட்சிநிரல்களை மட்டுமே நிறுவவேண்டும் என்பது மிக தலையானதாகும். என்விடிஏவினுள் நீட்சிநிரல்களின் செயல்பாடு கட்டுப்பாடற்றதாக இருக்கும். தங்களின் தனிப்பட்ட தரவு, அல்லது முழு கணினியையும் அணுகுவதும் இதில் அடங்கும்.

கிடைப்பிலிருக்கும் நீட்சிநிரல்களை உலாவித் தேடி, நீட்சிநிரல்களை நிறுவலாம் என்பதோடு அவைகளையும் இற்றைப்படுத்தலாம். கிடைப்பிலிருக்கும், அல்லது இற்றாக்கக்கூடிய நீட்சிநிரல்களின் பட்டியலிலிருந்து ஒரு நீட்சிநிரலை தெரிவுச் செய்யவும். பிறகு, நிறுவுதலைத் தொடங்க, இற்றாக்கம், நிறுவுதல், அல்லது மாற்றமர்வு செயல்களில் ஒன்றைச் செயற்படுத்தவும்.

ஒரே நேரத்தில் பல நீட்சிநிரல்களையும் தாங்கள் நிறுவலாம். இதைச் செய்ய, கிடைப்பிலிருக்கும் நீட்சிநிரல்கள் கீற்றில் தேவைப்படும் நீட்சிநிரல்களைத் தெரிவுச் செய்து, சூழலுணர்ப் பட்டியலைத் தோற்றுவித்து, அதிலிருக்கும் 'தெரிவுச் செய்யப்பட்டிருக்கும் நீட்சிநிரல்களை நிறுவுக' உருப்படியை இயக்கவும்.

நீட்சிநிரல் அங்காடிக்கு வெளியேயிருந்து தாங்கள் பெற்றிருக்கும் நீட்சிநிரலை நிறுவ, 'வெளிப்புற ஆதாரத்திலிருந்து நிறுவுக' பொத்தானை அழுத்தவும். தங்கள் கணினியில், அல்லது பிணையத்தில் எங்கோ இருக்கும் நீட்சிநிரல் தொகுப்பை உலாவித் தேட தங்களை இது அனுமதிக்கிறது. நீட்சிநிரல் தொகுப்பினைத் தாங்கள் திறந்தவுடன், நிறுவுதல் தொடங்கும்.

என்விடிஏ தங்கள் கணினியில் நிறுவப்பட்டு இயக்கத்திலிருந்தால், உலாவி, அல்லது அடைவிலிருந்து ஒரு நீட்சிநிரல் தொகுப்பை நேரடியாகத் திறந்து நிறுவலாம்.

வெளிப்புற ஆதாரத்திலிருந்து ஒரு நீட்சிநிரல் நிறுவப்படும்பொழுது, நிறுவுதலை உறுதிசெய்ய தாங்கள் கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். நிறுவப்பட்டவுடன், நீட்சிநிரல் செயல்பட என்விடிஏ மறுதுவக்கப்பட வேண்டும். இருப்பினும், பிற நீட்சிநிரல்களைத் தாங்கள் நிறுவ வேண்டியிருந்தாலோ, இற்றைப்படுத்த வேண்டியிருந்தாலோ, மறுதுவக்கத்தை தாங்கள் ஒத்திவைக்கலாம்.

இயல்பில், என்விடிஏ துவங்கியவுடன், நீட்சிநிரல்களுக்கான இற்றாக்கங்கள் ஏதேனும் கிடைப்பிலிருந்தால் தங்களுக்கு அறிவிக்கப்படும். இத்தன்மைக் குறித்து மேலும் அறியவும், அதை அமைவடிவமாக்கவும், "இற்றாக்க அறிவிக்கைகள்" பிரிவைக் காணவும்.

நீட்சிநிரல்களை நீக்குதல்

ஒரு நீட்சிநிரலை நீக்க, அந்நீட்சிநிரலைத் தெரிவுச் செய்து, 'நீக்குக' செயலைப் பயன்படுத்தவும். நீக்குதலை உறுதிசெய்யுமாறு என்விடிஏ தங்களை கேட்கும். நிறுவுதலைப் போலவே, நீட்சிநிரல் முழுமையாக நீக்கப்படவும் என்விடிஏ மறுதுவக்கப்படவேண்டும். அதுவரை, பட்டியலில் அந்நீட்சிநிரலின் நிலை, 'நீக்கம் நிலுவையிலுள்ளது' என்று காண்பிக்கப்படும். நிறுவுதல் போலவே, ஒரே நேரத்தில் பல நீட்சிநிரல்களையும் தாங்கள் நீக்கலாம்.

நீட்சிநிரல்களை முடுக்குதலும், முடக்குதலும்

ஒரு நீட்சிநிரலை முடக்க, 'முடக்குக' செயலைப் பயன்படுத்தவும். முன்னதாக முடக்கப்பட்ட நீட்சிநிரலை முடுக்க, 'முடுக்குக' செயலைப் பயன்படுத்தவும். ஒரு நீட்சிநிரலின் நிலை 'முடுக்கப்பட்டுள்ளது' என்று காண்பிக்கப்பட்டால், அதை முடக்கலாம், அதுபோலவே, 'முடக்கப்பட்டுள்ளது' என்று காண்பிக்கப்பட்டால், அதை முடுக்கலாம். ஒவ்வொரு முடுக்குதல் முடக்குதல் செயலுக்கும், என்விடிஏ மறுதுவக்கப்பட்டவுடன் நீட்சிநிரல் என்னவாகும் என்பதைக் காட்ட, பட்டியலில் அதன் நிலை மாற்றி காண்பிக்கப்படும். முடக்கப்பட்ட நீட்சிநிரலை முடுக்கினால், அதன் நிலை, 'மறுதுவக்கப்பட்டவுடன் முடுக்கப்படும்' என்று காண்பிக்கப்படும். அதுபோலவே, முடுக்கப்பட்ட நீட்சிநிரலை முடக்கினால், அதன் நிலை, 'மறுதுவக்கப்பட்டவுடன் முடக்கப்படும்' என்று காண்பிக்கப்படும். நிறுவுதல், நீக்குதல் செயல்களுக்குப் பிறகு என்விடிஏ மறுதுவக்கப்படுவதுபோலவே, முடுக்குதல், முடக்குதல் செயல்களும் செயற்பட என்விடிஏ மறுதுவக்கப்படவேண்டும். ஒரே நேரத்தில் பல நீட்சிநிரல்களைத் தாங்கள் முடுக்கலாம், அல்லது முடக்கலாம். இதற்கு, கிடைப்பிலிருக்கும் நீட்சிநிரல்கள் கீற்றில் தாங்கள் விரும்பும் நீட்சிநிரல்களைத் தெரிவுச் செய்து, சூழலுணர்ப் பட்டியலைத் தோற்றுவித்து, முடுக்குக உருப்படி, அல்லது முடக்குக உருப்படியை தேவைக்கேற்ப இயக்கவும்.

நீட்சிநிரல்களை மதிப்பாய்வு செய்தல் மற்றும் மதிப்பாய்வுகளைப் படித்தல்

ஒரு நீட்சிநிரலை தாங்கள் நிறுவும் முன், அல்லது அதைப் பயன்படுத்தக் கற்றுகொண்டிருக்கும்பொழுது, அதுகுறித்த அனுபவம்கொண்ட மற்றவர்களின் மதிப்பாய்வுகளைப் படிக்க விரும்புவீர்கள். மேலும், தாங்கள் பயன்படுத்திப் பார்த்திருக்கும் நீட்சிநிரல்கள் குறித்து மற்றவர்களுக்கு தாங்கள் பின்னூட்டமளிப்பது அவர்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு நீட்சிநிரல் குறித்த மதிப்பாய்வுகளைப் படிக்க, அதைத் தெரிவுச் செய்து, சூழலுணர்ப் பட்டியலைத் தோற்றுவித்து, 'சமூக மதிப்பாய்வுகள்' உருப்படியை இயக்கவும். கிட்ஹப் உரையாடல் இணையப் பக்கத்திற்கு உடனே அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு, நீட்சிநிரல் குறித்த மற்றவர்களின் மதிப்பாய்வுகளைப் படிக்கலாம், தங்களின் மதிப்பாய்வையும் எழுதலாம். நீட்சிநிரல் மேம்படுத்துநர்களுடனான நேரடி தொடர்புக்கு இது மாற்றாக இல்லை என்பதை கவனிக்கவும். மாறாக, ஒரு நீட்சிநிரல் பிற பயனர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமா என்பதை அவர்கள் அறிந்துகொள்ள, பின்னூட்டத்தைப் பகிர்வதுதான் இவ்வசதியின் நோக்கமாகும்.

இணக்கமற்ற நீட்சிநிரல்கள்

சில பழைய நீட்சிநிரல்கள், தங்களிடமிருக்கும் என்விடிஏவின் பதிப்பிற்கு இணக்கமற்றதாக இருக்கும். அதுபோலவே, பழைய என்விடிே பதிப்பை தாங்கள் கொண்டிருந்தால், சில புதிய நீட்சிநிரல்கள் அதற்கு இணக்கமற்றதாக இருக்கும். இணக்கமற்ற நீட்சிநிரலை தாங்கள் நிறுவ முயன்றால், அந்நீட்சிநிரல் ஏன் இணக்கமற்றதாகக் கருதப்படுகிறது என்று விளக்கும் ஒரு பிழைச் செய்தி தோன்றும்.

பழைய நீட்சிநிரல்கள் இணக்கமற்றவையாக இருப்பினும், அவைகளை தங்கள் சொந்தப் பொறுப்பில் நிறுவிக்கொள்ளலாம். இணக்கமற்ற நீட்சிநிரல்கள் தங்கள் என்விடிஏ பதிப்பில் செயல்படாதிருக்கலாம் என்பதோடு, செயலிழப்பு உட்பட நிலையற்ற, அல்லது எதிர்பாராத தன்மையை என்விடிஏவில் ஏற்படுத்தலாம். ஒரு நீட்சிநிரலை நிறுவும்பொழுது, முடுக்கும்பொழுது, இணக்கமின்மையை புறக்கணிக்கலாம். இணக்கமற்ற நீட்சிநிரல் பின்னர் சிக்கலை ஏற்படுத்தினால், அதை தாங்கள் முடக்கலாம், அல்லது நீக்கலாம்.

ஒரு நீட்சிநிரலை, அதுவும் இணக்கமற்ற நீட்சிநீரலை அண்மையில் தாங்கள் நிறுவியிருந்து, அல்லது இற்றைப்படுத்தியிருந்து, என்விடிஏவை இயக்குவதில் சிக்கலிருந்தால், எல்லா நீட்சிநிரல்களும் முடக்கப்பட்ட நிலையில் என்விடிஏவை தற்காலிகமாக இயக்க விரும்புவீர்கள். எல்லா நீட்சிநிரல்களும் முடக்கப்பட்ட நிலையில் என்விடிஏவை மறுதுவக்க, என்விடிஏவை விட்டு வெளியேறும்பொழுது காட்டப்படும் உரையாடலில் அதற்கான விருப்பத் தேர்வினைத் தெரிவுச் செய்யவும். மாற்றாக, '--disable-addons' கட்டளைவரி விருப்பத் தேர்வினைப் பயன்படுத்தவும்.

கிடைப்பிலிருக்கும் நீட்சிநிரல்கள், இற்றாக்கக்கூடிய நீட்சிநிரல்கள் கீற்றுகளைப் பயன்படுத்தி, கிடைப்பிலிருக்கும் இணக்கமற்ற நீட்சிநிரல்களை உலாவித் தேடலாம். இணக்கமற்ற நீட்சிநிரல்கள் கீற்றினைப் பயன்படுத்தி, நிறுவப்பட்டிருக்கும் இணக்கமற்ற நீட்சிநிரல்களை உலாவித் தேடலாம்.

கூடுதல் கருவிகள்

செயற்குறிப்பேட்டுத் தோற்றம்

என்விடிஏ பட்டியலின் கருவிகள் உட்பட்டியலில் செயற்குறிப்பேட்டுத் தோற்றம் உள்ளது. என்விடிஏ இறுதியாகத் துவக்கப்பட்ட தருணத்திலிருந்து தற்பொழுது வரையிலான என்விடிஏவின் எல்லாச் செயல்களும் இதில் பதிவாகியிருக்கும்.

இச்செயற்குறிப்பேட்டின் உள்ளடக்கங்களைப் படிப்பதோடு, குறிப்பேட்டினையும் சேமிக்கலாம், அண்மையில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைக் காண, அதைப் புத்தாக்கவும் செய்யலாம். செயற்குறிப்பேட்டுத் தோற்றத்தில் காணப்படும் செயற்குறிப்பேடுப் பட்டியலில் இச்செயல்கள் கிடைப்பிலுள்ளன.

செயற்குறிப்பேட்டுத் தோற்றத்தைத் தாங்கள் திறக்கும்பொழுது காட்டப்படும் கோப்பு, தங்கள் கணினியில் %temp%\nvda.log அடைவில் சேமிக்கப்படும். ஒவ்வொரு முறை என்விடிஏ துவக்கப்படும்பொழுதும் ஒரு புதிய செயற்குறிப்பேடு உருவாக்கப்படுகிறது. புதிய செயற்குறிப்பேடு உருவாக்கப்படும்பொழுது, பழைய குறிப்பேடு %temp%\nvda-old.log அடைவிற்கு நகர்த்தப்படுகிறது.

செயற்குறிப்பேட்டுத் தோற்றத்தைத் திறக்காமல், நடப்பு செயற்குறிப்பேட்டின் ஒரு பகுதியைப் பிடிப்புப்பலகைக்குத் தாங்கள் படியெடுக்கலாம்.

பெயர் விசை விளக்கம்
செயற்குறிப்பேட்டுத் தோற்றத்தைத் திறவுக என்விடிே+f1 செயற்குறிப்பேட்டுத் தோற்றம் திறக்கப்பட்டு, தற்போதைய வழிசெலுத்திப் பொருளுக்கான மேம்படுத்துநரின் தகவலைக் காட்டிடும்.
செயற்குறிப்பின் ஒரு பகுதியைப் பிடிப்புப்பலகைக்குப் படியெடுத்திடுக என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+f1 இக்கட்டளை முதன்முறை அழுத்தப்படும்பொழுது, படியெடுக்கப்படவேண்டிய செயற்குறிப்பு உள்ளடக்கத்தின் துவக்கத்தைக் குறித்துக்கொள்கிறது. இரண்டாம் முறை அழுத்தப்படும்பொழுது, துவக்கக் குறியிலிருந்து தற்போதைய நிலை வரையிலான உள்ளடக்கத்தைப் பிடிப்புப்பலகைக்குப் படியெடுக்கிறது.

பேச்சுத் தோற்றம்

என்விடிஏவை உருவாக்கும் பார்வையுள்ளவர்களும், என்விடிஏவின் செயல் விளக்கத்தைப் பார்வையாளர்களுக்கிடையே காண்பிக்கும் தருணங்களிலும், என்விடிஏவின் எல்லா பேச்சுகளும் ஒரு மிதக்கும் திரையில் உரைகளாகக் காண்பிக்கப்படும்.

பேச்சுத் தோற்றத்தை முடுக்க, கருவிகள் உட்பட்டியலில் இருக்கும் 'பேச்சுத் தோற்றம்' உருப்படியைத் தேர்வுச் செய்யவும். பேச்சுத் தோற்றத்தை நிறுத்த, இத்தேர்வினை நீக்கவும்.

'துவக்கும்பொழுது பேச்சுத் தோற்றத்தைக் காட்டுக' என்கிறத் தேர்வுப் பெட்டியைப் பேச்சுத் தோற்ற சாளரம் கொண்டிருக்கும். இத்தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், என்விடிஏ துவக்கப்படும் பொழுது பேச்சுத் தோற்றம் திறக்கப்படும். மூடப்பட்டத் தருணத்திலிருந்த அமைவிடத்திலும், பரிமாணத்திலும் மீண்டும் திறக்க பேச்சுத் தோற்றம் எப்பொழுதும் முயலும்.

பேச்சுத் தோற்றம் முடுக்கப்பட்டிருக்கும்பொழுது, பேசப்படும் எல்லா உரைகளும் நிகழ்நேரத்தில் இற்றைப்படுத்தப்பட்டு திரையில் காட்டப்படும். இருப்பினும், பேச்சுத் தோற்றத்தின் மீது சொடுக்கியைப் பாவித்தாலோ, அதைக் குவிமையத்திற்குள் கொண்டு வந்தாலோ, இற்றாக்கங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும். இது தாங்கள் உரைகளைத் தெரிவுச் செய்யவும், படியெடுக்கவும் உதவும்.

பேச்சுத் தோற்றத்தை எங்கிருந்தாயினும் மாற்றியமைக்க விரும்பினால், உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

பிரெயில் தோற்றம்

பார்வையுள்ள மென்பொருள் மேம்படுத்துநர்களுக்கு, அல்லது கூட்டத்தினருக்கு என்விடிஏவின் செயல்விளக்கத்தை அளிக்கும்பொழுது, பிரெயில் வெளியீட்டினையும், ஒவ்வொரு பிரெயில் வரியுருவிற்கு நிகரான உரையையும் காட்டுவதற்கு, திரையில் ஒரு மிதக்கும் சாளரம் தோன்றும். பிரெயில் தோற்றத்தையும், பிரெயில் காட்சியமைவையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். காட்சியமைவில் பணிக்களங்கள் தோன்றுமளவிற்கு, பிரெயில் தோற்றத்திலும் பணிக்களங்கள் தோன்றும். பிரெயில் தோற்றம் முடக்கப்பட்டிருக்கும்பொழுது, காட்சியமைவில் தோன்றும் பிரெயில் எழுத்துகளை, நிகழ்நேரத்தில் பிரெயில் தோற்றத்தில் இற்றைப்படுத்தும்.

பிரெயில் தோற்றத்தை முடுக்க, என்விடிஏ பட்டியலில் இருக்கும் கருவிகள் உட்பட்டியலில் காணப்படும் 'பிரெயில் தோற்றம்' பட்டியல் உருப்படியைத் தேர்வுச் செய்யவும். பிரெயில் தோற்றத்தை முடக்க, தேர்வினை நீக்கிவிடவும்.

பிரெயிலை முன்னுருட்டவும், பின்னுருட்டவும், பிரெயில் காட்சியமைவுகளில் பொத்தான்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பிரெயில் தோற்றத்தில் இச்செயல்களை நிகழ்த்த, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி தனிப்பயனாக்கப்பட்ட சைகைகளை இணைக்கவும்.

'என்விடிஏ துவங்கும்பொழுது பிரெயில் தோற்றத்தைக் காட்டுக' என்கிற ஒரு தேர்வுப் பெட்டியினை பிரெயில் தோற்றச் சாளரம் கொண்டிருக்கும். இத்தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்தால், என்விடிஏ துவங்கும்பொழுது, பிரெயில் தோற்றம் திரையில் திறக்கப்படும். மூடப்பட்ட பரிமானத்தையும், அமைவிடத்தையும் கொண்டு, பிரெயில் தோற்றச் சாளரம் மீண்டும் துவங்க எப்பொழுதும் முயலும்.

"பணிக்களத்திற்கு வழியிட பாவித்திடுக" என்கிற தேர்வுப் பெட்டியை பிரெயில் தோற்றச் சாளரம் கொண்டிருக்கும். இயல்பில் இது தேர்வாகி இருக்காது. இத்தேர்வுப் பெட்டி தேர்வான நிலையில், ஒரு பிரெயில் களத்தின் மீது சுட்டியைப் பாவித்தால், அக்களத்திற்கான "பிரெயில் களத்திற்கு வழியமைத்திடுக" கட்டளையின் தூண்டுதலை முடுக்குகிறது. சுட்டியை நகர்த்தவும், ஒரு கட்டுப்பாட்டிற்கான செயலைத் தூண்டவும் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பணிக்களத்திலிருந்து வரைவைத் திருப்பியமைக்க என்விடிஏவால் இயல்கிறதா என்று பரிசோதிக்க இது பயனுள்ளதாக இருக்கும். எத்தனிப்பின்றி பணிக்களத்திற்கு வழியிடுவதைத் தவிர்க்க இக்கட்டளை தாமதப்படுத்தப்படுகிறது. பணிக்களத்தின் நிறம் பச்சையாக மாறும் வரை சுட்டி பாவித்துக்கொண்டிருக்க வேண்டும். பணிக்களம் முதலில் மெல்லிய மஞ்சள் நிறத்தில் துவங்கி, பிறகு செம்மஞ்சள் நிறத்திற்கு நகர்ந்து, திடீரென்று பச்சை நிறமாக மாறும்.

பிரெயில் தோற்றத்தை எங்கிருந்தாயினும் மாற்றியமைக்க, உள்ளீட்டுச் சைகைகள் உரையாடலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட சைகையை இணைக்கவும்.

பைத்தன் கட்டுப்பாட்டகம்

என்விடிஏ பட்டியலின் கருவிகள் உட்பட்டியலில் உள்ள பைத்தன் கட்டுப்பாட்டகம், ஒரு மேம்பாட்டுக் கருவியாகும். இது, என்விடிஏவின் உள்ளடக்கங்களின் பொது ஆய்வு, வழுத்திருத்தம், ஒரு பயன்பாட்டின் அணுகுமுறை ஆய்வு போன்ற செயல்களுக்குப் பயன்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு, என்விடிஏ இணையப்பக்கத்தில் இருக்கும் மேம்படுத்துநர் வழிகாட்டியைக்் காணவும்.

நீட்சிநிரல் அங்காடி

என்விடிஏ நீட்சிநிரல் அங்காடியை இது திறக்கும். கூடுதல் தகவல்களுக்கு, நீட்சிநிரல்களும் நீட்சிநிரல் அங்காடியும் என்கிற பிரிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆழ்ந்த விளக்கத்தைப் படிக்கவும்.

கொண்டுசெல்லத்தக்கப் படியை உருவாக்குக

நடப்பிலிருக்கும் என்விடிஏ பதிப்பிலிருந்து அதன் கொண்டுசெல்லத்தக்கப் படியை உருவாக்க ஒரு உரையாடல் பெட்டியை இது திறக்கும்.

கூடுதல் தகவல்களுக்கு, கொண்டுசெல்லத்தக்கப் படியை உருவாக்குக பிரிவில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

COM பதிவுப் பிழை நீக்கியை இயக்குக...

கணினியில் நிரல்களில் நிறுவல், அல்லது நிறுவுநீக்கம், சில தருணங்களில் COM DLL கோப்புகளின் பதிவுநீக்கத்திற்கு காரணமாக அமைவதுண்டு. IAccessible போன்ற COM இடைமுகப்புகள் சரியான COM DLL பதிவுகளைச் சார்ந்திருப்பதால், சரியான பதிவு இல்லாதபொழுது சிக்கல் எழும் வாய்ப்புள்ளது.

அடோபி ரீடர், மேத் பிளேயர் மற்றும் பிற நிரல்களை நிறுவிய, அல்லது நிறுவுநீக்கிய பிறகு சிக்கல் எழலாம்.

உலாவிகள், மேசைத்தள பயன்பாடுகள், பணிப்பட்டை மற்றும் பிற இடைமுகப்புகளில், இல்லாதிருக்கும் பதிவுகள் சிக்கலை ஏற்படுத்தலாம்.

இக்கருவியை இயக்குவதன் மூலம், பின்வரும் சிக்கல்களை குறிப்பாக தீர்க்கலாம்:

செருகுநிரல்களை மீளேற்றுக

இவ்வுறுப்படியை இயக்கினால், என்விடிஏவை மறுதுவக்க தேவையில்லாமல், பயன்பாட்டு நிரற்கூறுகளையும், முழுதளாவிய செருகுநிரல்களையும் மீளேற்றும். இது, என்விடிஏ மேம்படுத்துநர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட பயன்பாடுகளுடன் என்விடிஏ எவ்வாறு அளவளாவ வேண்டும் என்பதனை பயன்பாட்டு நிரற்கூறுகள் மேலாள்கின்றன. எல்லாப் பயன்பாடுகளுடன் என்விடிஏ எவ்வாறு அளவளாவ வேண்டும் என்பதனை முழுதளாவிய நிரற்கூறுகள் மேலாள்கின்றன.

பின்வரும் என்விடிஏ விசை கட்டளைகளும் பயனுள்ளவையாக இருக்கும்:

பெயர் விசை விளக்கம்
செருகுநிரல்களை மீளேற்றுக என்விடிஏ+கட்டுப்பாடு+f3 என்விடிஏவின் முழுதளாவிய செருகுநிரல்களையும், பயன்பாட்டு நிரற்கூறுகளையும் மீளேற்றிடும்.
ஏற்றப்பட்டிருக்கும் பயன்பாட்டு நிரற்கூறினையும், செயற்படுத்தகு கோப்பினையும் அறிவித்திடுக என்விடிஏ+கட்டுப்பாடு+f1 விசைப்பலகையின் குவிமையத்திலிருக்கும் பயன்பாட்டின் செயற்படுதகு கோப்பினையும், பயன்பாட்டு நிரற்கூறு ஏதேனுமிருந்தால் அதனையும் அறிவித்திடும்.

ஆதரவளிக்கப்படும் பேச்சொலிப்பான்கள்

என்விடிஏ ஆதரவளிக்கும் பேச்சொலிப்பான்கள் பற்றிய தகவல்களை இப்பிரிவில் காணலாம். என்விடிஏவுடன் பயன்படுத்தப்படக் கூடிய பிற இலவச/வர்த்தக ஒலிப்பான்களின் விரிவான பட்டியலை, என்விடிஏவின் கூடுதல் குரல்கள் பக்கத்தில் காணலாம்.

ஈஸ்பீக் என்ஜி

என்விடிஏவினுள் ஈஸ்பீக் என்ஜி ஒலிப்பான் கட்டப்பட்டு வெளிவருவதால், வேறு சிறப்பு இயக்கிகளையோ, கூறுகளையோ நிறுவத் தேவையில்லை. விண்டோஸ் 8.1 பதிப்புகளில் ஈஸ்பீக் என்ஜி ஒலிப்பானை இயல்பான ஒலிப்பானாகக் கொண்டு என்விடிஏ இயங்கத் துவங்கும். விண்டோஸ் 10, அல்லது அதற்கும் பிறகான இயக்கமுறைமையில், விண்டோஸ் ஒன் கோர் ஒலிப்பானை இயல்பான ஒலிப்பானாகப் பயன்படுத்தும். இவ்வொலிப்பான், என்விடிஏவினுள் கட்டப்பட்டு வெளிவருவதால், விரலியைக் கொண்டு பிற கணினிகளில் என்விடிஏவை இயக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஈஸ்பீக் என்ஜியில் இருக்கும் ஒவ்வொரு குரலும், வெவ்வேறு மொழியைப் பேசும். 43க்கும் மேலான மொழிகளுக்கு ஈஸ்பீக் என்ஜி ஆதரவளிக்கிறது.

குரலின் ஒலியை மாற்றியமைக்க, ஈஸ்பீக் என்ஜியில் பல குரல் மாற்றுருக்களும் உள்ளன.

மைக்ரோசாப்ட் ஸ்பீச் ஏ.பி.ஐ. 4 (SAPI 4)

SAPI 4 என்பது மென்பொறுள் பேச்சொலிப்பான்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வரையறுத்திருந்த பழைய தகுதரமாகும். SAPI 4 ஒலிப்பான்களை பயனர்கள் ஏற்கெனவே நிறுவியிருந்தால், என்விடிஏ அவைகளைத் தொடர்ந்து ஆதரிக்கிறது. ஆனால், மைக்ரோசாஃப்ட் இவ்வொலிப்பான்களை இப்பொழுது ஆதரிப்பதில்லை என்பதோடு, தேவையான பகுதிக் கூறுகளும் மைக்ரோசாஃப்டிடமிருந்து கிடைப்பதில்லை.

என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பேச்சு வகைமை, அல்லது ஒலிப்பான் அமைப்புகள் வளையத்தைக் கொண்டு இப்பேச்சொலிப்பானிலிருக்கும் குரல்களை அணுகும்பொழுது, கணினியில் நிறுவப்பட்டிருக்கும் எல்லா SAPI 4 ஒலிப்பான்களின் அனைத்து குரல்களையும் வரிசைப் பட்டியலில் காண்பீர்கள்.

மைக்ரோசாப்ட் ஸ்பீச் ஏ.பி.ஐ. 5 (SAPI 5)

SAPI 5 என்பது மென்பொறுள் பேச்சொலிப்பான்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வரையறுத்திருக்கும் தகுதரமாகும். இத்தகுதரத்துடன் ிணங்கக் கூடிய பல ஒலிப்பான்களை, விலை கொடுத்து வாங்கவோ, இணையதளங்களிலிருந்து இலவசமாக தரவிறக்கவோ முடியும்ென்றாலும், தங்கள் கணினியில், குறைந்தபட்சம் ஒரு SAPI 5 குரலாவது ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும். இவ்வொலிப்பானை என்விடிஏவுடன் பயன்படுத்தும்பொழுது, இப்பேச்சொலிப்பானிலிருக்கும் குரல்களை, என்விடிஏ அமைப்புகள் உரையாடலில் காணப்படும் பேச்சு வகைமை, அல்லது ஒலிப்பான் அமைப்புகள் வளையத்தைக் கொண்டு அணுகினால், கணினியில் நிறுவப்பட்டிருக்கும் எல்லா SAPI 5 ஒலிப்பான்களின் அனைத்து குரல்களையும் வரிசைப் பட்டியலில் காண்பீர்கள்.

மைக்ரோசாப்ட் பேச்சுத் தளம்

சேவையக இயக்கமுறைமைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பேச்சுப் பயன்பாடுகளுக்கான பல மொழிகளை, மைக்ரோசாப்ட் பேச்சுத் தளம் வழங்குகிறது. இக்குரல்களையும் என்விடிஏவுடன் பயன்படுத்தலாம்.

இக்குரல்களைப் பயன்படுத்த, தாங்கள் இரு கூறுகளை நிறுவ வேண்டும்.

விண்டோஸ் ஒன் கோர் குரல்கள்

விண்டோஸ் 10, அல்லது அதற்கும் பிறகான இயக்கமுறைமையில், "ஒன் கோர்", அல்லது "மொபைல்" என்றழைக்கப்படும் புதிய குரல்கள் உள்ளன. பல மொழிகளுக்கான குரல்கள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், மைக்ரோசாஃப்ட் ஸ்பீச் ஏ.பி.ஐ. 5 பதிப்பில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் குரல்களைக் காட்டிலும் இவை நுண்ணுணர்வுடன் செயல்படுகின்றன. விண்டோஸ் 10, அல்லது அதற்கும் பிறகான இயக்கமுறைமையில், விண்டோஸ் ஒன் கோர் குரல்களை என்விடிஏ இயல்பாகக் கொண்டிருக்கும். முந்தைய பதிப்புகளில், ஈஸ்பீக் என்ஜி பயன்படுத்தப்படுகிறது.

புதிய விண்டோஸ் ஒன் கோர் குரல்களைச் சேர்க்க, விண்டோஸ் கணினி அமைப்புகளில் காணப்படும் பேச்சு அமைப்புகளுக்குச் செல்லவும். "குரல்களைச் சேர்த்திடுக" என்கிற விருப்பத் தேர்வினைப் பயன்படுத்தி, தேவைப்படும் மொழியினைத் தேடவும். பல மொழிகள், பலதரப்பட்ட மாற்றுருக்களைக் கொண்டுள்ளன. "இந்தியா" என்பது தமிழ் மொழிக்கான ஒரே மாற்றுருவாகும். "இங்கிலாந்து", "ஆஸ்திரேலியா" ஆகியவை ஆங்கிலத்திற்கான இரு மாற்றுருக்களாகும். அதுபோலவே, "பிரான்ஸ்", "கனடா", "சுவிட்சர்லாந்து" ஆகியவை பிரெஞ்சு மொழிக்கான மாற்றுருக்களாகும். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என பிரதான மொழியை முதலில் தேடிக் கண்டடைந்த பிறகு, அம்மொழிக்கான மாற்றுருவைப் பட்டியலில் கண்டடையவும். தேவைப்படும் மாற்றுருவைத் தெரிவுச் செய்த பிறகு, "கூட்டுக" பொத்தானை அழுத்தி அம்மொழியைச் சேர்க்கவும். மொழியைக் கூட்டிய பிறகு, என்விடிஏவை மறுதுவக்கவும்.

கிடைப்பிலிருக்கும் குரல்களின் பட்டியலைக் குறித்து அறிய, மைக்ரோசாஃப்டின் ஆதரிக்கப்படும் மொழிகளும், குரல்களும் என்கிற பக்கத்தைக் காணவும்.

ஆதரவளிக்கப்படும் பிரெயில் காட்சியமைவுகள்

இப்பிரிவு, என்விடிஏ ஆதரவளிக்கும் பிரெயில் காட்சியமைவுகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது.

பின்னணியில் தானாகக் கண்டறியும் வசதியை ஆதரிக்கும் காட்சியமைவுகள்

ஊடலை, அல்லது யுஎஸ்பி மூலம் பல பிரெயில் காட்சியமைவுகளை பின்னணியில் தானாகக் கண்டறியும் திறன் என்விடிஏவிற்கு உள்ளது. பிரெயில் அமைப்புகள் உரையாடலில் காணப்படும் தன்னியக்கம் என்கிற விருப்பத் தேர்வினை பிரெயில் காட்சியமைவாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம், இந்தத் தன்மையைச் செயற்படுத்தலாம். இயல்பில், இவ்விருப்பத் தேர்வு தேர்வாகியிருக்கும்.

பின்னணியில் தானாகக் கண்டறியும் வசதியை பின்வரும் பிரெயில் காட்சியமைவுகள் ஆதரிக்கின்றன:

ஃப்ரீடம் சைண்டிஃபிக் ஃபோக்கஸ்/PAC Mate தொடர்

ஃப்ரீடம் சைண்டிஃபிக்கின் எல்லா ஃபோக்கஸ், PAC Mate காட்சியமைவுகளும், யுஎஸ்பி, ஊடலை மூலம் இணைக்கப்படும்பொழுது, என்விடிஏ அதை ஆதரிக்கிறது. ஃப்ரீடம் சைண்டிஃபிக்கின் பிரெயில் காட்சியமைவு இயக்கிகளைத் தாங்கள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். இவ்வியக்கிகள் தங்களிடம் ஏற்கெனவே இல்லையென்றால், ஃபோக்கஸ் ப்ளூ பிரெயில் காட்சியமைவு இயக்கியின் பக்கத்திலிருந்து அவைகளை தரவிறக்கிக் கொள்ளலாம். இவ்விணையப் பக்கம், ஃபோக்கஸ் 40 ப்ளூ காட்சியமைவை மட்டுமே குறிப்பிட்டாலும், இயக்கிகள், ஃப்ரீடம் சைண்டிஃபிக்கின் எல்லா ஃபோக்கஸ் மற்றும் பேக்மேட் காட்சியமைவுகளையும் ஆதரிக்கும்.

இயல்பில், இக்காட்சியமைவுகளை யுஎஸ்பி, ஊடலை மூலம் என்விடிஏ தானாகக் கண்டறிந்து தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும். ஆனால், பயன்படுத்த வேண்டிய இணைப்பு வகையை கட்டுப்படுத்த, யுஎஸ்பி நுழைவாயில், அல்லது ஊடலை நுழைவாயில் ஆகியவைகளுள் ஏதேனும் ஒன்றை, காட்சியமைவை அமைவடிவமாக்கும்பொழுது தெரிவுச் செய்து கொள்ளலாம். இது, தங்கள் கணினியில் இருக்கும் மின்சாரத்தைக் கொண்டு, போக்கஸ் காட்சியமைவை இயக்கிய வண்ணம், காட்சியமைவை என்விடிஏவுடன் ஊடலை மூலம் இணைக்கும்பொழுது பயன்படக்கூடும். தானாக பிரெயில் காட்சியமைவைக் கண்டறியும் என்விடிஏவின் சிறப்பியல்பு, யுஎஸ்பி, அல்லது ஊடலை வழியே இணைக்கப்பட்டிருக்கும் பிரெயில் காட்சியமைவையும் கண்டறியும்.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதை விளக்கமாக அறிய, காட்சியமைவுடன் வரும் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக topRouting1 (காட்சியமைவில் உள்ள முதல் கட்டம்)
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக topRouting20/40/80 (காட்சியமைவில் உள்ள கடைசி பணிக்களம்)
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக leftAdvanceBar
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக rightAdvanceBar
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக leftGDFButton+rightGDFButton
இடது விஸ் சக்கரத்தின் செயலை மாற்றியமைத்திடுக leftWizWheelPress
இடது விஸ் சக்கரத்தின் செயலைப் பயன்படுத்தி பின் நகர்க leftWizWheelUp
இடது விஸ் சக்கரத்தின் செயலைப் பயன்படுத்தி முன் நகர்க leftWizWheelDown
வலது விஸ் சக்கரத்தின் செயலை மாற்றியமைத்திடுக rightWizWheelPress
வலது விஸ் சக்கரத்தின் செயலைப் பயன்படுத்தி பின் நகர்க rightWizWheelUp
வலது விஸ் சக்கரத்தின் செயலைப் பயன்படுத்தி முன் நகர்க rightWizWheelDown
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக routing
மாற்றழுத்தி+தத்தல் விசை brailleSpaceBar+dot1+dot2
தத்தல் விசை brailleSpaceBar+dot4+dot5
மேலம்பு விசை brailleSpaceBar+dot1
கீழம்பு விசை brailleSpaceBar+dot4
கட்டுப்பாடு+இடதம்பு விசை brailleSpaceBar+dot2
கட்டுப்பாடு+வலதம்பு விசை brailleSpaceBar+dot5
இடதம்பு brailleSpaceBar+dot3
வலதம்பு brailleSpaceBar+dot6
தொடக்க விசை brailleSpaceBar+dot1+dot3
முடிவு விசை brailleSpaceBar+dot4+dot6
கட்டுப்பாடு+தொடக்க விசை brailleSpaceBar+dot1+dot2+dot3
கட்டுப்பாடு+முடிவு விசை brailleSpaceBar+dot4+dot5+dot6
நிலைமாற்றி விசை brailleSpaceBar+dot1+dot3+dot4
நிலைமாற்றி+தத்தல் விசை brailleSpaceBar+dot2+dot3+dot4+dot5
நிலைமாற்றி+மாற்றழுத்தி+தத்தல் விசை brailleSpaceBar+dot1+dot2+dot5+dot6
சாளரங்கள்+தத்தல் விசை brailleSpaceBar+dot2+dot3+dot4
விடுபடு விசை brailleSpaceBar+dot1+dot5
சாளரங்கள் விசை brailleSpaceBar+dot2+dot4+dot5+dot6
இடைவெளி விசை brailleSpaceBar
கட்டுப்பாடு விசையை மாற்றியமைத்திடுக brailleSpaceBar+dot3+dot8
நிலைமாற்றி விசையை மாற்றியமைத்திடுக brailleSpaceBar+dot6+dot8
சாளரங்கள் விசையை மாற்றியமைத்திடுக brailleSpaceBar+dot4+dot8
என்விடிஏ விசையை மாற்றியமைத்திடுக brailleSpaceBar+dot5+dot8
மாற்றழுத்தி விசையை மாற்றியமைத்திடுக brailleSpaceBar+dot7+dot8
கட்டுப்பாடு, மாற்றழுத்தி விசைகளை மாற்றியமைத்திடுக brailleSpaceBar+dot3+dot7+dot8
நிலைமாற்றி, மாற்றழுத்தி விசைகளை மாற்றியமைத்திடுக brailleSpaceBar+dot6+dot7+dot8
சாளரங்கள், மாற்றழுத்தி விசைகளை மாற்றியமைத்திடுக brailleSpaceBar+dot4+dot7+dot8
என்விடிஏ, மாற்றழுத்தி விசைகளை மாற்றியமைத்திடுக brailleSpaceBar+dot5+dot7+dot8
கட்டுப்பாடு, நிலைமாற்றி விசைகளை மாற்றியமைத்திடுக brailleSpaceBar+dot3+dot6+dot8
கட்டுப்பாடு, நிலைமாற்றி, மாற்றழுத்தி விசைகளை மாற்றியமைத்திடுக brailleSpaceBar+dot3+dot6+dot7+dot8
சாளரங்கள்+d விசை (எல்லா பயன்பாடுகளையும் சிறிதாக்கு) brailleSpaceBar+dot1+dot2+dot3+dot4+dot5+dot6
தற்போதைய வரியை அறிவித்திடுக brailleSpaceBar+dot1+dot4
என்விடிஏ பட்டியல் brailleSpaceBar+dot1+dot3+dot4+dot5

ஃபோக்கஸ் 40, ஃபோக்கஸ் 80, ஃபோக்கஸ் ப்ளூ போன்ற ராக்கர் பட்டை விசைகளைக் கொண்ட புதிய வகை ஃபோக்கஸ் பிரெயில் காட்சியமைவுகளுக்கான விசைக் கட்டளைகள்:

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக leftRockerBarUp, rightRockerBarUp
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக leftRockerBarDown, rightRockerBarDown

ஃபோக்கஸ் 80 காட்சியமைவிற்கு மட்டும்:

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக leftBumperBarUp, rightBumperBarUp
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக leftBumperBarDown, rightBumperBarDown

ஆப்டிலெக் ALVA 6 தொடர்/நெறிமுறை மாற்றி

ஆப்டிலெக் நிறுவனத்தின் ALVA BC640, BC680 ஆகிய இரு காட்சியமைவுகளும், யுஎஸ்பி, அல்லது ஊடலை மூலம் இணைக்கப்பட்டிருந்தால், என்விடிஏ அவைகளை ஆதரிக்கும். மாற்றாக, ஆப்டிலெக் வழங்கும் நெறிமுறை மாற்றியைப் பயன்படுத்தி, பிரெயில் வாயேஜர் போன்ற பழைய ஆப்டிலெக் காட்சியமைவுகளையும் இணைக்கலாம். இக்காட்சியமைவுகளைப் பயன்படுத்த, எந்தக் குறிப்பிட்ட இயக்கிகளையும் நிறுவத் தேவையில்லை. பிரெயில் காட்சியமைவை வெறுமனே கணினியில் செருகிவிட்டு, என்விடிஏவை அமைவடிவமாக்குங்கள்.

ஆல்வா ஊடலையைப் பயன்படுத்தி ஆல்வா BC6 காட்சியமைவு இணைக்கப்பட்டிருந்தால், என்விடிஏ இக்காட்சியமைவை ஊடலை வழியே பயன்படுத்த இயலாமல் போகலாம் என்பதைக் கவனிக்கவும். இது போன்ற தருணங்களில், ஆல்வா காட்சியமைவை விண்டோஸ் ஊடலை அமைப்புகளைப் பயன்படுத்தி வழமை போல் இணைக்கவும்.

இக்காட்சியமைவுகளில்் சில, பிரெயில் விசைப் பலகையைக் கொண்டிருந்தாலும், தாமாகவே பிரெயிலை உரைக்கு மொழிபெயர்க்கும் வசதியை இயல்பில் அவை கொண்டிருக்கின்றன என்பதைக் கவனிக்கவும். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இயல்புச் சூழ்நிலையில், என்விடிஏவின் பிரெயில் உள்ளீட்டு முறை, அதாவது, உள்ளீட்டு பிரெயில் அட்டவணை அமைப்பு பயன்பாட்டில் இருப்பதில்லை. அண்மைய ஃபேர்ம்வேரினைக் கொண்ட ஆல்வா காட்சியமைவுகள்ில், உள்ளீட்டுச் சைகையின் மூலம், இந்த எச்.ஐ.டி. விசைப் பலகையின் உருவகமாக்கத்தை முடக்கலாம்.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதை விளக்கமாக அறிய, காட்சியமைவுடன் வரும் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக t1, etouch1
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக t2
தற்போதைய குவிமையத்திற்கு நகர்க t3
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக t4
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக t5, etouch3
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக routing
பிரெயில் கள‍த்தின் கீழிருக்கும் உரையின் வடிவூட்டத்தை அறிவித்திடுக secondary routing
எச்.ஐ.டி. விசைப் பலகையின் உருவகமாக்கத்தை மாற்றியமைத்திடுக t1+spEnter
சீராய்வில் இருக்கும் மேல் வரிக்கு நகர்க t1+t2
சீராய்வில் இருக்கும் கீழ் வரிக்கு நகர்க t4+t5
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக t1+t3
தலைப்பை அறிவித்திடுக etouch2
நிலைப் பட்டையை அறிவித்திடுக etouch4
மாற்றழுத்தி+தத்தல் key sp1
நிலைமாற்றி விசை sp2, alt
விடுபடு விசை sp3
தத்தல் விசை sp4
மேலம்பு விசை spUp
கீழம்பு விசை spDown
இடதம்பு விசை spLeft
வலதம்பு விசை spRight
உள்ளிடு விசை spEnter, enter
தேதி/நேரம் அறிவித்திடுக sp2+sp3
என்விடிஏ பட்டியல் sp1+sp3
சாளரங்கள்+d விசை (எல்லாப் பயன்பாடுகளையும் சிறிதாக்கவும்) sp1+sp4
சாளரங்கள்+b விசை (கணினித் தட்டிற்கு குவிமையத்தை நகர்த்துக) sp3+sp4
சாளரங்கள் விசை sp1+sp2, windows
நிலைமாற்றி+தத்தல் விசை sp2+sp4
கட்டுப்பாடு+தொடக்கம் விசை t3+spUp
கட்டுப்பாடு+முடிவு விசை t3+spDown
தொடக்கம் விசை t3+spLeft
முடிவு விசை t3+spRight
கட்டுப்பாட்டு விசை control

Handy Tech காட்சியமைவுகள்

Handy Tech நிறுவனத்தின் பெரும்பாலான காட்சியமைவுகள், யுஎஸ்பி, தொடர் நுழைவாயில், அல்லது ஊடலை மூலம் இணைக்கப்பட்டிருந்தால், அவைகளை என்விடிஏ ஆதரிக்கும். பழைய யுஎஸ்பி காட்சியமைவுகளுக்கு, இந்நிறுவனத்தின் யுஎஸ்பி இயக்கிகளை நிறுவ வேண்டும்.

கீழ்க் காணும் பிரெயில் காட்சியமைவுகளை என்விடிஏ நேரடியாக ஆதரிப்பதில்லை. இருப்பினும், ஹேண்டிடெக்கின் முழுதளாவிய இயக்கி மற்றும் என்விடிஏவின் நீட்சிநிரலின் மூலம் பயன்படுத்தலாம்:

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக left, up, b3
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக right, down, b6
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக b4
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக b5
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக routing
மாற்றழுத்தி+தத்தல் esc, left triple action key up+down
நிலைமாற்றி விசை b2+b4+b5
விடுபடு விசை b4+b6
தத்தல் விசை enter, right triple action key up+down
உள்ளிடு விசை esc+enter, left+right triple action key up+down, joystickAction
மேலம்பு விசை joystickUp
கீழம்பு விசை joystickDown
இடதம்பு விசை joystickLeft
வலதம்பு விசை joystickRight
என்விடிஏ பட்டியல் b2+b4+b5+b6
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக b2
பிரெயில் சுட்டியை மாற்றியமைத்திடுக b1
குவிமைய சூழலளிக்கையை மாற்றியமைத்திடுக b7
பிரெயில் உள்ளீட்டினை மாற்றியமைத்திடுக space+b1+b3+b4 (space+capital B)

எம்டிவி லில்லி

எம்டிவி பிரெயில் காட்சியமைவை என்விடிஏ ஆதரிக்கிறது. இக்காட்சியமைவைப் பயன்படுத்த, எந்தக் குறிப்பிட்ட இயக்கிகளையும் தாங்கள் நிறுவத் தேவையில்லை. காட்சியமைவைப் பயன்படுத்த, அதைக் கணினியில் செருகிவிட்டு, என்விடிஏவை அமைவடிவமாக்குங்கள்.

பிரெயில் காட்சியமைவை பின்னணியில் தானாகக் கண்டறியும் என்விடிஏவின் வசதியை இக்காட்சியமைவு ஆதரிப்பதில்லை.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக LF
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக RG
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக UP
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக DN
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக route
மாற்றழுத்தி+தத்தல் SLF
தத்தல் SRG
நிலைமாற்றி+தத்தல் SDN
நிலைமாற்றி+மாற்றழுத்தி+தத்தல் SUP

Baum/Humanware/APH/Orbit பிரெயில் காட்சியமைவுகள்

Baum, Humanware, APH, Orbit ஆகிய நிறுவனங்களின் பிரெயில் காட்சியமைவுகள், யுஎஸ்பி, அல்லது ஊடலை, அல்லது தொடர் நுழைவாயில் மூலம் இணைக்கப்பட்டிருந்தால், அவைகளை என்விடிஏ ஆதரிக்கிறது. ஆதரவளிக்கப்படும் காட்சியமைவுகள், இவைகளையும் உள்ளடக்கும்:

Baum நிறுவனம் உற்பத்தி செய்யும் இன்னும் பிற பிரெயில் காட்சியமைவுகளும் செயற்படலாம். ஆனால், இது பரிசோதிக்கப்பட்டதில்லை.

எச்.ஐ.டி.-ஐப் பயன்படுத்தாத காட்சியமைவுகளை யுஎஸ்பி மூலம் இணைப்பதாக இருந்தால், தொடர்புடைய உற்பத்தியாளரின் யுஎஸ்பி இயக்கிகளை முதலில் நிறுவ வேண்டும். VarioUltra, Pronto! காட்சியமைவுகள் எச்.ஐ.டி.-ஐப் பயன்படுத்துகின்றன. தக்க முறையில் அமைவடிவமைக்கப்பட்டால், Refreshabraille, Orbit Reader 20 காட்சியமைவுகளும் எச்.ஐ.டி.-ஐப் பயன்படுத்த இயலும்.

Orbit Reader 20 காட்சியமைவின் யுஎஸ்பி தொடர் நிலை தற்போதைக்கு விண்டோஸ் 10, அல்லது அதற்கும் பிறகான இயக்கமுறைமையில் மட்டுமே ஆதரிக்கப்படுகிறது. மாற்றாக, யுஎஸ்பி எச்.ஐ.டி.-ஐ பொதுவாகப் பயன்படுத்த வேண்டும்.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக d2
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக d5
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக d1
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக d3
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக routing
மாற்றழுத்தி+தத்தல் விசை space+dot1+dot3
தத்தல் விசை space+dot4+dot6
நிலைமாற்றி விசை space+dot1+dot3+dot4 (space+m)
விடுபடு விசை space+dot1+dot5 (space+e)
சாளரங்கள் விசை space+dot3+dot4
நிலைமாற்றி+தத்தல் விசை space+dot2+dot3+dot4+dot5 (space+t)
என்விடிஏ பட்டியல் space+dot1+dot3+dot4+dot5 (space+n)
சாளரங்கள்+d விசை (அனைத்து பயன்பாடுகளையும் சிறிதாக்குக) space+dot1+dot4+dot5 (space+d)
எல்லாம் படித்திடுக space+dot1+dot2+dot3+dot4+dot5+dot6

ஜாய் குச்சிகளைக் கொண்டிருக்கும் காட்சியமைவுகளுக்கு:

பெயர் விசை
மேலம்பு விசை up
கீழம்பு விசை down
இடதம்பு விசை left
வலதம்பு விசை right
உள்ளிடு விசை select

ஹீடோ ஃப்ரொஃபிலைன் யுஎஸ்பி

ஹீடோ ரேஹா டெக்னிக் நிறுவனத்தின் ஹீடோ ஃப்ரொஃபிலைன் யுஎஸ்பி காட்சியமைவிற்கு என்விடிஏ ஆதரவளிக்கிறது. உற்பத்தியாளரின் யுஎஸ்பி இயக்கிகளை முதலில் தாங்கள் நிறுவ வேண்டும்.

பிரெயில் காட்சியமைவை பின்னணியில் தானாகக் கண்டறியும் என்விடிஏவின் வசதியை இக்காட்சியமைவு இதுவரைக்கும் ஆதரிப்பதில்லை.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக K1
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக K3
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக B2
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக B5
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக routing
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக K2
எல்லாம் படித்திடுக B6

ஹீடோ மொபில்லைன் யுஎஸ்பி

ஹீடோ ரேஹா டெக்னிக் நிறுவனத்தின் ஹீடோ மொபில்லைன் யுஎஸ்பி பிரெயில் காட்சியமைவிற்கு என்விடிஏ ஆதரவளிக்கிறது. உற்பத்தியாளரின் யுஎஸ்பி இயக்கிகளைத் தாங்கள் முதலில் நிறுவ வேண்டும்.

பிரெயில் காட்சியமைவை பின்னணியில் தானாகக் கண்டறியும் என்விடிஏவின் வசதியை இக்காட்சியமைவு இதுவரைக்கும் ஆதரிப்பதில்லை.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக K1
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக K3
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக B2
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக B5
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக routing
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக K2
எல்லாம் படித்திடுக B6

ஹ்யூமன்வேர் பிரெயிலண்ட் BI/B தொடர்/பிரெயில்நோட் டச்

BI 14, BI 32, BI 20X, BI 40, BI 40X, B 80 உட்பட எல்லா ஹ்யூமன்வேர் பிரெயிலண்ட் Bi மற்றும் B தொடர் பிரெயில் காட்சியமைவுகளுக்கும், அவைகள் யுஎஸ்பி, அல்லது ஊடலை மூலம் இணைக்கப்பட்டிருந்தால், என்விடிஏ ஆதரவளிக்கிறது. ஹ்யூமன்வேர் நெறிமுறைக்கு அமைக்கப்பட்டு, யுஎஸ்பி மூலம் இணைப்பதாகவிருந்தால், உற்பத்தியாளரின் இயக்கிகளை முதலில் நிறுவ வேண்டும். முதற் படிநிலை பிரெயில் நெறிமுறைக்கு அமைக்கப்படுவதாகவிருந்தால், யுஎஸ்பி இயக்கிகள் தேவைப்படுவதில்லை.

கீழ்க்காணும் கூடுதல் கருவிகளுக்கும் ஆதரவளிக்கப்படுகிறது. சிறப்பு இயக்கிகள் ஏதும் இவைகளுக்கு நிறுவத் தேவையில்லை.

பின்வரும் என்விடிஏ விசைகள், பிரெயிலன்ட் BI/B/பிரெயில்நோட் டச் காட்சியமைவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

எல்லா மாதிரிகளுக்குமான விசை ஒதுக்கீடுகள்

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக left
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக right
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக up
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக down
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக routing
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக up+down
மேலம்பு விசை space+dot1
கீழம்பு விசை space+dot4
இடதம்பு விசை space+dot3
வலதம்பு விசை space+dot6
மாற்றழுத்தி+தத்தல் விசை space+dot1+dot3
தத்தல் விசை space+dot4+dot6
நிலைமாற்றி விசை space+dot1+dot3+dot4 (space+m)
விடுபடு விசை space+dot1+dot5 (space+e)
உள்ளிடு விசை dot8
சாளரங்கள் விசை space+dot3+dot4
நிலைமாற்றி+தத்தல் விசை space+dot2+dot3+dot4+dot5 (space+t)
என்விடிஏ பட்டியல் space+dot1+dot3+dot4+dot5 (space+n)
சாளரங்கள்+d விசை (எல்லாப் பயன்பாடுகளையும் சிறிதாக்குக) space+dot1+dot4+dot5 (space+d)
எல்லாம் படித்திடுக space+dot1+dot2+dot3+dot4+dot5+dot6

Brailliant BI 32, BI 40 மற்றும் B 80 காட்சியமைவுகளுக்கான விசை ஒதுக்கீடுகள்

பெயர் விசை
என்விடிஏ பட்டியல் c1+c3+c4+c5 (command n)
சாளரங்கள்+d விசை (எல்லாப் பயன்பாடுகளையும் சிறிதாக்குக) c1+c4+c5 (command d)
எல்லாம் படித்திடுக c1+c2+c3+c4+c5+c6

Brailliant BI 14 காட்சியமைவிற்கான விசை ஒதுக்கீடுகள்

பெயர் விசை
மேலம்பு விசை joystick up
கீழம்பு விசை joystick down
இடதம்பு விசை joystick left
வலதம்பு விசை joystick right
உள்ளீடு விசை joystick action

ஹிம்ஸ் பிரெயில் சென்ஸ்/பிரெயில் எட்ஜ்/ஸ்மார்ட் பீட்டில்/சிங் பிரெயில் தொடர்

யுஎஸ்பி, அல்லது ஊடலை மூலம் இணைக்கப்பட்டிருந்தால், ஹிம்ஸ் நிறுவனத்தின் பிரெயில் சென்ஸ், பிரெயில் எட்ஜ், ஸ்மார்ட் பீட்டில் மற்றும் சிங் பிரெயில் காட்சியமைவுகளுக்கு என்விடிஏ ஆதரவளிக்கிறது. யுஎஸ்பி மூலம் இணைப்பதாக இருந்தால், ஹிம்ஸ் நிறுவனத்தின் யுஎஸ்பி இயக்கிகளைத் தங்கள் கணினியில் முதலில் நிறுவ வேண்டும்.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக routing
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டுக leftSideScrollUp, rightSideScrollUp, leftSideScroll
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக leftSideScrollDown, rightSideScrollDown, rightSideScroll
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக leftSideScrollUp+rightSideScrollUp
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக leftSideScrollDown+rightSideScrollDown
சீராய்வு நிலையில் முந்தைய வரிக்கு நகர்க rightSideUpArrow
சீராய்வு நிலையில் அடுத்த வரிக்கு நகர்க rightSideDownArrow
சீராய்வு நிலையில் முந்தைய வரியுருவிற்கு நகர்க rightSideLeftArrow
சீராய்வு நிலையில் அடுத்த வரியுருவிற்கு நகர்க rightSideRightArrow
நடப்பு குவிமையத்திற்கு நகர்க leftSideScrollUp+leftSideScrollDown, rightSideScrollUp+rightSideScrollDown, leftSideScroll+rightSideScroll
கட்டுப்பாட்டு விசை smartbeetle:f1, brailleedge:f3
சாளரங்கள் விசை f7, smartbeetle:f2
நிலைமாற்றி விசை dot1+dot3+dot4+space, f2, smartbeetle:f3, brailleedge:f4
மாற்றழுத்தி விசை f5
செருகு விசை dot2+dot4+space, f6
பயன்பாடுகள் விசை dot1+dot2+dot3+dot4+space, f8
முகப்பெழுத்து பூட்டு விசை dot1+dot3+dot6+space
தத்தல் விசை dot4+dot5+space, f3, brailleedge:f2
மாற்றழுத்தி+நிலைமாற்றி+தத்தல் விசை f2+f3+f1
நிலைமாற்றி+தத்தல் விசை f2+f3
மாற்றழுத்தி+தத்தல் விசை dot1+dot2+space
முடிவு விசை dot4+dot6+space
கட்டுப்பாடு+முடிவு விசை dot4+dot5+dot6+space
முகப்பு விசை dot1+dot3+space, smartbeetle:f4
கட்டுப்பாடு+முகப்பு விசை dot1+dot2+dot3+space
நிலைமாற்றி+f4 விசை dot1+dot3+dot5+dot6+space
இடதம்பு விசை dot3+space, leftSideLeftArrow
கட்டுப்பாடு+மாற்றழுத்தி+இடதம்பு விசை dot2+dot8+space+f1
கட்டுப்பாடு+இடதம்பு விசை dot2+space
மாற்றழுத்தி+நிலைமாற்றி+இடதம்பு விசை dot2+dot7+f1
நிலைமாற்றி+இடதம்பு விசை dot2+dot7+space
வலதம்பு விசை dot6+space, leftSideRightArrow
கட்டுப்பாடு+மாற்றழுத்தி+வலதம்பு விசை dot5+dot8+space+f1
கட்டுப்பாடு+வலதம்பு விசை dot5+space
மாற்றழுத்தி+நிலைமாற்றி+வலதம்பு விசை dot5+dot7+f1
நிலைமாற்றி+வலதம்பு விசை dot5+dot7+space
பக்கம் மேல் விசை dot1+dot2+dot6+space
கட்டுப்பாடு+பக்கம் மேல் விசை dot1+dot2+dot6+dot8+space
மேலம்பு விசை dot1+space, leftSideUpArrow
கட்டுப்பாடு+மாற்றழுத்தி+மேலம்பு விசை dot2+dot3+dot8+space+f1
கட்டுப்பாடு+மேலம்பு விசை dot2+dot3+space
மாற்றழுத்தி+நிலைமாற்றி+மேலம்பு விசை dot2+dot3+dot7+f1
நிலைமாற்றி+மேலம்பு விசை dot2+dot3+dot7+space
மாற்றழுத்தி+மேலம்பு விசை leftSideScrollDown+space
பக்கம் கீழ் விசை dot3+dot4+dot5+space
கட்டுப்பாடு+பக்கம் கீழ் விசை dot3+dot4+dot5+dot8+space
கீழம்பு விசை dot4+space, leftSideDownArrow
கட்டுப்பாடு+மாற்றழுத்தி+கீழம்பு விசை dot5+dot6+dot8+space+f1
கட்டுப்பாடு+கீழம்பு விசை dot5+dot6+space
மாற்றழுத்தி+நிலைமாற்றி+கீழம்பு விசை dot5+dot6+dot7+f1
நிலைமாற்றி+கீழம்பு விசை dot5+dot6+dot7+space
மாற்றழுத்தி+கீழம்பு விசை space+rightSideScrollDown
விடுபடு விசை dot1+dot5+space, f4, brailleedge:f1
அழித்தல் விசை dot1+dot3+dot5+space, dot1+dot4+dot5+space
f1 விசை dot1+dot2+dot5+space
f3 விசை dot1+dot4+dot8+space
f4 விசை dot7+f3
சாளரங்கள்+b விசை dot1+dot2+f1
சாளரங்கள்+d விசை dot1+dot4+dot5+f1
கட்டுப்பாடு+செருகு விசை smartbeetle:f1+rightSideScroll
நிலைமாற்றி+செருகு விசை smartbeetle:f3+rightSideScroll

சேக்கா பிரெயில் காட்சியமைவுகள்

வேறுபட்ட செயல்பாடுகளுடன் இரு குழுக்களாக நிப்பான் டெலிசாஃப் வழங்கும் பின்வரும் பிரெயில் காட்சியமைவுகள் ஆதரிக்கப்படுகின்றன:

காட்சியமைவுகள் குறித்த கூடுதல் தகவல்களை, நிறுவனத்தின் தெரியக்காட்டல் மற்றும் இயக்கித் தரவிறக்கப் பக்கத்தில் காணலாம்.

சேக்கா பதிப்பு 3, 4, மற்றும் 5 (40 களங்கள்), சேக்கா80 (80 களங்கள்)

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக left
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக right
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக b3
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக b4
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக b5
எல்லாம் படித்திடுக b6
தத்தல் b1
மாற்றழுத்தி+தத்தல் b2
நிலைமாற்றி+தத்தல் b1+b2
என்விடிஏ பட்டியல் left+right
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக routing

மினிசேக்கா (16, 24 களங்கள்), V6, மற்றும் V6Pro (40 களங்கள்)

பின்புலத்தில் பிரெயில் காட்சியமைவைத் தானாகக் கண்டறியும் என்விடிஏவின் செயல்பாடு, யுஎஸ்பி மற்றும் ஊடலை வாயிலாக ஆதரிக்கப்படுகிறது. அமைவடிவமாக்க "சேக்கா நோட்டேக்கர்", அல்லது "தன்னியக்கம்" என்பதைத் தெரிவுச் செய்க. சேக்கா நோட்டேக்கர் பிரெயில் காட்சியமைவைப் பயன்படுத்த கூடுதல் இயக்கிகள் தேவைப்படுவதில்லை.

இக்காட்சியமைவிற்கு பின்வரும் விசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதனை விளக்கமாக அறிய, காட்சியமைவுடன் வரும் ஆவணத்தைக் காணவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டுக left
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக right
எல்லாம் பேசுக space+Backspace
என்விடிஏ பட்டியல் Left+Right
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக LJ up
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக LJ down
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக LJ center
தத்தல் LJ right
மாற்றழுத்தி+தத்தல் LJ left
மேலம்பு விசை RJ up
கீழம்பு விசை RJ down
இடதம்பு விசை RJ left
வலதம்பு விசை RJ right
பிரெயில் களத்திற்கு வழியமைத்திடுக routing
மாற்றழுத்தி+மேலம்பு விசை Space+RJ up, Backspace+RJ up
மாற்றழுத்தி+கீழம்பு விசை Space+RJ down, Backspace+RJ down
மாற்றழுத்தி+இடதம்பு விசை Space+RJ left, Backspace+RJ left
மாற்றழுத்தி+வலதம்பு விசை Space+RJ right, Backspace+RJ right
உள்ளிடு விசை RJ center, dot8
விடுபடு விசை Space+RJ center
சாளரங்கள் விசை Backspace+RJ center
இடைவெளி விசை Space, Backspace
பின்நகர்த்து விசை dot7
பக்கம் மேல் விசை space+LJ right
பக்கம் கீழ் விசை space+LJ left
தொடக்கம் விசை space+LJ up
முடிவு விசை space+LJ down
கட்டுப்பாடு+தொடக்கம் விசை backspace+LJ up
கட்டுப்பாடு+முடிவு விசை backspace+LJ down

பேப்பன்மேயர் பிரெயிலெக்ஸ் புதிய மாதிரிகள்

கீழ் கண்ட பிரெயில் காட்சியமைவுகள் ஆதரிக்கப்படுகின்றன:

பிரெயில் காட்சியமைவை பின்னணியில் தானாகக் கண்டறியும் என்விடிஏவின் வசதியை இக்காட்சியமைவுகள் இதுவரைக்கும் ஆதரிப்பதில்லை. காட்சியமைவின் யுஎஸ்பி இயக்கியில் இருக்கும் ஒரு விருப்பத் தேர்வு, காட்சியமைவை ஏற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். பின்வருவனவற்றை முயற்சிக்கவும்:

  1. அண்மைய இயக்கி நிறுவப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. விண்டோஸ் கருவி மேலாளரைத் திறக்கவும்.
  3. பட்டியலை நகர்த்தி, 'யுஎஸ்பி கட்டுப்படுத்திகள்', அல்லது 'யுஎஸ்பி கருவிகள்' உருப்படிக்குச் செல்லவும்.
  4. பேப்பன்மேயர் பிரெயிலெக்ஸ் யுஎஸ்பி கருவியைத் தெரிவுச் செய்யவும்.
  5. பண்புகள் உரையாடலைத் திறந்து, 'மேம்பட்டவை' கீற்றிற்குச் செல்லவும். சில தருணங்களில் 'மேம்பட்டவை' கீற்று தோன்றாது. இதுபோன்ற தருணங்களில், பிரெயில் காட்சியமைவை கணினியிலிருந்து துண்டித்த பிறகு, என்விடிஏவைவிட்டு வெளியேறி, சிறிது நேரம் காத்திருந்து, காட்சியமைவை மீண்டும் கணினியில் இணைக்கவும். தேவைப்பட்டால் இச்செயலை நான்கு முதல் ஐந்து முறை செய்யவும். 'மேம்பட்ட' கீற்று இன்னும் காட்டப்படவில்லையென்றால், கணினியை மறுதுவக்கவும்.
  6. "Load VCP" விருப்பத் தேர்வினை முடக்கவும்.

இயலுணர்வுடனும், விரைவாகவும் செயற்பட, எளிதான அணுகுப் பட்டையை (Easy Access Bar - EAB) பல கருவிகள் கொண்டிருக்கின்றன. இவ்வணுகுப் பட்டையை நான்கு திசைகளில் நகர்த்தலாம். பொதுவாக, ஒவ்வொரு திசைக்கும் இரு இயக்கிகள் இருக்கும். இவ்விதிக்கு c மற்றும் லைவ் தொடர்கள் மட்டுமே விலக்காகும்.

c-தொடர் மற்றும் பிற காட்சியமைவுகளில் வழியிடும் இரு வரிசைகள் காணப்படும். இதிலுள்ள மேல் வரிசை, வடிவூட்டத் தகவலை அறிவிக்க பயன்படுத்தப்படுகிறது. c-தொடர் கருவிகளில், மேல் வரிசையில் உள்ள ஒரு வழியிடும் விசையை அழுத்திய வண்ணம், அணுகுப் பட்டையை அழுத்துவது, இரண்டாம் இயக்கியை ஒப்புருவாக்கும். லைவ் தொடர் காட்சியமைவுகளில் ஒரு வழியிடும் வரிசை மட்டுமே உள்ளது. ஒரு திசைக்கு ஒரு படியை மட்டுமே அணுகுப்பட்டை கொண்டுள்ளது. வழியிடும் விசை ஒன்றை அழுத்திய வண்ணம், அணுகுப்பட்டையை ஒத்த திசையில் அழுத்துவதன் மூலம், இரண்டாம் படியை ஒப்புருவாக்கலாம். கீழ், மேல், வலது, இடது, அல்லது EAB விசைகளை அழுத்திப் பிடிப்பது, அவைகளுக்கான செயல்களைத் திரும்பச் செய்விக்கும்.

இக்காட்சியமைவுகளில், கீழ் கண்ட விசைகள் பொதுவாகக் காணப்படுகின்றன:

பெயர் விசை
l1 இடது முன் விசை
l2 இடது பின் விசை
r1 வலது முன் விசை
r2 வலது பின் விசை
up ஒரு படி மேல்
up2 இரு படிகள் மேல்
left ஒரு படி இடமாக
left2 இரு படிகள் இடமாக
right ஒரு படி வலமாக
right2 இரு படிகள் வலமாக
dn ஒரு படி கீழ்
dn2 இரு படிகள் கீழ்

என்விடிஏவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள பேப்பன்மேயர் கட்டளைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக left
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக right
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக up
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக dn
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக routing
சீராய்வில் இருக்கும் தற்போதைய எழுத்தினை அறிவித்திடுக l1
தற்போதைய வழிசெலுத்திப் பொருளை இயக்குக l2
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக r2
தலைப்பை அறிவித்திடுக l1+up
நிலைப் பட்டையை அறிவித்திடுக l2+down
கொண்டுள்ள பொருளுக்கு நகர்க up2
கொள்ளப்பட்டிருக்கும் முதல் பொருளுக்கு நகர்க dn2
முந்தைய பொருளுக்கு நகர்க left2
அடுத்த பொருளுக்கு நகர்க right2
பிரெயில் கள‍த்தின் கீழிருக்கும் உரையின் வடிவூட்டத்தை அறிவித்திடுக upper routing row

Trio மாதிரி, பிரெயில் விசைப் பலகைக்கு முன், நான்கு கூடுதல் விசைகளைக் கொண்டுள்ளது. இவை, இடமிருந்து வலமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

வலது பெருவிரல் விசை, தற்போதைக்குப் பயன்பாட்டிலில்லை. இரு உள்விசைகளும், இடைவெளிப் பட்டைக்கு வரையறுக்கப்பட்டுள்ளன

பெயர் விசை
விடுபடு விசை space with dot 7
மேலம்பு விசை space with dot 2
இடதம்பு விசை space with dot 1
வலதம்பு விசை space with dot 4
கீழம்பு விசை space with dot 5
கட்டுப்பாடு விசை lt+dot2
நிலைமாற்றி விசை lt+dot3
கட்டுப்பாடு+விடுபடு விசை space with dot 1 2 3 4 5 6
தத்தல் விசை space with dot 3 7

பேப்பன்மேயர் பிரெயிலெக்ஸ் பழைய மாதிரிகள்

கீழ் காணும் பிரெயில் காட்சியமைவுகள் ஆதரவளிக்கப்படுகின்றன:

இக்காட்சியமைவுகளை, தொடர் நுழைவாயில் மூலம்தான் இணைக்க முடியுமென்பதை கவனிக்கவும். இதனால், பிரெயில் காட்சியமைவை பின்னணியில் தானாகக் கண்டறியும் என்விடிஏவின் வசதியை இக்காட்சியமைவுகள் ஆதரிப்பதில்லை. பிரெயில் காட்சியமைவைத் தெரிவுச் செய்க உரையாடலில் இவ்வியக்கியைத் தேர்வுச் செய்த பின்னர், பிரெயில் காட்சியமைவு இணைக்கப்பட்டிருக்கும் நுழைவாயிலைத் தாங்கள் தெரிவுச் செய்ய வேண்டும்.

இயலுணர்வுடனும், விரைவாகவும் செயற்பட, எளிதான அணுகுப் பட்டையை (Easy Access Bar - EAB) சில கருவிகள் கொண்டிருக்கும். இவ்வணுகுப் பட்டையை நான்கு திசைகளில் நகர்த்தலாம். பொதுவாக, ஒவ்வொரு திசைக்கும் இரு இயக்கிகள் இருக்கும். கீழ், மேல், வலது, இடது, அல்லது EAB விசைகளை அழுத்திப் பிடிப்பது, அவைகளுக்கான செயல்களைத் திரும்பச் செய்விக்கும். பழைய கருவிகளில் எளிதான அணுகுப் பட்டை இல்லையென்பதால், முன் விசைகள் மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இக்காட்சியமைவுகளில், கீழ் கண்ட விசைகள் பொதுவாகக் காணப்படுகின்றன:

பெயர் விசை
l1 இடது முன் விசை
l2 இடது பின் விசை
r1 வலது முன் விசை
r2 வலது பின் விசை
up ஒரு படி மேல்
up2 இரு படிகள் மேல்
left ஒரு படி இடமாக
left2 இரு படிகள் இடமாக
right ஒரு படி வலமாக
right2 இரு படிகள் வலமாக
dn ஒரு படி கீழ்
dn2 இரு படிகள் கீழ்

என்விடிஏவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள பேப்பன்மேயர் கட்டளைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

எளிதான அணுகுப் பட்டை கொண்டுள்ள கருவிகள்:

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக left
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக right
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக up
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக dn
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக routing
சீராய்வில் இருக்கும் தற்போதைய வரியுருவை அறிவித்திடுக l1
தற்போதைய வழிசெலுத்திப் பொருளை இயக்குக l2
தலைப்பை அறிவித்திடுக l1+up
நிலைப் பட்டையை அறிவித்திடுக l2+down
கொண்டுள்ள பொருளுக்கு நகர்க up2
கொள்ளப்பட்டிருக்கும் முதல் பொருளுக்கு நகர்க dn2
அடுத்த பொருளுக்கு நகர்க right2
முந்தைய பொருளுக்கு நகர்க left2
பிரெயில் கள‍த்தின் கீழிருக்கும் உரையின் வடிவூட்டத்தை அறிவித்திடுக upper routing strip

பிரெயிலெக்ஸ் Tiny:

பெயர் விசை
சீராய்வில் இருக்கும் தற்போதைய எழுத்தினை அறிவித்திடுக l1
தற்போதைய வழிசெலுத்திப் பொருளை இயக்குக l2
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக left
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக right
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக up
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக dn
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக r2
கொண்டுள்ள பொருளுக்கு நகர்க r1+up
கொண்டுள்ள முதல் பொருளுக்கு நகர்க r1+dn
முந்தைய பொருளுக்கு நகர்க r1+left
அடுத்த பொருளுக்கு நகர்க r1+right
பிரெயில் கள‍த்தின் கீழிருக்கும் உரையின் வடிவூட்டத்தை அறிவித்திடுக upper routing strip
தலைப்பை அறிவித்திடுக l1+up
நிலைப் பட்டையை அறிவித்திடுக l2+down

பிரெயிலெக்ஸ் 2D திரை:

பெயர் விசை
சீராய்வில் இருக்கும் தற்போதைய எழுத்தினை அறிவித்திடுக l1
தற்போதைய வழிசெலுத்திப் பொருளை இயக்குக l2
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக r2
பிரெயில் கள‍த்தின் கீழிருக்கும் உரையின் வடிவூட்டத்தை அறிவித்திடுக upper routing strip
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக up
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக left
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக right
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக dn
அடுத்த வரிக்கு நகர்க left2
கொண்டுள்ள பொருளுக்கு நகர்க up2
கொள்ளப்பட்டிருக்கும் முதல் பொருளுக்கு நகர்க dn2
முந்தைய பொருளுக்கு நகர்க right2

ஹ்யூமன்வேர் பிரெயில்நோட்

ஒரு திரைநவிலிக்குக் காட்சியமைவு முனையமாக செயற்படும்பொழுது, ஹ்யூமன்வேர் பிரெயில்நோட்டின் நோட்டேக்கர்களுக்கு என்விடிஏ ஆதரவளிக்கிறது. பின்வரும் மாதிரிகளுக்கு ஆதரவளிக்கப்படுகிறது:

பிரெயில்நோட் டச் குறித்து அறிய, பிரெயிலண்ட் BI தொடர்/பிரெயில்நோட் டச் பிரிவைக் காணவும்.

பிரெயில்நோட் PK தவிர்த்து, பிரெயில் (BT) மற்றும் QWERTY (QT) ஆகிய இரு விசைப் பலகைகளுக்கு ஆதரவளிக்கப்படுகிறது. பிரெயில்நோட் QT விசைப் பலகையில், கணினி விசைப் பலகை ஒப்புருவாக்கத்திற்கு ஆதரவில்லை. QT விசைப் பலகையைப் பயன்படுத்தி, தாங்கள் பிரெயில் புள்ளிகளை உள்ளிடலாம். கூடுதல் தகவல்களுக்கு, பிரெயில்நோட் கைமுறை வழிகாட்டியில் இருக்கும் பிரெயில் முனையம் பிரிவைக் காணவும்.

தங்களின் கருவி, ஒன்றிற்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு ஆதரவளிக்குமாயின், பிரெயில்நோட்டை என்விடிஏவுடன் இணைக்கும்பொழுது, பிரெயில் முனையம் விருப்பத் தேர்வில் பிரெயில் முனையத்தின் நுழைவாயிலை அமைக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, பிரெயில்நோட்டின் கையேட்டைக் காணவும். என்விடிஏவில், பிரெயில் காட்சியமைவைத் தெரிவுச் செய்க உரையாடலில் பிரெயில் நுழைவாயிலை அமைக்க வேண்டியிருக்கலாம். யுஎஸ்பி, அல்லது ஊடலை மூலம் இணைப்பை ஏற்படுத்தும்பொழுது, இருக்கும் விருப்பத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு, தன்னியக்கம், யுஎஸ்பி, அல்லது ஊடலை ஆகியவற்றுள் ஒன்றிற்கு நுழைவாயிலை அமைக்கலாம். லெகசி தொடர் தொடர்பாடல், யுஎஸ்பியிலிருந்து தொடர் மாற்றி ஆகியவை மூலம் இணைப்பை ஏற்படுத்தும்பொழுது,, அல்லது முந்தைய விருப்பத் தேர்வுகள் ஏதும் இல்லாதபொழுது, வன்பொறுள் நுழைவாயில்களின் பட்டியலிலிருந்து, பயன்படுத்தப்படவேண்டிய நுழைவாயிலைத் தாங்கள் குறிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிரெயில்நோட் அபெக்ஸை அதன் யுஎஸ்பி நுகர்வி இடைமுகப்பை கொண்டு இணைப்பை ஏற்படுத்தும் முன்னர், ஹ்யூமன்வேர் நிறுவனத்தின் இயக்கிகளைத் தாங்கள் முதலில் நிறுவ வேண்டும்.

பிரெயில்நோட் அபெக்ஸ் BT விசைப் பலகையில் என்விடிஏவின் பல கட்டளைகளைச் செயற்படுத்த, 1ம் 4ம் புள்ளிகளுக்கிடையே அமைந்திருக்கும் உருள் சக்கரத்தை தாங்கள் பயன்படுத்தலாம். நான்கு திசைகளைக் குறிக்கும் புள்ளிகளையும், மையச் சொடுக்குப் பொத்தானையும், முன்னும் பின்னும் சுழலும் சக்கரத்தையும் இந்த உருள் சக்கரம் கொண்டுள்ளது.

பின்வரும் என்விடிஏ விசைகள், பிரெயில்நோட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, பிரெயில்நோட்டின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக back
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக advance
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக previous
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக next
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக routing
என்விடிஏ பட்டியல் space+dot1+dot3+dot4+dot5 (space+n)
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக previous+next
மேலம்பு விசை space+dot1
கீழம்பு விசை space+dot4
இடதம்பு விசை space+dot3
வலதம்பு விசை space+dot6
பக்கம் மேல் விசை space+dot1+dot3
பக்கம் கீழ் விசை space+dot4+dot6
தொடக்க விசை space+dot1+dot2
முடிவு விசை space+dot4+dot5
கட்டுப்பாடு+தொடக்க விசைகள் space+dot1+dot2+dot3
கட்டுப்பாடு+முடிவு விசைகள் space+dot4+dot5+dot6
இடைவெளி விசை space
உள்ளிடு விசை space+dot8
பின்நகர் விசை space+dot7
தத்தல் விசை space+dot2+dot3+dot4+dot5 (space+t)
மாற்றழுத்தி+தத்தல் விசைகள் space+dot1+dot2+dot5+dot6
சாளரங்கள் விசை space+dot2+dot4+dot5+dot6 (space+w)
நிலைமாற்றி விசை space+dot1+dot3+dot4 (space+m)
உள்ளீடு உதவியை மாற்றியமை space+dot2+dot3+dot6 (space+lower h)

பிரெயில் உள்ளீட்டு நிலையில் இல்லாதபொழுது, பிரெயில்நோட் QT விசைப் பலகைக்கு பின்வரும் விசைகள் ஒதுக்கப்படுகின்றன:

பெயர் விசை
என்விடிஏ பட்டியல் read+n
மேலம்பு விசை upArrow
கீழம்பு விசை downArrow
இடதம்பு விசை leftArrow
வலதம்பு விசை rightArrow
பக்கம் மேல் விசை function+upArrow
பக்கம் கீழ் விசை function+downArrow
தொடக்கம் விசை function+leftArrow
முடிவு விசை function+rightArrow
கட்டுப்பாடு+தொடக்கம் விசைகள் read+t
கட்டுப்பாடு+முடிவு விசைகள் read+b
உள்ளிடு விசை enter
பின்நகர் விசை backspace
தத்தல் விசை tab
மாற்றழுத்தி+தத்தல் விசைகள் shift+tab
சாளரங்கள் விசை read+w
நிலைமாற்றி விசை read+m
உள்ளீட்டு உதவி நிலையை மாற்றியமை read+1

பின்வரும் கட்டளைகள் உருள் சக்கரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன:

பெயர் விசை
மேலம்பு விசை upArrow
கீழம்பு விசை downArrow
இடதம்பு விசை leftArrow
வலதம்பு விசை rightArrow
உள்ளிடு விசை centre button
தத்தல் விசை scroll wheel clockwise
மாற்றழுத்தி+தத்தல் விசைகள் scroll wheel counterclockwise

ஈக்கோப்ரெயில்

ஒன்ஸ் நிறுவனத்தின் பிரெயில் காட்சியமைவுகளை என்விடிஏ ஆதரிக்கிறது. பின்வரும் மாதிரிகள் ஆதரிக்கப்படுகின்றன:

என்விடிஏவில் எந்தத் தொடர் நுழைவாயிலில் காட்சியமைவு இணைக்கப்பட வேண்டுமென்பதை, பிரெயில் காட்சியமைவைத் தெரிவுச் செய்க உரையாடலில் வரையறுக்கலாம். பிரெயில் காட்சியமைவை பின்னணியில் தானாகக் கண்டறியும் என்விடிஏவின் வசதியை இக்காட்சியமைவுகள் ஆதரிப்பதில்லை.

பின்வரும் விசைக் கட்டளைகள், ஈக்கோப்ரெயில் காட்சியமைவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன: காட்சியமைவில் இவ்விசைகள் எங்குள்ளன என்கிற விளக்கத்தை ஈக்கோப்ரெயில் ஆவணத்தில் காணவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டுக T2
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக T4
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக T1
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக T5
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக Routing
தற்போதைய வழிசெலுத்திப் பொருளை இயக்குக T3
அடுத்த சீராய்வு நிலைக்கு மாறுக F1
கொண்டுள்ள பொருளுக்கு நகர்க F2
முந்தைய சீராய்வு நிலைக்கு மாறுக F3
முந்தைய பொருளுக்கு நகர்க F4
தற்போதைய பொருளை அறிவித்திடுக F5
அடுத்த பொருளுக்கு நகர்க F6
குவிமையத்திலுள்ள பொருளுக்கு நகர்க F7
கொண்டுள்ள முதல் பொருளுக்கு நகர்க F8
கணினிக் குவிமையத்தை, அல்லது சுட்டியை, தற்போதைய சீராய்வு நிலைக்கு நகர்த்துக F9
சீராய்வுச் சுட்டியின் அமைவிடத்தை அறிவித்திடுக F0
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக A

சூப்பர் பிரெயில்

பெரும்பாலும் தைவான் நாட்டில் காணப்படும் சூப்பர் பிரெயில் கருவியை, யுஎஸ்பி, அல்லது தொடர் நுழைவாயில் மூலம் இணைக்கலாம். சூப்பர் பிரெயில் கருவியில் தட்டச்சு விசைகளோ, உருள் பொத்தான்களோ இல்லையென்பதால், எல்லா உள்ளீடுகளையும் கணினி விசைப் பலகை மூலமே செய்ய வேண்டும். இதன் காரணமாகவும், தைவானில் பயன்படுத்தப்படும் பிற திரைநவிலிகளுடனான ஒத்திசைவிற்காகவும், பிரெயில் காட்சியமைவை நகர்த்த இரு விசைகள் இணைக்கப்பட்டுள்ளன.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டுக numpadMinus
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக numpadPlus

யுரோபிரெயில் காட்சியமைவுகள்

யுரோபிரெயிலின் b.book, b.note, Esys, Esytime, Iris காட்சியமைவுகளுக்கு என்விடிஏ ஆதரவளிக்கிறது. இக்காட்சியமைவுகள், பத்து விசைகளைக் கொண்ட ஒரு பிரெயில் விசைப்பலகையைக் கொண்டுள்ளன. இவ்விசைகள் விசைப்பலகையில் எங்குள்ளன என்பதன் விளக்கத்தை அறிய, காட்சியமைவுடன் வரும் ஆவணத்தைக் காணவும். இடைவெளிப்பட்டை போன்று அமைக்கப்பட்டிருக்கும் இரு விசைகளில் இடப்புறம் இருப்பது 'பின்நகர்' விசை, வலப்புறம் இருப்பது 'இடைவெளிப்பட்டை'.

யுஎஸ்பி வழி இணைக்கப்படும் இக்கருவிகளுக்கு தனித்து நிற்கும் யுஎஸ்பி விசைப்பலகை ஒன்று இருக்கும். உள்ளீட்டுச் சைகை ஒன்றைப் பயன்படுத்தி, எச்.ஐ.டி. விசைப்பலகை உருவகமாக்கத்தை மாற்றியமைத்து, இவ்விசைப்பலகையை முடுக்கலாம், அல்லது முடக்கலாம். கீழே விளக்கப்படும் பிரெயில் விசைப்பலகை செயற்பாடுகள், ஹெச்.ஐ.டி. விசைப்பலகை உருவகமாக்கம் முடக்கப்பட்ட நிலையில் செயல்படும்.

பிரெயில் விசைப்பலகை செயற்பாடுகள்

பெயர் விசை
கடைசியாக உள்ளிடப்பட்ட பிரெயில் களம், அல்லது வரியுருவை அழித்திடுக backspace
எந்தவொரு பிரெயில் உள்ளீட்டினையும் மொழிபெயர்த்து உள்ளிடு விசையை அழுத்திடுக backspace+space
என்விடிஏ விசையை மாற்றியமைத்திடுக dot3+dot5+space
செருகு விசை dot1+dot3+dot5+space, dot3+dot4+dot5+space
அழித்திடுக விசை dot3+dot6+space
முகப்பு விசை dot1+dot2+dot3+space
முடிவு விசை dot4+dot5+dot6+space
இடதம்பு விசை dot2+space
வலதம்பு விசை dot5+space
மேலம்பு விசை dot1+space
கீழம்பு விசை dot6+space
பக்கம் மேல் விசை dot1+dot3+space
பக்கம் கீழ் விசை dot4+dot6+space
எண் திட்டு 1 விசை dot1+dot6+backspace
எண் திட்டு 2 விசை dot1+dot2+dot6+backspace
எண் திட்டு 3 விசை dot1+dot4+dot6+backspace
எண் திட்டு 4 விசை dot1+dot4+dot5+dot6+backspace
எண் திட்டு 5 விசை dot1+dot5+dot6+backspace
எண் திட்டு 6 விசை dot1+dot2+dot4+dot6+backspace
எண் திட்டு 7 விசை dot1+dot2+dot4+dot5+dot6+backspace
எண் திட்டு 8 விசை dot1+dot2+dot5+dot6+backspace
எண் திட்டு 9 விசை dot2+dot4+dot6+backspace
எண் திட்டு செருகு விசை dot3+dot4+dot5+dot6+backspace
எண் திட்டு அழி விசை dot2+backspace
எண் திட்டு வகுத்தல் விசை dot3+dot4+backspace
எண் திட்டு பெருக்கல் விசை dot3+dot5+backspace
எண் திட்டு கழித்தல் விசை dot3+dot6+backspace
எண் திட்டு கூட்டல் விசை dot2+dot3+dot5+backspace
எண் திட்டு உள்ளிடு விசை dot3+dot4+dot5+backspace
உள்ளிடு விசை dot1+dot2+dot4+dot5+space, l2
தத்தல் விசை dot2+dot5+dot6+space, l3
மாற்றழுத்தி+தத்தல் விசை dot2+dot3+dot5+space
திரையச்சு விசை dot1+dot3+dot4+dot6+space
இடைநிறுத்தல் விசை dot1+dot4+space
பயன்பாடுகள் விசை dot5+dot6+backspace
f1 விசை dot1+backspace
f2 விசை dot1+dot2+backspace
f3 விசை dot1+dot4+backspace
f4 விசை dot1+dot4+dot5+backspace
f5 விசை dot1+dot5+backspace
f6 விசை dot1+dot2+dot4+backspace
f7 விசை dot1+dot2+dot4+dot5+backspace
f8 விசை dot1+dot2+dot5+backspace
f9 விசை dot2+dot4+backspace
f10 விசை dot2+dot4+dot5+backspace
f11 விசை dot1+dot3+backspace
f12 விசை dot1+dot2+dot3+backspace
சாளரங்கள் விசை dot1+dot2+dot4+dot5+dot6+space
சாளரங்கள் விசையை மாற்றியமைத்திடுக dot1+dot2+dot3+dot4+backspace, dot2+dot4+dot5+dot6+space
முகப்பெழுத்துப் பூட்டு விசை dot7+backspace, dot8+backspace
எண் பூட்டு விசை dot3+backspace, dot6+backspace
மாற்றழுத்தி விசை dot7+space
மாற்றழுத்தி விசையை மாற்றியமைத்திடுக dot1+dot7+space, dot4+dot7+space
கட்டுப்பாடு விசை dot7+dot8+space
கட்டுப்பாடு விசையை மாற்றியமைத்திடுக dot1+dot7+dot8+space, dot4+dot7+dot8+space
நிலைமாற்றி விசை dot8+space
நிலைமாற்றி விசையை மாற்றியமைத்திடுக dot1+dot8+space, dot4+dot8+space
ஹெச்.ஐ.டி. விசைப்பலகை உருவகமாக்கத்தை மாற்றியமைத்திடுக switch1Left+joystick1Down, switch1Right+joystick1Down

பி.புக் விசைப்பலகை கட்டளைகள்

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டுக backward
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக forward
தற்போதைய குவிமையத்திற்கு நகர்க backward+forward
பிரெயில் களத்திற்கு வழியமைத்திடுக routing
இடதம்பு விசை joystick2Left
வலதம்பு விசை joystick2Right
மேலம்பு விசை joystick2Up
கீழம்பு விசை joystick2Down
உள்ளிடு விசை joystick2Center
விடுபடு விசை c1
தத்தல் விசை c2
மாற்றியழுத்தி விசையை மாற்றியமைத்திடுக c3
கட்டுப்பாடு விசையை மாற்றியமைத்திடுக c4
நிலைமாற்றி விசையை மாற்றியமைத்திடுக c5
என்விடிஏ விசையை மாற்றியமைத்திடுக c6
கட்டுப்பாடு+முகப்பு விசை c1+c2+c3
கட்டுப்பாடு+முடிவு விசை c4+c5+c6

பி.நோட் விசைப்பலகை கட்டளைகள்

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டுக leftKeypadLeft
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக leftKeypadRight
பிரெயில் களத்திற்கு வழியமைத்திடுக routing
பிரெயில் களத்தின் கீழிருக்கும் உரையின் வடிவூட்டத்தை அறிவித்திடுக doubleRouting
சீராய்வில் அடுத்த வரிக்கு நகர்க leftKeypadDown
முந்தைய சீராய்வு நிலைக்கு மாறுக leftKeypadLeft+leftKeypadUp
அடுத்த சீராய்வு நிலைக்கு மாறுக leftKeypadRight+leftKeypadDown
இடதம்பு விசை rightKeypadLeft
வலதம்பு விசை rightKeypadRight
மேலம்பு விசை rightKeypadUp
கீழம்பு விசை rightKeypadDown
கட்டுப்பாடு+முகப்பு விசை rightKeypadLeft+rightKeypadUp
கட்டுப்பாடு+முடிவு விசை rightKeypadLeft+rightKeypadUp

எசிஸ் விசைப்பலகை கட்டளைகள்

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டுக switch1Left
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக switch1Right
தற்போதைய குவிமையத்திற்கு நகர்க switch1Center
பிரெயில் களத்திற்கு வழியமைத்திடுக routing
பிரெயில் களத்தின் கீழிருக்கும் உரையின் வடிவூட்டத்தை அறிவித்திடுக doubleRouting
சீராய்வில் முந்தைய வரிக்கு நகர்க joystick1Up
சீராய்வில் அடுத்த வரிக்கு நகர்க joystick1Down
சீராய்வில் முந்தைய வரியுருவிற்கு நகர்க joystick1Left
சீராய்வில் அடுத்த வரியுருவிற்கு நகர்க joystick1Right
இடதம்பு விசை joystick2Left
வலதம்பு விசை joystick2Right
மேலம்பு விசை joystick2Up
கீழம்பு விசை joystick2Down
உள்ளிடு விசை joystick2Center

எசிடைம் விசைப்பலகை கட்டளைகள்

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டுக l1
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக l8
தற்போதைய குவிமையத்திற்கு நகர்க l1+l8
பிரெயில் களத்திற்கு வழியமைத்திடுக routing
பிரெயில் களத்தின் கீழிருக்கும் உரையின் வடிவூட்டத்தை அறிவித்திடுக doubleRouting
சீராய்வில் முந்தைய வரிக்கு நகர்க joystick1Up
சீராய்வில் அடுத்த வரிக்கு நகர்க joystick1Down
சீராய்வில் முந்தைய வரியுருவிற்கு நகர்க joystick1Left
சீராய்வில் அடுத்த வரியுருவிற்கு நகர்க joystick1Right
இடதம்பு விசை joystick2Left
வலதம்பு விசை joystick2Right
மேலம்பு விசை joystick2Up
கீழம்பு விசை joystick2Down
உள்ளிடு விசை joystick2Center
விடுபடு விசை l2
தத்தல் விசை l3
மாற்றியழுத்தி விசையை மாற்றியமைத்திடுக l4
கட்டுப்பாடு விசையை மாற்றியமைத்திடுக l5
நிலைமாற்றி விசையை மாற்றியமைத்திடுக l6
என்விடிஏ விசையை மாற்றியமைத்திடுக l7
கட்டுப்பாடு+முகப்பு விசை l1+l2+l3, l2+l3+l4
கட்டுப்பாடு+முடிவு விசை l6+l7+l8, l5+l6+l7
ஹெச்.ஐ.டி. விசைப்பலகை உருவகமாக்கத்தை மாற்றியமைத்திடுக l1+joystick1Down, l8+joystick1Down

நாட்டிக் nBraille காட்சியமைவுகள்

யுஎஸ்பி மூலம் இணைக்கும்பொழுது, Nattiq Technologies நிறுவனத்தின் காட்சியமைவுகளுக்கு என்விடிஏ ஆதரவளிக்கிறது. விண்டோஸ் 10, அல்லது அதற்கும் பிறகான இயக்கமுறைமை, காட்சியமைவுகள் இணைக்கப்பட்டவுடன் கண்டறிகிறது. விண்டோஸின் முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், யுஎஸ்பி இயக்கிகளை நிறுவ வேண்டும். இயக்கிகளை உற்பத்தியாளரின் இணையப் பக்கத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

Nattiq Technologies காட்சியமைவுகளுக்கு பின்வரும் என்விடிஏ விசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதன் விளக்கத்தை அறிய, காட்சியமைவின் ஆவணத்தைக் காணவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டுக up
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக down
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக left
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக right
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக routing

BRLTTY

BRLTTY என்பது, இன்னும் பல பிரெயில் காட்சியமைவுகளைப் பயன்படுத்த உருவாக்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட பயன்பாடாகும். இதைப் பயன்படுத்த, விண்டோசிற்கான BRLTTY-ஐ தாங்கள் நிறுவ வேண்டும். இதன் அண்மைய நிறுவிப் படியைத் தரவிறக்கி நிறுவ வேண்டும். எ.கா. brltty-win-4.2-2.exe. உற்பத்தியாளரின் இயக்கிகளை நிறுவி, யுஎஸ்பி காட்சியமைவைப் பயன்படுத்துவதாக இருந்தால், காட்சியமைவையும், நுழைவாயிலையும் அமைவடிவமாக்கும்பொழுது, வழிகாட்டு நெறிமுறைகளை கவனமாகப் பின்பற்றவும்.

பிரெயில் விசைப் பலகையைக் கொண்டுள்ள காட்சியமைவுகளுக்கு, BRLTTY தானே பிரெயில் உள்ளீட்டை கையாளுகிறது. ஆகவே, என்விடிஏவின் பிரெயில் உள்ளீடு அட்டவணை அமைப்புகள் பொறுத்தமாக இருப்பதில்லை.

பிரெயில் காட்சியமைவை பின்னணியில் தானாகக் கண்டறியும் என்விடிஏவின் வசதியை ஆதரிக்க BRLTTY தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில்லை.

பின்வருபவை, என்விடிஏவிற்கான BRLTTY கட்டளை ஒதுக்கீடுகள்: பிரெயில் காட்சியமைவுடன் BRLTTY கட்டளைகள் எவ்வாறு கட்டப்பட்டுள்ளன என்பதை அறிய, இக்காட்சியமைவின் விசைப் பிணைப்புகள் ஆவணத்தைக் காணவும்.

பெயர் BRLTTY கட்டளை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டுக fwinlt (ஒவ்வொரு சாளரமாக இடப்பக்கம் நகர்க)
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக fwinrt (ஒவ்வொரு சாளரமாக வலப் பக்கம் நகர்க)
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்துக lnup (ஒவ்வொரு வரியாக மேல் நகர்க)
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்துக lndn (ஒவ்வொரு வரியாக கீழ் நகர்க)
பிரெயில் கள‍த்திற்கு வழியமைத்திடுக route (எழுத்திருக்கும் இடத்திற்கு சுட்டியை நகர்த்த்ுக)
உள்ளீட்டு உதவியை மாற்றியமைத்திடுக learn (கட்டளை கற்றல் முறையை உள்ளிடுக/வெளியேறுக)
என்விடிஏ பட்டியலைத் திறவுக prefmenu (விருப்பங்கள் உட்பட்டியலை திரவுக/வெளியேறுக)
அமைவடிவத்தைத் திருப்பியமைத்திடுக prefload (வன்தட்டிலிருந்து விருப்பங்களை மீளமைத்திடுக)
அமைவடிவத்தை சேமித்திடுக prefsave (விருப்பங்களை வன்தட்டில் சேமித்திடுக)
நேரத்தை அறிவித்திடுக time (நடப்பு தேதியையும், நேரத்தையும் காட்டிடுக)
சீராய்வுச் சுட்டியின் இடத்திலிருக்கும் வரியை பேசிடுக say_line (தற்போதைய வரியைப் பேசிடுக)
சீராய்வுச் சுட்டியைப் பயன்படுத்தி எல்லாம் படித்திடுக say_below (தற்போதைய வரியிலிருந்து திரையின் ிறுதி வரை படித்திடுக)

டிவோமேட்டிக் கேய்க்கு ஆல்பட்ராஸ் 46/80

டிவோமேட்டிக் நிறுவனத்தால் உற்பத்திசெய்யப்பட்டு, பின்லாந்தில் கிடைக்கப் பெறும் கேய்க்கு ஆல்பட்ராஸ் கருவிகள், யுஎஸ்பி, அல்லது தொடர் நுழைவாயில் வழியே இணைக்கலாம். இக்காட்சியமைவுகளைப் பயன்படுத்த, எந்தவொரு குறிப்பிட்ட இயக்கியையும் தாங்கள் நிறுவத் தேவையில்லை. காட்சியமைவை வெறுமனே பொருத்தி, அதைப் பயன்படுத்த என்விடிஏவை அமைவடிவமாக்கவும்.

குறிப்பு: போட் விகிதம் 19200 வலுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தேவைப்பட்டால், பிரெயில் கருவிகள் பட்டியலில் காணப்படும் போட் விகித அமைப்பின் மதிப்பை 19200 என மாற்றியமைக்கவும். 19600 போட் விகிதத்தை இயக்கி ஆதரித்தாலும், எந்த போட் விகிதத்தை காட்சியமைவு பயன்படுத்த வேண்டுமென்பதை கட்டுப்படுத்த இயக்கிக்கு எந்த வழியுமில்லை. காட்சியமைவின் இயல்பான போட் விகிதம் 19200 என்று இருப்பதால், அதை முதலில் இயக்கி முயலும். போட் விகிதம் ஒரே மாதிரியாக இல்லாதிருந்தால், எதிர்பாராத வகையில் இயக்கி செயலாற்றும்.

என்விடிஏவுடன் பயன்படுத்த, பின்வரும் விசைகள் இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விசைகள் எங்கு காணப்படுகின்றன என்பதை விளக்கமாக அறிய, காட்சியமைவுடன் வரும் ஆவணத்தைப் படிக்கவும்.

பெயர் விசை
சீராய்வு நிலையில் மேல் வரிக்கு நகர்க home1, home2
சீராய்வு நிலையில் கீழ் வரிக்கு நகர்க end1, end2
வழிசெலுத்திப் பொருளை தற்போதைய குவிமையத்திற்கு அமைக்கிறது eCursor1, eCursor2
தற்போதைய குவிமையத்திற்கு நகர்க cursor1, cursor2
சொடுக்கியின் குறிமுள்ளை தற்போதைய குவிமையத்திற்கு நகர்த்துகிறது home1+home2
சொடுக்கி குறிமுள்ளின் கீழிருக்கும் தற்போதையப் பொருளுக்கு வழிசெலுத்திப் பொருளை அமைத்து அதைப் படிக்கிறது end1+end2
குவிமையத்தை தற்போதைய வழிசெலுத்திப் பொருளுக்கு நகர்த்துகிறது eCursor1+eCursor2
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைக்கிறது cursor1+cursor2
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்திடுக up1, up2, up3
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்திடுக down1, down2, down3
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டுக left, lWheelLeft, rWheelLeft
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக right, lWheelRight, rWheelRight
பிரெயில் களத்திற்கு வழியமைத்திடுக routing
பிரெயில் களத்தின் கீழிருக்கும் உரை வடிவூட்டத்தை அறிவித்திடுக secondary routing
சூழலுணர்த் தகவல் பிரெயிலில் அளிக்கப்படும் விதத்தை மாற்றியமைத்திடுக attribute1+attribute3
பேச்சு முறைகளுக்கிடையே சுழல்கிறது attribute2+attribute4
முந்தைய சீராய்வு நிலைக்கு மாறுகிறது (எ.கா. பொருள், ஆவணம், அல்லது திரை) f1
அடுத்த சீராய்வு நிலைக்கு மாறுகிறது (எ.கா. பொருள், ஆவணம், அல்லது திரை) f2
வழிசெலுத்திப் பொருளைக் கொண்டிருக்கும் பொருளுக்கு வழிசெலுத்திப் பொருளை நகர்த்துகிறது f3
வழிசெலுத்திப் பொருளுக்குள் இருக்கும் முதல் பொருளுக்கு வழிசெலுத்திப் பொருளை நகர்த்துகிறது f4
முந்தைய பொருளுக்கு வழிசெலுத்திப் பொருளை நகர்த்துகிறது f5
அடுத்த பொருளுக்கு வழிசெலுத்திப் பொருளை நகர்த்துகிறது f6
தற்போதைய வழிசெலுத்திப் பொருளை அறிவிக்கிறது f7
சீராய்வுச் சுட்டியின் இடத்திலிருக்கும் உரை, அல்லது பொருளின் அமைவிடத் தகவலை அறிவிக்கிறது f8
பிரெயில் அமைப்புகளைக் காட்டுகிறது f1+home1, f9+home2
நிலைப்பட்டையைப் படித்து, வழிசெலுத்திப் பொருளை அதற்குள் நகர்த்துகிறது f1+end1, f9+end2
பிரெயில் சுட்டி வடிவங்களைச் சுழற்றுகிறது f1+eCursor1, f9+eCursor2
பிரெயில் சுட்டியை மாற்றியமைக்கிறது f1+cursor1, f9+cursor2
பிரெயில் தகவல்களைக் காட்டிடும் நிலைகளுக்கிடையே சுழல்கிறது f1+f2, f9+f10
பிரெயில் தெரிவினைக் காட்டிடும் நிலைகளுக்கிடையே சுழல்கிறது f1+f5, f9+f14
'பிரெயில் சீராய்வுச் சுட்டியை வழியமைத்திடும்பொழுது கணினிச் சுட்டியை நகர்த்திடுக' நிலைகளுக்கிடையே சுழல்கிறது f1+f3, f9+f11
தற்போதைய வழிசெலுத்திப் பொருளின் மீது இயல்புச் செயலைச் செயற்படுத்துகிறது f7+f8
தேதி, நேரத்தை அறிவித்திடும் f9
மின்களத்தின் நிலையையும், மாறுதிசை மின்னூட்டம் இணைக்கப்படாதிருந்தால், எஞ்சியுள்ள நேரத்தையும் அறிவிக்கிறது f10
தலைப்பை அறிவித்திடும் f11
நிலைப் பட்டையை அறிவித்திடும் f12
பயன்பாட்டுச் சுட்டியின் கீழிருக்கும் தற்போதைய வரியை அறிவிக்கிறது f13
எல்லாம் படித்திடுக f14
சீராய்வுச் சுட்டியின் கீழிருக்கும் தற்போதைய வரியுருவை அறிவிக்கிறது f15
சீராய்வுச் சுட்டியின் இடத்திலிருக்கும் வழிசெலுத்திப் பொருளின் வரியை அறிவிக்கிறது f16
சீராய்வுச் சுட்டியின் இடத்திலிருக்கும் வழிசெலுத்திப் பொருளின் சொல்லை அறிவிக்கிறது f15+f16
வழிசெலுத்திப் பொருளின் முந்தைய வரிக்கு சீராய்வுச் சுட்டியை நகர்த்தி அதைப் படிக்கிறது lWheelUp, rWheelUp
வழிசெலுத்திப் பொருளின் அடுத்த வரிக்கு சீராய்வுச் சுட்டியை நகர்த்தி அதைப் படிக்கிறது lWheelDown, rWheelDown
சாளரங்கள்+d விசை (அனைத்து பயன்பாடுகளையும் சிறிதாக்குக) attribute1
சாளரங்கள்+e விசை (இக்கணினி) attribute2
சாளரங்கள்+b விசை (கணினித் தட்டில் குவிமையம்) attribute3
சாளரங்கள்+i விசை (விண்டோஸ் அமைப்புகள்) attribute4

எச்.ஐ.டி. தகுதர பிரெயில் காட்சியமைவுகள்

மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் தவிர என்வி அக்ஸஸ் உட்பட பல உதவித் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2018ம் ஆண்டு ஒப்புக்கொண்டதன்படி உருவாக்கப்பட்டதுதான் தகுதர எச்.ஐ.டி. பிரெயில் காட்சியமைவிற்கான இந்தப் பரிசோதனை அடிப்படையிலான இயக்கி. எதிர்காலத்தில் உருவாக்கப்படும் எல்லா பிரெயில் காட்சியமைவுகளின் உற்பத்தியாளர்கள் இந்த தகுதர நெறிமுறையைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஒவ்வொரு உற்பத்தியாளருக்குமான தனிப்பட்ட இயக்கியை உருவாக்குவதன் தேவையை இது நீக்கும்.

இந்த நெறிமுறையை ஆதரிக்கும் எந்த பிரெயில் காட்சியமைவையும் என்விடிஏவின் காட்சியமைவைத் தானாகக் கண்டறியும் வசதி கண்டறியும்.

இக்காட்சியமைவுகளுக்கு பின்வரும் விசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டுக pan left or rocker up
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டுக pan right or rocker down
பிரெயில் களத்திற்கு வழியமைத்திடுக routing set 1
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமைத்திடுக up+down
மேலம்பு விசை joystick up, dpad up or space+dot1
கீழம்பு விசை joystick down, dpad down or space+dot4
இடதம்பு விசை space+dot3, joystick left or dpad left
வலதம்பு விசை space+dot6, joystick right or dpad right
மாற்றழுத்தி+தத்தல் விசை space+dot1+dot3
தத்தல் விசை space+dot4+dot6
நிலைமாற்றி விசை space+dot1+dot3+dot4 (space+m)
விடுபடு விசை space+dot1+dot5 (space+e)
உள்ளிடு விசை dot8, joystick center or dpad center
சாளரங்கள் விசை space+dot3+dot4
நிலைமாற்றி+தத்தல் விசை space+dot2+dot3+dot4+dot5 (space+t)
என்விடிஏ பட்டியல் space+dot1+dot3+dot4+dot5 (space+n)
சாளரங்கள் +d விசை (எல்லாப் பயன்பாடுகளையும் சிறிதாக்குக) space+dot1+dot4+dot5 (space+d)
எல்லாம் படித்திடுக space+dot1+dot2+dot3+dot4+dot5+dot6

மேம்பட்ட தலைப்புகள்

பாதுகாப்பான பயன்முறை

அங்கீகரிக்கப்படாத கணினி அணுகலைக் கட்டுப்படுத்த, கணினி நிர்வாகிகள் என்விடிஏவை அமைவடிவமாக்க விரும்பலாம். தன்னிச்சையான குறியீட்டை செயற்படுத்தும் தனிப்பயனாக்கப்பட்ட நீட்சிநிரல்களின் நிறுவுதலை, என்விடிஏ அனுமதிக்கிறது. நிர்வாகியின் சிறப்புரிமைக்கு என்விடிஏ உயர்த்தப்பட்ட நிலையும் இதில் உள்ளடங்கும். பைத்தன் கட்டுப்பாட்டகத்தின் வாயிலாக தன்னிச்சையான குறியீட்டினை பயனர்கள் செயற்படுத்தவும் என்விடிஏ அனுமதிக்கிறது. தங்களின் என்விடிஏ அமைவடிவத்தை பயனர்கள் மாற்றுவதை என்விடிஏவின் பாதுகாப்பான பயன்முறை தடுக்கிறது என்பதோடு, அங்கீகரிக்கப்படாத கணினி அணுகலையும் அது கட்டுப்படுத்துகிறது.

"serviceDebug" முழுதளாவிய கணினி அளவுரு முடுக்கப்படாதிருந்தால், பாதுகாப்பானத் திரைகளில் செயல்படுத்தும்பொழுது, பாதுகாப்பான முறையில் என்விடிஏ இயங்கும். எப்பொழுதும் பாதுகாப்பான பயன்முறையில் துவங்க என்விடிஏவை கட்டாயப்படுத்த, 'forceSecureMode' முழுதளாவிய கணினி அளவுருவை அமைக்கவும். '-s' கட்டளைவரி விருப்பத் தேர்வினைப் பயன்படுத்தியும் பாதுகாப்பான பயன்முறையில் என்விடிஏவை துவக்கலாம்.

பாதுகாப்பான பயன்முறை, பின்வருவனவற்றை முடக்குகிறது:

என்விடிஏவின் நிறுவப்பட்ட படிகள், நீட்சிநிரல்கள் உட்பட தங்களின் அமைவடிவத்தை, '%APPDATA%\nvda' அடைவில் சேமிக்கின்றன. தங்கள் அமைவடிவத்தை, அல்லது நீட்சிநிரல்களை என்விடிஏ பயனர்கள் நேரடியாக மாற்றுவதைத் தடுக்க, இந்தக் கோப்புறைக்கான பயனர் அணுகலும் கட்டுப்படுத்தப்படவேண்டும்.

என்விடிஏவின் கொண்டுசெல்லத்தக்க படிகளுக்கு பாதுகாப்பான பயன்முறை பயனற்றதாகும். நிறுவியை செலுத்தும்பொழுது இயக்கப்படும் என்விடிஏவின் தற்காலிகப் படிகளுக்கும் இந்த வரம்பு பொருந்தும். என்விடிஏவின் கொண்டுசெல்லத்தக்கப் படிகளைப் பயன்படுத்தும் பயனர்கள், பாதுகாப்பான பயன்முறையைப் பயன்படுத்தினாலும், பாதுகாப்பான பயன்முறையைப் பயன்படுத்தாத நிலையில் எதிர்கொள்ளும் ஆபத்தையே எதிர்கொள்ளவேண்டியிருக்கும். என்விடிஏவின் கொண்டுசெல்லத்தக்கப் படிகள் உட்பட, அங்கீகரிக்கப்படாத மென்பொருளை தங்கள் கணினிகளில் இயங்கவிடாமல் கணினி நிர்வாகிகள் கட்டுப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களின் தேவைகளுக்கேற்றவாறு அமைவடிவ தனியமைப்புகளை வடிவமைக்கவே என்விடிஏ பயனர்கள் பெரும்பாலும் விரும்புவார்கள். தனிப்பயனாக்கப்பட்ட நீட்சிநிரல்களை நிறுவுதலும், அமைவடிவமாக்குதலும் இதில் உள்ளடங்கும். இவைகளை என்விடிஏவுடன் தனித்து சரிபார்க்கப்பட வேண்டும். என்விடிஏ அமைவடிவ மாற்றங்களை பாதுகாப்பான பயன்முறை முடக்குகிறது என்பதால், பாதுகாப்பான பயன்முறையை கட்டாயப்படுத்துவதற்கு முன், என்விடிஏ சரியான முறையில் அமைவடிவமாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

பாதுகாப்பானத் திரைகள்

"serviceDebug" முழுதளாவிய கணினி அளவுரு முடுக்கப்படாதிருந்தால், பாதுகாப்பானத் திரைகளில் செயல்படுத்தும்பொழுது, பாதுகாப்பான முறையில் என்விடிஏ இயங்கும்.

ஒரு பாதுகாப்பானத் திரையில் இயங்கும்பொழுது, ஒரு கணினித் தனியமைப்பை விருப்பங்களுக்காக என்விடிஏ பயன்படுத்துகிறது. பாதுகாப்பானத் திரைகளில் பயன்படுத்த, என்விடிஏவின் பயனர் விருப்பங்களைப் படியெடுக்கலாம்.

பாதுகாப்பானத் திரைகள் இவைகளை உள்ளடக்கும்:

கட்டளைவரி விருப்பத் தேர்வுகள்

என்விடிஏவைத் துவக்கும் பொழுது, அதன் செயற்பாட்டில் மாறுதல்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்று, அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட கூடுதலான விருப்பத் தேர்வுகளை அது ஏற்றுக் கொள்கிறது. தங்களின் தேவைக்கேற்றபடி, எத்தனை விருப்பத் தேர்வுகளை வேண்டுமானாலும் செயற்படுத்தலாம். குறுக்கு விசை, 'இயக்குக' உரையாடல் பெட்டி, கட்டுப்பாட்டகம் ஆகியவைகளைப் பயன்படுத்தி என்விடிஏவை இயக்கும்பொழுது, இவ்விருப்பத் தேர்வுகளைச் செயற்படுத்தலாம். என்விடிஏவின் செயற்படுத்தகுக் கோப்பிடமிருந்தும், பிற விருப்பத் தேர்வுகளிடமிருந்தும், இடைவெளிகளைக் கொண்டு விருப்பத் தேர்வுகளைப் பிரிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, --disable-addons என்கிற பயனுள்ள விருப்பத் தேர்வு, எல்லாக் நீட்சிநிரல்களையும் இடைநிறுத்துமாறு என்விடிஏவிற்கு அறிவுறுத்துகிறது. எழுந்துள்ள ஒரு சிக்கல், நீட்சிநிரலினால் ஏற்பட்டதா என்பதைத் தீர்மானிக்கவும், நீட்சிநிரல்களால் விளைந்திருக்கும் தீவிர சிக்கல்களிலிருந்து என்விடிஏவை மீட்கவும் இது பயன்படுகிறது.

எடுத்துக்காட்டாக, தற்போது இயக்கத்திலிருக்கும் என்விடிஏவிலிருந்து வெளியேற, 'இயக்குக' உரையாடல் பெட்டியில் கீழ்க்கண்ட விருப்பத் தேர்வினைத் தாங்கள் உள்ளிடலாம்:

nvda -q

சில கட்டளை வரி விருப்பத் தேர்வுகள், குறுகிய மற்றும் நெடு வகைகளைக் கொண்டதாகவும், இன்னும் சில விருப்பத் தேர்வுகள், நெடு வகையை மட்டும் கொண்டதாகவும் இருக்கும். குறுகிய வகையை கொண்ட விருப்பத் தேர்வுகளை, கீழ்க்கண்டவாறு இணைக்கலாம்:

. .
nvda -mc CONFIGPATH துவக்கத் தகவலையும், ஒலியையும் முடக்கிவிட்டு, குறிப்பிடப்பட்ட அமைவடிவத்துடன் என்விடிஏவைத் துவக்கும்
nvda -mc CONFIGPATH --disable-addons நீட்சிநிரல்கள் முடக்கப்பட்ட நிலையில் மேற்சொன்னது போல் செயற்படுத்தப்படும்

செயற்குறிப்பேட்டுப் பதிவு நிலை எவ்வளவு விளக்கமாக இருக்க வேண்டும், அல்லது பயனர் அமைவடிவ அடைவிற்கான பாதை போன்ற கூடுதல் அளவுருக்களையும் சில கட்டளை வரி விருப்பத் தேர்வுகள் ஏற்றுக் கொள்கின்றன. விருப்பத் தேர்விற்கு அடுத்ததாக இந்த அளவுருக்களை அமைக்க வேண்டும். மேலும், பயன்படுத்தப்படுவது குறுகிய வகையாக இருந்தால், இவைகளுக்கிடையே இடைவெளியையும், நெடு வகையாக இருந்தால், சமக் குறியீட்டினையும் இட வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக் காட்டுகளைக் காணவும்:

. .
nvda -l 10 'வழுநீக்கம்' என அமைக்கப்பட்ட செயற்குறிப்பேட்டு நிலையில் துவங்குமாறு என்விடிஏவிற்கு அறிவுறுத்துகிறது
nvda --log-file=c:\nvda.log c:\nvda.log என்கிற கோப்பில் தனது செயற்குறிப்பை எழுதுமாறு என்விடிஏவிற்கு அறிவுறுத்துகிறது
nvda --log-level=20 -f c:\nvda.log 'தகவல்' என அமைக்கப்பட்ட செயற்குறிப்பேட்டு நிலையில் துவங்குவதோடு, c:\nvda.log என்கிற கோப்பில் தனது செயற்குறிப்பை எழுதுமாறு என்விடிஏவிற்கு அறிவுறுத்துகிறது

கீழிருப்பவைதான் என்விடிஏவிற்கான கட்டளை வரி விருப்பத் தேர்வுகள்:

குறுகிய வகை நெடு வகை விளக்கம்
-h --help கட்டளை வரிக்கான உதவியைக் காண்பித்துவிட்டு வெறியேறுக
-q --quit ஏற்கெனவே இயக்கத்திலிருக்கும் என்விடிஏவின் படியை விட்டு வெளியேறுக
-k --check-running வெளியேற்றக் குறியீட்டின் ஊடாக என்விடிஏ இயங்குகிறதா என்பதை அறிவித்திடுக; 0 என்றால் இயக்கத்திலுள்ளது, 1 என்றால் இயக்கத்திலில்லை
-f LOGFILENAME --log-file=LOGFILENAME செயற்குறிப்புகள் எழுதப்பட வேண்டிய கோப்பு. பாதுகாப்பான பயன்முறை இயக்கப்பட்டிருந்தால், புகுபதிவு எப்பொழுதும் முடக்கப்படும்.
-l LOGLEVEL --log-level=LOGLEVEL பதிவு செய்யப்பட்ட செயற்குறிப்பின் அடிமட்ட நிலை (வழுநீக்கம் 10, உள்ளீடு/வெளியீடு 12, வழுநீக்க எச்சரிக்கை 15, தகவல் 20, முடக்கப்பட்டது 100). பாதுகாப்பான பயன்முறை இயக்கப்பட்டிருந்தால், புகுபதிவு எப்பொழுதும் முடக்கப்படும்.
-c CONFIGPATH --config-path=CONFIGPATH என்விடிஏவின் எல்லா அமைப்புகளும் சேமிக்கப்பட்டிருக்கும் தடம். பாதுகாப்பான பயன்முறை இயக்கப்பட்டிருந்தால், இயல்பிருப்பு மதிப்பு கட்டாயப்படுத்தப்படும்.
None --lang=LANGUAGE அமைவடிவமாக்கப்பட்ட என்விடிஏவின் மொழியை அழித்தெழுதுக. நடப்பு பயணரின் இயல்பிருப்புக்கு "Windows", ஆங்கிலத்திற்கு "en" என்பதுபோல் அமைப்பதாகும்.
-m --minimal ஒலிகள், இடைமுகப்பு, துவக்க அறிவிப்பு போன்றவைகள் இல்லாதிருத்தல்
-s --secure பாதுகாப்பான நிலையில் என்விடிஏவை துவக்குகிறது
None --disable-addons நீட்சிநிரல்களின் எந்தவொரு தாக்கமும் இருக்காது
None --debug-logging தற்போதைய இயக்கத்திற்கு மட்டும் வழுநீக்கப் பதிவினை முடுக்கவும். இவ்வமைப்பு, கொடுக்கப்பட்டிருக்கும் எந்தப் பிற பதிவேட்டுக் குறிப்பின் ( --loglevel, -l ) தருமதிப்பினையும் மீறிச் செயற்படும்.
None --no-logging என்விடிஏவைப் பயன்படுத்தும்பொழுது, செயற்குறிப்பேட்டில் பதிவிடுவதை முழுதாக முடக்குக. கட்டளை வரியில் ( --loglevel, -l ) பதிவு நிலையைக் குறிப்பிடுவது, அல்லது செயற்குறிப்பேட்டில் வழுநீக்கப் பதிவினைச் செயற்படுத்துவதன் மூலம், இவ்வமைப்பை அழித்தெழுதலாம்.
None --no-sr-flag திரைநவிலியின் முழுதளாவிய கட்டமைப்புக் குறியீட்டை மாற்றாதிருக்கவும்
None --install என்விடிஏவை நிறுவுகிறது (புதிதாக நிறுவப்பட்டிருக்கும் படியை இயக்குகிறது)
None --install-silent அமைதியாக என்விடிஏவை நிறுவுகிறது (புதிதாக நிறுவப்பட்டிருக்கும் படியை இயக்குவதில்லை)
None --enable-start-on-logon=True|False நிறுவும்பொழுது, புகுபதியும்பொழுது என்விடிஏவைப் பயன்படுத்துவதை முடுக்குக
None --copy-portable-config என்விடிஏவை நிறுவும்பொழுது, கொடுக்கப்பட்டிருக்கும் வழிதடத்திலிருந்து ( --config-path, -c ) கொண்டுசெல்லத்தக்க அமைவடிவத்தை தற்போதைய பயனர் கணக்கில் படியெடுக்கிறது
None --create-portable என்விடிஏவின் கொண்டுசெல்லத்தக்கப் படியை உருவாக்குகிறது (புதிதாக உருவாக்கப்பட்டுள்ளப் படியை இயக்குகிறது). கொண்டுசெல்லத்தக்கப் படி உருவாக்கப்படவேண்டிய தடத்தைக் ( --portable-path ) குறிப்பிடவேண்டிய தேவை உள்ளது
None --create-portable-silent என்விடிஏவின் கொண்டுசெல்லத்தக்கப் படியை உருவாக்குகிறது (புதிதாக உருவாக்கப்பட்டுள்ளப் படியை இயக்குவதில்லை). கொண்டுசெல்லத்தக்கப் படி உருவாக்கப்படவேண்டிய தடத்தைக் ( --portable-path ) குறிப்பிடவேண்டிய தேவை உள்ளது. வெறுமையாக இல்லாத அடைவினுள் படியெடுக்கும்பொழுது இவ்விருப்பத் தேர்வு எச்சரிப்பதில்லை என்பதால், அதனுள் இருக்கும் கோப்புகளை அழித்துவிட்டு புதிய கோப்புகளை எழுதும் அபாயம் உள்ளது.
None --portable-path=PORTABLEPATH கொண்டுசெல்லத்தக்கப் படி உருவாக்கப்படும் தடம்

கணினி முழுதளாவிய அளவுருக்கள்

கணினியில் என்விடிஏவின் முழுதளாவியச் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் சில மதிப்புகளை கணினிப் பதிவேட்டில் அமைக்க என்விடிஏ அனுமதிக்கிறது. இம்மதிப்புகள், பதிவேட்டில் இருக்கும் பின்வரும் பதிவுக்குறிகளில் ஏதேனும் ஒன்றில் சேமிக்கப்படுகின்றன:

இப்பதிவுக்குறியின் கீழ் பின்வரும் மதிப்புகளை அமைக்கலாம்:

பெயர் வகை இயலும் மதிப்புகள் விளக்கம்
configInLocalAppData DWORD முடக்க 0 (இயல்பிருப்பு), முடுக்க 1 முடுக்கினால், என்விடிஏ பயனர் அமைவடிவத்தை ரோமிங் அப்ளிகேஷன் டேட்டாவில் சேமிக்காமல், லோக்கல் அப்ளிகேஷன் டேட்டாவில் சேமிக்கிறது
serviceDebug DWORD முடக்க 0 (இயல்பிருப்பு), முடுக்க 1 முடுக்கினால், பாதுகாப்பானத் திரைகளில் பாதுகாப்பான பயன்முறையை முடக்குகிறது. இதில் பல பெரும் பாதுகாப்புச் சிக்கல்கள் இருப்பதால், இவ்விருப்பத் தேர்வின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுவதில்லை.
forceSecureMode DWORD முடக்க 0 (இயல்பிருப்பு), முடுக்க 1 முடுக்கப்பட்டிருந்தால், என்விடிஏ ஓடிக்கொண்டிருக்கும்பொழுது பாதுகாப்பான பயன்முறையின் முடுக்கத்தைக் கட்டாயப்படுத்துகிறது.

கூடுதல் தகவல்

கூடுதல் தகவல்கள், அல்லது என்விடிஏ குறித்து உதவித் தேவைப்படுமாயின், என்விடிஏவின் இணையப் பக்கத்திற்குச் செல்லவும். இதில், தொழில்நுட்ப உதவி, சமூக வளங்கள் தவிர, கூடுதல் ஆவணங்களையும் காண்பீர்கள். மேலும், என்விடிஏவின் மேம்பாடு குறித்த தகவல்களையும், வளங்களையும் இவ்விணையதளத்தில் காணலாம்.

சொற்களஞ்சியம்

இவ்வாவணமும், என்விடிஏ இடைமுகப்பும், ஆங்கிலத்திலிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டபொழுது, சில சொற்கள் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதை, கீழுள்ள பட்டியல்களில் காணலாம்:

விசைகள்

ஆங்கிலச் சொல் தமிழ் மொழிபெயர்ப்பு
Alt நிலைமாற்றி
Applications பயன்பாடுகள்
Backspace பின்நகர்
Caps lock முகப்பெழுத்துப் பூட்டு
Control கட்டுப்பாடு
Delete அழித்திடு
Enter உள்ளிடு
Escape விடுபடு
Insert செருகு
Num lock எண் பூட்டு
Num pad எண் திட்டு
Shift மாற்றழுத்தி
Scroll lock உருள் பூட்டு
Space bar இடைவெளிப் பட்டை
Tab தத்தல்
Windows சாளரங்கள்
Up arrow மேலம்பு
Down arrow கீழம்பு
Left arrow இடதம்பு
Right arrow வலதம்பு
Home தொடக்கம்
End முடிவு
Page up பக்கம் மேல்
Page down பக்கம் கீழ்
Left click இடது சொடுக்கு
Right click வலது சொடுக்கு

கட்டுப்பாடுகளும், அவை தொடர்பான சொற்களும்

ஆங்கிலச் சொல் தமிழ் மொழிபெயர்ப்பு
Button பொத்தான்
Check box தேர்வுப் பெட்டி
Container கொள்களம்
Combo box சேர்க்கைப் பெட்டி
Context menu சூழலுணர்ப் பட்டியல்
Drop down button கீழ்விடு பொத்தான்
Menu bar கிடைநீளப் பட்டியல்
Menu பட்டியல்
Progress bar முன்னேற்றப் பட்டை
Radio button வானொலிப் பொத்தான்
Split button பிளவுப் பொத்தான்
Slider வழுக்கி
Status bar நிலைப் பட்டை
System tray கணினித் தட்டு
Tab control கீற்றுக் கட்டுப்பாடு
Task bar பணிப்பட்டை
Tree view கிளைத் தோற்றம்

களங்கள்

ஆங்கிலச் சொல் தமிழ் மொழிபெயர்ப்பு
Block quote உரைத் தொகுதி
Column நெடுவரிசை
Cell பணிக்களம்
Edit field தொகுகளம்
Elements list கூறுகளின் பட்டியல்
Embedded object பொதிந்துள்ள பொருள்
Footer அடியுரை
Form field படிவக் களம்
Frame சட்டகம்
Graphic வரைகலை
Heading தலைப்பு
Header தலைப்புரை
Landmark நிலக்குறி
Link தொடுப்பு
List வரிசைப் பட்டியல்
Row கிடை வரிசை
Separator பிரிப்பான்
Table அட்டவணை

வடிவூட்டத் தகவல்கள்

ஆங்கிலச் சொல் தமிழ் மொழிபெயர்ப்பு
Bold அடர்த்தி
Italic சாய்வு
Underline அடிக்கோடு
Alignment ஒழுங்கு
Indent ஓரச் சீர்மை

பிற சொற்கள்

ஆங்கிலச் சொல் தமிழ் மொழிபெயர்ப்பு
Add-on நீட்சிநிரல்
Alphanumeric எண்ணெழுத்து
Beep சிற்றொலி
Binary இருமம்
Bit நுண்மி
Bitmap நுண்படம்
Bluetooth ஊடலை
Browse உலாவு
Bug வழு
Callout shape (In MS Office) சுட்டுரை வடிவம்
Candidate தேர்வுரு
Carriage return ஏந்தி மீளல்
Case sensitive வகையுணரி
Character வரியுரு
Client நுகர்வி
Clipboard பிடிப்புப்பலகை
Command line கட்டளை வரி
Composition இயற்றல்
Compact disk குறுந்தட்டு
Configuration அமைவடிவம்
Console கட்டுப்பாட்டகம்
Copy படி
Cursor சுட்டி
Dialog உரையாடல்
Directory அடைவு
Display காட்சியமைவு
Drive இயக்ககம்
Driver இயக்கி
Dynamic content இயங்குநிலை உள்ளடக்கம்
Emulation ஒப்புருவாக்கம்
Executable file செயற்படுத்தகுக் கோப்பு
Focus குவிமையம்
Flick சுண்டுதல்
Format வடிவூட்டம்
Gesture சைகை
Grid வளையம்
Hard disk வன்தட்டு
Help balloon உதவிக் குமிழி
Hover பாவித்திடுதல்
Icon படவுரு
Interface இடைமுகப்பு
Launcher செலுத்தி
Line feed வரியூட்டம்
Log செயற்குறிப்பேடு
Log-on/Sign-in புகுபதிவு
Module நிரற்கூறு
Mouse சொடுக்கி
Navigator வழிசெலுத்தி
Object presentation பொருளளிக்கை
Open source திறந்தநிலை ஆதாரம்
Operating system இயக்கமுறைமை
Pattern வடிவவிதம்
Pixel படவணு
Place holder (In MS Powerpoint) பிடிப்பிடம்
Plug-in செருகுநிரல்
Port நுழைவாயில்
Portable கொண்டுசெல்லத்தக்க
Profile தனியமைப்பு
Programme நிரல்
Pronunciation பலுக்கல்/ஒலிப்பு
Regular expression சுருங்குறித்தொடர்
Review cursor சீராய்வுச் சுட்டி
Runtime binary இயக்க நேர இருமம்
Scratchpad தற்காலிக நினைவகம்
Screen reader திரைநவிலி
Server சேவையகம்
Settings அமைப்புகள்
Simulation உருவகமாக்கம்
Slide (In MS PowerPoint) நிலைப்படம்
Standard தகுதரம்
Style பாங்கு
Syntax நிரல்தொடரி
Synthesizer ஒலிப்பான்
Tapping தட்டுதல்
Thumb drive விரலி
Thumbnail சிறுபடம்
Toast notification குமிழ் அறிவிக்கை
Toolbar கருவிப் பட்டை
Tooltip கருவிக் குறிப்பு
Touch screen தொடு திரை
Trackpad பின்தொடர் திட்டு
Trigger தூண்டுதல்
Unavailable கிடைப்பிலில்லை
Update இற்றாக்கம்/இற்றாக்கல்
User Account Control (UAC) பயனர் கணக்குக் கட்டுப்பாடு
தமிழாக்கம்

தி.தே. தினகர், பார்வையற்றோர் உரிமைக்கான சங்கம், கதவு எண் 1235, திருச்சி சாலை, சுங்கம் சிந்தாமணி அருகில், கோயம்புத்தூர் - 641 045, தமிழ் நாடு, இந்தியா.

மின்னஞ்சல்: td.dinkar@gmail.com